விஜய் டிவி யில் இப்பத்தான் பாத்தேன் சார்... என்ன கருமமோ விஜய் டிவில தான் எனக்கு எப்பவும் மேட்டர் கிடைக்குது.
சுமலதா என்று ஒரு பெண் தன்னை நாகதேவதை என்று சொல்லிக்கொண்டு நாகதேவதையாகவே வாழ்கிறாராம்.
மக்கள் அவர் காலில் விழுகிறார்கள், அவரும் தலையை பிடித்து தன் காலோடு அழுத்துகிறார்???
நாகப்புற்றோடு முட்டிபோட்டு குனிந்து பாலை புற்றின் மேல் வைத்து அருந்துகிறார். பாம்புபோல் படுத்து கொண்டு செய்திருந்தாலும் ஏதோ பாம்பு போலவாவது இருந்திருக்கும்.
காலில் விழுந்தவர்களை மூன்றுமுறை சாட்டையால் அடிப்பாராம், நோய் மற்றும் கஷ்டங்கள் விலகிவிடுமாம்..
ஜெயலலிதா பரவாயில்லை போல் இருக்கிறதே! அம்மாவிடம் சாட்டையெல்லாம் இல்லை.
என்ன கஷ்டம்டா இது?
மக்களே கடவுள் நம்பிக்கை வேண்டியது தான், நம்பிக்கை சார்ந்த விஷயங்களை கேள்வி கேட்க கூடாது தான்.. ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் இல்லையா சார்.
விஜய் டிவி இதுபோல் நிகழ்ச்சிகளை தவிர்க்கவேண்டும் என நினைக்கிறேன், இது இன்னும் சிலரை இதுபோல் மாறத்தூண்டிவிடாதோ?
நானும் நாகர்கோவில் நகரில் பிறந்தவன் தான். மனிதர்கள் ஒருநாளும் கடவுளாக முடியாது என்பதை நம்புகிறவன்.
இது என்ன எழவுடா இது, நம் மக்கள் திருந்தவே மாட்டார்களா சார்??
ஆற்றாமையுடன், வசந்தா நடேசன்.
டிஸ்கி:- கடவுள் இருக்கிறாறா இல்லையா என்பதை விவாதிக்க போகும் பதிவல்ல இது, தயவுசெய்து அதுபோன்ற கருத்துக்களை பகிரவேண்டாம். அவை பிரசுரமாகாது. ‘சுயமரியாதைகள்‘ மற்றும் ‘பகுத்தறிவுகள்‘ குறித்த பதிவும் அல்ல, மக்களின் ‘கண்மூடித்தனமான‘ நம்பிக்கைகள் குறித்ததே.
இவங்களை எல்லாம் திருத்தவே முடியாது... லூசுல விடுங்க...
ReplyDeleteநானும் பார்த்தேன்...
ReplyDeleteஎரிச்சல்வர, பாதியிலேயே சேனலை மாறிவிட்டேன் :)
ஏமாறுகிற மக்கள் இருக்கும்வரை இப்படிப்பட்ட ஏமாற்றுவேலைகளெல்லாம் நடக்கத்தான்செய்யும்.
1000 பெரியார்கள் வந்தாலும் இவங்கள திருத்த முடியாது பாஸ்
ReplyDeleteதிரட்டிகளில் இணைத்தால் தங்கள் பதிவு அதிகமானோரை சென்றடையும்
ReplyDeleteஅனைவரின் வருகைக்கும் நன்றி..
ReplyDeleteதிரட்டிகளில் இணைத்துள்ளேனே,, தமிழ்மணம், இண்ட்லி இரண்டிலும் வழக்கமாய் இணைப்பது வழக்கம், வேறு ஏதாவது இருக்கிறதா என்ன? இருந்தால் கொஞ்சம் அட்வைசுங்களேன்.
யான் யாரை குறைச் சொல்லது..
ReplyDeleteகாலில் விழுபவரையா.. காலில் விழவைப்பவரையா.