Friday, December 31, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்!
2011ல் எல்லாம் வெல்ல வாழ்த்துக்கள்!

அன்புடன்

வசந்தா நடேசன்

Thursday, December 30, 2010

நித்திக்கு ஏன் பெண்பக்தர்கள் அதிகம்?ஏன் சார் இப்படி? பயபுள்ளைகள் திருந்தாதோ? ஒருவேளை அத நீளமா வைக்கணுமோ? ஆகா இது தெரியாமப்போச்சே!

எதடா? எப்புடிரா கண்டுபுடிச்ச?

நாங்களும் சாமியார் தாண்டி.., எங்களுக்கும் தெரியும்ல.

டேய், சொல்லுரா, ஒருவேளை கதவைத்தொரந்து வைக்கணுமோ?

அது போன வருஷம்.. இப்பல்லாம் கதவைத்தொரந்து வச்சா கள்ளன் தான் வருவான், காத்து வராது.

டேய், சொல்லுரா.. பிளீஸ்.

அட போங்க சார், முடி நீளமா வைக்கணும்னு சொல்லவந்தன் சார், நீங்க வேற, என்னய ஜெயிலுக்குள்ள பாக்காம அடங்கமாட்டிங்களோ?

அன்புடன்

நித்தி பக்தன், வசந்தா நடேசன்.

டிஸ்கி :- சொம்மா சிரிச்சிட்டு போயிருங்க சார்.. மிரட்டல்லாம் வேணா, நான் ஓடிருவேன்...


படம் தினமலரில் திருடப்பட்டது. நன்றி தினமலர், சொல்லாமல் சுட்டதுக்கு வருந்துகிறேன், மன்னிக்கவும்.

Wednesday, December 29, 2010

பஞ்சு கடை (1)

நான் மணிமேடைல பஞ்சு கடை வச்சிருக்கன் சார். இப்பலாம் யாவாரம் ரொம்ப மோசம், எவன் இப்ப பஞ்சு மெத்தை வாங்கறான், ஒரு காலத்துல நாமதான் ராசா, கல்யாண சீசன்ல நம்ப கடைல நிக்க எடம் இருக்காது, என்னாத்த சொல்ரது. இது எங்க ஐயா யாவாரம் செஞ்ச கடை. தலகீழா அவரும் நின்னு பாத்தாரு, என்னை படிக்கவச்சிரலமுன்னு, நமக்கு ஏரணுமே. ஒம்பதாப்பு படிச்சு தோத்தஉடனேயே போதும்டா உன் படிப்புன்னு இந்த கடைல கொண்டந்து போட்டாரு, அன்னைலருந்து இந்த யாவாரம் தான் நமக்கு.

வழக்கம் போல கடைய தொரந்து வச்சிக்கிட்டு பாத்துகிட்டுருக்கேன்.. எல்லா பயலும் குர்லானு, குட்நைட்டுனு மெத்தை வாங்க ஸாரிபாலசுக்கு ஓடுரானுகள தவிர நம்ம கடைய எட்டிக்கூட பாக்கமாட்டுக்கானுங்க.

இது போதாதுன்னு இப்ப எதோ எம் எல் எம் மாம், அநியாயத்துக்கு மெடிக்கல்பெட்டுன்னு 25000க்கு விக்கிறான் சார், அதவாங்கி படுக்கானுங்க. இலவம்பஞ்சு மெத்தைய 700ரூவாய்க்கு நாம கூப்ட்டு குடுத்தாலும் வாங்கமாட்டான் போலருக்கு.

ஏதோ மணவாளக்குறிச்சி, மண்டேமார்க்கெட்டுன்னு சின்னசின்ன சுத்துபத்து ஊர்க்காரங்க வந்து நம்மட்ட தலகாணி மட்டும் மொத்தமா வாங்கிட்டு அப்பப்ப ஒண்ணு ரெண்டு மெத்தை வாங்கிட்டு போரானுங்க, அதுல தட்டு, தடுமாரி நம்ம பொளப்பு ஓடிக்கிட்டிருக்கு.

ஒரு பய நேத்து வந்து வெல கேட்டுட்டு போனான், பஞ்சு மெத்தை வேணுமாம், தங்கச்சிக்கு கல்யாணம் வச்சிருக்கானாம், ரெண்டு தலயாணி, பெட்ஷீட்டு எல்லாம் செட்டு 900 ரூவா சொன்னேன், நாளைக்கு வாரேன்னுட்டு போனான். வாரானோ இல்ல வராவழிய போரானோன்னு பாத்துகிட்டிருந்தா, நம்ம கடைல கணக்கு எழுதுர பய நாராசன் வந்து ஏறுனான் கடைல.

இவன் என்ன வயித்தெரிச்சலைக்கொட்டிக்க வந்திருக்கானோ, ஒதவாக்கரை. பொண்டாட்டிக்கு பேங்குல வேலை, இந்த பயல ஒரு தூசுக்கு மதிக்கமாட்டா அவ. இவனுக்கு நம்ம கடைல மாசம் 150ரூவா சம்பளம். ஆடிட்டராபீஸ்ல எதாவது குடுப்பாகளா இருக்கும். மாசத்துக்கு ஒருநா வந்து என்னவோ எழுதிக்கிட்டு போவான். இவன் என்ன எழுதுரான்னு யாருக்கு தெரியும், வருசக்கடைசில புக்ல சீல் வச்சி வாங்கிட்டு வந்துருவான், அவகளும் சீலு வெக்கமுன்னால பாப்பாகளா என்னான்னு தெரியலை. கொஞ்சம் லூசுப்பய போல இருப்பான் பாக்கதுக்கு.

எனக்கு இந்த ஆடிட்டர் ஆபீஸ் ஆளுங்களைக்கண்டாலே கொலநடுக்கம் இப்ப. எப்ப பாரு அவ்னுகளுக்கு அவ்ளோ எடு, இவ்னுகளுக்கு இவ்ளோ எடுன்னு ஒரே புடுங்கல் தான். கவர்ண்மெண்ட்ல வேலபாக்ற ஐய்யாமார்களுக்கெல்லாம் சம்பளம் குடுக்குரானா இல்லையான்னே தெரியல, எப்ப பாரு எங்க புடுங்கலாம்னு தான் அலையராய்ங்க, நாராசனுக்கு ஓனர்மாதிரி ஆளெல்லாம் இந்த ஐயாமார்களுக்கு ஏஜென்ட்டு. தீவாளின்னு வந்துட்டா புக்கு போட்டுட்டு அலையுரானுகன்னா பாருங்களேன். இவன் இப்ப என்ன ஏங்கிட்ட புடுங்கதுக்கு வந்திருக்கானோ? பொங்கலுக்கு இப்பவே ஆரம்பிச்சுட்டானுகளா? யாவரம் இருக்க இருப்புல ப்பயமாட்டுலா இருக்கு இப்ப.

ஒருவாட்டி இப்டித்தான் ஆந்திரால இருந்து கொஞ்சம் விலை மலிவா இருக்கேன்னு கொஞ்சம் கொள்முதல் பண்ணினேன், அதை கரூர் செக்போஸ்ட்ல புடிச்சி வச்சிகிட்டு இவனுக பண்ணுன வில்லங்கத்த நெனச்சா வயிறு எரியுது. அது போல எதாவது மாட்டிக்கிட்டா இப்பவும்?

எதுக்கு வந்தான்னு தெரியாம என்னடே என்ன விசேசம்னேன். பய மொகம் பொதையல் கிடைச்ச மாதி இருந்தாலும் நம்ம கடப்பயல பாத்து மலங்க மலங்க முழிச்சிட்டு இருந்தான்.

சொல்லுடே, இரண்டு நாள் முன்னால தான நம்ம கணக்கை எழுதிட்டு போன? இப்ப என்ன விசேசம்?

சொல்லுகென் பொருங்கணேன்னுட்டு, நம்ம கடைபயல்ட்ட மக்கா இந்த கடைல 2 டீ வாங்கிட்டு வாமக்கான்னான்.

நாங்க டீல்லாம் குடிச்சாச்சுப்பா, நீ வேணா அந்நா எஸ்ப்பி ஆபிசுக்கிட்ட போயி குடிச்சுட்டு வான்னுட்டு, தலகாணி தச்சுக்கிட்டிருந்த கடைபயல்ட்ட நீ வேலைய பாருடான்னேன், இவரு பெரிய ஆபிஸரு, டீ ஒண்ணுதான் கொற லூசுப்பயலுக்கு.

எணேன், நான் காசுக்குடுக்குரணேன், டேய் இந்தாடா நீ ஒண்ணு குடிச்சிட்டு எங்களுக்கு 2 வாங்கிட்டு.. ஒண்ணும் அவசரமில்ல மெதுவா வான்னு 100ரூவா தாளை எடுத்து நீட்டுனான். கடைப்பய என் மூஞ்சிய பாத்தான்.

இந்த பயலுக்கு பயித்தியம் புடிச்சுப்போச்சா? என்ன எழவுன்னுட்டு நானும், லேய் போய் சீக்கரம் குடிச்சுட்டு டக்குன்னு 2 டீ வாங்கிட்டு வாலன்னேன். வேலய மெனக்கெடுத்த வந்துருக்கானா?

பய போனதுக்கப்புறம் என்கிட்ட எணேன், உங்களை நம்பலமாணேன்னான்.

இந்த பய எதுக்கு என்னய நம்பணும்னுட்டு நானும் என்னடே என்ன பிரச்னை, என்ன எதுக்கு நீ நம்பப்போற? பணம்லாம் ஒண்ணும் ஏங்கிட்ட இல்லப்பா என்றேன் உஷாராய் ஏதோ பணம் கிணம் கேக்கப்போரானோன்னு.

பணம்லாம் ஒண்ணும் வோண்டாணேன், எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க, நான் ஒங்களுக்கு பணம் தாரேன்னான்.

நீ எனக்கு தரப்போரியா? இந்தபயலுக்கு என்னாச்சுன்னு எனக்கு ஒரு எழவும் புரியலை. லாட்டரி, கீட்டரி அடிச்சிருச்சா? இல்ல பொண்டாட்டிகாரி பேங்க கொள்ளையடிச்சி கொண்டாந்து குடுத்துட்டாளா? நம்ம கஷ்டகாலத்த பாத்து கடவுளு இவன் மூலமா கண்ண தொரக்குரானோ? ஒண்ணும் புரியல எனக்கு. அவனையே பாத்துட்டுருந்தேன்.

திரும்பவும் கேட்டான், எணேன், உங்களை நம்பலாமான்னு.

நம்பு மக்கா, நான் என்னைக்கி ஒனக்கு துரோகம் பண்ணிருக்கேன்? சும்மா நம்பிச்சொல்லுன்னேன் வரத பாத்துக்கலாம்னு.

இது ஒரு டீல்ணேன், நீங்க ஒத்துக்கிட்டீங்கன்னா, ஒங்ளுக்கும் லாவம், எனக்கும் லாவம்னான்.

பயபுள்ளய சன் டிவில டீலா நோடீலா விளாட கூப்ட்ருக்கானோ? கூட போக ஆள் தேடரான் போலருக்கு. அங்க போனாலும் அதிகம் போனா 50 லட்சம் ஜெயிக்கலாம், இவன் 1 லட்சமாவது ஜெயிப்பானா? ஜெயிச்சா நமக்கு அம்பதாயிரமாவது தருவானா? இவன நம்பி போலாமான்னு யோசிச்சிட்டே, சொல்லு நாராசா, லாவம் சம்பாதிக்க தான நான் கடை வச்சிருக்கேன். எனக்கும் பாதி தருவேன்னா சொல்லு, டீலு. ஆனா போர வார செலவுல்லாம் ஒன்னோடதுதான்னேன். எனக்கிட்ட ஒரு பைசா இல்ல என்றேன் கொஞ்சம் ஜாக்ரதையா.

பாதில்லாம் ரொம்ப ஓவர்ணேன், அம்பதாயிரத்த விட ரொம்ப அதிகம் தாரேன்னான்.

நானோ வாடகை கொடுக்கக்கூட பைசா இல்லாம இருக்கேன், இந்த பய அம்பதாயிரத்துக்கு மேலா தாரேன்ரான். ஆடிட்டராபிஸ்ல வேல பாத்து பாத்து பயலுக்கு அறிவு கூடிருச்சோ?

சரி நான் உனக்கு என்ன பண்ணணும்னேன்.

கொஞ்சம் என் கூடமாட ஒத்தாசையா இருந்தீங்கன்னா போதும், அப்புறம் உங்க கடை போன் நம்பர நான் ஒரு மாசம் கால் ரிஸீவ் பண்ண மாத்ரம் யூஸ் பண்ணுவேன், நீங்க இதுக்கு சம்மதிச்சா போதும்னான்.

இது மட்டும் போதுமா? நான் எதுலயாவது கையெழுத்து எதாவது போடணுமா? இதுவே வாடகைக்கட, அதுலாம் நம்ளால முடியாது பாத்துக்கோன்னேன் கொஞ்சம் உஷாரா.

அதெல்லாம் வேண்டாண்ணே, என்னன்னாலும் நீங்க கொஞ்சம் பெரிய ஆளு, கொஞ்சம் எனக்கு ஐடியா கொடுங்க, கூடமாட ஒத்தாசையா இருங்க அதுவே போதும்னான்.

பய நம்மள பெரியாளுன்னு வேர சொல்ரான், சரிடா டீல் ஒத்துக்கிறேன். ஆமா இதுல்லாம் ஒன் பொண்டாட்டிக்கு தெரியுமா?

அவ ஒரு ராட்சசிணேன், உங்களுக்கு தான் தெரியுமே, அவ கண்ணுமுன்னால நாம பெரியாளா வந்து காணிக்கணும், அவ என் காலடில விழுந்துகிடக்கப்போரா பாருங்க. நம்ம கஷ்ட காலம் எல்லாம் முடியப்போகுது என்றான் ரொம்ப நம்பிக்கையாய்.

அதற்க்கிடையில் கடைபையன் டீயுடன் வரவும் குடித்துவிட்டு நாளைக்கி வாரண்ணேண்ணுட்டு போயிருக்கான். அந்தப்பய சொன்னமாதிரி நம்ம விடிவு காலம் வந்திருச்சி, கடவுள் கண்ண தொரந்துட்டான்னு நானும் சாப்பிட வீட்டுக்கு கிளம்பினேன்.

நமக்கும் நேரமாகிவிட்டது, தடங்கலுக்கு வருந்துகிறோம், இனி நாளை சொல்கிறேனே.

அன்புடன்

வசந்தா நடேசன்.

Tuesday, December 28, 2010

இணையத்தில் வந்த கதை 2

முதலில் எழுதிய வந்தகதையின் தொடர்ச்சி..

சரி இன்டர்நெட் வரும்போது வரட்டும் மீண்டும் தமிழ்ச்சேவை தொடங்க தீர்மானித்தேன்.. நாம் எழுதாவிட்டால் பதிவுலகம் என்ன ஆகும் என்று அநியாயமாய் கவலை வந்தது. பதிவுலகில் என்ன செய்யப்போகிறோம் என்று சிந்திக்க ஆரம்பித்தேன், ஆயிரம் கேள்விகள் அநியாயமாய் அடுக்கடுக்காய் வந்தது..

நான் ஒரு இலக்கியவாதியோ கவிஞனோ இல்லை, கிலோ என்ன விலை கேஸ் தான்! கதை எழுதவும் தெரியாது! கட்டுரைகளோ துணுக்குகளோ கூட எழுதியது இல்லை, சரி ஜோக் ஏதாவது என்றால் அந்த ஞானமும் நஹி.. பழகியவர்கள் எல்லாம் என்னை சீரியஸ் ஆசாமி என்றே சொல்லியிருக்கிறார்கள்!

ஏதோ சிறு வயதில் கொஞ்சம் கதைகள் படித்திருக்கிறேன். கன்னித்தீவு(!), டார்ஜான் (!) சிலகாலம் தொடர்ந்ந்ந்து நாகர்கோவில் வடசேரியில் வீட்டுப்பக்கம் லைப்ரரியில் படித்திருக்கிறேன் மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில தினசரிகளும் வாராந்திரி மாதாந்திரிகளும் படித்திருக்கக் கூடும். அதிக பட்சம் ஸ்கூல் நாட்களில் சில பல அத்தியாயங்கள் குமுதத்தில் கடல் புறா, கல்கியில் பொன்னியின் செல்வன்... கல்லூரி பருவங்களில் ரசித்தவை, பாலகுமாரன், சுஜாதா, மதன். எல்லாம் அப்போது இருந்து இப்போது காணாமல் போய்விட்ட மடத்துவாசல் தெரு லைப்ரரியிலோ, திருவள்ளுவர் லைப்ரரியிலோ தான். வறுமைக்கோட்டை எப்படி தாண்டுவது என்ற சிந்தனையிலேயே இளமையில் பல காலம் கழிந்து விட்டது என்றாலும் படிப்பதில் ஆர்வம் இருந்தது உண்மை.

முதலில் வந்தகதையை எழுதுவோம், இலக்கணமா இல்லை இலக்கியமான்னு அப்புறம் பாத்துக்கலாம், வடசேரி கக்கூஸ் பள்ளிக்கூடத்தில் (சத்தியமா எங்க ஸ்கூல் பேரு அதான் சார்! இப்ப என்ன பேரு வச்சிருக்காங்களோ தெரியவில்லை, அடுத்தமுறை போகும் போது பார்க்கவேண்டும்) கோலப்ப வாத்தியார்ட்ட ஒண்ணாப்பு படிச்சி வளர்ந்த நான் இது எழுதியதே சாதனை தான், கோலப்ப வாத்தியார் இதை ஒரு வேளை படிக்க நேர்ந்நதால் புல்லரித்துப்போய்விடக்கூடும்..

பொதுவாக எழுத வருபவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கக்கூடும், சமூகத்தை திருத்தவேண்டும் என்று கங்கணம் கட்டி எழுத வரலாம், பெயர், புகழ், பணம் சம்பாதிப்பது சிலவேளை நோக்கமாக இருக்கக்கூடும், சிலர் பக்திப்பூர்மாய் விரதம் இருந்து, மாலை போட்டு ஆன்மிகத்தை வளர்க்கப்போறேன் என்று வரக்கூடும்!

நமக்கு இது ஒன்றும் நோக்கம் இல்லை, பின்ன ஏண்டா வந்தன்னு உங்களுக்கு கோபம் வருவது நியாயமானதே! யார் கெட்டநேரமோ படிப்பதில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் இருப்பது போல் தெரிகிறது, இணையத்தில் தமிழ் படித்தால் படித்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது,, எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஆச்சர்யம் வந்தது, எவ்வளவு நேரம், எத்தனை புத்தகங்கள் படித்திருக்க வேண்டும்.

போகன் என்று ஒருவர் எழுத்துப்பிழை எழுதுகிறார், எங்கள் ஊர்க்காரர் போல் இருக்கிறது.. அகத்தியர் பற்றி நிறைய எழுதுகிறார், கொஞ்சம் அப்படி இப்படி (அழகாக, இனிமையாக சார்!) எழுதினாலும் அவர் கடையில் நிறைய சரக்கு இருக்கும் போல் இருக்கிறது., ரசிக்க முடிகிறது.

அவர் தளத்தின் வழியாக அப்பாத்துரை என்பவரின் தளத்துக்கு செல்லும் படி நேர்ந்தது, அது ஹோல் சேல் மால் போல்! அறிவுச்சரக்கு அதிகம், மோகவண்டாய் பல மணி நேரம் இந்த இருவரின் தளத்திலேயே சுற்றி வந்தேன். மலைப்பாக இருந்தது, நாமும் கொஞ்சம் எழுதிப்பார்த்தால் என்ன என்று ஒரு ஆசை வந்தது.

கண்டிப்பாய் இது பேராசை தான், அவர்களை கம்பேர் பண்ணினால் நம்முது வெறுங்கடை, இருந்தாலும் ஆசை யாரை விட்டது, என்னைப்போல் பலர் இணையத்தில் பொழுது போக்கு எழுத்தாளர்களாக இருப்பதைக் கண்டு கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கட்டுரை வடிவில் ஏதேனும் எழுதலாம் என்று சுற்று முற்றும் சனி பகவான் நிற்க்கிறானான்னு பார்த்துவிட்டு இணையத்தில் வந்த கதை என்று பிள்ளையார் சுழி போட்டுவிட்டேன்.

தமிழ் இணைய வட்டத்தில் நடக்கும் சண்டை, கூத்தைப்பார்த்தால் மனதுக்குள் ஒருவித பயம் வந்தது. சரி, யாரைப்பற்றியும் கவலைப்படாமல் எழுதலாம் என்று அதற்க்கான ரூல்ஸ் அண்டு ரெகுலேஷனை என் மனசாட்சியும் நானும் பேசுவதாய் கேள்வி பதில் பாணியில் நினைத்துப்பார்த்தேன். கலைஞர் மட்டும்தான் கேள்வி பதில் எழுதலாமா என்ன? இதோ வருகிறது..

மனசாட்சி : யாரு நீனு?

நான் : வசந்தா நடேசன்

மசா : உன் சர்ட்டிபிகட் பெயரா இது?

நான் : சத்தியமா இல்லைங்க

மசா : ஏன், பெயரச்சொல்ல தெகிரியம் இல்லையோ?

நான் : ஆமாங்க. காலம் இருக்கிற இருப்புல எதுக்குங்க வம்பு , நம்ம வாய் வேற சும்மா இருக்காது. வேலில போறத வேட்டிக்குள்ள உட்டாப்ல ஆயிரக்கூடாது பாருங்க.

மசா : சரி, என்ன எழுதப்போர?

நான் : கண்ணால பாக்கறது, காதால கேக்கறது, கொஞ்சம் கதை, கொஞ்சம் கவிதை

மசா : கண்ணால பாக்கறது, காதால கேக்கறது, சரி, அது என்ன கொஞ்சம் கதை, கவிதை, இதுக்கு முன்னால எழுதியிருக்கியா?

நான் : எங்கங்க, சின்னவயசுல சைட் அடிக்கும் போது கொஞ்சம் கவிதை எழுதிருக்கேன், சும்மா டிரை பண்ணலாம், காசா, பணமா? சும்மா டயரி எழுதற மாதி எழுத வேண்டியதான்.

மசா : மவன, நீ டயரியே ஜனுவரி 1க்கு பொறவு வாழ்க்கைல எழுதினதே இல்ல, எங்க போட்டு? என்ன தெரியும் உனக்கு?

நான் : என்ன அப்டி சொல்லீட்டீங்க.. டெபிட், கிரடிட் தெரியும்ங்க

மசா : அது எவனுக்கும் தேவைப்படல, தெரியும்ல?

நான் : தெரியுங்க, டெபிட் கிரடிட்னா கல்ல எடுப்பாங்க. சும்மா எதுனா டிரை பண்றங்க, வரலன்னா, அப்புரம் பாத்துக்கலாம்.

மசா : கருத்து சொல்லி ஒன்ன ஓட, ஓட தொரத்தப்போராங்க பாரு,

நான் : பாத்துக்கலாங்க, அஞ்சமாட்டம்ல. நாம சரின்னு படரத எழுதறோம், யாரு மனசும் நோகாம எழுதணுங்க. தப்புன்னா தயங்காம கால்ல விழுந்துருவோம்ல!

மசா : இது தேவையா? எதுக்கு எழுதணும்? எதுக்கு கால்ல விழுணும்?

நான் : பொழுது போகணுங்களே? தப்புன்னா கால்ல விழருதல தப்பே இல்லீங்க.

இப்படித்தான் வந்தேன், கோடிக்கணக்கான(!) ஈமெயில்கள் வந்த கதையை முடிக்க வேண்டி வற்ப்புருத்தியதால், அன்றே எழுதி வைத்திருந்ததை ஓரளவுக்கு ப்ரூஃப் பார்த்து ஒரு வழியாய் இன்று முடித்திருக்கிறேன், Sorry for the Delay!

ஒருவழியாய் இண்டர்நெட் கனெக்ஷ்னனும் வந்து இதை பாதியில் விட்டுவிட்டு வேறு சிலவும் எழுதியிருக்கிறேன், ஏதோ யாவாரம் சுமாரா போகுது. இதுவரை யாரும் கல்லைத்தூக்க வில்லை, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இணையத்தைத்தான்! நாம ஓடிப்போயிருவோம்ல.

அன்புடன், வசந்தா நடேசன்.

Monday, December 27, 2010

என்.ஆர்.ஐ. வாரியர்ஸ்

இந்தியர்கள் இன்று உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். இந்தியர்கள் மட்டும் இல்லை, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா மற்றும் பல தேசத்தவர்களும் இவ்வாறு பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு பிழைப்பிற்க்காக வந்தேரிகளாய் (இந்தப்பதம் சிலரைப்புண்படுத்தக்கூடும், ஆனால் அதுவே உண்மை என்பதால் மன்னியுங்கள், நானும் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு பிழைப்பதற்க்காக துபாய்க்கு வந்த ஒரு வந்தேரி தான்!) உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து வந்தாலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கை மற்ற நாட்டவர்களை விட மிக அதிகம் என்றே நினைக்கிறேன். உலகிலுள்ள எந்த நாட்டுக்குச் சென்றாலும் ஒரு இந்தியனையாவது காணமுடியும். இதைப்பற்றி சிலநேரங்களில் இங்குள்ள நண்பர்களிடம் முன்பு விவாதித்ததுண்டு.

நம் ஏழ்மை, கொடிய அரசியல் வாதிகளின் சுரண்டல் இது போல் பல காரணங்கள் யோசித்தால் கிடைக்கும். நமது இப்போதைய ஏழ்மையைப்பற்றியோ அல்லது நம் அரசியல் வியாதிகளைப்பற்றியோ பேசுவது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. அதையும் தாண்டிய ஒரு சிந்தனை.

எதனால் இது போல் நாம் கடல்கடந்து பல தேசங்களிலும் பொருள் சம்பாதிப்பதற்க்காக படர்ந்து விரிந்து வாழ்கிறோம்? பழைய நியூட்டனின் மூன்றாம் விதியைப்போல் நம் எந்த விழைவால் இந்த விழைவு வந்தது?

ஒரு காலத்தில் நாம் (இந்தியர்கள்) செல்வச்செழிப்பாகவே வாழ்ந்திருக்கிறோம். இராஜ ராஜன் உழவர்களுக்கு அப்படி வரி விதித்தான் ஐயர்களுக்கு இப்படி சலுகை செய்தான் என்று இன்று நாமெல்லாம் கவலைப்பட்டாலும் அன்று உழவர்கள் யாரும் அதைப்பற்றி கவலைப்பட்டதாகத்தெரியவில்லை. வரி விதித்தது இவ்வளவு என்று குறிப்புகள் இருந்தாலும், நான் கட்டமாட்டேன் என்று யாரேனும் சொன்னார்களா?

தமிழர்கள் வீரத்திற்க்கு பல கதைகள், கல்வெட்டுக்கள் இருக்கின்றன, தமிழன் பயந்து போய் இதை எழுதாமல் விட்டிருப்பான் என்பதை என் அறிவு (குறைஅறிவு தான் என்றாலும்) ஏற்க வில்லை.

எல்லோரும் மகிழ்ச்சியாக, நிறைவாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் சுமார் 175 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பயணம் செய்த லார்ட் மெக்காலே இப்படி எழுதியிருப்பானோ?

முன்கோபக்காரர்களும், பிளட் பிரஷர் அதிகம் உள்ளவர்களும் கீழ்வருவதைப்படிக்கவேண்டாம், இது ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தியதின் பின்னணியில் உள்ள ஒரு நிகழ்வாகவே நான் கருதுகிறேன்.இந்தியா ஒரு காலத்தில் Land of Kings என்று அழைக்கப்பட்டது என்று எதிலோ படித்திருக்கிறேன் (மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள்?) வெள்ளையர்கள் வருமுன் நம்மை முகலாயர்கள் ஆண்டிருந்தாலும், அவர்கள் கொஞ்சம் நியாயமான நல்லவர்கள் என்று தான் நினைக்கத்தோன்றுகிறது. இந்தியாவின் பாதி செல்வத்தை தங்கள் நாட்டிற்க்கு அனுப்பிவிட்டு மீதியை வைத்துக்கொண்டு, நம் பெண்களையும் கல்யாணம் செய்து, பிள்ளை குட்டிகளோடு இங்கேயே இருந்து நம்மை ஆண்டு வந்தார்கள்.

ஆனால் நம்மை ஓட்டாண்டியாக்கி விட்டுச்சென்றது வெள்ளையர்கள் தான். கப்பல், கப்பலாக இந்தியாவின் செல்வம் ஐரோப்பாவிற்க்குச் சென்றது. இங்குள்ள ஓலைச்சுவடிகளைக்கூட விட்டுவைக்கவில்லை (நம்ம பயபுள்ளைகள் எங்கே அதை படித்து விட்டு, அறிவு வளர்ந்து(?) கேள்வி கேட்டு விடுவானோ என்ற பயத்தில்) என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சொல்லப்போனால் நம்மை சுரணையற்றவர்களாய் மாற்றியதே, மெக்காலேயின் கல்வி முறையும் அவர்கள் நம்மை ஆண்டவிதமும்தான் என்பது மேற்படி அறிக்கையில் விளங்குகிறது பாருங்கள்.

வெள்ளையர்கள் நம்மை ஆளஆரம்பித்த துவக்க காலகட்டங்களில் நம் தென்னிந்தியப் பெண்கள் வாழ்ந்த நிலையைப்பாருங்கள்.

இவர்கள் முகத்தில் ஏதேனும் கவலை ரேகைகள் தெரிகிறதா? அவர்கள் அணிந்திருக்கும் நகைகளைப்பாருங்கள்! இத்தனைக்கும் இவர்கள் நம் கோவில்களில் நடனமாடிய அல்லது வேலைசெய்த பெண்கள் என்று ஒரு குறிப்பு இருந்தது.
வடஇந்தியர்கள் இன்னும் செழிப்பாகவே வாழ்ந்திருக்கின்றனர்!
சரி, இனி நான் சொல்ல வந்த விஷயத்திற்க்கு வருகிறேன்.

நாம் இன்று பல தேசங்களிலும் அலைந்து திரிந்து பொருள் சேர்த்து வரும் இந்த விளைவு அன்று நாம் இழந்தவற்றின் எதிர்விளைவே. நாம் இழந்தவற்றை நியாயமான வழிகளில் மீண்டும் நம் இந்தியாவிற்க்கு கொண்டு சேர்க்கும் நமக்கு ஏன் வந்தேரிகள் என்றால் கோபம் வர வேண்டும்?

நாம் கவலைப்பட தேவையில்லை. சொல்லப்போனால் நாம் எல்லோரும் ஒரு வகையில் ஒருவித படைவீரர்கள். கத்தியின்றி, ரத்தமின்றி நாம் இழந்த செல்வத்தை நியாயமான முறையில் மீண்டும் அன்னிய செலாவணியாய் நம் தாய்நாட்டிற்க்கு கொண்டு சேர்க்கிறோம். அதை சில நேரங்களில் சில கபோதிகள் கொள்ளையடித்து விடுகிறார்கள், என்றாலும் நம் தேசம் திருந்தும் என்று நம்புவோம். என்ன செய்வது நம்பிக்கை தான் வாழ்க்கை என்று போதித்திருக்கிறார்கள்.

இப்போது என்னுடன் வேலை செய்யும் சக வெள்ளையர்களிடமே நான் இது குறித்து பேசியிருக்கிறேன். கம்பெனி டின்னர்களில் அவனும் போதை, நானும் போதை! (நீயும் போதை, நானும் போதை, நினைத்துப்பார்த்தால் எல்லாம் போதை!)

போதையை சாக்கு வைத்து என்ன வேண்டுமானாலும் பேசலாம். You guys looted us!, You emptied India என்று ஒரு நாள் என் முதலாளியின் முகத்தைப்பார்த்தே சொன்னேன் (போதையில் தான்). Yes, I agree with you, it is not fare என்று சொல்லிவிட்டு இன்னமும் என்னை வேலைக்கு வைத்திருக்கிறான் (கடவுள் புண்ணியம் தான்).

அய்யா புண்ணியவான்களே, ஏதோ வந்தோம், வேலைசெய்தோம், பணம் சம்பாதித்தோம், நாட்டிற்க்குத்திரும்பினோம் என்று இருங்கள். 50 ஆண்டுகளாய் வேலைசெய்கிறேன், சவுதிஅரேபியா எனக்குத்தான், பாதியைக்கொடு என்று யாராவது கேட்டால் அதற்க்கு நம் நிர்வாகம் பொருப்பல்ல என்பதை மெக்காலே அறிவுடன், தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.

வந்தேரி, வசந்தா நடேசன்.

Saturday, December 25, 2010

ஒரு நடிகையின் முரண்!

நடிகைகள் என்ன சொன்னாலும் நாம் நம்பித்தான் ஆக வேண்டும் போல் இருக்கிறது!

சன் டிவியில் இதோ ஒளி பரப்பாகிக்கொண்டிருக்கிறது. சுடச்சுட எழுதுகிறேன்! ஆவி பறக்கிறது.

நிறைய மகாஜனங்கள் இதை நோட் பண்ணியிருக்கக்கூடும். ஆனாலும் இதை முதலில் ஆவணப்படுத்துவதில் பெருமைகொள்கிறேன்(!), எதாவது அவார்டு இருந்தா கொடுங்கப்ப்ப்பூ!

இரண்டு நாட்களுக்கு முன் விஜய் டிவியில் நடிகை சரண்யா பங்குகொண்ட வாங்க பேசலாம் என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். யாரு கெட்டநேரமோ நான் அதை பார்த்து தொலைத்துவிட்டேன். அதில் சரண்யா பேசியதன் சுருக்கம் கீழே.

அவர் சினிமாவில் நடிக்கவந்த கதையை சொல்லும் போது, அவருடைய அப்பா, ஒரு டைரக்ட்டராக இருந்தும் இவர் நடிக்க ஏனோ சம்மதிக்கவில்லையாம், ஒரு நாள் யாரோ ஒரு டைரக்டர் இவரை கல்லூரியிலிருந்து திரும்பி வரும்போது போட்டோ எடுத்ததாகவும், அதை வைத்துக்கொண்டு இவர்தான் நடிக்கவேண்டும் என்று ஒரு வாரம் போல் இவர் வீட்டுக்கு அலைந்ததாகவும், இவருக்கு நடிக்க விருப்பம் இருந்தும் அவர் அப்பா விடவில்லையாம், இவர் அடம் பிடிச்ச கழுதையாக அடம்பிடித்து, சரி இந்த ஒரு படம் மட்டும் நடிச்சுக்கோ என்று அவர் அப்பா ஒரு வழியாக பெர்மிஷன் கொடுத்ததாகவும் நமக்கெல்லாம் இவரைதிரையில் பார்க்கும் பாக்யம்(!)கிடைத்ததாகவும் சொன்னார். நானும் வாயை பொழந்துட்டு பாத்துக்கிட்டுருந்தேன் சார்.

நான் முதன் முதலாய் CA எக்ஸாம் எழுத போய்க்கொண்டிருக்கும் போது, இவர் முதன் முதலாய் மேற்ச்சொன்னபடி நடித்த ‘நாயகன்‘ படம் பெங்களூர் பல்லவி தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்தது. போஸ்டரைப்பார்த்து விட்டு ‘ஆஹா‘ என்று பல்லவி தியேட்டர் எதிரில் இறங்கி படம் பார்க்க போய்விட்டேன் (அடுத்த ஸ்டாப்பில் எக்ஸாம் நடக்கிற காலேஜ் இருந்தது!) எக்ஸாம் இனி ஆறு மாசம் கழித்து வரும் பார்த்துக்கொள்ளலாம் என்று அந்த வயதில், ஏதோ நாயகனை இப்ப விட்டால் இனி பார்க்கவே முடியாது என்பது போல்.

ஆனால் இன்று இயக்குநர் சங்க 40வது ஆண்டுவிழாவை சன்டிவியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். நம் முன்னாள் கனவுக்கன்னி ராதாவை திரும்ப திரும்ப காண்பித்து சன் டிவி ஓரளவிற்க்கு நம்மை அந்த நிகழ்ச்சியை பார்க்க ரெடி பண்ணியிருந்தது!

சரியென்று ராதாவைத்தேடி (ரொம்பநாளாயிடிச்சு சார் பாத்து) சன் டிவி முன் உட்கார்ந்ததில், முதன்முதலாய் நடிகை சரண்யா பேசவந்தார். சரி என்ன சொல்கிறார் என்று சைலன்ட்டாய் கவனித்தால், பயபுள்ளை ரெண்டு நாள் முன் விஜய் டிவில சொன்னதுக்கு நேர் மாறாய் கீழ்க்கண்டவாறு சொன்னது.

அவரும் அவர் அப்பாவும் டைரக்டர் முக்தாசீனிவாசன் அலுவலகத்தில் டைரக்டர் மணிரத்னத்தைப்பார்க்க உட்கார்ந்திருந்ததாகவும், அவருக்கு முன்பே மணிரத்னம் அங்கு வந்து ஏதோ பத்திரிகையை புரட்டிக்கொண்டிருந்ததாகவும், அப்போது சன்டிவி கிடையாதாம், அதனால் இவருக்கு மணிரத்னத்தைப்பார்த்தும் அடையாளம் தெரியவில்லையாம், பின் அவர் வந்து மணிரத்னத்தை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும், அதனால் அவருக்கு நாயகன் படத்தில் சான்ஸ் கிடைத்ததாகவும் கூறினார்.

ஆடிப்போயிட்டேன் சார் ஒரு நிமிஷம்!

என்ன எழவுடா இது? ரெண்டு நாளைக்கு முன் அப்படி சொன்ன சரண்யா இன்று இப்படி வுல்ட்டா ஆனது ஏன்? அவரை விஜய்டிவி வாங்க பேசலாமில் பேட்டி எடுத்த டெல்லி கணேஷ் (கூட இருந்த SSசந்திரன் இப்ப போய் சேர்ந்துட்டார், இரண்டு நாள் முன்பு வந்தது ரீடெலிகாஸ்ட்டாக இருக்க வேண்டும்) இப்ப இதை பார்த்தால் என்ன நினைப்பார்?

விஜய் டிவி ரெண்டு நாள் முன்பு இதை மறுஒளிபரப்பியதில் ஏதேனும் உள்குத்து இருக்குமோ?

சரி, இப்ப நியூஸ் முடிந்ததும் ராதாவைப்பார்க்க வேண்டும், வாங்க போலாம்.

மன்மதன் அம்பு வேறு பாக்கி இருக்கிறது, பாக்றேன்னா பாரு, பாக்காட்டி போன்னு வேற சொல்றாய்ங்க சார், இத திருட்டு சிடில அல்லது நெட்ல தான் பாக்கணும்னு இருக்கேன். வந்தா கொஞ்சம் சொல்லுங்க சார், புண்ணியமாப்போகும்.

ரசிகன், வசந்தா நடேசன்.

கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்!

வசந்தா நடேசன்.

டிஸ்கி :- ஏண்டா, இப்டில்லாமும் பதிவு போடுவீங்களாடா???

Friday, December 24, 2010

பயபுள்ளைங்க©

நண்பன் ஒருவன் வீட்டிற்க்கு வந்திருந்தான் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின், இன்னைக்கி பேப்பர் படிச்சியான்னான்?

ஆமா, படிச்சிட்டனே. தினமலர், தினத்தந்தி எல்லாம் படிச்சேன் ஜெயலலிதாம்மா நம்ம ஊர்ல தான் கிறிஸ்மஸ் கேக் வெட்டிட்டு இருக்காங்க போல. படிச்சேன், என்றேன், அதைத்தான் சொல்ல வருகிறான் என்று.

அவுக என்ன வெட்டினா நமக்கென்ன? ‘பயபுள்ளைங்க‘ ன்னு இனி யாரும் எழுதக்கூடாதாம், அதுக்கு காப்பிரைட் வாங்கிட்டாங்களாம், 80% வடிவேலுவுக்கு சொந்தமாம், இந்த வார்தையை அவர்தான் பிரபலப்படுத்தினாராம், 20% சிங்கமுத்துவுக்காம் அவர் எழுதிக்கொடுத்ததால், நீ அதிகமா இந்த வார்த்தையை உன் பிளாக்குல யூஸ் பண்ணிட்ருக்க பாத்துக்கோ, இனி டாலர் கணக்குல அவங்களுக்கு பணம் கொடுக்கவேண்டியிருக்கும், கண்டுபிடிச்சிட்டாங்கன்னா என்றான்.

என்னடா இது அநியாயமா இருக்கு?

ஆப்பு வச்சிட்டாய்ங்கடி, நீங்க என்ன வேணா எழுதுவீங்களா? காப்பிரைட் சட்டம் கொஞ்சம் சங்கடமானது, பாத்து யூஸ் பண்ணு என்றான்.

என்ன எளவுடா இது? எத்தனை பேர் தினமும் பேசிக்கிறாங்க இதை, இனி யாரும் பேசக்கூடாதாம்மா?

பேசலாம், ஆனா எழுதக்கூடாது.

இது எதோ படத்துல சென்னைல பார்க்ல உக்காந்திருந்தவன்ட்ட பாஸ்போர்ட் கேட்டமாதிரில்லாடா இருக்கு என்றேன்.

பாஸ்போர்ட் தாண்டா, இனி அவுங்கட்ட பெர்மிஷன் வாங்கிட்டுதான் யாரும் எழுதமுடியும் என்றான்.

நான் துபாய்ல தான இருக்கேன், இங்க வந்து அவங்க கேக்கமுடியாதுல்ல, தமிழ்நாட்ல இருக்கறவனுக்குத்தான் இது பொருந்தும். நம்மள ஒன்னும் செய்யமுடியாது என்றேன் கொஞ்சம் யோசித்து.

லூசாடா நீயி, காப்பிரைட் சட்டம், சென்னைக்கு வேற, துபாய்க்கு வேற இல்லடா, உலகம் பூரா ஒண்ணுதான் என்று மேலும் மிரட்டினான்,

சரி இப்ப எழுதுனதை என்னடா பண்றது? கோடிக்கணக்கான (!) பேர் படிச்சிருப்பாய்ங்களே, அவுங்க மனசுக்குள்ள போய் அழிக்கவா முடியும் என்றேன் அப்பாவியாய்.

அது உன் பிரச்னை, எதோ நண்பேண்டான்னு சொன்னேன், பிரச்னைல மாட்டிக்காதன்னுட்டு போயே போயிட்டான்.

அவன் போய் சில மணிநேரங்களுக்குப்பின், சரி, எங்கடா இதை போட்ருக்கான்னு உக்காந்து நெட் பூரா தேடினேன், ஒண்ணும் கிடைக்காமல், ஒரு போனைப்போட்டேன். எந்த பேப்பர்லடா போட்ருக்கான், எதுல பாத்த சொல்லுன்னேன்.

சிரிக்கிறான் சார், அடப்பாவி அதையே யோசிச்சிட்டு இருக்கியாடா இன்னும்? நான் பொழுது போவலன்ட்டு சொம்மா சொன்னன்டான்றான் !

பாருங்க சார், ‘ஒரு சாதாரணன்‘ன்னு ஒரு சாதாரண தலைப்பு வச்சதுக்கு நம்ப எல்லாரையும் ரொம்ப சாதாரணமாய் பேசிட்டுப்போராங்க சார்.

இதுக்கு ஆப்பு வைக்க ஏதாவது வழி இருந்தா கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லாருக்கும்.

அப்பாவி, வசந்தா நடேசன்.

பொஸ்தகம் எழுதிக்கிட்டிருக்கேன்

இன்று ஒரு நண்பர் போன் செய்தார். ரொம்பநாளா துபாயில் இருந்தவர், நன்கு அறிமுகமானவர். கோவையைச்சேர்ந்தவர். இதற்க்கு மேல் விபரம் வேண்டாம், என்னை ட்ரேஸ் செய்துவிடக்கூடும், உஷாரா இருப்போம்ல, எப்ப்ப்புடி.?

தொடர்பு விட்டுப்போயிருந்தது ஒரு ஆறு மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

எங்கே ஆளையே காணோம்? என்றேன்.

ஒரு வாரம் ஆச்சுங்க வந்து. பழைய கம்பெனில விசாவ டக்குனு கேன்சல் பண்ணி அனுப்பிட்டான். கிரைஸிஸ், மண்ணாங்கட்டின்னு. அப்பவே வேற கம்பெனில ரெடி பண்ணிட்டு தான் போயிருந்தேன். அந்த பன்னாடை இப்பதான் விசா அனுப்பினான், என்ன பண்றது? அப்புறம், எப்படி இருக்கீங்க?

நல்லா இருக்கேன். ஒரு குறையும் இல்ல, வழக்கம் போல போயிக்கிட்டு இருக்கு. நீங்க எப்படி இருக்கீங்க?

சூப்பர், ஊர்ல எல்லாம் எப்டி இருக்காங்க?

நல்லாருக்காங்க. தீபாவளிக்கு ஊர்லதான் இருந்தேன், நீங்க அங்க இருப்பது தெரியாது, இல்லன்னா கோவை வந்திருப்பேன்னு சும்மா ஒரு மொக்கையை போட்டு வச்சேன்.

பல விஷயங்கள் பேசிவிட்டு கடைசில ரூமுக்கு வாங்க என்றேன்.

வர்ரங்க, ஒரு வாரமா பாத்துக்கிட்டுருக்கேன், எங்க வாக்கிங் வர்ரதில்லையா இப்ப?

வர்ரதில்லைங்க, இந்த குளிர்ல எங்க போயிட்டு வாக்கிங்? இப்பல்லாம் சாயங்காலத்துல கதை எழுதிகிட்டிருக்கேன். இப்ப ரொம்ப பிஸி என்று ஒரு பிட்டை போட்டேன்.

கதையா? என்று ஆச்சரியமாகக்கேட்டார்.

ஆமாங்க, அஞ்சாரன்னம் வெளிவந்திருச்சி, இன்னும் எழுதிகிட்டிருக்கேன் என்றேன் அஞ்சாமல்.

வெளிவந்திருச்சான்னு நம்பமுடியாமல் கேட்டுவிட்டு, நான் ஊருல இருக்கும் போது எல்லா பொஸ்தகமும் படிச்சேனே? உங்க பேர எதுலயும் பாக்கலையே. புனைபேருல எழுதுரீங்களோ? என்றார்.

ஆமாங்க, வசந்தா நடேசன்னு ஒரு பேர் வச்சிருக்கேன். கதை எழுத மாத்ரம் இந்த பேருன்னு மேலும் போட்டேன்.

அந்த பேரைப்பாத்த ஞாபகமும் இல்லையே, சரி, எந்த பொஸ்தகம்னு சொல்லுங்க, வக்காளி, இப்ப அல் மதினால போயி வாங்கி படிச்சிட்டுதான் மறுவேலை என்றார்.

சும்மாச்சுக்கும் நண்பருக்கு ஒரு பேரை வச்சுக்குவோம், அபப்த்தான் நல்லாருக்கும். இது புக்லல்லாம் வராது ரவி, கம்ப்யூட்டர்ல தான் வரும் என்றேன்.

நாந்தான் கம்ப்யூட்டர் வச்சிருக்கனே, அதுல எப்படி படிக்கணும்னு சொல்லுங்க என்றார்.

கம்ப்யூட்டர் வாங்கிட்டீங்களா? எப்ப வாங்குனீங்க, எனக்கு தெரியாதே .

ஆமாங்க, நாயும் பேயும் வெச்சிருக்கு இப்ப. ஊருக்கு போகும் போது பையன் கேட்டான்னு ஒண்ணு வாங்கிட்டு போனேங்க, அவனுக்கு சோனி தான் வேணுமாம், இதை தொடமாட்டேன்னுட்டான், சரி, போடா.. நான் போன் பண்றதுக்கு வச்சுக்கறேன்னு கொண்டு வத்துட்டேன். ரூம்ல இப்ப எல்லா நாயும் இத வச்சிக்கிட்டு தான ‘வேரென்ன சேதி‘ ‘வேரென்ன சேதி‘ ன்னு கேட்டுட்டு இருக்கானுங்க, அலப்பரை தாங்க முடியலை கண்ராவி, சரி நாமும் ‘வேரென்ன சேதி‘ கேட்டுத்தொலைக்கலாம், அப்பப்ப சினிமாவும் பார்த்துக்கலாம்னு கொண்டுவந்துட்டேன் என்றார்.

தினமும் இன்னொரு ஹிட் எக்ஸ்ட்ரா கிடைக்கப்போர சந்தோஷத்தில் மனசுக்குள் துள்ளிக்குதித்துவிட்டு நம்ம பொஸ்தகத்து பேரை http://vasanthanatesan.blogspot.com/ எழுதிக்கச்சொன்னேன்.

அது சரி, இப்படி ஒரு மேட்டர் இருககறது எனக்கு தெரியாம போச்சே, இன்னைக்கே படிச்சிர்ரேன், படிச்சிட்டு அப்புறம் கால் பண்றேன்னு கட் பண்ணிட்டார்.

நம்ம ‘படைப்புகளை‘ படிச்சிட்டு என்ன சொல்லப்போரரோன்னு இப்ப வெயிட் பண்ணிட்ருக்கேன் சார். நீங்களாவது பரவாயில்லை, புதுஸா இத படிக்கிரீங்க, ரவி பாவம், இன்று அவர் பேசியதை நாளை அவரே படிக்கவேண்டியதிருக்கும். படிக்சிட்டு ஆடிப்போகாம இருந்தா சரி. என்ன கொடுமை சார் இது!

ஒரு ஹிட்டுக்காக என்னல்லாம் நாதாரித்தனம் பண்ணவேண்டியிருக்கு பாருங்க சார்?

அன்புடன்

பொஸ்தக எழுத்தாளர், வசந்தா நடேசன்.

இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்

Thursday, December 23, 2010

கணக்கு பண்ணிட்டேன்....

பெண்... கணக்கு பண்ணிட்டேன்....

பெண்... ஃபார்முலா கண்டுபிடிச்சிட்டேன்.....

பெண்... கணக்கு போட்டுட்டேன்....

மேலுள்ள மூன்றையும் யோசித்து, பயபுள்ளைகள் கணக்கு பண்ணிட்டேன்னா தான் வருவார்கள் என்று இந்த பெயரை தேர்வு செய்தேன்.

சேச்சே, உங்களை சொல்லலை சார்.. நீங்க வேற, நம்மலாம் அப்படியா பழகிருக்கோம்?

என்ன சார் பண்றது, இனி மொக்கை போடக்கூடாது என்று விரதமிருந்து(!), வழக்கமான பேச்சு வகை எழுத்து நடையிலிருந்து மாறி, ஒரிஜினல் அக்மார்க்(!)எழுத்து நடையில் நேற்று ஒரு பதிவைப்போட்டேன். ரொம்ப கஷ்ட்டம் சார், முடியலை!

இன்னிக்கு விசாலக்கிழமை, எங்களுக்கு அரைநாள் தான் வேலை. வீக்எண்ட் மூட் வந்துவிட்டது. மதியம் ஒண்ணரை மணிக்கே வந்து பொட்டி தட்ட உக்காந்துட்டேன். இனி 2 நாள் லீவு. நண்பர்கள் எல்லாம் வந்துகிட்டே இருக்காங்க. இன்னும் 1 மணி நேரத்தில வந்து எறங்க்கிட்டாங்கன்னா, இன்னிக்கு பதிவு போட முடியாது. உலகம் தாங்குமா? சொல்லுங்க சார், உலகம் தாங்குமா? கண்டிப்பா தாங்காதுன்னு தெரியும் சார்.

நான் இன்று எழுத நினைத்திருந்த சப்ஜெக்ட் கொஞ்சம் சிந்தித்து(!) எழுத வேண்டியது. இந்த குறைந்த அளவு நேரத்தில் எழுதுவது ரொம்ப கஷ்டம்னு யோசித்ததில் இது நினைவுக்கு வந்தது. சரி இன்னைக்கு இந்த மொக்கையே போதும், இனி லீவு முடிஞ்சி பாத்துக்குவோம்னு விட்டுட்டேன் சார்.

பயபுள்ளைங்க, வடசேரி மலையாம்பள்ளோடத்துல பத்தாப்பு படிக்கும் போதே ஒரு பய சொன்னான், மக்கா, இஸ்க்கூலுக்கு லீவு மாத்ரம் போட்ராதல,, பரீச்சை எழுத உடமாட்டான் பாத்துக்க.. டெய்லி ஆஜர் போட்ரு, போட்டுட்டு எங்க வேணும்னாலும் போ, ஒரு பய நம்மள ஆட்ட முடியாது(!). லீவு நாள் இஸ்க்கூல் பக்கமே போயிராத.. மழைக்கி கூட ஒதுங்கிராத மக்கா ன்னான், லீவு நாள்ல டெஸ்க், பெஞ்ச் ஒடைச்சதெல்லாம் வேற குரூப்பு சார், அது நாம கெடையாது.

இத நம்பி நான் +2 படிக்கும்போது வரை இஸ்க்கூலுக்கு கட் அடிச்சதே இல்ல சார், இன்னைக்கி பதிவெழுதாம இருக்க முடியுமா? நான் எவ்ளோ நல்லவன்? நேர்மையா இருப்போம் சார், அதான் நம்ம ஸ்டைலு.

அது என்ன கஷ்ட காலமோ தெரியல, இந்தமாதி நேரத்தில இந்தமாதி, இந்தமாதி மேட்டர்தான் சார் ஞாபகத்துக்கு வருது. தொடர்ந்து கீழே கடேசீல வரப்போர ஈமெயில் வழியே நான் கற்ற(!) ஃபார்முலாவை படிச்சா பொம்பளைங்கல்லாம் கொஞ்சம் கோவப்படலாம், எனக்கு வேற வழி தெரியலை, சாரிங்கோவ், மத்தபடி நான் ரொம்ப நல்லவன்.

நாம ஆணாதிக்கவாதி எல்லாம் கெடையாது, ஊருக்கு வந்தா பொட்டிப்பாம்பா சொம்மா அடங்ங்ங்கி இருப்போம்ல, யாருக்க்க்கிட்ட?

ரைட்டு. வர்ட்டா... இனி தொடர்வதை படிச்சுட்டு அப்டிக்கா போயிருங்க....

நல்லவன், வசந்தா நடேசன்.

Wednesday, December 22, 2010

ஸ்னோ இன் லண்டன்

கவிதையோ என்று நினைத்து தலைப்பை பார்த்து உள்ளே வந்தவர்கள் சற்று ஏமாந்து போனால் நிர்வாகம் பொருப்பல்ல.. நான் சொல்ல வந்தது இந்தியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்குமுள்ள ஒரு சின்ன (அல்லது பெரிய) முரண்பாட்டைப்பற்றியது.

நேற்று காலை எனது பாஸ் லண்டனுக்கு சென்றான். ஐரோப்பாவை சேர்ந்தவன். வழக்கமாய் பிஸினஸ் டிரிப் போவது தான். ஆனால் இந்த முறை பெர்சனல் டிரிப் என்று எனக்கு முன்பே தெரியும்.

‘அவன் இவன் என்று ஏகவசனம் வேண்டாம்‘ என்று யாராவது வரவேண்டாம். இப்படிச்சொல்வதே எனக்கு இயல்பாய் இருக்கிறது. ஏழு வருடங்களுக்கு மேலாய் ஒரே இடத்தில் இருக்கிறோம். நாங்கள் பெயர் சொல்லி அழைத்துக்கொள்வதே வழக்கம், மற்றும் எப்போதும் அலுவலக நண்பர்களுக்குள் இப்படித்தான் பேசிக்கொள்வோம், அப்பப்பா மூச்சு வாங்குது, ஒரு லைன் சொல்வதற்க்குள் எப்படில்லாம் மிரள வேண்டியதிருக்கிறது!

போவதற்க்கு முதல் நாளே, ஐரோப்பா முழுவதும் ஸ்னோவாக இருக்கிறது.. பிளைட் நாளை இருக்கிறதா, இல்லையான்னே தெரியலை, நான் வெஸ்ட் லண்டனுக்கு போக வேண்டும், கார் எதுவும் கிடைக்கல, ஹோட்டல் ரூம் எல்லாம் ஃபுல், ப்ளடி கன்ட்ரி, அப்படி இப்படின்னு ஒரே புலம்பல்.

அப்படின்னா ஏன் போர? கேன்சல் பண்ணித்தொலைவது தானே? என்றேன்.

இல்ல, பசங்களுக்கெல்லாம் கிறிஸ்மஸ் கிப்ட் எல்லாம் வாங்கி வைத்துவிட்டேன். வரேன்னு பிராமிஸ் பண்ணிட்டேன், போய்த்தான் ஆக வேண்டும், வருடத்தில் வேறு ஏதாவது நேரம் என்றால் சரி, ஆனால் இப்ப அப்படி முடியாது, போய்த்தான் ஆகவேண்டும் என்றான்.

சரி, அப்ப பக்கதத்திலிருக்கும் ஏதாவது சொந்தபந்தம் அல்லது நண்பர்கள் வீட்டில் தங்கிக்கொண்டு ரோடு கிளியரானதும் போலாமே, கிறிஸ்மஸ்க்கு இன்னும் 3 நாள் இருக்கிறதே என்றேன்.

இல்லை, அப்படில்லாம் யாரும் இல்லை, தங்கமுடியாது ஏர்போர்ட்டில் தான் பொழுதைக்கழிக்க வேண்டும் என்றான்.

சரி, எதோ பண்ணித்தொலை, ஆளைவிடுன்னு நான் வந்து விட்டேன்.

நம்மில் பெரும்பாலனவர்கள் ஸ்னோவை பற்றி தெரிந்திருப்போம், அல்லது சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால் நேரில் பார்த்திருக்க வாய்ப்பில்லை ஐரோப்பவில் வசிக்கும் லக்கி அல்லது அன்லக்கி தமிழர்களைத்தவிர. நானும் அப்படியே. எனவே ஸ்னோவா? ‘அப்படின்னான்னு‘ கேணத்தனமாக மனதுக்குள் நினைத்துக்கொண்டு ஸ்னோ ஐரோப்பாவிற்க்கு ஆப்பு வைத்துவிட்டு போகட்டும், நமக்கென்ன என்று விட்டுவிட்டேன்.

மறுநாள் காலை துபாய் ஏர்போர்ட்டிலிருந்து போன் பண்ணும் போது, பிளைட் இருப்பதாகவும், ஆனால் ஹீத்ரோ ஏர்போர்ட் இல்லை, பிரிஸ்பேன் தான் போகிறது, 4 மணி நேரம் ரோடு வழியாகத்தான் நான் போகும் இடத்துக்கு போகவேண்டும் இந்த முறை மேரீகிரிஸ்மஸ் தான் போலிருக்கிறது என்று சொல்லிட்டு பறந்து விட்டான்.

இன்று அவனது பிளாக்பெரி வழியாய் மாலை ஒரு நாலரை மணிக்கு ஒற்றைவரி ஈமெயில் ஒன்று வந்தது, VaNa, please action என்று எங்கள் சப்ளையர் ஒருவர் அனுப்பியிருந்த ஈமெயிலை தொடுத்து.

பார்த்துவிட்டு நானும், சேஃப்பா போய் சேர்ந்தாயா? என்று ஒரு ஒற்றை வரி அனுப்பினேன். நாமதான் பாசக்கார பயபுள்ளைகள் ஆயிற்றே!

திரும்பி வந்த ஒற்றைவரி பதிலைப்பற்றி சொல்வதர்க்குள் நான் சொல்லவந்த முரணைப்பற்றி பேசலாமா?

சஸ்பென்சு...? அப்படின்னு யோசிக்காதீங்க, கொஞ்சம் நீண்டு போவதால் உங்களை கடைசி வரை பிடித்து வைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை, மன்னித்து பின்தொடருங்கள், ப்ளீஸ்....

முரண் ஒன்று.

என் முதலாளிக்கு லண்டனில் நண்பர்கள் இருப்பது எனக்குத்தெரியும். எங்களுடன் வியாபாரத்தொடர்புடையவர்களே ஐரோப்பாவைச் சேர்ந்த பத்து லீடிங் பிராண்டுகளுக்கு மேல் இருக்கும். எல்லாம் பலகாலம் எங்கள் கம்பெனியுடன் வியாபாரத்தொடர்புடையவர்கள். பின் ஏன் அவர்களிடம் போகவில்லை? அதுவுமில்லாமல் கார் கிடைக்கவில்லை என்றால் ஏர்போர்ட்டில் தான் பொழுதைக்கழிக்க வேண்டும் என்றது ஏன்?

முரண் இரண்டு

என்னதான் கிறிஸ்மஸ் கிப்ட் வாங்கி வைத்திருந்தாலும் ‘ஏர்போர்ட்டில் தான் பொழுதைக்கழிக்க வேண்டும்‘ என்று போய்த்தான் ஆக வேண்டுமா?

இந்த முரண்கள் தான் எனக்கு உருத்தலாய் பட்டது. என் முதலாளியின் இடத்தில் ஒரு இந்தியரை வைத்து இப்போது நினைத்துப்பார்ப்போம். சென்னைக்கு கிளம்புகிறார், சென்னையில் பெருமழை. (ஸ்னோ வரவே வராது அதனால்)வெஸ்ட் மாம்பலத்தில் வீடு. சென்னைக்கு பிளைட் இல்லை, திருச்சி அல்லது கோவை தான் போகும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

நாம் போகின்ற காரண காரியத்தை வைத்து நாம் முடிவு செய்வோம். எனக்கு கல்யாணம் (சும்மாச்சுக்கும்), அதற்க்காக என்றால் நான் போவேன். அப்படியே போனாலும் திருச்சியில் இருக்கும் அத்தை வீட்டிலோ, பெரியப்பா வீட்டிலோ தங்கியிருந்து மழை விட்டதும் சென்னை போய் சேர்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். சும்மா என் பசங்களுக்கு தீபாவளி பரிசு கொடுக்க என்றால், போடாங்கொய்யாலன்னுட்டு, சென்னை போ மாட்டியா, இப்ப என் காசை திருப்பி வைடான்னு தான் நான் சட்டைய பிடிப்பேன்.

ஐரோப்பியர்களுக்கு அனேகமாய் சொந்த பந்தங்கள் இல்லை. அது ஏனோ அவர்களுக்கு பிடிக்காது போல் இருக்கிறது. ஆனால் நண்பர்கள்? இருந்தாலும் அவர்கள் போவதற்க்கு ஏனோ விரும்புவதில்லை. ஏர்போர்ட்ல வேணா படுத்துக்கறேன், நண்பர்களிடம் போவதில்லை என்று ஏன் இருக்கிரீர்கள் ஐரோப்பியர்களே?

என் முதலாளியின் பிள்ளைகளோ அல்லது அப்பாவோ வந்தால் தான் இங்கும் துபாய் வீட்டில் தங்கமுடியும். அம்மா உயிரோடு இல்லை, சித்தி தான். அது வந்ததில்லை இது வரை. மனைவி அல்ரெடி இன்னொருவர் மிசஸ். நண்பர்கள் வந்தால் ஹோட்டல் தான்.

அழைத்து வர போவது, கொண்டு விட போவது எதுவும் இல்லை. ஏன் இப்படி? ஆனால் நண்பர்கள் என்று வாய்கிழிய பேசிக்கொள்வார்கள்??

இன்னொரு முரணைப்பாருங்கள், மனைவியை டைவர்ஸ் பண்ணி ஏனோ முடிந்த கதை ஆகிவிட்டது. ஆனால் இன்றும் மாதம் தோரும் ஆயிரம் பவுண்டுகள் (கிட்டத்தட்ட 75000 ரூபாய்) அனுப்பிக் கொண்டிருக்கிறான், அவளும் வேறு திருமணம் செய்துகொண்டு கூசாமல் வாங்கிக்கொண்டிருக்கிறாள். அதுவும் 27ம் தேதி சரியாய் அங்கு பணம் போய் சேராவிட்டால், அடுத்தநாளே ஓடி வருவார்? வநா, நீ அனுப்பிட்டியா, இல்லையா என்று. பாருங்க ஐரோப்பிய பொம்பளைங்களோட ரவுடித்தனத்தை?

லூசாடா நீயின்னும் ஒரு தடவை கேட்டு விட்டேன் பொருக்க முடியாமல். உதட்டை பிதுக்கிவிட்டு வேறு வழி இல்லை என்று சொன்னபோது எனக்கே அவர் முகத்தை பார்க்க பாவமாக இருந்தது.

நாமளா இருந்தா செருப்பைக்கழற்ற மாட்டோமா? வேற கல்யாணம் பண்ணிக்கிட்டியா, ஓடிருன்னு தொரத்தி விட்டு விடுவோம். நம் பெண்களும் இப்ப்ப்டில்லாம் வாங்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

இப்ப சொல்லுங்கள், இந்திய கலாச்சாரம் நல்லதா? அல்லது ஐரோப்பிய கலாச்சாரம் நல்லதா?
எப்பவுமே நம் இந்தியர்கள் இந்தியர்கள் தான். ஜெய் ஹிந்த்.

சரி, இப்ப ரிப்ளை மேட்டருக்கு வருகிறேன்.

‘Thanks. Reached safely but roads are bad‘ னு வந்தது.

இனி நாளை சந்திப்போமா?

அன்புடன், வசந்தா நடேசன்.

Tuesday, December 21, 2010

வுமன் - ஹஸார்டஸ் மெட்டீரியல்ஸ் டேட்டா ஷீட்

சத்தியமா, சொன்னா நம்புங்க சார். கீழ இங்கிலீஷ்ல வர்ற மேட்டர் நான் எழுதியதில்லை, ஈமெயிலில் வந்தது, சரி இன்றைக்கு எதுவுமே இல்லையே இதுவாவது இருக்கட்டும்னு எடுத்து போட்ருக்கேன் சார்.

நமக்கு ஏதுங்க அவ்வளவு அறிவு. ஒரு இங்கிலீஸ் துரை கிட்ட இருந்து வந்தது சார், அவுகளுக்கு என்ன பிரச்னையோ?

சரியாத்தான் போட்ருக்காங்களான்னு கொஞ்சம் படிச்சி சொன்னீங்கன்னா நல்லாருக்கும். சும்மா பிட் அடிச்சது மட்டும் தான் நான், அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிரலாம்னு தான் பாத்தேன், பயபுள்ள பிளாக்குக்குள்ள லோட் ஆகலை, நான் என்ன சார் பண்றது? உக்காந்து டைப்பீருக்கென், இத்தனை நேரமும்.

பாத்தீங்களா, நம்ப மாட்டேங்கிரீங்க. சந்தேகம்னா, சும்மா ஒரு ஈமெயில் தட்டி விடுங்க, கையில இருக்க ஒரிஜினல கம்பெனி ஸ்டாம்போட அனுப்பி தாரேன், நம்மள உட்ருங்க.

இந்தியாவிலிருந்து வந்து போகும் அறிமுகமான ஐயா மார்களே, நம்ம வீட்டம்மாவுக்கு இத ஃபார்வேர்டு பண்ணி உட்ராதீங்க. (பதிவெழுத போரேன்னு சொல்லித்தொலச்சது நம்ம தப்பு தான். இப்ப ரிஸ்க் எடுக்க வேண்டியது தான், வேற வழி)

முக்கியமா, தாய்க்குலமே, கீழ் வருவனவற்றுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எந்த கோயில்ல வந்து கைல சூடம் ஏத்தணும்னாலும் சொல்லுங்க, உடனே வர்றேன். நம்புங்க பெண்ணியவாதிகளே, இது சும்மா காமெடிக்காக எழுதியிருப்பார்கள் என்று தான் நினைக்கிறேன், உடனே கல்லெடுத்திட்டு வீட்டுப்பக்கம் வந்திராதீங்க,,

வர்ட்டா, நான் போனதுக்கப்புறம் படிங்க சார்..

நன்றியுடன், வசந்தா நடேசன்.HAZARDOUS MATERIALS DATA SHEET

ELEMENT : Woman
Symbol : Ю
DISCOVERER : Adam
ATOMIC MASS : Accepted as 55kg, but known to vary from 45kg to 225kg

PHYSICAL PROPERTIES

1) Body surface normally covered with film of powder and paint
2) Boils at absolutely nothing - Freezes for no apparent reason
3) Found in various grades ranging from virgin material to common ore

CHEMICAL PROPERTIES

1) Reacts well to gold, platinum, and all precious stones
2) Explodes spontaneously without reason or warning
3) The most powerful money reducing agent known to the man

COMMON USE

1) Highly ornamental, especially in sports cars
2) Can greatly aid relaxation
3) Can be a very effective cleaning agent

HAZARDS

1) Turns green when placed alongside a superior specimen
2) Possession of more than one is possible but specimens must never make an eye contact

Monday, December 20, 2010

இணையத்தில் வந்த கதை

அலுவலகத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தில் தமிழ்மணம் மேய்வது வழக்கம். ஒரு நேரத்தில் அது போதையாகவே மாறி ஆபிஸ் வேலையை விட்டு மேய்ச்சலுக்கே நேரம் சரியாகப்போயிற்று,, சரி இது தொடர்ந்தால் வேலைக்கே டிஸ்கி ஆகிவிடும் என்று பயந்து அதை விட்டு விலகி மீண்டும் என் மனைவி சொல்வது போல் ஆபிஸ் கழுதையாகவே மாறி பல காலம் ஆயிற்று.

இருந்தாலும் போதை விடுமோ? மீண்டும் துளிர்த்தது,, அடங்குடா என்று சொல்லிப்பார்த்தும் மனம் அடங்குவதாய் தெரியவில்லை,, தொடங்குடா என்றது ! ஜாதக தோஷம்! (எனக்கா அல்லது படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கா தெரியவில்லை!) வேறு வழி தெரியாமல் என்ன செய்யலாம் வேலையா? இணையமா? என்ற ரீதியில் மனதிற்க்குள் ஒரு பட்டிமன்றம் நடத்தி ஒரு வழியாய் ‘இரண்டும் தேவையே‘ என்று லியோனி பாணியில் முடிவு செய்து, அதற்க்கான திட்டமிடல் ஆரம்பம் ஆனது,, இணையத்திற்காக வேலையை இழக்கமுடியாது என்பது வேறு விஷயம்!

ஆபிஸ் முடிந்து மாலை ஐந்தரைக்கு வீட்டுக்கு வந்தால் வேறு வேலை ஒன்றும் பெரிதாக இல்லை, சமையலைத்தவிர! (நான் துபையில் வேலை பார்க்கும் ஒரு அனாதப்பய தான், குடும்பம், குட்டிங்கள்ளாம் ஊர்ல இருக்காங்க சொகமா !) சமையலுக்கு ஒரு அரை மணி நேரம் நான் உதவினாலே போதும் மீதியை உடனிருக்கும் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.. இங்கே குளிர் காலம் இப்போது தொடங்கி விட்டதால் மாலை வாக்கிங் போய் ஒரு வாரம் ஆயிற்று,, சமையலும், இரண்டு லார்ஜ் அடித்து பின் சாப்பிட்டு (இடையிடையே சன் டிவி பார்த்து) பதினொரு மணிக்குத் தூங்கினால் மறுநாள் காலை ஆறு பத்து அலாரம்!

மாலை வேளை இனி இணையவேளை என்று முடிவு செய்தேன் ஆனால் அதற்க்கான பட்ஜெட் மற்றும் செயல் திட்டம் மலைப்பைத் தந்தது! ஒரு மடிகணிணியும், இன்டர்நெட்டும் முதலில் தேவை, இரண்டாவதாக தமிழ் டைப்பிங் கற்றுத் தேரவேண்டும்! நான் ஒன்றும் இலக்கியம் எழுதப்போவதில்லை என்றாலும் முடிந்தவரை தப்பில்லாமல் எழுதவேண்டும் என்று நினைத்ததே காரணம்!

துபையில் சிலகாலமாய் எல்லோரும் லேப்டாப்பும் கையுமாக அலைகயில் நான் மட்டும் நீண்ட நாளாக வேண்டாம் என்று தள்ளிப்போட்டது தவறென்று பட்டது.. கிட்டத்தட்ட கழிந்த இருபது ஆண்டுகளாக வேலைநாட்களில் எல்லாம் ஆபிஸில் கணிணியுடன் மாறடித்து மாறடித்து வீட்டிற்க்கு வந்தும் அது வேண்டாம் என்று வெருப்பில் இருந்தேன் என்பதே உண்மை, விதி யாரை விட்டது, ஆஜர் போட்டாகிவிட்டது இனி ஆடித்தான் ஆகவேண்டும்!

ஒரு சுபவேளையில் கிரடிட் கார்டு உரசி மடிகணிணி வீட்டிற்க்கு வந்தது, இனி தமிழ் கற்க வேண்டும், கற்றபின் இன்டர்நெட் எடுக்கலாம் என்று முடிவெடுத்து துவங்கினால் இடையில்
தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் எண்ணம் வந்து, ஆபிஸிலும் ‘ஓகே‘ சொன்னதால் எல்லாம் போட்டது போட்டபடி பறந்து விட்டேன்,, Back to Family Life, 22 நாள் ஊரில் இருந்தேன், வந்து மீண்டும் துவங்கினேன்.. அவ்வளவு சுலபத்தில் தமிழ் டைப்பிங் கைவரவில்லை, விட்டுவிடுவோமா என்ன? வந்துட்டோம்ல?

இப்போது ஏதோ கொஞ்சம் டைப்ப முடிகிறது என்றால் இதற்க்கு முதலில் ஆசான் சாப்ட்வேருக்கு ஒரு நன்றி தெரிவிக்கவேண்டும். இல்லையேல் நன்றி கெட்ட பாவி ஆகிவிடுவேன்! நல்லாத்தான் கத்து கொடுக்கிறாங்க சார்.. தப்பு தப்பாக தமிழெழுதும் பதிவர்கள் இதைப்பயன்படுத்தி என்னைப்போல் குறைந்த அளவு தப்புகளுடன் எழுதலாம். வாழ்த்துக்கள். 12 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளலாம் என்று சொன்னாலும் உண்மையில் அதைவிட குறைவான நேரமே போதும். அருமையாக டிசைன் செய்திருக்கிறாகள், Chennai Kavigal\Aasaan\Aasaan.exe க்கு மீண்டும் ஒரு நன்றி!

தமிழ் டைப்பும் வேகம் இன்னும் வரவில்லை என்றாலும் கைகள் துடிக்கிறது, என்ன செய்வது எழுத்துக்காரனாய் ஆகி விடுவது என்ற முடிவை மாற்றுவது இல்லை என்று தீர்மானித்து துவங்கிவிட்டேன். டைப்ப, டைப்ப வேகம் வந்துவிடும் என்று தெரியாதா என்ன?

கழிந்த 2 நாட்களாய் இன்டர்நெட்டுக்கு அலைகிறேன், (துபாயில் தான் சார்!)
முதல் நாள் Shindaga Etisalat போனால் வீடு இருக்கும் கட்டிடத்தில் உள்ள வொர்க்கிங் நம்பர் கேட்டார்கள்! இந்த பில்டிங்கில் இருப்பதே நாலு ஃப்ளாட் தான், யாரிடமும் இல்லை என்றேன், அப்ப Al Kaleej Centre Etisalat போ என்றார்கள், அங்கு தான் வொர்க்கிங் நம்பர் இல்லாதவர்களுக்கு இன்டர்நெட் கொடுக்கும் வசதி இருக்கிறதாம் ! Tenancy contract கொண்டு போ என்றார்கள், சரிங்க சார் என்று அடுத்த நாள் Al Kaleej Centre Etisalat போனால் அங்கே பில்டிங் பிளாட் நம்பர் கேட்டார்கள், டெனன்சியில் இருப்பதை ஒத்துக்கொள்ள மாட்டாகளாம். லேண்ட்லார்டிடம் கேட்டு முனிசிபாலிட்டி கொடுத்திருக்கும் survey plan வாங்கவேண்டுமாம்! நடக்கிற கதையா? வழக்கமாய் இது போல் வேலைகள் இங்கே ஒரே விசிட்டில் முடிந்துவிடும்,

நமக்கு நேரம் சரியில்லையோ என்று ஒரு ஆயாசம் வந்துவிட்டது, நமது தமிழ்ச்சேவை அவ்வளவு தான் என்று வெருத்துப்போய் பத்து நிமிடத்தில் காருக்கு திரும்பினேன், பார்க்கிங் போட்ட 2 திர்கம் தண்டம் ஆக வேண்டாம் என்று பக்கத்தில் உள்ள சிட்டி மார்ட் அல் மயாவில் ராத்திரி சாப்பாட்டுக்கு ரவையும் பழமும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன். வரும் போதே முன்பு DEWA (Dubai Electricity and Water Authority) கனெக்ஷனுக்காக லேண்ட்லார்ட்டிடம் ஏதோ பேப்பர் வாங்கியது நினைவு வந்தது, வந்து வேகமாய் பைலை புரட்டினால் survey plan தான், தப்பினேன்டா சாமி என்று எடுத்து வைத்தேன் அடுத்த நாள் கொண்டு செல்லலாம் என்று ! எப்போதும் கையில் கிடைக்கும் முக்கியமான எல்லா பேப்பர்களையும் காப்பி எடுத்து வைப்பது எவ்வளவு நல்லது என்று நினைத்துக்கொண்டேன்.

சத்தியமா சுருக்கமா தான் சொல்ல நினைத்தேன், கொஞ்சம் நீண்டு விட்டது, நம்ம கைல என்னங்க இருக்கு! இரண்டு நாட்களாய், கைவசம் இருந்த ஈமெயில், இத்துப்போன கவிதை, சுட்ட கவிதைன்னு ஓட்டியாயிற்று, சொந்தமா எழுதலைன்னா உலகம் நம்மள பத்தி என்ன நினைக்கும் என்று கைவலிக்க, வலிக்க எழுதியாயிற்று. துபாயின் இரவு வாழ்க்கை அழைக்கிறது.

மீண்டும் நாளை வருகிறேனே. நன்றி.

அன்புடன், வசந்தா நடேசன்.

Sunday, December 19, 2010

அயல்நாட்டு அகதிகள்

டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து மீட்க
முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்.

பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகலிக்க முடியாமல்
Happy New Year, Happy Pongal என்று மனம் முழுக்க சோகத்தோடு
கைபேசியில் கூக்குரலிடும் கையாலாகாதவர்கள்!

இங்கே கண்ணே மணியே என்று காதலியை
நெஞ்சுருகி கொஞ்சி மகிழ அவள் நேரில் இல்லை!
கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் காதலியின் குரல்
கேட்டு கேட்டு எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது.

தொலைதூரக்காதல் செய்தே தொலைந்து போனவர்கள் நாங்கள்!

நான் இங்கே நல்லா இருக்கேன் என்றே எப்போதும் சொல்லும்
Default குரலுக்கு சொந்தக்காரர்கள்.

உணவில் குறையிருந்தாலும், உடல்நலக்குறையென்றாலும்
First Class என்று சொல்லியே பழகிப்போனவர்கள்.

வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகுமுன்
வாசனைப்பூச்சு வாங்க மறப்பதில்லை, எங்கள் வியர்வையின் வாசம்
வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க.

கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள் நாங்கள்
கலப்பை பிடிக்கவில்லை என்றாலும் நாங்களும் களைத்துத்தான் போகிறோம்

எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லாபூச்சிகள்.

திரைகடலோடியும் திரவியம் தேடும்
திசைமாறிய பறவைகள் நாங்கள்

எங்களுக்கும் மாதக்கடைசி உண்டு என்பது யாருக்கும் புரிவதில்லை
உனக்கென்ன, விமானப்பயணம், வெளிநாட்டு வேலை என்றெல்லாம்
உள்ளூர்வாசிகள் விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின்
வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது! !

ஆரம்பத்தில் முதலீடில்லா தொழிலென்று பெருமிதப்பட்டோம்,
எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா
முதலீடு செய்திருக்கின்றோம்!
இப்போது தான் புரியத்தொடங்கியது,
சேர்ந்தே நரைக்கவும் தொடங்கியது!

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை! !
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது, நஷ்டஈடு கிடைக்காத நஷ்டம் இது…
யாருக்காக! எதற்க்காக! ! ஏன்! ! !

தந்தையின் கடன், தங்கையின் திருமணம், தம்பியின் படிப்பு,
சொந்தமாய் வீடு, குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம் தோரணம் போல் கண் முன்னே.

நாங்கள் சுமக்கும் சிலுவை, எங்களால்
எங்கள் முதுகில் அறையப்பட்டவை, எங்களுக்குத்தெரியும்
உழைக்க கைகள் வேண்டும் என்று.

காதலியின் கண்சிமிட்டல், மனைவியின் சிணுங்கல், அம்மாவின் அரவணைப்பு
அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை
இப்படி எத்தனையோ இழந்தோம்.

எல்லாவற்றையும் இழந்த நாங்கள், இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்?
இழப்பதற்க்கு ஒன்றுமில்லை என்பதாலா? இல்லை
இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?

எங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் நம்மூர்
Ricshaw Man கூட Rich Man தான்.

நாங்களோ அன்புக்கு ஏங்கும் ஏழைகளாய்
அயல்நாட்டு அகதிகளாய்!

வா. அருள் குமார்.

==========================================================

மேலுள்ள கவிதை திரு.அருள்குமார் என்ற முகம் தெரியாத நண்பரால் எழுதப்பட்டது. ஈமெயில் மூலம் யாரோ ஒரு அகதி அனுப்பி எனக்கும் வாசிக்கக்கிடைத்தது. நானும் ஒரு அகதி என்பதால் அவரிடம் அனுமதி வாங்க வழியில்லாமல் அப்படியே கொடுத்துள்ளேன்.

முன்பே இது வலைத்தளத்தில் இருந்தால், தயைகூர்ந்து மன்னிக்கவும், நான் புதுசுங்க.

அரபு நாடுகளில் வசிப்பவர்களிடம் பொதுவாகவே இது போல் புலம்பல்கள் சகஜம். ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்பவர்கள் இது போல் புலம்புவதாக தெரியவில்லை. அதிக சம்பள வித்தியாசம் காரணமாக இருக்கலாம். (ஒரு பொறாமை தான்!)

அதுபோல் இங்கு வசிப்பவர்கள் அனேகமாக வருடந்தோறும் ஊருக்குச்சென்று விடுவார்கள், சொல்லப்போனால் எப்படா ஊருக்குப்போவோம்னு காத்திருப்பார்கள். ஆனால் பிற தேசங்களில் வசிப்பவர்கள் அப்படி செல்வதாக தெரியவில்லை. அதுவும் கல்யாணம் முடிந்து விட்டால் அனேகமாக அங்கேயே தங்கிவிடுவதாக கேள்வி. மனைவியுடன் தான். (வயிற்றெரிச்சல் தான் சார்!)

சரி, எல்லாம் விதிப்படி தான் நடக்கும், பொழப்ப பாக்கலாம் வாங்க.

அன்புடன்,

அகதி வசந்தா நடேசன்.

Friday, December 17, 2010

முடியலடா!

அன்றும் கொள்ளை நடந்தது, ஆஹா ‘பாப்பாத்திடா‘ என்றார்கள்,
இன்றும் நடந்திருக்கிறது, டேய் ‘தலித்துடா‘ என்கிறார்கள்
BC, OBC, MBC லாம் எப்பவோ அடிச்சுட்டாகளோ அல்லது
இனிம தான் அடிப்பாகளோ தெரியலை..
பாமரத்தனமாய், சொல்லித்தந்த படியே
பகுத்தறிந்து பார்த்தாலும்
நமக்கு ஃபார்முலா தெரியவில்லை!

அப்படி இப்படி பராக்கு பார்த்து
கழுத்து தான் வலிக்கிறது,
எப்படா ஆட்டைய முடிப்பீங்க,,,
முடிச்சித் தொலைங்கடா,
இந்தியா முன்னேறுதா பார்ப்போம்,
முடியலடா!.

பாமரன், வசந்தாநடேசன்.

Wednesday, December 15, 2010

இந்தியர்கள் ஏழைகள் தான் ஆனால் இந்தியா ஏழை நாடல்ல!!

இந்தியர்கள் ஏழைகள் தான் ஆனால் இந்தியா ஏழை நாடல்ல!!

வழக்கம் போல் இன்றும் ஒரு ஈமெயில் வந்தது. உண்மையா என்று தெரியாவிட்டாலும், சமீபத்திய நிகழ்வுகள் இருக்கக்கூடும் என்றே நம்பத்தூண்டியது. ராசாக்கள் ஆட்டோ அனுப்பி விடுவார்களோ என்று ஒரு சிறு பயம் இருந்தாலும், இது அனைவருக்கும் தெரியவேண்டியதே என்ற காரணத்தால் அதை அப்படியே கீழே தருகிறேன்.!

“Indians are poor but India is not a poor country”.
one of the Swiss bank directors said.....
“280 லட்சம் கோடி” of Indian money is deposited in Swiss banks.
It can be used for ‘tax less’ budget for 30 years.
It can give 60 crore jobs to all Indians.
From any village to Delhi 4 lane roads.
Forever free power supply to more than 500 social projects.
Every citizen can get monthly 2000/- for 60 yrs.
No need of World Bank & IMF loan.

Think how our money is blocked by rich politicians.
We need to fight against corrupted politicians.
Itna forward karo ki pura INDIA padhe.

Take this seriously, You can forward jokes, then why not this?
Be a responsible citizen.

இது ஒரு வட இந்திய நண்பரால் அனுப்பப்பட்டது, அது எப்படி விட முடியும், நம் தென்னிந்தியர்களால் கிடைத்த புகழை அவர்கள் தட்டிக்கொண்டு போவதா? வாருங்கள் மக்களே, நாம் இங்கு மூளை உருகி மூக்கோடு வரும்படி அடிக்கும் வெயிலிலும், குளிரிலும் அல்லல் பட்டு அவமானப்பட்டு குடும்பத்தை காப்பாற்ற உழைக்கிறோம் ஆனால் இத்தனையும் செய்துவிட்டு கூசாமல் இன்னும் அரசியல் பண்ணிக்கொண்டிருக்கும் இவர்களை நம்மால் ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும் இப்படி பேசி, எழுதியாவது கொஞ்சம் ஆறுதல் அடைவோம்! நம் வாக்காளப்பெருமக்கள் கண்டிப்பாய் திருந்துவதிலையென்று ஆன பின்பு, வேறு வழி......

நண்பர் கேட்டுக்கொண்ட படி இந்த ‘புகழை‘ பரப்ப மறக்கவேண்டாம், நன்றி.

அன்புடன், வசந்தாநடேசன்......