Wednesday, February 9, 2011

சுவிஸ் வங்கி..

ஒரு முக்கியமான விஷயம் கேள்விப்பட்டேன் இன்று, அதனால் என் நேற்றைய புதிய தொடருக்கு ஒரு நாள் விடுமுறை.

இப்படி தொடரை விட்டதை மீண்டும் பிடிப்பது மிகவும் கஷ்டம் என்று நினைக்கிறேன், இதற்க்குமுன் இப்படி இரண்டு இதுபோல் நிற்பதாய் ஒரு நினைவு. ஆனால் அவைகளில் யோசிக்கும் வேலை பாக்கி இருக்கிறது, காளீஸ்வரன் கதை உண்மைதான் என்பதால் தொய்வு விழாது என்று நம்புகிறேன். யோசிக்கிற வேலை இல்ல பாருங்க, நோகாம நொங்கு திங்குற மாதிரி(??)

சரி சொல்லப்போகும் விஷயம் அதைவிட முக்கியம் என்று நினைப்பதால் இதோ..

ஒரு நீண்ட நாள் நண்பரிடம் இன்று பேசிக்கொண்டிருந்தேன், அலுவல் விஷயமாய். பேசிக்கொண்டிருந்து விட்டு கடைசியில் பொதுவாய், உங்கள் வியாபாரம் எப்படி என்று நானும் எங்களது எப்படி என்று அவரும் கேட்டுக்கொண்டோம். இதுதான் இப்போது எல்லோரும் இங்கே பேசிக்கொள்வது, நான் தப்பிச்சிட்டேன், நீ தப்பீட்டியா என்ற அக்கரை தான் காரணம். தப்பமுடியாதவர்கள் எல்லாம் அல்ரெடி போயிட்டாங்கன்னு நினைக்கிறேன். இதை பற்றியும் ஒரு பதிவு எழுதும் உத்தேசம் உள்ளது, அதனால் அதிக விபரம் வேண்டாம் இங்கு.

கடைசியில் அவர் சந்தோஷமாக ஒரு விஷயம் சொன்னார் அதைக்கேட்டு நான் அதிர்ச்சியானது தான் மிச்சம்.

இப்போது இந்தியாவில் உள்ள அரசியல்வியாதிகளின் சுவிஸ் முதலீடுகளை எல்லாம் நாட்டுக்குள் கொண்டுவர, சமீபத்திய உச்சநீதிமன்ற கேள்விகளுக்குப்பின், கொஞ்சம் தீவிர முயற்ச்சிகள் நடப்பதுபோல் இருப்பதால், பயபுள்ளைங்கல்லாம் அதை வரிகேட்காத, முதலீடுகளுக்கு எந்த கேள்வியும் கேட்காத நாடுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்து பெரிய முதலீடுகள் வர ஆரம்பித்துவிட்டன என்று மிக முக்கியமான பெரிய இடத்து நபர் ஒருவரிடம் நேற்று பேசும்போது தெரிந்தது என்று சொன்னார்.

பாவம், வேலை தப்பித்துவிடும் என்ற உற்ச்சாகம் அவருக்கு, ஆனால் இந்தியாவுக்கு அது எவ்வளவு பெரிய இழப்பாக இருக்கும்?? இது போன்ற நாடுகளில் வரி கிடையாது, செய்யும் முதலீடுகளுக்கு யாருக்கும் கணக்கு சொல்லவேண்டாம் என்பதெல்லாம் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். அதனால் இப்படி நடப்பதற்க்கு வாய்ப்புக்கள் இருப்பதை மறுக்கமுடியாது என நினைக்கிறேன்.

இதுவிஷயத்தில் உறங்கிக் கிடந்த உச்சநீதிமன்றம் ஒருவழியாய் முழித்துக்கொண்டது மகிழ்ச்சிதான் என்றாலும், அந்த கேஸ் முடிந்து எல்லாம் இந்தியா வந்து சேருமுன் எல்லா பணமும் இதுபோல் நாடுகளில் முதலீடாகி விடுமோ என்று ஒரு பயம் வந்தது நிஜம்.

சமீபத்திய ராச நஷ்டம் மட்டும் 186 லட்சம் கோடிகள் என்றால், சுதந்திரம் கிடைத்ததுமுதல் இது வரை இந்தியா இழந்தது என்ன என்று என்னால் யோசிக்கவே முடியவில்லை, ஒரு அக்கவுன்டன்டாய் எத்ததையோ பெரிய பெரிய நம்பரெல்லாம் வாழ்க்கைல பாத்துட்டேன், இந்த நம்பர் யாராலும் எழுதமுடியாது, பல டிரில்லியன் இலட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கும் என்று உத்தேசமாக வைத்துக்கொள்வோம், ஏதேனும் கணிணி வல்லுனர்கள் ஆராய்ச்சி பண்ணி சொல்லலாம். நான் எக்ஸெல்லில் என் உத்தேச கணக்கை அடித்து கேட்டால் எறர் தான் வருகிறது??

இதில் பாதியையாவது இந்திய தேசத்திற்க்கு உபயோகப்படுத்த வேண்டும் என்றால், ஏதோ என் சிற்றறிவுக்கு தோன்றிய யோசனை இதோ..

சரி, மொத்தமும் ‘கோவிந்தா‘ ஆவதற்க்கு முன்னால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு இந்தியாவிற்க்கு வெளிநாட்டிலிருந்து செய்யப்படும் முதலீடுகளுக்கு கேள்வி ஏதும் கிடையாது என்று நம் அரசாங்கமும் அறிவித்தால் எப்படி இருக்கும்?? எப்பூடி வந்திச்சி, யாரு கொடுத்தாய்ங்க என்று ஒருகேள்வியும் கிடையாதுன்னு ஒரு சட்டம் கொண்டு வந்துவிட்டால்!

அதற்க்காக தனி டேக்ஸ்ப்ரீ நகரங்கள் என்று பல நகரங்களை தேர்ந்தெடுத்து அறிவித்து அதை எல்லாம் பெரும் தொழில் நகரங்களாக மாற்றிவிடலாம், கண்டிப்பாய் இந்தியாவிற்க்கு லாபம் இருக்கும் என்று நம்புகிறேன்.

நம் திருடர்கள் எங்கோ சொத்து வாங்குவதை விட கண்முன்னால் சொத்து இருந்தால் அதையேவிரும்புவார்கள் என நம்பலாம், பின்னொரு காலத்தில் நல்லவய்ங்க யாராவது பிரதமராக வந்தால் எல்லா டேக்ஸ்ப்ரீ பகுதிகளையும் சத்தம்காட்டாமல் அரசுடமையாக்கிவிட வேண்டும், எப்படி ஜடியா?? இதை இப்பவே வெளிய சொல்லிராதீங்க சார்.. அப்புறம் வச்சிக்கலாம், நல்லவய்ங்க வராமலேயா போயிருவாய்ங்க?

மன்மோகன் சிங் காதில் யாராவது போட்டுவைங்களேன், நாங்களும் இந்தியா பக்கம் வேலைக்கு வந்து உங்களோடு ஜக்கியமாகி விட்டதுபோல் எனக்கு கனவு வர ஆரம்பித்துவிட்டது இப்போதே.

கனவுகளுடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி : நடக்காத கதை என்று தெரிந்துதான் எழுதியிருக்கிறேன்! ஒரு ஆசைதான், கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டுதானே, இப்படி நடந்துமுடிந்து நாட்டில் எல்லோரும் ஆனந்தமாய் இருப்பதாய் ஒரு கனவாவது கண்டு வைப்போம், ஏதோ நம்மால் முடிந்தது.

7 comments:

 1. நல்ல யோசனை
  கபடி விளையாட்டில் முதலில்
  ஏறவிடுவதுபோல் ஏறவிட்டு
  பின்புதான் பிடிக்கனும்
  வேற வழியில்லை
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. என்னை ஞாபகம் இருக்கா?

  என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை.. நன்றி..

  See,

  http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

  ReplyDelete
 3. //அதற்க்காக தனி டேக்ஸ்ப்ரீ நகரங்கள் என்று பல நகரங்களை தேர்ந்தெடுத்து அறிவித்து அதை எல்லாம் பெரும் தொழில் நகரங்களாக மாற்றிவிடலாம், கண்டிப்பாய் இந்தியாவிற்க்கு லாபம் இருக்கும் என்று நம்புகிறேன்.//

  அய் இந்த ஐடியா நல்லா இருக்கே....

  ReplyDelete
 4. உச்ச நீதிமன்றம் என்றோ குரல் கொடுத்து
  விட்டது.ஆளும் கட்சியினர் மூடி மறைத்தார்கள்.
  நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. //Ramani//sakthistudycentre//MANO நாஞ்சில் மனோ //ஆயிஷா //

  அனைவரின் தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி..

  ReplyDelete
 6. உங்க கனவு நினைவானா மிக்க மகிழ்ச்சிதான்.....

  ReplyDelete
 7. இது மிக முக்கிய பிரச்சினை.இது பற்றிய தொடர் விவாதங்கள் அவசியம். தொடங்கி வைத்ததற்கு நன்றி.

  ReplyDelete