Sunday, February 13, 2011

காளீஸ்வரன் கதை..[2]

//துபாய் வந்ததும் தான் ‘ரிலீஸ்‘ கிடைச்சுது சார்..//

ஒரு வழியாய் துபாய் வந்து தனியாய் ஒரு அறையில் சேர்ந்ததும், ஊரிலிருந்து வரும்போது முடிவெடுத்து வந்த இனி ட்ரிங்ஸ் வாழ்க்கையில் ‘வேண்டவே வேண்டாம்‘ என்ற முதல் முடிவை, முக்கிய முடிவை சந்தர்ப்பவசத்தால் தனியாய் வந்த அன்றே கைவிடவேண்டியதாகிப்போனது.

என் மனைவி இப்போதும் யார் சென்று சொன்னாலும் நம்பமாட்டாள், நான் ட்ரிங்ஸ் பண்ணுகிறேன் என்பதை என்றால் நான் எவ்வளவு நல்லவன் என்று பார்த்துக்கொள்ளுங்கள். அதுவுமில்லாமல் சொல்பவர்கள் நிலைமை சற்று சங்கடமாகலாம், எஸ் எம் எஸ் பண்ணிவிடுவேன் என்று மிரட்டும் நண்பர்கள் கவனிக்கவும்.. (ஹி.. ஹி..)

இங்குள்ள வாழ்க்கை முறையில் ஏனோ அதுவும் ஒன்றாய்ப்போனது?? வெள்ளையர்களுடன் கம்பெனி பார்ட்டிகளுக்கு போகும் போது நான் குடிக்கமாட்டேன் என்றால் அப்படியே மேலும், கீழும் பார்ப்பார்கள்?? எந்த ஊரிலிருந்து வந்த ஜந்து இதுவென்று..(தமிழனுக்கு இதுவிஷயத்தில் ஒரு மரியாதைக்குறைவு வரலாமா?? நீங்களே சொல்லுங்க சார்??)

குடி என்பது அதன் எல்லையில் இருந்தால் குடிப்பழக்கம் தவறில்லைதான் என்னைப்பொருத்தவரை. குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும் அளவுக்கு இதுவரை குடித்ததில்லை, இத்தனை சுதந்திரங்கள் இருந்தும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சரி, இதை ஒரு குடிபுராணமாக்காமல், கதைக்கு வருவோம்..

காளீஸ்வரன், ஒரு அற்புத திறமை வாய்ந்த தமிழ் இளைஞன் என்று சொல்லலாம், ஊரில் ஐ.டி படித்துவிட்டு இங்கே ஏதோ அப்போது பிரபலமாய் இருந்த கொரியன் கம்பெனியில் எலக்ட்ரிகல் துரையில் வேலைபார்த்தான். அவனுடைய அப்பா ஊரில் பெரிய சென்டரிங் கான்ட்ராக்டர் என்று சொல்லியிருக்கிறான்.

பொதுவாகவே நம்ஊரில் எலக்ட்ரிகல் வேலை பார்ப்பதற்க்கும் இங்கே உள்ளவைகளுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு, என் வேலையைப்போல் உலகெங்கும் பொதுவாய் உள்வருவனவற்றை பற்றெழுதி, வெளிசெல்வதுதை வரவெழுதும் சொத்துக்கணக்கு வேலையல்ல அது. நான் ஏதோபதிவில் சொன்னது போல் எந்தவேலைக்கும் அதற்க்கான தனித்திறமை வேண்டும் என்பது காளீஸ்வரன் வேலைசெய்வதை பார்த்தால் தெரியும்.

இங்கே எல்லாமே லேட்டஸ்ட், உலகில் எந்த நாட்டில் எப்போது புதிய ஒரு டெக்னாலஜி வந்திருந்தாலும் முதலில் அறிமுகம் ஆவது துபாயில்தான். இங்கே வாழும் பல நாடுகளைச் சேர்ந்த மனிதர்கள் அதனை பயன்படுத்தி, யார்யாருக்கு இந்தவகை பிடிக்கிறது என்ற சர்வேக்களெல்லாம் எடுத்து, இந்த புராடக்ட் சக்ஸஸ் ஆகுமா ஆகாதா, எந்தெந்த நாடுகளில் சக்ஸஸ் ஆகும் என்பதை பல முன்னணி எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ராணிக்ஸ் நிறுவனங்கள் கணிப்பது துபாய் மார்க்கெட்டிங் முடிவுகளைப் பொருத்தே அமையும்.

காளீஸ்வரன் இது அத்தனையும் வந்த சிலமாதங்களிலேயே கற்று சிறந்த எலக்ட்ரீஸியன் என்று பெயர் வாங்கி அவனோடு வந்த அத்தனை நபர்களிலும் முன்னணியில் இருந்தான்.
இந்த ஊரில் மனித திறமைகளுக்கு கிடைக்கும் வரவேற்பு அபரிமிதமானது, திறமையிருப்பவர்களை அந்ததந்த கம்பெனிகள் அதற்க்கு தருந்தபடி கவனித்து, ஊதிய உயர்வு வந்து ஆறுமாதத்திலேயே வாங்கியிருக்கும் பல தமிழர்கள் இருக்கிறார்கள்.. (என்னையும் சேர்த்து.. ஹி.. ஹி..)

மேனேஜ்மென்ட்டில் இருப்பவர்கள் அதனை கவனித்துக் கொண்டே இருப்பார்கள், அவர்களுக்கு வேலை நடக்கவேண்டும், வேறு எந்த பாலிடிக்ஸ்ம் அதிகம் இல்லாத நாடு. ஏனென்றால் திறமையானவர்கள் இந்த நாட்டில் இல்லை.. இந்த நாட்டின் உள்ளுர் ஜனத்தொகை வெரும் 2 லட்சம் தான் என்று எதிலோ படித்த ஞாபகம். அவர்களுக்கும் வேலைசெய்யவேண்டிய அவசியம் இல்லை.. இந்தியா மற்றும் பல நாடுகளிலிருந்து முட்டிமோதி வருபவர்களில் திறமையானவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். ஏனென்றால் இங்கே திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் அதிகம்.. அங்கே 110 கோடியுடன் போட்டியிடவேண்டும் என்றால் இங்கோ ஒரு இருபது லட்சம் பேருக்குள் தான் போட்டி என்றால் நீங்கள் ஒருவாறு யூகிக்கமுடியும்.

நம் கதாநாயகன் நல்ல கருகரு தமிழன், அப்போது வயது 24 அல்லது 25 இருக்கும், நல்ல களையான முகம், நாங்கள் அவனுக்கு வைத்த பட்டப்பெயரே அழகன் என்பதுதான்.

சரியாக முடிவெடுத்து வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பது போல்தான் வார்த்தைகள் விழும். ஒரு எலக்ட்ரிகல் பேனலில் ப்ராப்ளம் என்று தெரிந்து பார்த்தவுடன் அந்த பிரச்னையை கிரகிக்க தெரிந்த திறமைசாலி.. நான் எலக்ட்ரீசியன் அல்ல அதனால் அதனை இன்னும் சிறப்பாக விளக்கமுடியவில்லை..

வேறு லேபர்களையெல்லாம் ஒரு கூண்டில் அடைத்தது போல் ஏ.ஸி இல்லாத பஸ்ஸில் அழைத்துப்போகும் அவன் கம்பெனி நிர்வாகம் இவனை அழைத்துச்செல்ல பக்கத்தில் தங்கியிருந்த எஞ்சினியரை பணித்திருந்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

எஞ்சினியர் வந்து காத்துக்கொண்டிருப்பார் இவன் அவன் சவுகரியம் போல் எழுந்து குளித்துமுடித்து கிளம்பிப்போவான், திறமைக்கு கிடைத்த மரியாதை அது. நான் அவன் அறையில் சேர்ந்தபோது அவன் துபாய் வந்து இரண்டு வருடம் ஆகியிருந்தது.

நான் வந்த புதிது, காலை ஆறுமணிக்கு எழுந்து, குளித்து இரண்டு பஸ் மாறி 8 மணிக்குள் நான் வேலைசெய்யும் இடம் செல்லவேண்டும். வந்த புதிதாகையால் நண்பர்ளும் அப்போது யாரும் இல்லை காளீஸ்வரனையும், துரையண்ணனையும் தவிர்த்து. இங்கே பொதுவாகவே அவரவர் வேலையை அவரவர் கவனித்துக்கொள்ளவேண்டும், காய்ச்சல் வந்து விட்டது,வேறு ஏதோ பிரச்னை என்றால் அவரவரே கவனித்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் அவரவருக்கு அன்றன்றைக்கு அவரவர் வேலைகளே தலைக்கு மேலே இருக்கும்.

நண்பனுக்கு காய்ச்சல், சரி ஒரு நாள் லீவு போட்டு ஹாஸ்பிட்டல் போவோம் என்றால் அங்கே வேலை போய்விடும்?? அதனை இங்கே வேலை செய்பவர்கள் எல்லோருமே உணர்ந்திருப்பார்கள், வெகு அத்தியாவசிய தேவை, உயிர் போகும் அவசரம் என்றால் மட்டுமே இங்கே லீவு சமாச்சாரமெல்லாம். அவரவர்களை கவனித்துக்கொள்ள நன்கு பழகிக்கொண்டோம்.

காலையில் இங்குள்ள அறைகளில் ஆளுக்கு அரைமணிநேரம் அளந்து பாத்ரூம் டைம் வைத்திருப்பார்கள், அரைமணிக்குள் எல்லாம் முடித்து வந்துவிடவேண்டும், லேட்டானால் கதவை டொக்குவார்கள், அவரவர் வேலை அவரவருக்கு.. துரையண்ணன் ஜெபல் அலி என்று ஒரு ப்ரீசோன் இருக்கிறது துபாய் நகரிலிருந்து ஒரு 70 கிலோமீட்டர் தொலைவில், ட்ராபிக் குறைவென்றால் அரைமணி நேரத்தில் காரில் அல்லது பஸ்ஸில் பறந்து விடலாம் இங்கே.

ஆனால் துபாய் அப்போது கன்ஸ்ட்ரக்ஷனில் அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்து விரிந்து கொண்டிருந்தது,, அமெரிக்காவின் மன்ஹாட்டனை மனதில் வைத்து ஒரு ரியல் எஸ்டேட் சொர்க்கபுரியாக துடித்து முன்னேறிக் கொண்டிருந்த வேளை அது. பீக் அவரில் சாலையில் போக்குவரத்து நெருக்கடி அப்படி பிரபலம் அப்போது. துரையண்ணண் ஆறு மணிக்கு கிளம்பினால் தான் 8 மணிக்கு அலுவலகத்தில் இருக்கலாம், அதனால் அவர் டைம் அப்போது 5.30 முதல் 6.00 வரை.

இப்போது ட்ராபிக் குறைவென்றால் 15 நிமிடத்திலும் கொஞ்சம் ஓவர் என்றால் 25 நிமடத்திலும் நான் என் அலுவலகம் போய்விடுவேன் அத்தனை சிக்னல்களையும் கடந்து, ஆனால் அப்போது குறைந்த பட்சம் 50 நிமிடங்கள் ஆகும் இதே 13 கிலோமீட்டரை கடக்க என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நான் வந்தபுதிது அப்போது, என்னிடம் கார் இல்லை, மெட்ரோ வந்திருக்கவில்லை, பஸ்தான் ஒரே வழி..

ஏதோ அந்த திறமையானவன் பாக்யம், அடுத்த அரைமணி நேரத்தை காளீஸ்வரன் என் அவசரம் கருதி விட்டுக்கொடுத்திருந்தான்.

இது இன்னொரு லேட் பிக்அப் இன்றைய சில சொந்த வேலைகள் காரணமாய், நாளை கொஞ்சம் அலுவல்கள் அதிகம், சில ரிப்போர்ட்களை நாளை மறுநாள் தந்துவிடுவேன் என்று அல்ரெடி ப்ராமிஸ் பண்ணியிருப்பதால், நாளை எப்ப வீட்டுக்கு வருவேன்னே தெரியலை சார்??. கண்டிப்பாய் நாளை மறுநாளுக்குள் வர முயற்ச்சிப்பேன்.. நீங்க எழுதுவதற்க்கெல்லாம் இடைஇடையே வந்து சந்துல சிந்து பாடுவது போல் கமென்ட் போட்டுவிடுவேன் அது வேறு விஷயம்!!

அன்புடன், வசந்தா நடேசன்.

காளீஸ்வரன் கதை..[1] [3]

7 comments:

 1. காளீஸ்வரனை சிறப்பாக துவக்கி உள்ளீர்கள்
  துபாய் குறித்த செய்திகளை ஆங்காங்கே
  லேசாக சொல்லிப்போகிறீர்கள்.என்போன்று
  அந்த ஊர் குறித்து ஏதும் தெரியாதோருக்கு
  தெரிந்துகொள்ள வாய்ப்பாக உள்ளது
  நல்ல தொடர்.தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நண்பா,

  நாஞ்சிலிலே கல்லும் மண்ணும் விற்றாய், நெல்லையிலே பல் பொருள் விற்றாய். இப்பொழுது அரபு தேசத்திலே சொல் விற்கிறாய்.

  எல்லாமே நல்லா தான் இருக்கிறது. வாழ்த்துக்கள். நடுவில் கொஞ்சம் buyinuae.com இல் கவனத்தையும் விற்றால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 3. ரமணி சார், தொடர்வருகைக்கு நன்றி.. வெறும் என்கதை என்றால் யார் படிக்கப்போகிறார்கள், அதனால் சுவைக்ககாக கொஞ்சம் துபாய் பற்றியும் இடையிடையே.. நன்றி.

  ReplyDelete
 4. //Muthuraj said...//அடக்கி வாசிடா மவனே.. உள்ளூர் அடையாளங்களை சொல்லிவிடாதே.. உனக்கும் கவிதை வருகிறது, பதிவுலகிற்க்கு வந்து சேர், விரைவில்.. வாழ்த்துக்கள், நன்றி.

  ReplyDelete
 5. அன்பின் நடேசன் நானும் உங்களைப் போலத் தான் கிட்டத் தட்ட!
  பஹ்ரைனில் பணி புரிகிறேன் கணக்காளனாக!..உங்களின் கடை
  வாடிக்கையாளராகி விட்டேன்!...தொடருங்கள்.......

  ReplyDelete
 6. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி M.G.ரவிக்குமார்™..., கணக்காளர்...! சேம் ப்ளட்...!!

  ReplyDelete
 7. நல்ல பதிவு. தொடரவும்

  ReplyDelete