Tuesday, February 15, 2011

‘நை‘ நை‘ நை‘நை‘ ‘ளை‘ ‘ளை‘‘ளை‘.....

நீங்கள் அறுபதுகளில் பிறந்தவர்களா?? ஆம் உங்களையும் பாதித்த ப்ரச்னை இது, அதற்க்கு முன் பிறந்தவர்களென்றால் ஒருவேளை இதை கண்டும் காணாது கடந்து சென்றிருக்கலாம், அதற்க்குப்பின் பிறந்தவர்கள் அறியாத ரகசியம் இது.

நான் பிறந்தது 1966, விளக்கப்போகும் குழப்பங்கள் ஒருவேளை அந்த வருடத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் வந்த சோதனையா அல்லலது 60துகளில் பிறந்த எல்லோருக்கும் சோதனையா என்று உறுதியாக தெரியவில்லை என்றாலும் எனக்கு இன்று ‘மேட்டர்‘ வேண்டுமே..

எங்களுக்கெல்லாம் 'னை' அல்லது 'ளை' என்பதை சின்னஞ்சிறுவயதில் அறிமுகப்படுத்திய விதமே ‘பிரமாதம்‘ என்பேன்.. 'னை' அல்லது 'ளை' என்பது ‘ன‘ அல்லது ‘ள‘ போட்டு ‘ன‘ வுக்குமுன் யானை தும்பிக்கையை சுருட்டி மேலே தூக்கியிருப்பது போல் ஒரு கொம்பு வைக்க வேண்டும், ‘ளை‘ என்பதற்க்கும் அப்படித்தான். இப்போது ‘னீ‘ என்பதற்க்கு ஒரு கொம்பு பின்பக்கம் பார்த்துக்கொண்டிருப்பது போல் அப்போது ‘னை‘ க்கு இதே கொம்பு முகத்தை திருப்பி அப்படியே முன்பக்கம் இருக்கும்.

நான் என் சிறுவயதில் யானைப்படம் அழகாய் வரைவேன், இந்த தும்பிக்கை ளை அல்லது னை போட்டுவந்த அனுபவத்தால் தான் என்று நினைவு.நான் சிறு வயது அரைகிளாஸ் முதல் படித்தது அப்படித்தான். ஆனால் நாலாப்பு அல்லது அஞ்சாப்பு படிக்கும் போது கொண்டுவந்தார்கள் பாருங்கள் ஒரு சீர்திருத்தம்?? அருகே படத்தில் பட்டியலிட்டது போல் தான் இன்றுமுதல் எழுதவேண்டும் என்றார்கள்.

அதை அப்டி போட்டா என்ன? அல்லது இப்டி போட்டா என்ன?? னையும், ளையும் ஒங்களை எங்கய்யா குடைஞ்சது??? பச்சைமண்ணுகள (நாங்கதான்!) பரிகசிச்ச கொடுமை.. தமிழ் வளர்க்க (படிக்க??) பட்ட கஷ்ட்டம் கொஞ்சமா, நஞ்சமா? ம்ம்ம் எங்க சின்னவயசு நிலைமை? கேக்கறதுக்கு ஆள் இல்லை சார்.

எத்தனையோ ‘கொட்டு‘ வாங்கி ஏதோ தேறீருக்கோம்!

ஏதோ கஷ்ட்டப்பட்டு, வேதனைப்பட்டு ஒரு 'ளை' படித்து.. துக்கப்பட்டு, துயரப்பட்டு ஒரு 'னை' போடப்படிச்சிருந்தேன் சார்.. அதை வந்து மாத்திச்சு பாருங்க பயயுள்ளைங்க??

நாளைலருந்து இப்டி தான் நீ ளை போடணும் என்று?? அநியாயத்தை கேட்கணுமே. கையில பெரம்பை வச்சிகிட்டு மெரட்டுன கொடுமைய என்னன்னு சொல்ல. என்னா ஒரு வில்லத்தனம்?? நாங்களும் உப்பு சப்பு இல்லாம அதை கேட்டுக்கிட்டோம் அது வேறவிஷயம். வேறவழி!

ஆக நாங்கல்லாம் மிரண்டு கொஞ்சம் கொழம்பினது தான் மிச்சம்.. இன்னைக்கும் ‘உரைப்பதற்க்கு‘ன்னு சொல்லணுமா இல்ல ‘உறைப்பதற்க்கு‘ ன்னு சொல்லணுமா (இதுக்கும், அதுக்கும் என்னடா சம்பந்தம்னு நீங்க நினைக்கிறது கேட்கிறது, வேண்டாம்... அழுதுருவேன்.. ம்ம்ம்ங்ங்ங்) என்ற ஒரு குழப்ப நிலை அல்லது ம(க்கு)ந்த நிலைக்கு இதுதான் காரணம் யுவர் ஆனர்???

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி:- எழுத்துச்சீர்திருத்தம்... அச்செழுத்தை சிக்கனப்படுத்த அப்போது கொண்டுவரப்பட்டது என தெரிந்தேதான் எழுதியிருக்கிறேன். இதனால் டைப்ரைட்டரில் சில எழுத்துக்கள் குறைந்தது உண்மைதான், ஆனால் தமிழ் எழுத்தின் அழகு கொஞ்சம் குறைந்துவிட்டது போல் ஒரு குறை எனக்கு. ஏதோ கொஞ்சம் மை மிச்சமாக வேண்டும்/டைப்ரைட்டரில் மூன்று பட்டன் குறைந்தது என்பதற்க்காக நம் பாரம்பரிய தமிழ் எழுத்துக்களை வேரோடு அழித்தது சரியா? செருப்புக்காக காலை வெட்டியது போல் இல்லையா? ஏதோ ஒரு சின்ன ஆதங்கம், வேற ஒண்ணும் பிரச்னை இல்ல சார்.. யாரும் இதுக்காக கல்லை தூக்கவேண்டாம்.

6 comments:

 1. நியாயமான பதிவு ..தமிழின் நிலை இது :)

  ReplyDelete
 2. //(Read it..and I have a contradiction with that...I normally make 10 spelling mistakes in 1 page, and after this change it has reduced to 9)//

  இப்படியும் ஒரு கமென்ட் இதற்க்கு, DO YOU THINK SO?

  ReplyDelete
 3. //ஏதோ கஷ்ட்டப்பட்டு, வேதனைப்பட்டு ஒரு 'ளை' படித்து.. துக்கப்பட்டு, துயரப்பட்டு ஒரு 'னை' போடப்படிச்சிருந்தேன் சார்.. அதை வந்து மாத்திச்சு பாருங்க பயயுள்ளைங்க??//


  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா நாசமா போச்சு போங்க....

  ReplyDelete
 4. //நாளைலருந்து இப்டி தான் நீ ளை போடணும் என்று?? அநியாயத்தை கேட்கணுமே. கையில பெரம்பை வச்சிகிட்டு மெரட்டுன கொடுமைய என்னன்னு சொல்ல. என்னா ஒரு வில்லத்தனம்?? நாங்களும் உப்பு சப்பு இல்லாம அதை கேட்டுக்கிட்டோம் அது வேறவிஷயம். வேறவழி!///

  நீங்க அழுறது பஹ்ரைன் வரை kekkuthu....

  ReplyDelete
 5. நண்பர்களே இங்கே பஹ்ரைனில் பதற்றம் நிலவி வருவது உங்களுக்கு தெரியும் என கருதுகிறேன். ஆகவே கவர்மென்ட் இன்டர்நெட் சேவையை ஸ்லோ ஆக்கி விட்டார்கள். மாத்திரமல்ல சில பல சமயம் கம்பியூட்டரை ஹேக்கிங் மாதிரி சில பல குளறுபடி செய்வதால், உங்களுக்கு கமெண்ட்ஸ் போட தாமதமாகிறது enave மன்னிக்கவும். ஆனாலும் இயன்ற வரை வருவேன்...

  ReplyDelete