Friday, January 28, 2011

கம்ப்யூட்டரும், நானும்

படுக்கையில் இருக்கும் போதும், பயணம் செய்யும் நேரத்தையும் தவிர்த்து பிறசமயங்கள் இப்போதெல்லாம் கம்ப்யூட்டருடன் தான் கழிகிறது. முதன்முதலாய் எப்போது இந்த சாதனத்தை பார்த்தேன் என்று யோசித்துப்பார்க்கிறேன்.

1992 அல்லது 1993 என்று நினைக்கிறேன். அதற்க்கு முன்னர் பார்த்திருந்தாலும் அப்போதுதான் கம்ப்யூட்டரை வாங்கும் சந்தர்ப்பம் வந்தது.

இப்போது 40களில் இருக்கும் பலருக்கும் இன்னும் நினைவிருக்கலாம். அப்போது PMRY (Prime Minister's Rojgar Yojana)என்று ஒரு கடன் தரும் திட்டம் இருந்தது. எங்கள் ஊர் வங்கி மேனேஜரை கன்வின்ஸ் பண்ணும் திறமையும் அப்போது இருந்ததால் கன்வின்ஸ் பண்ணி ஒருவழியாக கம்ப்யூட்டர் வாங்கிவிட்டேன். வாங்கும் போது கம்ப்யூட்டர் பற்றி ஆனா ஆவன்னா தெரியாது.

இப்போது பெங்களூரில் ப்ராஜக்ட் மேனேஜராக சாப்ட்வேர் துறையில் இருக்கும் நண்பன் தான் என் கம்ப்யூட்டர் குரு, (தக்காளி, நாகர்கோவில் WCC காலேஜ் பக்கம் இருந்த V கம்ப்யூட்டர் செண்டரில் படித்துவிட்டு இப்போது ப்ராஜக்ட் மேனேஜராம் சார்!) அவனுடைய கம்ப்யூட்டர் திறமையால் முன்னுக்கு வந்தவன். அது இன்றும் பல வழிகளில் எனக்கு பயன் தருகிறது.


இன்றும் நாங்கள் தினமும் தொடர்பிலிருக்கிறோம். Google Docs ஷேர் பண்ணி இப்போதும் சில ப்ராஜக்டுகள் இருவருக்கும் பயன்தரும் வகையில் செய்து வருகிறோம்! அது தனிக்கதை.

முதன்முதலாய் கம்ப்யூட்டர் வாங்க கடைக்கு போய் ஏதோ தேங்காய், மாங்காய் வாங்குவது போல் ஒரு கம்ப்யூட்டர் வேணும் என்ன விலை என்றேன். வாங்க சார், என்ன கான்பிகறேஷன்ல வேணும் என்றபோது கான்பிகரேஷனா?? அப்டின்னா யன்னா?? என்றேன். கடைசியில் ஒருவழியாய், 386 ஸ்பீடில், 40mb ஹார்ட் டிஸ்க், அந்த பெரிய டிஸ்க் டிரைவ் பெயர் வரமாட்டேன் என்கிறது, 1.33 சிடி டிரைவ் என்று ஏதோ.. அதன் பின் 2.44 என்று ஒரு சிடி ட்ரைவ் மாற்றிய ஞாபகம். வி ஜி எ மோனோ மானிட்டர், எல்லாம் சேர்த்து 70000 ரூபாய்க்கு வாங்கினேன்.

அலுவலக செலவு, வொர்க்கிங் கேப்பிடல் அப்படி இப்படின்னு 85000 மொத்த லோன், தைரியமாய் ஐ ஓ பி கொடுத்தது. முதல் இரண்டு இன்ஸ்டால்மெண்ட் கட்டினேன், பின்னர் ரொம்ப மிரட்டும் போது கொஞ்சம் கட்டுவேன், தொழீல் சரிவரவில்லை, என்ன செய்வது. கடைசியாய் அந்த லோனை வெளிநாடு வந்து சம்பாதித்து முதல் ஆண்டு விடுமுறைக்கு வந்தபோது, ஒன்டைம் செட்டில்மென்ட் என்று ஏதோ நெகோஷியேட் செய்து ஒருவழியாய் கட்டிமுடித்தேன், என்னை நம்பி லோன் கொடுத்த மானேஜரின் மரியாதையை காப்பாற்றுவதர்க்காக.

நானும் என் நண்பனும் அப்போது கிளிப்பர் லாங்வேஜ் பயன்படுத்தி இரவு பகலாய் கண்முழித்து உழைத்து ஒரு அக்கவுன்ட்டிங் சாப்ட்வேர் பண்ணியது வாழ்வில் மறக்கமுடியாதது. அவன் ப்ரோக்ராமர், நான் அக்கவுனட்ஸ் விதிகள் அவனுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். படு யூசர் ப்ரெண்ட்லியாய் என் தொழிலுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருந்தது.

அக்கவுன்ட்ஸ் பற்றி மேலும் சொன்னால் உங்களுக்கு போரடிக்கலாம். மேட்டருக்கு வருவோம்.

கம்ப்யூட்டர் உலகம் பின்னர் 486, பென்டியம், செலிரான் என்று எங்கோ போய்விட்டது. என் கம்ப்யூட்டரை நானும் கடைசியாய் பெண்டியம்1 மற்றும் 480mb ஹார்ட் டிஸ்க் என்று மாற்றி வைத்திருந்ததாய் ஞாபகம்.

ஒரு விடுமுறையில் வீட்டிற்க்கு சென்றபோது 70000 கொடுத்து அப்போது வாங்கிய கம்ப்யூட்டரை 50 ரூபாய்க்கு ஆக்கருக்கு போட்டிருந்தனர் வீட்டிலிருந்தவர்கள். வைத்துக்கொள்ள இடம் இல்லை. இந்த தகரடப்பா எதற்க்கு இடத்தை அடைத்துக்கொண்டு என்று. ஆக்கர் வாங்குபவனும் வேண்டா வெறுப்பாய் தான் 50க்கு வாங்கி சென்றானாம். இல்லாவிட்டால் இவர்களே 25 கொடுத்து கொண்டுபோ என்றிருப்பார்கள் போல் இருக்கிறது. லாப்டாப் வந்த திமிர்.

அந்த கம்ப்யூட்டருடனேயே நாங்கள் கஷ்ட்டப்பட்டு உருவாக்கிய அந்த சாப்ட்வேரும் சோர்ஸ்கோடு அடக்கம் போய்விட்டது! உழைப்பின் வலி எங்களுக்குத்தானே தெரியும்.

இன்ட்டர்நெட் அப்போது தான் அறிமுகமாகியிருந்தது. (அல்லது எனக்கு அப்போதுதான் அறிமுகமானது என்றும் சொல்லலாம், ஹி, ஹி) அதற்க்கும் நம் நண்பர் தான் குரு. ஆபிஸில் அப்போது VSNL கனெக்ஷன் எடுத்திருந்தேன், நம் நண்பன் சொல்லித்தான். முதன்முதாலாய், இந்த பாரு, இப்படி கை மாதி வந்தால் அதில் ஏதோ மேட்டர் இருக்கு, அதுல கிளிக் பண்ணால் மேலும் விஷயங்கள் கிடைக்கும் என்று அவன் அன்று சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. Yahoo search engine அப்போது மிக பிரபலம். (இப்போதும் தான், ஹி...ஹி...)

எனக்கு கம்ப்யூட்டரை இயக்க மற்றும் வேர்டு ஸ்ட்டார், டாஸ், லோட்டஸ் எல்லாம் கற்றுக்கொடுத்தது அப்போது என்னிடம் வேலை செய்த என் மனைவியின் அண்ணண், அதையும் சொல்லவேண்டும், இல்லன்னா குடும்பத்துல குழப்பம் ஆகிவிடும்! டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் அப்போது வழக்கில் இருந்தது, பின்னர் தான் விண்டோஸ் அறிமுகம்.


இப்போது நம்ப கஷ்ட்டமாக இருக்கலாம் ஆனால் அதுதான் உண்மை, நான் கம்ப்யுட்டர் வாங்கியிருக்கும் போது ஈமெயில் என்பதே வந்திருக்கவில்லை. என் கம்ப்யூட்டர் சர்வீஸ் நண்பனும் நானும் கையில் சிகரட்டுடன் அப்போது ஈமெயில் என்பதைப்பற்றி என்னுடைய ஆபிஸ் வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தது இன்னும் பசுமையாய் நினைவில் நிற்க்கிறது.

அமெரிக்காவில் இருந்து ஈமெயில் அனுப்பினால் அடுத்த நொடியில் நாம் இங்கே நம் கம்ப்யூட்டரில் பார்க்கலாம் என்று அவன் சொன்னபோது நான் நம்பமுடியாமல் ‘அப்படியா மக்கா?‘ ‘போல, கதை உடாதே‘ என்றேன். நம்புடா அங்க இருந்து அவன் அனுப்பினால் நாம் நம் டெலிபோன் லைன் வழியாக ஈமெயில்களை தரவிறக்கம் செய்து படித்துக்கொள்ளலாம். உலகம் மாறிட்ருக்கு மக்கா என்றான்.

பின்பு இன்ட்டர்நெட் கனெக்ஷன் எடுத்ததும் யாகூவில் ஐடி கிரியேட் பண்ணி போஸ்ட் மாஸ்ட்டர் என்று அப்போது இருந்த (இப்போதும் இருக்கக்கூடும்) ஈமெயில் தரவிரக்கி வழியாக பின்னொரு நாளில் அவனே செய்து காண்பித்தான். அப்போது டயல்அப் காலம். இயந்திர சப்தத்துடன் டயல் செய்து லைன் கிடைப்பது சமயங்களில் கஷ்ட்டமாக இருக்கும், அந்த சப்தமும் இன்னும் நினைவில் நிற்க்கிறது. இன்ட்டர்நெட் வந்த புதிதில் எக்ஸ்போர்ட், இம்போர்ட் அது இது என்று மண்டை காய்ந்து ஆபிஸில் இரவு 1 மணிவரை தேடி வீட்டிற்க்கு போய் என் மனைவியிடம் திட்டு வாங்கியதும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

இப்போது 44 வயது(சிவகுமாரன் சார், சொல்லிட்டேன்!)ஆகிவிட்டது, கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக அல்மோஸ்ட் தினமும் கம்ப்யூட்டரோடு காலம் கழித்து வருகிறேன்.

ம்ம்ம், நல்லாத்தான் இருக்கிறது! (Those wonderful memorable days!)

அன்புடன், வசந்தா நடேசன்.

7 comments:

  1. எனது கவிதைக்கு கொடுத்த உங்களது கருத்துரை வழியாக உங்களின் வலைக்குள் நுழைய முடிந்தது. உங்களின் முதல் கணிப்பொறி அனுபவம் மிக்க சுவையானது

    ReplyDelete
  2. உங்களின் கணிப்பொறியுடனான முதலனுபவம் மிகவும் சுவையாக இருந்த்து. காலம் எவ்வளவு வேகமாகப் போய் கொண்டிருக்கிறது.
    குமரி எஸ். நீலகண்டன்

    ReplyDelete
  3. "நான் ஒரு கம்ப்யூட்டர் வாங்கி இருக்கிறேன் வந்து ஒரு ப்ரோக்ராம் பண்ணிட்டு போ" இந்த தொலைபேசி அழைப்பை என்னால் இன்றும் மறக்க முடிய வில்லை. நான் இது வரை ப்ரோக்ராம்மியத்தில் அந்த அக்கௌன்ட் சாப்ட்வேர் தான் "Monther of all". இப்பொழுது காலம் பல ஆனா பிறகு நானும் உங்களை போல் தான். ஒரே வித்தியாசம் இப்பொழுது எல்லாம் ஒரு கம்ப்யூட்டர் வாங்க வேண்டும் என்றால் இன்டர்நெட்டில் சென்று ஆராய்ச்சி செய்ய வேண்டி உள்ளது.

    ReplyDelete
  4. அனானி வருகைக்கு நன்றி நண்பா.. இவரு தாங்க நம்ம புரோகிராமரு. (தமிழ ஒழுங்கா எழுத படிங்கடா.. என்னைப்போல(??)

    ReplyDelete
  5. I didnt type in Tamil sir....Thanks to google mail...I composed in Google,and pasted here...he...he...he...

    ReplyDelete
  6. இது என்னடா அநியாயமா இருக்கு, அக்கபோர் புடிச்சவனுகளா இருப்பானுவ போலருக்கே!

    ReplyDelete