Wednesday, February 2, 2011

அலோ யாரு பேசரது!

ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்...

வெடிவேலு : அலோ யாரு பேசரது?

நான் : நாங்க எழுத்துக்கடைய்லர்ந்து பேசரங்க.

வெடிவேலு : அலோ யாருங்க பேசரது?

நான் : நாங்க எழுத்துக்கடைய்லர்ந்து பேசரம் சார்.

வெடிவேலு : என்னா கடை?

நான் : எழுத்துக்கடை சார்

வெடிவேலு : எழுத்துக்கடையா?? புதுசால்லாய்யா இருக்கு.

நான் : புதுசு தான் சார், போனமாசம் தான் தொடங்கிருக்கோம் புதுசா..

வெடிவேலு : அது என்னாய்யா அது எழுத்துக்கடை??

நான் : எழுத்து விக்கறோம் சார்

வெடிவேலு : எழுத்து விக்கறீங்களா,(மனதுக்குள், இந்த பயபுள்ளை நாம எழுதப்படிக்க தெரியாத பயபுள்ளைன்னு தெரியாம நம்மட்ட எழுத்து விக்க வந்துருக்கு, கொஞ்சநேரம் ஓட்டுவோம், சிங்கமுத்துட்ட சண்டை போட்டாச்சு, இவன் எதாவது வச்சிருக்கானான்னு பாப்போம் என்று நினைத்துக்கொண்டே..) எப்படி, ஒரு பத்து எழுத்து இருவது எழுத்துன்னு விப்பீய்ங்களா, இல்ல மொத்த யாவாரமா?

நான் : அன்னன்னிக்கு மூடுக்கு தகுந்தாப்ல விப்பம் சார்

வெடிவேலு : யன்னாது, மூடுக்கு தகுந்தாப்ல விப்பீங்களா? என்ன இழவுடா இது. அது என்னாடா விக்கறீங்க?

நான் ; உயிரெழுத்து 12 இருக்கு சார், மெய்யெழுத்து 18 வச்சிருக்கொம், உயிரிமெய் எழுத்துன்னு ஒரு 216 ஸ்ட்டாக்ல இருக்கு, அது தவிர ஆய்த எழுத்து 1 ஸ்ப்பெஷலா வச்சிருக்கோம் சார், மொத்தமா 247.. நீங்க எது வாங்கரீக்கிறீங்க சார்

வெடிவேலு : ஆய்த எழுத்தா??? அது என்னடா கண்றாவி??

நான் : சாரி சார், ஆயுத எழுத்துங்க சார்.

வெடிவேலு : அதெல்லாம் எனக்கு ஒண்ணாப்ல சும்மாவே சொல்லிக்கொடுத்துட்டாய்ங்கடா.. ஆளை விடுரா.......

நான் : கண்டிப்பா நீங்க வாங்கிக்கணும் சார், எனக்கு அது ஒரு பெருமைங்க சார்.

வெடிவேலு : அட இதெல்லாம் எவன்யா வாங்கறான்? எனக்கு வேண்டாண்டா, என்னை உட்ரு

நான் : சார், பிளீஸ் சார், ப்ளீஸ்.....

வெடிவேலு : யாண்டா என்னை படுத்தறீங்க, இதுக்குன்னே வர்ராய்ங்க சார், யாராரு வாங்கராய்ங்க ஓங்கிட்ட இப்ப? அந்த சிங்கமுத்து பயலுக்கும் நீ தான் வித்தியோ?

நான் : அய்யய்யோ, சத்தியமா நான் இல்ல சார்.

வெடிவேலு : ம்ம்ம்கூங்ங்,,,, சரி, யன்னா வெல?

நான் : இது ப்ரீ சார். யாரு வேண்ணாலும் வாங்கிக்கரலாம்.

வெடிவேலு : ப்ப்ப்ரீயா?? லூசாடா நீயி..........

நான் : ஃப்ரீ தான் சார், நெட்ல விக்கறோம்

வெடிவேலு : நெட்ல விக்கறயா?? அது எங்கடா இருக்கு??

நான் : ஆமா சார் நெட்ல http://vasanthanatesan.blogspot.com ன்னு அடிச்சா வந்துரும் சார், நீங்களும் வாங்கிக்கங்க.

வெடிவேலு : என்னடா இங்கிலிபிஸ்லல்லாம் பேசறீங்க, நம்ம உயிரை எடுக்கதுக்குன்னே புதுசு புதுசா வாரானுங்கய்யா?

டொக்.

(போனை வைத்த சப்தம்)

சிரித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி, வணக்கம்.

அன்புடன், வசந்தா நடேசன்.

11 comments:

  1. hmmm.... mosamillai

    ReplyDelete
  2. நல்ல காமெடி போங்க
    வடிவேல் சொல்ற மாதிரி சின்ன புள்ளதனமா இல்லை இருக்கு ஹையோ ஹையோ

    ReplyDelete
  3. யாரிந்த அனானி?? எனக்கு தெரியாமலே???
    ஹாய் அரும்பாவூர்

    வருகைக்கு நன்றி....

    ReplyDelete
  4. தளத்திற்கு புதிதாக எழுத்துக்கடை என்று பெயர் வைத்திருக்கிறீர்களோ... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. வாங்க பிரபாகரன் சார், உங்கள் தளத்தில் சினிமாவைபற்றி ஒரு கமென்ட் வைத்தேன், பின்னர்தான் தங்கள் வயதை கவனித்தேன் 22, இந்த வயதில் நேரம் இருப்பது ஆச்சரியம் இல்லை.. நானும் என் கல்லூரி நாட்களில் நிறைய சினிமா பார்த்ததுண்டு (கல்யாணத்துக்கு முந்தி).. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  6. பெயர் மாற்றம் குறித்து.. டிஸ்கிரிப்ஷனில் இருந்ததை ட்ரிம் பண்ணி தலைப்புக்கு மாற்றிவிட்டேன்.. இந்த பதிவு குறித்த 'பல்பு' எரிந்ததும்!

    ReplyDelete
  7. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.....
    அடுத்த புது படத்துல வடிவேலுவுக்கு காமெடி டிராக் கெடச்சாச்சு.....

    ReplyDelete
  8. நல்ல காமடியா இருக்கு.நல்லா சிரிச்சேன்

    ஆனால் என்ன இருந்தாலும் காமடிக்காகதான்னாலும்
    ஆயுத எழுத்தை அப்படி சொன்னதை தவிர்த்திருக்கலாம்
    என்ன இருந்தாலும் நாம் தமிழர்கள் இல்லையா?
    இது என் கருத்துதான்,குறை இல்லை

    ReplyDelete
  9. //MANO நாஞ்சில் மனோ said...raji said...///

    வருகைக்கு நன்றிகள், தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, சரிபண்ணியிருக்கிறேன்.

    ReplyDelete
  10. கண்களில் நீர் வர சிரித்தேன் - காப்பி ரைட் வாங்கிகொள்ளுங்கள் இல்லேன்னா சுட்டுடுவானுங்க எமகாத பய புள்ளங்க

    ReplyDelete
  11. அட நம்ம ஜாதி......
    வாருங்கள் ரெண்டு பேருமா எல்லாரையும் வருத்தாமல்,வறுத்தெடுப்போம்...

    சேம் பிளட்!!!!!

    ReplyDelete