Monday, February 7, 2011

கலகலத்துப்போயிட்டேன் சார்!

என் எழுத்துக்கடைக்கு ஆரம்பகாலத்திலிருந்து வாடிக்கையாளராக இருந்து இன்றுவரை ஒவ்வொருமுறை சரக்குகளை எடுத்து(?) வைக்கும் போதும் அதை ஒருமுறையாவது விரும்பி வந்து வாங்கிவிடும் முகம் தெரியாத பதிவுலக நண்பர் N.R.PRABHAKARAN கீழ்கண்டவாறு எனது முந்தைய பதிவை பற்றி அவரது இன்றைய பதிவில் எழுதியிருந்தார்.


==================================================================
பதிவுலகில் புதியவர்: எழுத்துக்கடை
நாகர்கோவிலில் பிறந்து ஊரெல்லாம் அலைந்து திரிந்து இப்போது துபாயில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பதிவுலகத்திற்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நேற்றுவரை முப்பத்தியாறு பதிவுகளை எழுதியிருக்கிறார். ஆனால் திரட்டி, ஓட்டுப்பட்டை போன்ற அரசியலில் சிக்காததால் நிறைய பேருக்கு அறிமுகமில்லாமல் இருக்கிறார். பயபுள்ளைங்க அப்படின்னுற வார்த்தைக்கு காப்பிரைட்டே வாங்கி வைத்திருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது, எழுத்துநடை பிரமாதமா இருக்கு. அப்புறம் என்ன சீக்கிரமா போய் ஜோதியில ஐக்கியமாகுங்க...

==================================================================
வந்தது பாருங்கள் ஜனம் நம்ம கடையாண்ட, கலகலத்துப் போயிட்டேன் சார். அமோக வியாபாரம் போங்கள். இன்று பார்வையிடப்படாத சரக்கே இல்லை.. ஒரு நாள்நிலவரம் கீழே..

All time
2011 Feb 6 20:00 – 2011 Feb 7 19:00
‘சோற்றுக்கணக்கு‘ குறித்து... Feb 6, 2011, 5 comments 74 Pageviews
பயபுள்ளைங்க© Dec 24, 2010, 3 comments 49 Pageviews
நித்திக்கு ஏன் பெண்பக்தர்கள் அதிகம்? Dec 30, 2010, 2 comments 10 Pageviews
ஒரு நடிகையின் முரண்! Dec 25, 2010, 4 comments 7 Pageviews
மிரட்டுராய்ங்கண்ணா! Jan 31, 2011, 4 comments 6 Pageviews
நான் துபாய்ல பேச்சிலர்ங்க! Jan 25, 2011, 5 comments 5 Pageviews
மோகத்தீ! Jan 29, 2011, 1 comment 4 Pageviews
அயல்நாட்டு முரண்கள் Jan 6, 2011, 4 comments 4 Pageviews
பாஸ்போர்ட்டை பாத்துக்குங்க எசமான்! Jan 30, 2011, 6 comments 4 Pageviews
இந்தியர்கள் ஏழைகள் தான் ஆனால் இந்தியா ஏழை நாடல்ல!!... Dec 15, 2010 3 Pageviews

மேலும முதல்முறையாக இன்ட்லியில் என் நேற்றைய பதிவு பிரபலமாகியுள்ளது. இன்று மட்டும் 6 பதிவர்கள் புதிதாக என்னை தொடருகிறார்கள்.

இப்போதுவரை இன்றுமட்டும் 107 பேர் வந்திருக்கிறார்கள், மேலும் நம் ப்ளாக் கவுண்டர் இன்று மட்டுமே அதிசய வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும் இன்று மட்டும் 302 பேஜ்வியூ இதுவரை ஆகி இருக்கிறது, அவருடைய தளத்திலிருந்து என் தளத்திற்க்கு வந்தவர்களும் மற்ற தள்ங்கள் விபரமும் கீழே..

All time
2011 Feb 6 20:00 – 2011 Feb 7 19:00

Referring Sites
philosophyprabhakaran.blogspot.com 62
ta.indli.com 15
www.tamilmanam.net 13
www.google.com 6
www.google.co.in 3
tamilmanam.net 2
prabhawineshop.blogspot.com 1
www.vasanthanatesan.blogspot.com 1

தலை யாருன்னு இப்ப புர்தா??

முகம் தெரியாத நண்பருக்கு வணக்கமும், நன்றிகளும் கோடிமுறை.

இத்தனைக்கும் நான் என் நேற்றைய பதிவில் எனக்கு கமென்ட்களே வேண்டாம் என்றிருந்தேன் திரு ஜெயமோகனுக்கு என் தளத்தின் வழியாக எத்தனைபேர் சென்றார்களோ?

நான் அந்த பதிவை எழுதுவதற்க்கு தூண்டுகோலாக இருந்த சோற்றுக்கடைக்கும் இதனால் பயன் இருந்ததென்றால் மட்டிலா மகிழ்ச்சியடைவேன்.

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி //ஆனால் திரட்டி, ஓட்டுப்பட்டை போன்ற அரசியலில் சிக்காததால்// எப்படி சிக்கணும்னு தெரியலீங்கோ, ஏதோ ஒரு பதிவில் முயன்று உண்மையில் தோற்றிருக்கிறேன். தெரிந்து கொள்ள வேண்டும்.

Sunday, February 6, 2011

‘சோற்றுக்கணக்கு‘ குறித்து...

இணையத்தில் எழுத ஆரம்பித்ததிலிருந்து நான் படித்துவரும் ஒரு பதிவரின் பதிவு வழியாக ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு என்ற சிறுகதையைப்பற்றி தெரியவந்தது. நேற்றே நம் பதிவரின் பதிவைப்பபடித்ததும் இந்தக்கதையை படித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆவல் மனதிற்க்குள் வந்தது.

நேற்று ஜெயமோகனின் தளத்துக்குச்செல்லும் நேரம் கிடைத்தது, அப்படியே நுனிப்புல் மேய்ந்து விட்டு அவரைப்பற்றிய சொந்தப்பக்கத்தை மட்டும் படித்துவிட்டு வெளியே வந்துவிட்டேன். எங்கள் ஊர்ப்பக்கம் உள்ளவர் என்று தெரிந்தது, அதுவும் வெளிவந்ததற்க்கு ஒருகாரணமாக இருக்கலாம்.

நம்ம உள்ளூர்காரர்தானே என்ற ஒரு மலிந்த பார்வையும் தமிழர்களுக்கு உண்டுதானே? வெளிநாட்டுப்பொருளுக்கு இருக்கும் மரியாதை, மதிப்பை எந்த உள்ளூர் பொருளுக்கு கொடுக்கிறோம் நாம்? மேலும் நானும் எழுத்தாளர்தான், எனக்கும் வேலை இருக்கிறது(?) என்ற நினைப்பாகவும் இருக்கலாம். நான் பொழுதுபோக்கு எழுத்தாளர் என்று என்னை சொல்லிக்கொள்வதில்லை, என்றாலும் என் பொழுதை போக்க எழுதுபவன் தானே.

எனக்கு சிறுகதைகள் பற்றிய ஆர்வம் அற்றுப்போய்விட்டதென்று தான் நினைக்கிறேன். இணையத்தில் இப்போது தமிழ் படிப்பதற்க்கு முன்பு இணையத்தில் வெறும் பத்திரிகைகள் படித்த அனுபவம் தான் எனக்கு அதிகம். வெகு சின்னவயதில் குமுதம் மற்றும் ஆனந்தவிகடன் படித்த அனுபவம் தான். கொஞ்சம் வளர்ந்தபின் பள்ளி விடுமுறைகளில் பக்கத்து அக்கா வீட்டில் ஓசியில் கிடைத்த கடல்புறா படித்த அனுபவமும் உண்டுதான். கல்லூரி சென்றதுமுதல் சினிமாவிற்கும் சைட்அடிப்பதற்குமே நேரம் சரியாக இருந்தது, இப்படி சிறுகதைகள் நாவல்கள் பக்கமே போனதில்லை.

பணம் தேடவேண்டிய வயது வந்தபோது பணத்தின் பின்னால் ஓடவும், அதுகுறித்த தேடலிலுமே காலம் கழிந்துவிட்டது, என் குற்றம் தானா தெரியவில்லை.

சரி, சோற்றுக்கணக்கு பற்றி சொல்லவருகிறேன், இன்றும் அலுவல் விட்டு வந்ததும் ஒரு ஆர்வமும் இல்லாமல் பொட்டிதட்ட உட்கார்ந்தேன், வரும் வழியிலேயே கம்ப்யூட்டருக்கு செலவழிக்கும் நேரத்தை இனி குறைத்துக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனையிலேயே வீட்டுக்கு வந்தேன். கழிந்த இரண்டு மூன்று நாட்களாய் ரொம்ப உழைத்துவிட்டேனோ என்று நினைப்பில் வந்த ஒரு உளைச்சல் என்று சொல்லலாம்.

சரி இந்த கதையை படிக்கலாம் என்று ஒரு ஆர்வமே இல்லாமல் அதை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். கதை ஒரு கட்டுரை வடிவில் ஆரம்பித்தது, அந்தக்கதையின் ஆழக்கருத்தை மெள்ள விளக்கிவிட்டு கட்டுரை வடிவிலிருந்து ஒரு கட்டத்தில் கதைக்குள் ஜெட் வேகத்தில் நுழைந்து உணர்வுப்பூர்வமாய் உள்ளே இழுத்து வைத்துக்கொண்டது என்று தான் சொல்லவேண்டும்.

சிறுகதை என்று சொல்லலாமா அல்லது குறுங்கதையா? எனக்கு கதை என்பதே உணர்வற்றுப் போய்விட்ட நிலையில் இது சிறுகதைக்கும் கொஞ்சம் அதிகம் அல்லது குறுங்கதைக்கும் கொஞ்சம் சின்னதாக என்அளவில் நினைக்கிறேன்.

கதையை இங்கே விளக்கப்போவதில்லை, அது என் நோக்கமும் அல்ல, ஆனால் இதன் முடிவில் அதன் சுட்டியை வைப்பேன் கண்டிப்பாய் நீங்கள் சென்று அதை படிக்க வேண்டும் என்பதற்க்காக.

ஒரு சின்ன முன்னுரை மட்டும் இங்கே. இது ஒருகாலத்தில் ஜாதி, மத வித்தியாசம் இல்லாமல் நம்மிடையே கலந்து கட்டி இருந்த நம் மக்களின் வறுமையையும், அவர்களின் வாழ்க்கை முறையும் பற்றியது.

இன்று நம்மில் பெரும்பாலானவர்கள் அதை தாண்டிவிட்டதாகவே நினைக்கிறேன், கதையில் வரும் கொடும் வறுமை கடவுள் புண்ணியத்தால் இன்று நம்மிடையே இல்லை.

அதுவும் பொழுது போக பொட்டி வாங்கி வைத்து தட்டும் நம்மில் பலர் இதைப்பற்றி அறிந்திருக்கவே வழியில்லை. நல்லது தான், ஆனாலும் நாம் கடந்துவந்த பாதையை மறக்கலாகாது என்ற ஒரு கொள்கை விரும்பியோ, விரும்பாமலோ என்னிடம் ஒட்டிக்கொண்டுள்ளது.

நான் என் பதிவிற்கு வருகைகளைக்கூட்டவோ அல்லது திருவாளர் ஜெயமோகனுக்கு ஜால்ரா தட்டும் எண்ணத்திலோ இதை எழுதியிருக்கிறேன் என்று யாரும் நினைக்கவேண்டாம், மன்னிக்கவும். அவரின் தமிழை ரசித்து, இந்த வகை எழுத்துக்கள் இன்னும் சந்தையில் இருக்கின்றன என்பதை தமிழ் வளர மக்களிடம் பரப்பலாமே என்ற ஒரு நல்லெண்ணமே.

அவர் கதையில் ஒரு பின்னூட்டம் அல்லது ஒரு பதில் எழுதிப்போட்டிருக்கமுடியும், ஆனால் இதை அப்படியே அங்கே விடுவதை விட இப்படி ஒரு பதிவாக விட்டால் அது இன்னும் கொஞ்சம் அதிகம் புதிய வாசகர்களை அவருக்கு கொடுக்ககூடும் என்ற எண்ணமே காரணம். மேலும் இந்த வகை சிறுகதைகள் இன்னும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் இன்னும் ஒருசிலர் பெறட்டுமே என்ற எண்ணமே.

உண்மையில் அந்த கதையில் வரும் பாத்திரம் விளக்கிய உணர்வுகள் இன்னும் என் கண்முன்னே நிழலாடுகிறது, நான் அந்த அளவு வறுமையை சந்தித்தவனில்லை எனினும் என் அந்த கால வறுமைக்கும் இதற்க்கும் ரொம்ப தூரம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

உங்கள் உணர்வுகளை பிழியப்போகும் அதன் சுட்டி இங்கே சோற்றுக்கணக்கு!

எனக்கு இங்கே கருத்துக்களை ஏதும் சொல்லாமல் நீங்களும் கதையை படித்துவிட்டு உங்கள் பதிவில் எழுதினால் மகிழ்ச்சி அடைவேன்.

அன்புடன், வசந்தா நடேசன்.

Saturday, February 5, 2011

மீண்டும் இந்தியா..

என் முந்தைய பதிவுக்கு வந்த கமென்ட்டுகள் மேலும் இந்தியாவும், மக்கள்தொகையும் என்பதை குறித்து எழுத ஆர்வத்தை தூண்டினாலும், எனக்கு ஏனோ அரைத்த மாவையே மீண்டும் அரைத்துவிடுவேனோ என்ற பயம் வந்துவிட்டது.

இன்றும் இந்தியாவைப்பற்றிய ஒரு மேட்டர் கீழே வருகிறது. அதற்க்குமுன் சில குட்டி செய்திகள்.

மக்களிடம் பொருளாதாரம் மற்றும் மார்க்கெட்டிங் குறித்து அதிகம் ஆர்வம் இருப்பது அது என்னுடைய சப்ஜெக்ட் என்பதால் ஆனந்தத்தை தருகிறது, ஆனாலும் அது உண்மையில் இந்தியா என்கிற மந்திரத்தையும் உடன் கலந்து கட்டியிருந்ததால் வந்ததாகவே இருக்க வேண்டும். இந்தியா என்றால் ஊனுரக்கம் பார்க்காமல் நாம் இணைந்து விடுவது புதியகதை அல்ல.

நேற்று எங்களுக்கு விடுமுறை, முதல் நாளே சொல்லியிருந்தேன், என் நண்பனிடம் இருந்து பதில் வரவில்லை, அதனால் இதை எழுதுகிறேன் என்று, பதில் வந்தது பின்னர்

கரப்பான் பூச்சியையும் மூட்டை பூச்சியையும், புரோட்டா போடுறதையும், பாம்பு புடிக்குரத்தையும் கொஞ்சம் கொறச்சுட்டு வேலைய பாருடா


நக்கலை பாத்தீங்களா?? சரி என்று இரவு எட்டு மணிக்கு மேல், நண்பர்கள் யாரும் வீட்டுக்கு அன்று வந்திருக்கவில்லை, வீக் எண்ட் என்பதால் கொஞ்சம் விஸக்கியை சிப்பிக்கொண்டு (என் மனைவியின் கண்ணில் இது படாமல் இருக்க தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்.) கருமமே கண்ணாக வெள்ளிக்கிழமை காலை நாலரை மணி வரை, உண்மைதான் வேலை உற்ச்சாகத்திலோ அல்லது விஸ்கி தந்த உற்சாகத்திலோ டைமை பார்க்காமல் அப்படியே பொட்டிதட்டிக்கொண்டு இருந்துவிட்டேன்,

நாலரைக்கு உரைத்ததும் இது என்னடா நாதாரித்தனம் என்று அடித்து பிடித்து படுக்கையில் விழுந்தேன. வழக்கமாய் வெள்ளிக்கிழமை 11 அல்லது 12 மணிக்குத்தான் எழுந்திருப்பது வழக்கம். என் முந்தைய ஒரு பதிவில் சொல்லியிருப்பேன் ரவி என்று ஒருவரைப்பற்றி.. இப்போது என்னுடைய கடையின் முன்னணி யூஏயி கஸ்டமர்(?).

அவர் காலை 10 மணிக்கு கையில் சிவ்ஸ்டார் பவனிலிருந்து ஒரு பொங்கல் வடையும் வாங்கிக்கொண்டு வந்து எழுப்பினார்.. என்னடா வம்பு என்று அப்படியே கொஞ்சம் கண்திறந்து பார்த்தால், எழுந்திரிங்க, பல்லை விளக்கிட்டு வந்து சாப்டுங்க, ஒங்கட்ட கொஞ்சம் பேசவேண்டி இருக்குன்னார்.

என்ன ரவி அநியாயம், மணி பத்து தான் ஆகிறது, இன்று வெள்ளிக்கிழமை தெரியாதா? என்றேன். வெள்ளின்னா என்னங்க? வெள்ளிக்கிழமையும் அதுவுமா காலைல எழுந்திரிச்சி கோயிலுக்கு போறதை விட்டுப்போட்டு தூக்கமாமா? எழுந்திருங்க, எழுந்திருங்க பேசவேண்ருக்கு என்றார்.

அரைமனதோடு, கஸ்டமரரயிற்றே என்று எழுந்தேன். குளித்துவிட்டு வந்து சாப்டுட்டே என்ன விஷயம் என்றால், நீங்க எப்படி ‘நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்லன்னு எழுதலாம், அது என்ன கம்யூனிஸ்ட் என்றால் கேவலமா? என்றார். வடையை சாம்பாரில் முக்கி வாயில் வைப்பதற்க்கு முன்பே!

இது என்னடா வம்பாருக்குன்னு ‘இல்லை ரவி ஏதோ வந்தது எழுதிவிட்டேன்‘ என்றேன். சரி, கம்யூனிஸ்ட் பத்தி உங்கள் கருத்தென்ன? என்று கேட்கவுமே புரிந்து விட்டது, எனக்கு அடுத்த பதிவிற்க்கு மேட்டர் ரெடி என்று.

எனக்கு கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களின் மேல் கோபம் ஏதும் இல்லை, அது எனக்கு பிடித்ததா இல்லையா என்பது இங்கு கேள்வியில்லை, அதை விளக்கி ஒரு பெரிய விவாதத்திற்க்கும் நான் ரெடி இல்லை. நாட்டில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கும்போது.

சீனா பற்றி நான் எழுதியதிலேயே தெரிந்திருக்க வேண்டும், முன்னொரு காலத்தில் எனக்கு சோவியத் ரஷ்யாவின் மேலும் ஒரு காதல் உண்டு. பொதுவாகவே நம் ஊர் அரசியல் வாதிகளின் மேல் எனக்கு ஒரு கடுப்பு உண்டு, அந்தவகையில் கம்யூனிஸ்ட் அரசியல் வாதிகளின் மேலும் ஒரு கடுப்பு, அவர்கள் கம்ப்யூட்டர் வேண்டாம் என்றது போன்ற சில அவர்களின் பிற்போக்கு கொள்கைகளால். சரி அவர்களுக்கு அது முற்போக்கு கொள்கைகளாக இருக்கக்கூடும், இருந்துவிட்டு போகட்டும், நம் கடையில் அரசியல் வேண்டாம்.

இதனை விளக்கியதும், ஆங், சரி, சரிங்க என்று ரவி என்னை விட்டுவிட்டார்.. (கஸ்டமரை தக்க வைக்கதுக்கு என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கிறது பாருங்கள்??)

பின்னர் பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டு மதியம் சாப்பாட்டுக்கு அவரே மீண்டும் ஒரு நெய்ச்சோறும், மட்டனும் செய்து கொடுத்தார். செய்து விட்டு தஞ்சாவூர்க்காரர் சமையலைப்பற்றி எழுதிவிட்டீர்கள், இதையும் கோவை சமையல் என்று எழுதுகிறீர்களா பார்க்கிறேன் என்று சொன்னார். இன்றே எழுதிவிட்டேன். தஞ்சாவூர்க்காரரும் நேற்று லேட்டாய் வந்து சேர்ந்தார், வந்து சாப்பிட்டுவிட்டு அவரே ‘ஆஹா சூப்பர்‘ என்றார். இருந்தாலும் கொஞ்சம் தக்காளி அதிகம் தான் என்று சொன்னார், ரவி அவரை பொறாமையில் சொல்வதாக கிண்டல் அடித்து, விசுவாமித்தரர் வாயால் வசிஷ்ட்டர் பட்டம் வாங்குவது சாதாரணவிஷயமா என்றார், ஆக மொத்தம், எனக்கு நேற்றும் ஒரு பிரமாதமான சாப்பாடு. சூப்பர்.

விடுமுறை, அது இது என்று நேற்று நம் கடைக்கு வந்தவர்களுக்கு ஒரு நன்றிகூட சொல்லமுடியவில்லை.. அனைவரின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மனம்நிறைந்த நன்றிகளை இங்கேயாவது தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன், நன்றி.

சரி இன்றைக்குள்ள ஒரு செய்தி..

பொதுவாகவே நன்றி தெரிவிப்பது நம் ஊரில் குறைவு என்பது தெரியுமா? குறிப்பாக சம்பளம் வாங்கினால் அதிகம் பேர் முதலாளிக்கு நன்றி தெரிவிப்பதில்லை. நான் வேலை செய்தேன், நீ சம்பளம் கொடுத்தாய் என்பது போல் இருப்பார்கள். அதேபோல் என் மேல் அதிகாரி ஏதோ ரிப்போர்ட் கேட்டு அதை எடுத்துக்கொடுத்தாலும் நம்மவர்கள் நன்றி தெரிவிப்பதில்லை.. மேலும் மனைவிக்கு சாப்பாடு எடுத்துவைத்ததற்க்காக நம்மவர்கள் நன்றிசொல்லி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஹோட்டலில் சர்வர் சாப்பாடு எடுத்து வைத்தற்க்கு என்றாவது நன்றி சொல்லியிருக்கிறோமா??? இப்படி இந்த லிஸ்ட்டில் இன்னும் பல இருக்கிறது.

ஆனால் வெள்ளையர்கள், மேற்ச்சொன்ன விஷயத்திர்க்கெல்லாம் உடனுக்குடன் நன்றி தெரிவிப்பார்கள், அதேபோல் நம்மிடமும் எதிர்பார்ப்பார்கள். நன்றி சொல்லவில்லையென்றால் என்ன இவன் இப்படி இருக்கிறான் என்று குறையும் சொல்வார்கள்.

நான் இப்போது நன்றி தெரிவிக்க கற்றுக்கொண்டுள்ளேன், விடுமுறையில் மனைவி பறிமாறியதர்க்கு நன்றி சொன்னபோது அவள் வித்தியாசமாய் பார்த்தாள்! இப்போதெல்லாம் ரசிக்கிறாள் அதனை, நீங்களும் உங்கள் மனைவிக்கு/கணவனுக்கு சொல்லிப் பாருங்களேன்.

இந்தியாவைப்பற்றி சொல்லவந்த விஷயம் இதுதான். ஒரிஜினாலிட்டிக்காக அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன்..
=============================================================
Now An Indian owns Britain's East India Company - Another circle got completed.



The East India Company which ruled India for more than 200 years is now ruled by an Indian Sanjiv Mehta who took over the company for $150 lac.
He said ” at an emotional level as an Indian, when you think with your heart as I do, I had this huge feeling of redemption - this indescribable feeling of owning a company that once owned us ”

But media is not interested in such great news. Lets us be the media…&..Fwd this mail to all Indians...
Sanjiv Mehta, CEO of The East India Company
===========================================================

நாமும் பெருமைப்பட்டுக்கொள்வோமா???

நன்றி, வணக்கம்.

அப்புடன், வசந்தா நடேசன்.

Thursday, February 3, 2011

இந்தியாவும், மக்கள் தொகையும்

ஆஹா.. என்று பார்க்கவேண்டாம், கொஞ்சம் சீரியஸாக நம் நாட்டை பற்றிய சிந்தனைகள்..

என் புரோகிராமரிடம் நான் வீக் எண்ட் பிளான் செய்யவேண்டும், என்னிடம் இன்று என்ன எதிர்பார்க்கிறாய்? என்றேன், இதுவரை பதிலில்லை, சரி மொக்கை போடுவதை விட கொஞ்சம் சிந்தனை வயப்படுவோம் என்று இந்த பதிவு.

இந்தியாவில் நாம் அனைவரும் நம் அளவுக்கதிகமான (என்று நம்மிடம் சொல்லிக்கொடுக்கப்பட்ட) மக்கள் தொகையை பற்றி எப்போதும் நெகட்டிவ்வாக சிந்தித்தே பழகிப்போனவர்கள். சரி, சைனாவுக்கு அடுத்தது தான் நாம் என்று கொஞ்சம் ஆறுதலாய் அப்படியே இருந்து விட்டோம். சைனா இன்று போட்டு தாக்குகிறது.. அதற்க்கு காரணம் அவர்களின் சரியான சிந்தனை மற்றும் செயல்திட்டம். ஊழல் செய்தால் தூக்கு என்றது போன்ற தெளிவுகள்.

நான் கம்யூனிஸ்ட் அல்ல, தயவு செய்து யாரும் அப்படி தவறாய் நினைத்துக்கொள்ள வேண்டாம், எனக்குத்தெரிந்தது கையளவு, தெரியாதது கடலளவு என்று நம்புகிறவன் நான். கம்யூனிஸ்ட்டுகளைப் பொருத்தவரை உங்களுக்கு என்ன கருத்தோ (யாராக இருந்தாலும், ஹி..ஹி..) அதுபோல் பொதுவான கருத்தே என்னதுவும்.

எந்த விஷயத்திற்க்கும் இரு பக்கங்கள் இருப்பது போல் மக்கள் தொகைக்கும் இரு பக்கங்கள் உள்ளது, இதை நாம் யாரும் உணர்ந்தோமில்லை. நல்லது/கெட்டது, உண்மை/பொய், விருப்பம்/வெருப்பு, காதல்/மோதல் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

மக்கள் தொகையினை நாம் எல்லாம் கேவலம் என்று அளவிட்டுக்கொண்டு இருந்த நேரத்தில் சத்தம் காட்டாமல் மல்டி நேஷனல் கம்பெனிகள் வந்து நம் சந்தையை பங்கிட்டுக்கொண்டன. இதிலும் லாபம்/நட்டம் என்று இரு பக்கங்கள்.

மல்டி நேஷனல் கம்பெனிகளால் நமக்கு உலக அளவில் கிடைக்கும் சில/பல சௌகர்யங்கள் கிடைத்தன. உலகமே கிரைஸிஸ் என்று ஆடிப்போய் இருந்த நேரத்தில் ஒபாமா இந்தியாவுக்கு வந்து அல்மோஸ்ட் பிச்சை எடுப்பது போல் சில திட்டங்களை அறிவித்து விட்டு போனார், இந்தியர்களின் வாழ்க்கைத்தரம் பொதுவில் முன்னேறியிருக்கிறது (செல்போன், டிவி இல்லாத ஒரு வீட்டை சொல்லுங்கள்) மொத்தத்தில் இப்போது உலக நாடுகளை நம்மை உற்றுப் பார்க்க வைத்திருக்கிறது. 1984/1985 வரை சைக்கிளில் போய்க்கொண்டிருந்த நம் வெகுஜனம் இப்போது பைக்குகளில்/கார்களில் பறக்கிறோம், இப்படி பல.

ஏன் உலகையே ஆட்டிபடைத்த கிரைஸிஸ் இந்தியாவை அசைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. சாப்ட்வேர் துறை மட்டும் கொஞ்சம் விழி பிதுங்கியது போல் இருந்தது மற்றபடி ஒன்றும் இல்லை. உலக அளவில் பல வங்கிகள் காணாமல் போய்விட்டன (துபாய் உட்பட). ஆனால் இந்தியாவில் வங்கித்துறையில் குறிப்பிடும்படியான பாதிப்புகள் ஏதும் இல்லை.

ஆனால் மல்டி நேஷனல் கம்பெனிகளால் உண்டான நஷ்ட்டங்கள்.. உள்ளூர் முதலாளிகள் உளுத்துப்போனார்கள். பெப்ஸியால் எங்கள் ஊர் கண்ணன் சோடாவும், காளி மார்க்கும் சந்தையை விட்டு விரட்டியடிக்கப்பட்டன. மிக நீண்ட காலமாக அச்சை மாற்றாமலேயே வைத்திருந்த அம்பாஸிடர்கள் காணாமல் போய்விட்டன.

சொல்லப்போனால் கம்யூனிஸ்ட்கள் உள்ளூர் முதலாளிகள் காணாமல் போனதால் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவர்கள் தான் மல்டி நேஷனல் கம்பெனிகளுக்கெதிராய், உள்ளூர் முதலாளிகளுக்கு ஆதரவாய் முதலில் கொடி பிடித்தவர்கள்.
தொழிலாளர்களுக்காக என்று என்னால் அளவிட முடியவில்லை ஏனெனில் கண்ணன் சோடா, காளி மார்க் மற்றும் அம்பாஸிடரில் வேலை செய்தவர்களை விட அதிகம் பேருக்கு இன்று உள்நாட்டில் வேலை மற்றும் வேலைவாய்ப்பு இருக்கிறது. கம்யூனிஸ்ட்கள் கம்ப்யூட்டரையே வேண்டாம் என்றவர்களாயிற்றே, அந்த கதையை விட்டு நடக்கிற கதையை பார்ப்போம்.

சரி, உள்ளூர் கம்பெனிகள் ஏன் மல்டி நேஷனல்களுடன் போட்டியிட முடிவதில்லை? வியாபாரம் என்றால் லாபம் தான் குறிக்கோள், நான் மக்களுக்கு சேவை செய்ய வியாபராம் செய்கிறேன் என்று யாரவது சொன்னால் அது ‘ஜல்லியடி‘ என்று நமக்குத்தெரியும். நம் உள்ளூர் முதலாளிகளுக்கு நெட்ஒர்க் குறைவு, அவர்கள் அந்த குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே அவர்களுக்கான லாபத்தை சம்பாதிக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு பாட்டிலுக்கு 2 ரூபாய் நிகர லாபம் இருந்தால் தான் முடியும் என்று உத்தேசமாய் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் மல்டி நேஷனல் குறிவைப்பது இந்தியா முழுவதுமான மார்க்கெட்டை, அவர்களின் எல்லைகள் அதிகம், ஒரு பாட்டிலுக்கு 20 பைசா லாபம் வைத்தாலே இந்தியா முழுவதும் விற்பனை எனும் போது லாபத்தை பாருங்கள். உதாரணமாய் காளி மார்க் தினமும் 1000 பாட்டில்கள் விற்றால் 2000 நிகரலாபம், ஆனால் பெப்ஸி இந்தியா முழுவதும் அட்லீஸ்ட் குத்துமதிப்பாய் ஒரு நாளைக்கு ஒரு 35 கோடி பாட்டில்கள் விற்க்கிறது என்று வைத்துக்கொள்வோம், அவர்களின் ஒரு நாளைய நிகர லாபம் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய், இந்திய மக்கள் தொகையின் மகத்துவம் இப்போது புறிகிறதா??

நான் இருபது பைசா லாபத்தில்தான் அவர்கள் விற்க்கிறார்கள் என்று சொல்லவரவில்லை, அது கூடுதலாகவும் இருக்கலாம், அல்லது குறைவாகவும் இருக்கலாம் (வாய்ப்பு குறைவு).

ஆனால் இதை சாதிக்க செயல்திட்டம் வேண்டும், முதலீடு வேண்டும், இன்னும் நிறைய, நிறைய வேண்டும்,(இதுவே உங்களுக்கு போரடிக்கக்கூடும், அதெல்லாம் வேண்டாம் இங்கு) (தெரியாததை பயபுள்ளை எப்படி சமாளிக்குதுன்னு சொல்லாதீங்க.. சொல்லிருவேன்..)

இந்தியாவில் இது எல்லாம் இருந்து இந்தியனாய் சாதித்தவர்களில் நிர்மா போன்ற கம்பெனிகளை சொல்லவேண்டும், ஹிண்டுஸ்ட்டான் லீவரே நிர்மா, பவர் சோப் போன்ற கம்பெனிகளைக கண்டு கொஞ்சம் பயப்படுகிறது என்று சொல்லலாம். இன்று லீவர் ப்ராடக்ட் இல்லாமல் ஒருவன் மளிகைக்கடை நடத்தவே முடியாது. உப்பு முதல் கக்கூஸ் கழுவும் கிளீனர் வரை அவர்கள் தான் இன்று மார்க்கெட் லீடர்.

மல்டி நேஷனல் கம்பெனிகளால் என்ன நடந்தது என்றால் காளி மார்க், கண்ணன் சோடா விற்றவர்களில் திறமை உள்ளவர்கள் இந்த மல்டி நேஷனல்களின் ஏஜென்ஸி எடுத்து சம்பாதிக்கிறார்கள். இதன் ஏஜன்சியை சாதாரணமானவர்களால் எடுக்கவும் முடியாது, பழைய முதலாளிகளால் தான் முடியும், ஆனால் நாட்டில் வேலை வாய்ப்பு பெருகியதும் இந்தியர்கள் கொஞ்சம் மாடர்னாய் ஆனதும் மறுக்கமுடியாத உண்மை.

காலம் செல்லச்செல்ல பழைய முதலாளிகள் அல்லாமல் கீழ்மட்டத்திலிருந்து பல திறமையானவர்களும் இந்த ஏஜன்சிகளை எடுத்திருக்கிறார்கள், என்னால் உதாரணம் சொல்லமுடியும். நாகர்கோவிலில் டீ கடை வைத்திருந்த ஒருவர் முன்னாள் பெப்ஸி ஏஜன்ட். நிர்வாகத்திறமையின்மையால் ஏஜன்ஸி போயிற்றென்று நினைக்கிறேன்.

மொத்தத்தில் நமக்குத்தெரியாததை அல்லது நம்மால் முடியாததை நம்மில் தெரிந்தவர்கள் அல்லது முடிந்தவர்கள் (இந்திரா நூயி) முந்திக்கொண்டார்கள். இந்திய கம்பெனிகளும் இப்போது வளர்ச்சி பெற்று வருகின்றன.. அவர்களிடம் போட்டி போட்டு. அது தான் நம் சாமர்த்தியம்.

நோக்கியா, நிஸ்ஸான், ஹோண்டா எல்லாம் வந்திருந்து லாபம் சம்பாதித்தாலும் நம் ஆட்களும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம். அவர்களிடம் நமக்குத் தெரியாததை தெரிந்து கொள்வோம், நம் திறமைகளை வளர்த்துக்கொள்வோம்.

மக்கள் தொகையால் நஷ்ட்டங்கள் இருப்பது போல் இதுபோல் லாபங்களும் இருக்கின்றன என்பதையும், நடிகர் விவேக் போல் மக்கள் தொகையை எப்போதும் கிண்டல் பண்ணாமல் அதன் மறுபக்கத்தையும் உணரவைப்பதே இதன் நோக்கம்.

கொஞ்சம் நீண்டு விட்டது, வருந்துகிறேன், என்ன செய்ய, பாதிநாள் வேலையென்று லீவு விட்டுட்டாய்ங்க..

அன்புடன், வசந்தா நடேசன்.

Wednesday, February 2, 2011

அலோ யாரு பேசரது!

ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்...

வெடிவேலு : அலோ யாரு பேசரது?

நான் : நாங்க எழுத்துக்கடைய்லர்ந்து பேசரங்க.

வெடிவேலு : அலோ யாருங்க பேசரது?

நான் : நாங்க எழுத்துக்கடைய்லர்ந்து பேசரம் சார்.

வெடிவேலு : என்னா கடை?

நான் : எழுத்துக்கடை சார்

வெடிவேலு : எழுத்துக்கடையா?? புதுசால்லாய்யா இருக்கு.

நான் : புதுசு தான் சார், போனமாசம் தான் தொடங்கிருக்கோம் புதுசா..

வெடிவேலு : அது என்னாய்யா அது எழுத்துக்கடை??

நான் : எழுத்து விக்கறோம் சார்

வெடிவேலு : எழுத்து விக்கறீங்களா,(மனதுக்குள், இந்த பயபுள்ளை நாம எழுதப்படிக்க தெரியாத பயபுள்ளைன்னு தெரியாம நம்மட்ட எழுத்து விக்க வந்துருக்கு, கொஞ்சநேரம் ஓட்டுவோம், சிங்கமுத்துட்ட சண்டை போட்டாச்சு, இவன் எதாவது வச்சிருக்கானான்னு பாப்போம் என்று நினைத்துக்கொண்டே..) எப்படி, ஒரு பத்து எழுத்து இருவது எழுத்துன்னு விப்பீய்ங்களா, இல்ல மொத்த யாவாரமா?

நான் : அன்னன்னிக்கு மூடுக்கு தகுந்தாப்ல விப்பம் சார்

வெடிவேலு : யன்னாது, மூடுக்கு தகுந்தாப்ல விப்பீங்களா? என்ன இழவுடா இது. அது என்னாடா விக்கறீங்க?

நான் ; உயிரெழுத்து 12 இருக்கு சார், மெய்யெழுத்து 18 வச்சிருக்கொம், உயிரிமெய் எழுத்துன்னு ஒரு 216 ஸ்ட்டாக்ல இருக்கு, அது தவிர ஆய்த எழுத்து 1 ஸ்ப்பெஷலா வச்சிருக்கோம் சார், மொத்தமா 247.. நீங்க எது வாங்கரீக்கிறீங்க சார்

வெடிவேலு : ஆய்த எழுத்தா??? அது என்னடா கண்றாவி??

நான் : சாரி சார், ஆயுத எழுத்துங்க சார்.

வெடிவேலு : அதெல்லாம் எனக்கு ஒண்ணாப்ல சும்மாவே சொல்லிக்கொடுத்துட்டாய்ங்கடா.. ஆளை விடுரா.......

நான் : கண்டிப்பா நீங்க வாங்கிக்கணும் சார், எனக்கு அது ஒரு பெருமைங்க சார்.

வெடிவேலு : அட இதெல்லாம் எவன்யா வாங்கறான்? எனக்கு வேண்டாண்டா, என்னை உட்ரு

நான் : சார், பிளீஸ் சார், ப்ளீஸ்.....

வெடிவேலு : யாண்டா என்னை படுத்தறீங்க, இதுக்குன்னே வர்ராய்ங்க சார், யாராரு வாங்கராய்ங்க ஓங்கிட்ட இப்ப? அந்த சிங்கமுத்து பயலுக்கும் நீ தான் வித்தியோ?

நான் : அய்யய்யோ, சத்தியமா நான் இல்ல சார்.

வெடிவேலு : ம்ம்ம்கூங்ங்,,,, சரி, யன்னா வெல?

நான் : இது ப்ரீ சார். யாரு வேண்ணாலும் வாங்கிக்கரலாம்.

வெடிவேலு : ப்ப்ப்ரீயா?? லூசாடா நீயி..........

நான் : ஃப்ரீ தான் சார், நெட்ல விக்கறோம்

வெடிவேலு : நெட்ல விக்கறயா?? அது எங்கடா இருக்கு??

நான் : ஆமா சார் நெட்ல http://vasanthanatesan.blogspot.com ன்னு அடிச்சா வந்துரும் சார், நீங்களும் வாங்கிக்கங்க.

வெடிவேலு : என்னடா இங்கிலிபிஸ்லல்லாம் பேசறீங்க, நம்ம உயிரை எடுக்கதுக்குன்னே புதுசு புதுசா வாரானுங்கய்யா?

டொக்.

(போனை வைத்த சப்தம்)

சிரித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி, வணக்கம்.

அன்புடன், வசந்தா நடேசன்.

Tuesday, February 1, 2011

நாகதேவதை??

விஜய் டிவி யில் இப்பத்தான் பாத்தேன் சார்... என்ன கருமமோ விஜய் டிவில தான் எனக்கு எப்பவும் மேட்டர் கிடைக்குது.

சுமலதா என்று ஒரு பெண் தன்னை நாகதேவதை என்று சொல்லிக்கொண்டு நாகதேவதையாகவே வாழ்கிறாராம்.

மக்கள் அவர் காலில் விழுகிறார்கள், அவரும் தலையை பிடித்து தன் காலோடு அழுத்துகிறார்???

நாகப்புற்றோடு முட்டிபோட்டு குனிந்து பாலை புற்றின் மேல் வைத்து அருந்துகிறார். பாம்புபோல் படுத்து கொண்டு செய்திருந்தாலும் ஏதோ பாம்பு போலவாவது இருந்திருக்கும்.

காலில் விழுந்தவர்களை மூன்றுமுறை சாட்டையால் அடிப்பாராம், நோய் மற்றும் கஷ்டங்கள் விலகிவிடுமாம்..

ஜெயலலிதா பரவாயில்லை போல் இருக்கிறதே! அம்மாவிடம் சாட்டையெல்லாம் இல்லை.

என்ன கஷ்டம்டா இது?

மக்களே கடவுள் நம்பிக்கை வேண்டியது தான், நம்பிக்கை சார்ந்த விஷயங்களை கேள்வி கேட்க கூடாது தான்.. ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் இல்லையா சார்.

விஜய் டிவி இதுபோல் நிகழ்ச்சிகளை தவிர்க்கவேண்டும் என நினைக்கிறேன், இது இன்னும் சிலரை இதுபோல் மாறத்தூண்டிவிடாதோ?

நானும் நாகர்கோவில் நகரில் பிறந்தவன் தான். மனிதர்கள் ஒருநாளும் கடவுளாக முடியாது என்பதை நம்புகிறவன்.

இது என்ன எழவுடா இது, நம் மக்கள் திருந்தவே மாட்டார்களா சார்??

ஆற்றாமையுடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி:- கடவுள் இருக்கிறாறா இல்லையா என்பதை விவாதிக்க போகும் பதிவல்ல இது, தயவுசெய்து அதுபோன்ற கருத்துக்களை பகிரவேண்டாம். அவை பிரசுரமாகாது. ‘சுயமரியாதைகள்‘ மற்றும் ‘பகுத்தறிவுகள்‘ குறித்த பதிவும் அல்ல, மக்களின் ‘கண்மூடித்தனமான‘ நம்பிக்கைகள் குறித்ததே.

செயல்திறன் அல்லது தனித்திறன்

எந்த வேலையாக இருந்தாலும் அதற்க்கான தனித்திறமை வேண்டும்!



இந்தியனை பற்றி நான் சொன்னதில்லை இது, சொன்னால் அது செய்தியும் அல்ல. இந்த வீடியொவில் வரும் நபர் தமிழர் அல்லது மலையாளியாக இருக்கவேண்டும், ஆனால் இந்த வீடியோ எப்படி வெளிநாடு போய் கீழ்வரும் ஈமெயிலில் இருக்கும் வெள்ளையர்களை ஆச்சரியப்பட வைத்ததோ தெரியவில்லை! இதை அனுப்பிவிட்டு என்னிடம் வந்து
அந்த வீடியோவை பார்த்தாயா? He is working like a automated machine!
என்று ஆச்சரியப்பட்டது தான் செய்தி.



வழக்கம் போல் சொந்த அடையாளங்களை அழித்தேன், இதை அனுப்பிய என் முதலாளியின் பெயர் உட்பட, டாஸ்க் பாரை கவனிக்க மறந்துவிட்டேன்!! வீட்டுக்கு வந்து வெளியிடும் போது தான் கவனித்தேன், சரி பரவாயில்லை என்று விட்டுவிட்டேன், ஒன்று நான் கணக்கெழுதும் புஸ்தகங்கண்ணா, இன்னொன்று என்னுடைய அலுவலக ஈமெயில் தரவிறக்கி, பரவாயில்லை தானே.

அன்புடன், வசந்தா நடேசன்.