கவிதையோ என்று நினைத்து தலைப்பை பார்த்து உள்ளே வந்தவர்கள் சற்று ஏமாந்து போனால் நிர்வாகம் பொருப்பல்ல.. நான் சொல்ல வந்தது இந்தியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்குமுள்ள ஒரு சின்ன (அல்லது பெரிய) முரண்பாட்டைப்பற்றியது.
நேற்று காலை எனது பாஸ் லண்டனுக்கு சென்றான். ஐரோப்பாவை சேர்ந்தவன். வழக்கமாய் பிஸினஸ் டிரிப் போவது தான். ஆனால் இந்த முறை பெர்சனல் டிரிப் என்று எனக்கு முன்பே தெரியும்.
‘அவன் இவன் என்று ஏகவசனம் வேண்டாம்‘ என்று யாராவது வரவேண்டாம். இப்படிச்சொல்வதே எனக்கு இயல்பாய் இருக்கிறது. ஏழு வருடங்களுக்கு மேலாய் ஒரே இடத்தில் இருக்கிறோம். நாங்கள் பெயர் சொல்லி அழைத்துக்கொள்வதே வழக்கம், மற்றும் எப்போதும் அலுவலக நண்பர்களுக்குள் இப்படித்தான் பேசிக்கொள்வோம், அப்பப்பா மூச்சு வாங்குது, ஒரு லைன் சொல்வதற்க்குள் எப்படில்லாம் மிரள வேண்டியதிருக்கிறது!
போவதற்க்கு முதல் நாளே, ஐரோப்பா முழுவதும் ஸ்னோவாக இருக்கிறது.. பிளைட் நாளை இருக்கிறதா, இல்லையான்னே தெரியலை, நான் வெஸ்ட் லண்டனுக்கு போக வேண்டும், கார் எதுவும் கிடைக்கல, ஹோட்டல் ரூம் எல்லாம் ஃபுல், ப்ளடி கன்ட்ரி, அப்படி இப்படின்னு ஒரே புலம்பல்.
அப்படின்னா ஏன் போர? கேன்சல் பண்ணித்தொலைவது தானே? என்றேன்.
இல்ல, பசங்களுக்கெல்லாம் கிறிஸ்மஸ் கிப்ட் எல்லாம் வாங்கி வைத்துவிட்டேன். வரேன்னு பிராமிஸ் பண்ணிட்டேன், போய்த்தான் ஆக வேண்டும், வருடத்தில் வேறு ஏதாவது நேரம் என்றால் சரி, ஆனால் இப்ப அப்படி முடியாது, போய்த்தான் ஆகவேண்டும் என்றான்.
சரி, அப்ப பக்கதத்திலிருக்கும் ஏதாவது சொந்தபந்தம் அல்லது நண்பர்கள் வீட்டில் தங்கிக்கொண்டு ரோடு கிளியரானதும் போலாமே, கிறிஸ்மஸ்க்கு இன்னும் 3 நாள் இருக்கிறதே என்றேன்.
இல்லை, அப்படில்லாம் யாரும் இல்லை, தங்கமுடியாது ஏர்போர்ட்டில் தான் பொழுதைக்கழிக்க வேண்டும் என்றான்.
சரி, எதோ பண்ணித்தொலை, ஆளைவிடுன்னு நான் வந்து விட்டேன்.
நம்மில் பெரும்பாலனவர்கள் ஸ்னோவை பற்றி தெரிந்திருப்போம், அல்லது சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால் நேரில் பார்த்திருக்க வாய்ப்பில்லை ஐரோப்பவில் வசிக்கும் லக்கி அல்லது அன்லக்கி தமிழர்களைத்தவிர. நானும் அப்படியே. எனவே ஸ்னோவா? ‘அப்படின்னான்னு‘ கேணத்தனமாக மனதுக்குள் நினைத்துக்கொண்டு ஸ்னோ ஐரோப்பாவிற்க்கு ஆப்பு வைத்துவிட்டு போகட்டும், நமக்கென்ன என்று விட்டுவிட்டேன்.
மறுநாள் காலை துபாய் ஏர்போர்ட்டிலிருந்து போன் பண்ணும் போது, பிளைட் இருப்பதாகவும், ஆனால் ஹீத்ரோ ஏர்போர்ட் இல்லை, பிரிஸ்பேன் தான் போகிறது, 4 மணி நேரம் ரோடு வழியாகத்தான் நான் போகும் இடத்துக்கு போகவேண்டும் இந்த முறை மேரீகிரிஸ்மஸ் தான் போலிருக்கிறது என்று சொல்லிட்டு பறந்து விட்டான்.
இன்று அவனது பிளாக்பெரி வழியாய் மாலை ஒரு நாலரை மணிக்கு ஒற்றைவரி ஈமெயில் ஒன்று வந்தது, VaNa, please action என்று எங்கள் சப்ளையர் ஒருவர் அனுப்பியிருந்த ஈமெயிலை தொடுத்து.
பார்த்துவிட்டு நானும், சேஃப்பா போய் சேர்ந்தாயா? என்று ஒரு ஒற்றை வரி அனுப்பினேன். நாமதான் பாசக்கார பயபுள்ளைகள் ஆயிற்றே!
திரும்பி வந்த ஒற்றைவரி பதிலைப்பற்றி சொல்வதர்க்குள் நான் சொல்லவந்த முரணைப்பற்றி பேசலாமா?
சஸ்பென்சு...? அப்படின்னு யோசிக்காதீங்க, கொஞ்சம் நீண்டு போவதால் உங்களை கடைசி வரை பிடித்து வைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை, மன்னித்து பின்தொடருங்கள், ப்ளீஸ்....
முரண் ஒன்று.
என் முதலாளிக்கு லண்டனில் நண்பர்கள் இருப்பது எனக்குத்தெரியும். எங்களுடன் வியாபாரத்தொடர்புடையவர்களே ஐரோப்பாவைச் சேர்ந்த பத்து லீடிங் பிராண்டுகளுக்கு மேல் இருக்கும். எல்லாம் பலகாலம் எங்கள் கம்பெனியுடன் வியாபாரத்தொடர்புடையவர்கள். பின் ஏன் அவர்களிடம் போகவில்லை? அதுவுமில்லாமல் கார் கிடைக்கவில்லை என்றால் ஏர்போர்ட்டில் தான் பொழுதைக்கழிக்க வேண்டும் என்றது ஏன்?
முரண் இரண்டு
என்னதான் கிறிஸ்மஸ் கிப்ட் வாங்கி வைத்திருந்தாலும் ‘ஏர்போர்ட்டில் தான் பொழுதைக்கழிக்க வேண்டும்‘ என்று போய்த்தான் ஆக வேண்டுமா?
இந்த முரண்கள் தான் எனக்கு உருத்தலாய் பட்டது. என் முதலாளியின் இடத்தில் ஒரு இந்தியரை வைத்து இப்போது நினைத்துப்பார்ப்போம். சென்னைக்கு கிளம்புகிறார், சென்னையில் பெருமழை. (ஸ்னோ வரவே வராது அதனால்)வெஸ்ட் மாம்பலத்தில் வீடு. சென்னைக்கு பிளைட் இல்லை, திருச்சி அல்லது கோவை தான் போகும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
நாம் போகின்ற காரண காரியத்தை வைத்து நாம் முடிவு செய்வோம். எனக்கு கல்யாணம் (சும்மாச்சுக்கும்), அதற்க்காக என்றால் நான் போவேன். அப்படியே போனாலும் திருச்சியில் இருக்கும் அத்தை வீட்டிலோ, பெரியப்பா வீட்டிலோ தங்கியிருந்து மழை விட்டதும் சென்னை போய் சேர்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். சும்மா என் பசங்களுக்கு தீபாவளி பரிசு கொடுக்க என்றால், போடாங்கொய்யாலன்னுட்டு, சென்னை போ மாட்டியா, இப்ப என் காசை திருப்பி வைடான்னு தான் நான் சட்டைய பிடிப்பேன்.
ஐரோப்பியர்களுக்கு அனேகமாய் சொந்த பந்தங்கள் இல்லை. அது ஏனோ அவர்களுக்கு பிடிக்காது போல் இருக்கிறது. ஆனால் நண்பர்கள்? இருந்தாலும் அவர்கள் போவதற்க்கு ஏனோ விரும்புவதில்லை. ஏர்போர்ட்ல வேணா படுத்துக்கறேன், நண்பர்களிடம் போவதில்லை என்று ஏன் இருக்கிரீர்கள் ஐரோப்பியர்களே?
என் முதலாளியின் பிள்ளைகளோ அல்லது அப்பாவோ வந்தால் தான் இங்கும் துபாய் வீட்டில் தங்கமுடியும். அம்மா உயிரோடு இல்லை, சித்தி தான். அது வந்ததில்லை இது வரை. மனைவி அல்ரெடி இன்னொருவர் மிசஸ். நண்பர்கள் வந்தால் ஹோட்டல் தான்.
அழைத்து வர போவது, கொண்டு விட போவது எதுவும் இல்லை. ஏன் இப்படி? ஆனால் நண்பர்கள் என்று வாய்கிழிய பேசிக்கொள்வார்கள்??
இன்னொரு முரணைப்பாருங்கள், மனைவியை டைவர்ஸ் பண்ணி ஏனோ முடிந்த கதை ஆகிவிட்டது. ஆனால் இன்றும் மாதம் தோரும் ஆயிரம் பவுண்டுகள் (கிட்டத்தட்ட 75000 ரூபாய்) அனுப்பிக் கொண்டிருக்கிறான், அவளும் வேறு திருமணம் செய்துகொண்டு கூசாமல் வாங்கிக்கொண்டிருக்கிறாள். அதுவும் 27ம் தேதி சரியாய் அங்கு பணம் போய் சேராவிட்டால், அடுத்தநாளே ஓடி வருவார்? வநா, நீ அனுப்பிட்டியா, இல்லையா என்று. பாருங்க ஐரோப்பிய பொம்பளைங்களோட ரவுடித்தனத்தை?
லூசாடா நீயின்னும் ஒரு தடவை கேட்டு விட்டேன் பொருக்க முடியாமல். உதட்டை பிதுக்கிவிட்டு வேறு வழி இல்லை என்று சொன்னபோது எனக்கே அவர் முகத்தை பார்க்க பாவமாக இருந்தது.
நாமளா இருந்தா செருப்பைக்கழற்ற மாட்டோமா? வேற கல்யாணம் பண்ணிக்கிட்டியா, ஓடிருன்னு தொரத்தி விட்டு விடுவோம். நம் பெண்களும் இப்ப்ப்டில்லாம் வாங்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
இப்ப சொல்லுங்கள், இந்திய கலாச்சாரம் நல்லதா? அல்லது ஐரோப்பிய கலாச்சாரம் நல்லதா?
எப்பவுமே நம் இந்தியர்கள் இந்தியர்கள் தான். ஜெய் ஹிந்த்.
சரி, இப்ப ரிப்ளை மேட்டருக்கு வருகிறேன்.
‘Thanks. Reached safely but roads are bad‘ னு வந்தது.
இனி நாளை சந்திப்போமா?
அன்புடன், வசந்தா நடேசன்.
வலைப்பூவுலகிற்கு உங்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்...
ReplyDeletephilosophy prabhakaran said...
ReplyDeleteவலைப்பூவுலகிற்கு உங்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்...
வருகைக்கும், தொடர்வதற்க்கும் நன்றி,,