Saturday, February 5, 2011

மீண்டும் இந்தியா..

என் முந்தைய பதிவுக்கு வந்த கமென்ட்டுகள் மேலும் இந்தியாவும், மக்கள்தொகையும் என்பதை குறித்து எழுத ஆர்வத்தை தூண்டினாலும், எனக்கு ஏனோ அரைத்த மாவையே மீண்டும் அரைத்துவிடுவேனோ என்ற பயம் வந்துவிட்டது.

இன்றும் இந்தியாவைப்பற்றிய ஒரு மேட்டர் கீழே வருகிறது. அதற்க்குமுன் சில குட்டி செய்திகள்.

மக்களிடம் பொருளாதாரம் மற்றும் மார்க்கெட்டிங் குறித்து அதிகம் ஆர்வம் இருப்பது அது என்னுடைய சப்ஜெக்ட் என்பதால் ஆனந்தத்தை தருகிறது, ஆனாலும் அது உண்மையில் இந்தியா என்கிற மந்திரத்தையும் உடன் கலந்து கட்டியிருந்ததால் வந்ததாகவே இருக்க வேண்டும். இந்தியா என்றால் ஊனுரக்கம் பார்க்காமல் நாம் இணைந்து விடுவது புதியகதை அல்ல.

நேற்று எங்களுக்கு விடுமுறை, முதல் நாளே சொல்லியிருந்தேன், என் நண்பனிடம் இருந்து பதில் வரவில்லை, அதனால் இதை எழுதுகிறேன் என்று, பதில் வந்தது பின்னர்

கரப்பான் பூச்சியையும் மூட்டை பூச்சியையும், புரோட்டா போடுறதையும், பாம்பு புடிக்குரத்தையும் கொஞ்சம் கொறச்சுட்டு வேலைய பாருடா


நக்கலை பாத்தீங்களா?? சரி என்று இரவு எட்டு மணிக்கு மேல், நண்பர்கள் யாரும் வீட்டுக்கு அன்று வந்திருக்கவில்லை, வீக் எண்ட் என்பதால் கொஞ்சம் விஸக்கியை சிப்பிக்கொண்டு (என் மனைவியின் கண்ணில் இது படாமல் இருக்க தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்.) கருமமே கண்ணாக வெள்ளிக்கிழமை காலை நாலரை மணி வரை, உண்மைதான் வேலை உற்ச்சாகத்திலோ அல்லது விஸ்கி தந்த உற்சாகத்திலோ டைமை பார்க்காமல் அப்படியே பொட்டிதட்டிக்கொண்டு இருந்துவிட்டேன்,

நாலரைக்கு உரைத்ததும் இது என்னடா நாதாரித்தனம் என்று அடித்து பிடித்து படுக்கையில் விழுந்தேன. வழக்கமாய் வெள்ளிக்கிழமை 11 அல்லது 12 மணிக்குத்தான் எழுந்திருப்பது வழக்கம். என் முந்தைய ஒரு பதிவில் சொல்லியிருப்பேன் ரவி என்று ஒருவரைப்பற்றி.. இப்போது என்னுடைய கடையின் முன்னணி யூஏயி கஸ்டமர்(?).

அவர் காலை 10 மணிக்கு கையில் சிவ்ஸ்டார் பவனிலிருந்து ஒரு பொங்கல் வடையும் வாங்கிக்கொண்டு வந்து எழுப்பினார்.. என்னடா வம்பு என்று அப்படியே கொஞ்சம் கண்திறந்து பார்த்தால், எழுந்திரிங்க, பல்லை விளக்கிட்டு வந்து சாப்டுங்க, ஒங்கட்ட கொஞ்சம் பேசவேண்டி இருக்குன்னார்.

என்ன ரவி அநியாயம், மணி பத்து தான் ஆகிறது, இன்று வெள்ளிக்கிழமை தெரியாதா? என்றேன். வெள்ளின்னா என்னங்க? வெள்ளிக்கிழமையும் அதுவுமா காலைல எழுந்திரிச்சி கோயிலுக்கு போறதை விட்டுப்போட்டு தூக்கமாமா? எழுந்திருங்க, எழுந்திருங்க பேசவேண்ருக்கு என்றார்.

அரைமனதோடு, கஸ்டமரரயிற்றே என்று எழுந்தேன். குளித்துவிட்டு வந்து சாப்டுட்டே என்ன விஷயம் என்றால், நீங்க எப்படி ‘நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்லன்னு எழுதலாம், அது என்ன கம்யூனிஸ்ட் என்றால் கேவலமா? என்றார். வடையை சாம்பாரில் முக்கி வாயில் வைப்பதற்க்கு முன்பே!

இது என்னடா வம்பாருக்குன்னு ‘இல்லை ரவி ஏதோ வந்தது எழுதிவிட்டேன்‘ என்றேன். சரி, கம்யூனிஸ்ட் பத்தி உங்கள் கருத்தென்ன? என்று கேட்கவுமே புரிந்து விட்டது, எனக்கு அடுத்த பதிவிற்க்கு மேட்டர் ரெடி என்று.

எனக்கு கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களின் மேல் கோபம் ஏதும் இல்லை, அது எனக்கு பிடித்ததா இல்லையா என்பது இங்கு கேள்வியில்லை, அதை விளக்கி ஒரு பெரிய விவாதத்திற்க்கும் நான் ரெடி இல்லை. நாட்டில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கும்போது.

சீனா பற்றி நான் எழுதியதிலேயே தெரிந்திருக்க வேண்டும், முன்னொரு காலத்தில் எனக்கு சோவியத் ரஷ்யாவின் மேலும் ஒரு காதல் உண்டு. பொதுவாகவே நம் ஊர் அரசியல் வாதிகளின் மேல் எனக்கு ஒரு கடுப்பு உண்டு, அந்தவகையில் கம்யூனிஸ்ட் அரசியல் வாதிகளின் மேலும் ஒரு கடுப்பு, அவர்கள் கம்ப்யூட்டர் வேண்டாம் என்றது போன்ற சில அவர்களின் பிற்போக்கு கொள்கைகளால். சரி அவர்களுக்கு அது முற்போக்கு கொள்கைகளாக இருக்கக்கூடும், இருந்துவிட்டு போகட்டும், நம் கடையில் அரசியல் வேண்டாம்.

இதனை விளக்கியதும், ஆங், சரி, சரிங்க என்று ரவி என்னை விட்டுவிட்டார்.. (கஸ்டமரை தக்க வைக்கதுக்கு என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கிறது பாருங்கள்??)

பின்னர் பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டு மதியம் சாப்பாட்டுக்கு அவரே மீண்டும் ஒரு நெய்ச்சோறும், மட்டனும் செய்து கொடுத்தார். செய்து விட்டு தஞ்சாவூர்க்காரர் சமையலைப்பற்றி எழுதிவிட்டீர்கள், இதையும் கோவை சமையல் என்று எழுதுகிறீர்களா பார்க்கிறேன் என்று சொன்னார். இன்றே எழுதிவிட்டேன். தஞ்சாவூர்க்காரரும் நேற்று லேட்டாய் வந்து சேர்ந்தார், வந்து சாப்பிட்டுவிட்டு அவரே ‘ஆஹா சூப்பர்‘ என்றார். இருந்தாலும் கொஞ்சம் தக்காளி அதிகம் தான் என்று சொன்னார், ரவி அவரை பொறாமையில் சொல்வதாக கிண்டல் அடித்து, விசுவாமித்தரர் வாயால் வசிஷ்ட்டர் பட்டம் வாங்குவது சாதாரணவிஷயமா என்றார், ஆக மொத்தம், எனக்கு நேற்றும் ஒரு பிரமாதமான சாப்பாடு. சூப்பர்.

விடுமுறை, அது இது என்று நேற்று நம் கடைக்கு வந்தவர்களுக்கு ஒரு நன்றிகூட சொல்லமுடியவில்லை.. அனைவரின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மனம்நிறைந்த நன்றிகளை இங்கேயாவது தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன், நன்றி.

சரி இன்றைக்குள்ள ஒரு செய்தி..

பொதுவாகவே நன்றி தெரிவிப்பது நம் ஊரில் குறைவு என்பது தெரியுமா? குறிப்பாக சம்பளம் வாங்கினால் அதிகம் பேர் முதலாளிக்கு நன்றி தெரிவிப்பதில்லை. நான் வேலை செய்தேன், நீ சம்பளம் கொடுத்தாய் என்பது போல் இருப்பார்கள். அதேபோல் என் மேல் அதிகாரி ஏதோ ரிப்போர்ட் கேட்டு அதை எடுத்துக்கொடுத்தாலும் நம்மவர்கள் நன்றி தெரிவிப்பதில்லை.. மேலும் மனைவிக்கு சாப்பாடு எடுத்துவைத்ததற்க்காக நம்மவர்கள் நன்றிசொல்லி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஹோட்டலில் சர்வர் சாப்பாடு எடுத்து வைத்தற்க்கு என்றாவது நன்றி சொல்லியிருக்கிறோமா??? இப்படி இந்த லிஸ்ட்டில் இன்னும் பல இருக்கிறது.

ஆனால் வெள்ளையர்கள், மேற்ச்சொன்ன விஷயத்திர்க்கெல்லாம் உடனுக்குடன் நன்றி தெரிவிப்பார்கள், அதேபோல் நம்மிடமும் எதிர்பார்ப்பார்கள். நன்றி சொல்லவில்லையென்றால் என்ன இவன் இப்படி இருக்கிறான் என்று குறையும் சொல்வார்கள்.

நான் இப்போது நன்றி தெரிவிக்க கற்றுக்கொண்டுள்ளேன், விடுமுறையில் மனைவி பறிமாறியதர்க்கு நன்றி சொன்னபோது அவள் வித்தியாசமாய் பார்த்தாள்! இப்போதெல்லாம் ரசிக்கிறாள் அதனை, நீங்களும் உங்கள் மனைவிக்கு/கணவனுக்கு சொல்லிப் பாருங்களேன்.

இந்தியாவைப்பற்றி சொல்லவந்த விஷயம் இதுதான். ஒரிஜினாலிட்டிக்காக அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன்..
=============================================================
Now An Indian owns Britain's East India Company - Another circle got completed.



The East India Company which ruled India for more than 200 years is now ruled by an Indian Sanjiv Mehta who took over the company for $150 lac.
He said ” at an emotional level as an Indian, when you think with your heart as I do, I had this huge feeling of redemption - this indescribable feeling of owning a company that once owned us ”

But media is not interested in such great news. Lets us be the media…&..Fwd this mail to all Indians...
Sanjiv Mehta, CEO of The East India Company
===========================================================

நாமும் பெருமைப்பட்டுக்கொள்வோமா???

நன்றி, வணக்கம்.

அப்புடன், வசந்தா நடேசன்.

2 comments:

  1. //சாப்பாடு எடுத்துவைத்ததற்க்காக நம்மவர்கள் நன்றிசொல்லி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஹோட்டலில் சர்வர் சாப்பாடு எடுத்து வைத்தற்க்கு என்றாவது நன்றி சொல்லியிருக்கிறோமா//

    கண்டிப்பாக இல்லை நன்றினு சொல்லவே நம்மாளுக கூச்ச படுறாங்க.....
    அது போல வாழ்த்து சொல்வதற்கும் முனைவதில்லை......!!!!
    அதுல அரபி அண்ணாச்சிகளை பாராட்டனும்...

    ReplyDelete
  2. //MANO நாஞ்சில் மனோ // வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete