Monday, May 9, 2011

'பாக்' - அது போனவாரம்!!

சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கும் போது மனதில் ஒரு சிறு சந்தேகம், பாகிஸ்தான் உண்மையிலேயே பலமான ராணுவ வசதிகள் கொண்ட நாடா அல்லது நம்ம ஊர் வடிவேல் தனமாய் 'கைப்புள்ள' ஆட்டம் ஆடுகிறதா என்று?

அமெரிக்கா ஒரு சுக்கும் இல்லாமல், விசா, ஸ்டாம்பிங் ஒரு புண்ணாக்கும் இல்லை, குறைந்தபட்சம் ஒரு முன்அனுமதி கூட இல்லாமல் 4 ஹெலிகாப்டர்களில் வந்திறங்கி ஒரு தாக்குதலை நடத்தி, பின்லேடனை சுட்டுக்கொன்று,அவர் உடலை கடலில் வீசிவிட்டு போகமுடியுமென்றால் உண்மையிலேயே பாக் ராணுவம் என்ன செய்தது அப்போது என்பது கேள்விக்குறி.

நான் அணுகுண்டு வச்சிருக்கேன், ஏவுகணை வச்சிருக்கேன், அது வச்சிருக்கேன், இது வச்சிருக்கேன் என்று பாகிஸ்தான் கூறியதெல்லாம் வெறும் வாய்சவடால் தானோ?

இப்போது கேட்டால் 'அது போனவாரம்' என்பது போல் இருக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பல சந்தேகங்களை கிளப்புகிறது.

இவர்களை 'நம்பி' நாமும் எக்கச்சக்கமாய் ராணுவத்திற்கு செலவழிக்கிறோம், இந்தியாவில் நமக்கு உண்டான கஞ்சிக்கு வழியில்லை, ராணுவம் அணுகுண்டு என்று நம்மை வரவுக்கு மேல் செலவு செய்ய வைத்து விட்டு வேடிக்கை பார்க்கிறார்களோ?? பாகிஸ்தானுக்காக இல்லாவிட்டாலும் நாம் சீனாவுக்கு பயந்து ராணுவச்செலவு செய்து தான் ஆகவேண்டும் என்பது வேறு கதை, இருந்தாலும்?

டேய் எதுன்னாலும் சொல்லிட்டு செய்ங்கடா என்று மன்மோகன் பரிதாபமாய் கேட்பது போல் கனவு வந்து தொலைக்கிறது சமீப நாட்களாய்!

ரேடார் என்று ஒரு சாதனம் பாகிஸ்தானில் இருக்கிறதா, இல்லையா?? இல்லேன்னா சொல்லுங்கடா, நாங்கதான் இருக்கோம்ல? தந்து உதவுகிறோம் என்று நம் காங்கிரஸ் சொன்னாலும் சொல்லலாம், இலங்கைக்கே கொடுத்து தமிழர்களை கொல்ல உதவியவர்களாயிற்றே நாம்.

பாக் அதிபரும், பிரதமரும் தினம் ஒன்றை சொன்னாலும் அவர்களின் கையாலாகாத்தனம் தான் உலகின் கண்களுக்கு தெரிகிறது, இதற்கிடையில் ஐ எஸ் ஐ தலைவர் இந்தா, அமெரிக்கா வரை போயிட்டு வர்ரேன்னு சொல்லிட்டு இப்ப, சவுதிக்கு போயிட்டார், சீனாவுக்கு போயிருப்பாரோ?? என்று சப்பை கட்டு கட்டுவது என்ன நாடகம் நடக்கிறதென்றே உலகுக்கு தெரியாமல் இன்னொரு மழுப்பல்ஸ் போல் தான் தெரிகிறது.

இதைப்பார்த்து நம் சிதம்பரம் வேறு அமெரிக்கா நினைத்தால் பாகிஸ்தானில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் நாமல்லாம் செய்யமுடியாது என்பது இன்னொரு கையாலாகாத்தனம். வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்து தொலைச்சிருக்கலாம் நம்ப RAW ஆளுங்க மாதிரி அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு!

ம்ம்ம், என்னதான் நடக்குதுனு பாப்போம் என்று இருப்பதை தவிர நம்மைப்போல் அப்பாவி இந்தியனுக்கு வேறு வழி?

அன்புடன், வசந்தா நடேசன்.

Sunday, May 8, 2011

சீனாவில் மலிவு ஏன்??

நண்பர்களே நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு சிறு பதிவு..

இன்று நண்பர் அனுப்பிய ஒரு ஈமெயிலில் பார்த்த கீழ்கண்ட படங்கள் இதை எழுதத்தூண்டியது..

பொதுவாக இந்திய பொருட்களை விட சீனத்துப்பொருட்களுக்கு விலை குறைவு, நம்மில் பலர் இதை கவனித்திருப்போம், அதே நேரம் சீனாவில் சில கம்பெனிகள் தரமான பொருட்களையும் தயாரிக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

பொதுவே நம் அரசின் கொள்கைகளும் சீனாவின் கொள்கைகளும் மாறுபட்டவை, கீழே ஒரு உதாரணம் பாருங்கள்.. ஒரு கடத்தலை அங்குள்ள அதிகாரிகள் எவ்வாறு நேரிட்டனர் என்பதனை இப்படங்கள் விளக்குகின்றன.

முதல் படம், ஒரு சிறுவனை அங்குள்ள ஒரு பெரிய கட்டிடத்தின் அறையில் கடத்தி வைத்துவிட்டு கடத்தல் காரன் தன்னிடம் மூன்று கோரிக்கைகள் உள்ளதாய் கூறுகிறான்.அடுத்தபடத்தில், சிறிது நேரத்தில் வந்த போலீஸார் அல்லது அதிரடிப்படையினர், எவ்வாறு இதனை நேரிடுவது என்று சிறு ஆலோசனையிடுகிறார்கள்.பேச்சுவார்த்தை தொடங்குவது போல் பாவ்லா காட்டிக்கொண்டே எவ்வாறு சிறுவனை காப்பாற்றுவது என்பதன் டிரையல் தொடங்குகிறது..

அதிரடி ஆரம்பம்..ஆட்டம் குளோஸ்!


மொத்த செலவு £0.25

இதுவே நம் ஊர் என்றால் யோசித்துப்பாருங்கள்? குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்கு அந்த தெருவில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கும்.

அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்த இன்னொரு 24 மணி நேரம்!

பேசிமுடித்து ஒரு 10 லட்சமோ 1 கோடியோ சிறுவனின் வசதியை பொருத்து பேரம் படிந்திருக்கும். அதுவரை கடத்தல் காரனுக்கும் சிறுவனுக்கும் சாப்பாடு, தண்ணீர் மற்றும் எல்லா சவுகரியங்களும் கிடைத்திருக்கும், உறவினர்கள் கண்ணீரோடு கதறுவது சன் டிவியில் செய்தியாய் லைவ் ஓடிக்கொண்டிருக்கும்!

கடைசியில் ஒருவேளை பையனை காப்பாற்றியிருப்பார்கள், கடத்தல் காரன் சிறையில் பொதுமக்கள் செலவில் நன்கு சாப்பிட்டு ஐந்தாறு வருடம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வந்து மீண்டும் தொழிலை ஆரம்பிப்பான்!

சீனாவில் எவ்வளவு சிம்பிளாய் முடித்துவிட்டார்கள் பாருங்கள்! நம் ஊரில் அப்படியே நடந்தாலும் நம் மனித உரிமை பாதுகாவலர்கள் விடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

நம் பொருட்களின் விலை அதிகம் தான், நம் திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்களுக்கு பொதுமக்களின் வரிப்பணம் செலவாவது தொடர்வது வரை!

அன்புடன், வசந்தா நடேசன்.