Saturday, December 25, 2010

ஒரு நடிகையின் முரண்!

நடிகைகள் என்ன சொன்னாலும் நாம் நம்பித்தான் ஆக வேண்டும் போல் இருக்கிறது!

சன் டிவியில் இதோ ஒளி பரப்பாகிக்கொண்டிருக்கிறது. சுடச்சுட எழுதுகிறேன்! ஆவி பறக்கிறது.

நிறைய மகாஜனங்கள் இதை நோட் பண்ணியிருக்கக்கூடும். ஆனாலும் இதை முதலில் ஆவணப்படுத்துவதில் பெருமைகொள்கிறேன்(!), எதாவது அவார்டு இருந்தா கொடுங்கப்ப்ப்பூ!

இரண்டு நாட்களுக்கு முன் விஜய் டிவியில் நடிகை சரண்யா பங்குகொண்ட வாங்க பேசலாம் என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். யாரு கெட்டநேரமோ நான் அதை பார்த்து தொலைத்துவிட்டேன். அதில் சரண்யா பேசியதன் சுருக்கம் கீழே.

அவர் சினிமாவில் நடிக்கவந்த கதையை சொல்லும் போது, அவருடைய அப்பா, ஒரு டைரக்ட்டராக இருந்தும் இவர் நடிக்க ஏனோ சம்மதிக்கவில்லையாம், ஒரு நாள் யாரோ ஒரு டைரக்டர் இவரை கல்லூரியிலிருந்து திரும்பி வரும்போது போட்டோ எடுத்ததாகவும், அதை வைத்துக்கொண்டு இவர்தான் நடிக்கவேண்டும் என்று ஒரு வாரம் போல் இவர் வீட்டுக்கு அலைந்ததாகவும், இவருக்கு நடிக்க விருப்பம் இருந்தும் அவர் அப்பா விடவில்லையாம், இவர் அடம் பிடிச்ச கழுதையாக அடம்பிடித்து, சரி இந்த ஒரு படம் மட்டும் நடிச்சுக்கோ என்று அவர் அப்பா ஒரு வழியாக பெர்மிஷன் கொடுத்ததாகவும் நமக்கெல்லாம் இவரைதிரையில் பார்க்கும் பாக்யம்(!)கிடைத்ததாகவும் சொன்னார். நானும் வாயை பொழந்துட்டு பாத்துக்கிட்டுருந்தேன் சார்.

நான் முதன் முதலாய் CA எக்ஸாம் எழுத போய்க்கொண்டிருக்கும் போது, இவர் முதன் முதலாய் மேற்ச்சொன்னபடி நடித்த ‘நாயகன்‘ படம் பெங்களூர் பல்லவி தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்தது. போஸ்டரைப்பார்த்து விட்டு ‘ஆஹா‘ என்று பல்லவி தியேட்டர் எதிரில் இறங்கி படம் பார்க்க போய்விட்டேன் (அடுத்த ஸ்டாப்பில் எக்ஸாம் நடக்கிற காலேஜ் இருந்தது!) எக்ஸாம் இனி ஆறு மாசம் கழித்து வரும் பார்த்துக்கொள்ளலாம் என்று அந்த வயதில், ஏதோ நாயகனை இப்ப விட்டால் இனி பார்க்கவே முடியாது என்பது போல்.

ஆனால் இன்று இயக்குநர் சங்க 40வது ஆண்டுவிழாவை சன்டிவியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். நம் முன்னாள் கனவுக்கன்னி ராதாவை திரும்ப திரும்ப காண்பித்து சன் டிவி ஓரளவிற்க்கு நம்மை அந்த நிகழ்ச்சியை பார்க்க ரெடி பண்ணியிருந்தது!

சரியென்று ராதாவைத்தேடி (ரொம்பநாளாயிடிச்சு சார் பாத்து) சன் டிவி முன் உட்கார்ந்ததில், முதன்முதலாய் நடிகை சரண்யா பேசவந்தார். சரி என்ன சொல்கிறார் என்று சைலன்ட்டாய் கவனித்தால், பயபுள்ளை ரெண்டு நாள் முன் விஜய் டிவில சொன்னதுக்கு நேர் மாறாய் கீழ்க்கண்டவாறு சொன்னது.

அவரும் அவர் அப்பாவும் டைரக்டர் முக்தாசீனிவாசன் அலுவலகத்தில் டைரக்டர் மணிரத்னத்தைப்பார்க்க உட்கார்ந்திருந்ததாகவும், அவருக்கு முன்பே மணிரத்னம் அங்கு வந்து ஏதோ பத்திரிகையை புரட்டிக்கொண்டிருந்ததாகவும், அப்போது சன்டிவி கிடையாதாம், அதனால் இவருக்கு மணிரத்னத்தைப்பார்த்தும் அடையாளம் தெரியவில்லையாம், பின் அவர் வந்து மணிரத்னத்தை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும், அதனால் அவருக்கு நாயகன் படத்தில் சான்ஸ் கிடைத்ததாகவும் கூறினார்.

ஆடிப்போயிட்டேன் சார் ஒரு நிமிஷம்!

என்ன எழவுடா இது? ரெண்டு நாளைக்கு முன் அப்படி சொன்ன சரண்யா இன்று இப்படி வுல்ட்டா ஆனது ஏன்? அவரை விஜய்டிவி வாங்க பேசலாமில் பேட்டி எடுத்த டெல்லி கணேஷ் (கூட இருந்த SSசந்திரன் இப்ப போய் சேர்ந்துட்டார், இரண்டு நாள் முன்பு வந்தது ரீடெலிகாஸ்ட்டாக இருக்க வேண்டும்) இப்ப இதை பார்த்தால் என்ன நினைப்பார்?

விஜய் டிவி ரெண்டு நாள் முன்பு இதை மறுஒளிபரப்பியதில் ஏதேனும் உள்குத்து இருக்குமோ?

சரி, இப்ப நியூஸ் முடிந்ததும் ராதாவைப்பார்க்க வேண்டும், வாங்க போலாம்.

மன்மதன் அம்பு வேறு பாக்கி இருக்கிறது, பாக்றேன்னா பாரு, பாக்காட்டி போன்னு வேற சொல்றாய்ங்க சார், இத திருட்டு சிடில அல்லது நெட்ல தான் பாக்கணும்னு இருக்கேன். வந்தா கொஞ்சம் சொல்லுங்க சார், புண்ணியமாப்போகும்.

ரசிகன், வசந்தா நடேசன்.

4 comments:

  1. அவங்கெல்லாம் அப்படிதாம்பா,போத இறங்கினா எல்லாம் மாறிடும்.

    ReplyDelete
  2. போதை?? எல்லாம் நம்ம தலையெழுத்து சார்!
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. இதெல்லாம் மேடைப்பேச்சுக்கள்... அதாவது சுயசொரிதல்கள்...

    ReplyDelete
  4. இதுல ஏதும் உள்குத்து இல்லையே? (என்னை சொல்கிறீர்களா அல்லது சரண்யாவை சொல்கிறீர்களா என்று ஒரு கணம் மிரண்டுவிட்டேன்) சரி, நாம்தான் இன்னும் மேடை ஏற வில்லையே என்று பின்னர் சிறிது ஆறுதல் அடைந்தேன்!.. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete