Thursday, January 27, 2011

மூட்டை பூச்சி, கரப்பான் தொல்லையா?

இந்தியாவில் இப்போது கரப்பான் மற்றும் மூட்டை பூச்சிகள் பெரும்பாலும் ஒளிக்கப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன். ஒன்றிரண்டு கரப்பான்களை அங்கங்கே பார்த்திருந்தாலும் மூட்டை பூச்சிகள் இந்தியாவில் வழக்கொழிந்து விட்டதாகவே நினைக்கிறேன். மற்ற நாடுகளைப்பற்றி தெரியவில்லை.. இருந்தாலும் இதைப்பற்றி பெரிதாக நினைக்காதவர்கள் அப்படியே அப்பீட் ஆகிக் கொள்ளலாம். இது அரபு நாடுகளில் உள்ள ஒரு தொல்லையை பற்றியது..

இங்கே வாழ்பவர்கள் கரப்பான்களுடனும், மூட்டை பூச்சிகளுடனும் தான் இன்றும் பெரும்பாலும் வாழ்ந்து வருகிறோம். கரப்பான்களை நிரந்தரமாக இங்கே அழிக்கவே முடிவதில்லை, மூட்டை பூச்சிகள் தியேட்டர் (தமிழ் மற்றும் மலையாள மொழி படங்கள் வரும் தியேட்டர்கள் மட்டும், பெங்காலி தியேட்டர்லாம் போனதில்லைங்க சார்!) போனாலோ அல்லது மற்ற ரூம்களில் தங்கிவிட்டு வரும் நண்பர்களாலோ வந்துவிடும்.

மூட்டைக்கு நான் ஒருவழியாய் மருந்து கண்டுபிடித்து வைத்திருக்கிறேன், ரூம் காலி செய்யவேண்டியதில்லை, மாஸ்க் எதுவும் தேவையில்லை, அப்படியே ஸ்ப்ரே செய்து விட்டால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு வருவதில்லை. துபாய்வாசிகள் தேவையென்றால் ஈமெயில் அனுப்பவும் அதை வாங்குவதற்க்கு சீக்ரெட் கோடெல்லாம் இருக்கிறது, அனுப்பித்தருகிறேன். 90 திர்கம் ஒருபாட்டில் விலை, ஒரு ரூமிற்க்கு அடிக்கலாம். எனக்கு கமிஷன்லாம் வேண்டாம் சார், இது ஒரு இலவச சேவை, கடை விலாசம் அனுப்பித்தருகிறேன் பாஸ்வேர்டுடன், போய் வாங்கிக்கொள்ளலாம்.

இருக்கும் ஃப்ளாட்டின் கீழே ஒரு மலையாளி ஹோட்டல் இருக்கிறதென்றால் கரப்பான் தொல்லை இன்னும் அதிகம்.. தமிழ் ஹோட்டல்லாம் கொஞ்சம் இல்ல இங்க துபாயில் ரொம்ப நீட்டாதான் இருக்கு சார்..

கரப்பானுக்கும் சமீபத்தில் ஒரு மருந்து கண்டுபிடித்து விட்டேன் ஒரு வழியாக.. இது ரொம்ப ஈஸி சார், வெரும் 8 திர்கம் தான் செலவு..

எச்சரிக்கை! (WARNING!)குடும்பத்துடன் இருக்கும் புண்ணியவான்களோ, குழந்தைகளுடன் அரபுநாடுகளில் வசிக்கும் தாய்க்குலங்களோ இதை தயவுசெய்து டிரைசெய்யவேண்டாம்.. மீறி செய்தால் விளைவுகள் எதற்க்கும் நம் நிர்வாகம் பொருப்பல்ல! சிறுகுழந்தைகள் கீழே விளக்க இருக்கும் பொருளை (Product?) ‘ஏதோ ஜெம்ஸ் (Gems)என்று நினைத்து வாயில் போட்டுவிடும் ஆபத்து இருக்கிறது..‘ எச்சரிக்கை.

பக்கத்தில் இருக்கும் பார்மஸிக்கு போய் போரிக் ஆசிட் பவுடர் என்று கேளுங்கள், அங்கிருக்கும் மலையாளி கேரம் போர்ட் கழிக்கான் வேண்டியா? என்பான் உங்கள் ஆரோக்யத்தை பார்த்துவிட்டு, இது புண்ணிற்க்கு போடும் மருந்து! மண்டைய, மண்டைய ஆட்டிட்டு ஒங்கபாட்டு வாங்கிட்டு வாங்க, அதை பூராவும் ஒரு சின்ன பாத்திரத்தில் கொட்டி அதனுடன் சிறிதளவு கோதுமை மாவு (பசைத்தன்மை வருவதற்க்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும்), சுகர் மற்றும் சிறிதளவு பால் (கரப்பானைக் கவர்வதற்க்காக), கொஞ்சம் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாக செய்து கரப்பான் நடமாடும் எல்லா இடத்திலும் தரையில் போட்டுவிடுங்கள்.

பாத்ரூமில் கதவு நிலை மற்றும் ஜன்னல்கள் மேல்,வாஷ்பேசின் அடியில் மற்றும் தண்ணீர் படாத இடங்களில் வைக்கலாம்.

தினமும் இருக்கும் கரப்பான் ஸ்டாக்குக்கு தகுந்தபடி கரப்பான்கள் ஒழிய ஆரம்பிக்கும்.. ஒரு 15 நாள் கழித்து மீண்டும் ஒருமுறை இதேபோல் செய்யுங்கள். சுத்தமாக ஒழிந்துவிடும்.

நான் இப்போது கரப்பான் பூச்சி செகண்ட் டிரையலில் இருக்கிறேன் (very happy with the first trial! எங்காவது ஒழிந்திருக்கும் முட்டைகளிலிருந்து வந்துவிடக்கூடாது என்பதற்க்காக இந்த செகண்ட் டிரையல்!). இருந்தாலும் ஒரு பொதுசேவை செய்து வைப்போமே என்று எழுதியிருக்கிறேன், தொல்லையிருப்பவர்கள் தப்பித்துக்கொள்ளுங்கள் நான் விடுதலையடைந்தது போல்.. நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக..

அன்புடன், வசந்தா நடேசன்.

6 comments:

 1. பஹ்ரைனிலும் இந்த அநியாயம் உண்டு, ஆனால் இங்கே அஞ்சி தினாருக்கு அந்த மருந்து கிடைக்கிறது. மூட்டையோ கரப்பானோ முற்றிலும் ஒழிந்து விடும். பெயர் நினைவில் இல்லை.
  குதேபியா அஸ்வாக் என்னும் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கிறது....

  ReplyDelete
 2. இது நல்லாருக்கே, ரெண்டுக்கும் ஒரே மருந்தா?? மருந்து பேர் கொஞ்சம் சொல்லுங்க சார், புண்ணியமாப் போகும். மக்களுக்கு செலவை குறைப்போம்.

  ReplyDelete
 3. துபாய்'ல பேண்ட் பன்னிருக்கலாமுன்னு நினைக்கேன் ஸோ
  போயி பார்த்துட்டு வந்து சொல்றேன்'பா....

  ReplyDelete
 4. துபாய்ல Banned.. பஹ்ரைன்ல Not Banned... என்ன கொடுமை சார் இது??

  ReplyDelete
 5. Please send me the medicine name.me in saudi nw and suffer a lot f this
  Bedugs badly..u can c the time of this comment to understand my
  Problem,also if possible ask somebody whether medicine is
  Available in saudi.my mail id. roudran@gmail.com

  Please help me friend to get rid off bedbugs.

  Thx in advance

  ReplyDelete
 6. Is there any Medicine available in India...

  ReplyDelete