Tuesday, February 8, 2011

காளீஸ்வரன் கதை..[1]

வணக்கம், இது ஒரு புதிய முயற்ச்சி.. ஒரு முறை முன்பே சொல்லியிருக்கிறேன், துபாயில் எப்படி வாழலாம், எப்படி வாழக்கூடாது என்பதைப்பற்றி பின்னர் எழுதுவேன் என்று. எப்படி வாழலாம் என்பதை நிறைய படித்திருப்போம் நாம் அதைப்பற்றி பின்னர் பார்க்கலாம், எப்படி வாழக்கூடாது என்பதை இனி சொல்லவருபவை ஓரளவுக்கு விளங்க வைக்கும் என நம்கிறேன். கொஞ்சம் சுயசொறிதலும் வரக்கூடும் இது பெரும்பாலும் என் வாழ்வில் கடந்து போன சம்பவங்கள் குறித்து எழுதப்போவதால். இனி காளீஸ்வரன் கதைக்குள் நுழைவோம்.

துபாயில் நான் வந்து இறங்கியதும் என் சொந்த பந்தங்களின் வீட்டில்தான் ஒரு இருபது நாட்கள் வரை தங்கி இருந்தேன். வந்து இருபது நாளிலேயே எனக்கு நான் இன்று வரை வேலை செய்யும் இடத்தில் வேலை கிடைத்துவிட்டது. பின்னர் வந்த ஒரு சுப நாளிகையில் நல்லதற்க்கோ கெட்டதற்க்கோ என்னை தனியே இருக்கச்சொல்லி கழற்றிவிட்டன என் சொந்தபந்தங்கள். அவர்களும் பாசக்காரப்பய புள்ளைகளாகத்தான் இருந்தார்கள் என்னைப்போல் ஏழையாக இருந்த என் சிறுவயது காலங்களில், பின்னர் துபாய் வந்து சம்பாதித்து வசதி, வாய்ப்புகள் வந்தபின்பு பாசம் குறைந்துவிட்டது போலும், சரி சொல்லவந்த கதையை பார்ப்போம்.

அன்று பெட்ஸ்பேஸ் வாழ்க்கை ஆரப்பித்த துவக்க காலம். நான் இருக்க இடம் தேடிக்கொண்டிருந்தேன், அப்போது துபாய் காலவட்டத்தின் அரைபகுதியை தாண்டி மேல் நோக்கி ஏறிக்கொண்டிருந்த காலம். ஆண்டுக்கு, ஆண்டு வளர்ச்சி என்று வட்டத்தின் உயரத்தை நோக்கியே போய்க்கொண்டிருந்த காலம், நம் ஊர் வேலையற்ற இளைஞர்களின் கனவுதேசம். 2009ம் ஆண்டின் கடைசி காலாண்டில் நடந்ததை யாரிடம் அப்போது சொல்லியிருந்தாலும், ‘போடாங்கொய்யாலே‘ ன்னு நம்ப ஆளில்லாத நேரங்கள்.

நான் வந்து இறங்கிய பர்துபாயிலேயே நான் இருக்க/படுக்க இடம் தேடிக்கொண்டிருந்த போது அறிமுகமானவர்கள் தான் காளீஸ்வரனும் (உண்மைப்பெயரே), துரையண்ணனும் (கற்பனை பெயர்). இங்கே பெட்ஸ்பேஸ் இருக்கிறது என்று பிட்நோட்டீஸ் அடித்து முக்கியமான சாலை ஓரங்களில் ஒட்டியிருப்பார்கள் அவரவர் மொபைல் நம்பருடன். சில பல கண்டீஷன்களும் இருக்கும். ‘தமிழ் முஸ்லீம்கள் மட்டும்‘ ‘தென்னிந்தியர்களுக்கு மட்டும்‘ ‘வட இந்தியர்கள் மட்டும்‘ இப்படி பல இருக்கும்.

நான் புதிதாக வந்து இறங்கியிருந்ததால் இந்த அரசியல் எல்லாம் அப்போது தெரியவில்லை, பின்னர் அதற்க்கான காரணங்களை தெரிந்து கொண்டேன், முஸ்லீம்கள் அவர்களுக்கான கடுமையான ஒருமாத நோண்பு காலங்களில் இந்துக்களும் அவர்களுடன் சேர்ந்து இருந்தால் அவர்கள் முன் சாப்பிடுவது அநாகரீகமாக இருக்கும், நம்ம ஆளுங்க சாப்பிட மட்டுமா செய்வார்கள், பாட்டில், சிகரட் என்று இஷ்ட்டப்படி வாழ்க்கைதானே இங்கே.

அந்த சிக்கல்களில் இருந்து தப்புவதற்க்கே பிட்நோட்டீஸ்கள் அவரவர் தேவைகளுக்கு தகுந்தது போல் இருக்கும். இந்துக்கள் அவரவர் பெயரைப்போட்டிருப்பார்கள். நானும் ஒரு பிட்நோட்டீஸில் பார்த்த காளீஸ்வரன், துரை என்ற பெயர்களைப்பார்த்து சரிடா, நம்மள இவுகளாவது சேத்துக்கிறாங்களா பாப்போம்னு போன் செய்தேன்.

நம் கதாநாயகன், காளீஸ்வரன் தான் போனை எடுத்து வாங்க சார், 375 மாத வாடகை, ஒருமாச அட்வான்ஸ். இங்கதான் பர்துபாய் மீயூசியம் பக்கத்துல வந்து பாத்துக்குங்க என்றான்.

போய்பார்த்ததில் அது ஒரு பழைய கட்டிடத்தில் ஒரு 10க்கு 10 ரூம், அட்டாச்டு பாத்ரூம். அதில் அவர்கள் ஏற்கெனவே இருகட்டில்கள் போட்டிருந்தார்கள், அது அவர்கள் இருவருக்கும், ‘நானு‘ என்றபோது ‘நீங்க தான் கட்டில் வாக்கிக்கிரணும் என்றார்கள். அவர்கள் சொன்ன ரூம் மொத்த வாடகைக்கு மூன்று பேருக்கு அது கட்டுபடியாகாது, நாலுபேர் இருந்தாக வேண்டும். கேட்டபோது நீங்கள் பாதிகாசு போட்டு ஒரு பங்கர் கட்டில்(கீழும்/மேலும் இருவர் படுக்கவேண்டும், எனக்கு கீழ்பகுதிதான் வேண்டும் என்று அவசரமாய் ரிசர்வ் செய்தேன். இடம் கிடைப்பது அப்போது குதிரைக்கொம்பு) வாங்கிக்கொள்ளுங்கள் மேலே ஆள் வந்ததும் நாங்கள் அவரிடம் பாதி காசு வாங்கிக்கொள்வோம் என்றார்கள்.

காளீஸ்வரன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவன், துரையண்ணன் கோவை. காளீஸ்வரனுக்கு என்னைவிட பத்து வயது கம்மி, துரையண்ணன் என்னைவிட பத்து வயது அதிகம். அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த ரூமை எடுத்திருந்தார்கள்.

சரி என்று அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணி வியாழக்கிழமை பெட்டியுடன் வருவதாய் சொல்லிவிட்டு வந்தேன.

வியாழக்கிழமை பெட்டியுடன் சென்றபோது அங்கே அவர்கள் வீக்எண்ட் துவங்கி இருந்தார்கள், என்னைக்கண்டதும் அவசரமாய் சரக்குகளை கட்டிலுக்கு அடியில் தள்ளிக்கொண்டு ‘வாங்க, வாங்க‘ என்றனர்.

நானும் ரொம்ப நல்லவன் இல்ல, கல்லூரியிலேயே மற்றவர்கள் குடிக்கும் போது மூடியில் ஊற்றிக்கொடுப்பார்கள், அதை குடித்துவிட்டு அழும்பு பண்ணியவன் தான். பின்னர் கல்யாணம் ஆவது வரை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து அது தொடர்ந்தது, அதனால் தான் எனக்கு 27லியே கல்யாணம் நடந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள்.. (நம்மள திருத்தருதுக்காமா..) கல்யாணத்துக்கு பின், ‘பிச்சுபுடுவேன் பிச்சி‘ன்னதும் விட்டுவிட்டு, பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு (சாதாரணமா போவான்னா நினைக்கறீங்க, எனக்கு சாப்பாடு கஷ்டம் ஆகிவிடுமாம்) ஆனிக்கொரு முறை, ஆவணிக்கொரு முறை வாய்ப்பு கிடைத்தால் குடிப்பேன், இல்லையென்றால் ‘விதியேன்னு‘ 9 ஆண்டுகளாக போய்க்கொண்டிருந்தேன்.

துபாய் வந்ததும் தான் ‘ரிலீஸ்‘ கிடைச்சுது சார்..

இது இன்றைக்கு முடியப்போகும் கதை அல்ல கண்டிப்பாய், இன்று ஆபிஸ்விட்டு வரும்போதே ஏழு தாண்டிவிட்டது, இதுவே லேட் பிக்அப். நாளை வருகிறேனே..

அன்புடன், வசந்தா நடேசன்.

காளீஸ்வரன் கதை..[2]

8 comments:

 1. நல்ல துவக்கம் ஆரம்பத்திலேயே
  மிகத் தெளிவாக உண்மை பெயருடனும்
  கற்பனை பெயருடனும் என இரண்டு நண்பர்களை
  அறிமுகப்படுத்தி உள்ளது,
  உள்ளதை உள்ளபடி சொல்லத்தான் என நினைக்கிறேன்.
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. // பாட்டில், சிகரட் என்று இஷ்ட்டப்படி வாழ்க்கைதானே இங்கே //

  அப்படின்னா வ குவாட்டர் கட்டிங் படத்துல துபாய்ல சரக்கடிக்கக் கூடாதுன்னு சொல்றதெல்லாம் டக்கால்ட்டியா...

  ReplyDelete
 3. தொடவும்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

  =====>
  நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும்.
  <===


  .

  ReplyDelete
 5. //Ramani said...// வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி.

  //Philosophy Prabhakaran said...// வ குவாட்டர் கட்டிங் பார்க்கவில்லை. துபாயில் தடையா? முஸ்லிம்களுக்கு மட்டும் தான் தடை, என்னுடன் ஜோதியில் அவ்வப்போது ஐக்கியமாகும் முஸ்லீம் நண்பர்களும் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு அரசே பெர்மிட் கொடுக்கிறது, நானும் வைத்திருக்கிறேன். துபாய் தவிர மற்ற எமிரேட்களில் யார்வேண்டுமானாலும் லைசன்ஸ் இல்லாமலே வாங்கும் கடைகள் இங்கே பிரபலம். ஒரு போன் போட்டால் வீட்டிற்கே டெலிவரி வசதி எல்லா எமிரேட்டிலும் உண்டு. சவுதியில் கொஞ்சம் கஷ்டம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், வெளியே தெரியாம பயளளைகள் காய்ச்சி குடிப்பதாகவும் கேள்வி உண்டு.
  ///ஆயிஷா said...///
  ///tamilan said...///

  ஹைய்யா.. புது வருகைகள், வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி.

  ReplyDelete
 6. ஆஹா... ஒரு தனிப்பதிவுக்குள்ள மேட்டரை இப்டி பப்ளிக்கா உட்டுட்டனே??? சரி, பிரபாவுக்காகத் தானே.போகட்டும்.

  மேலே சொன்னதில் // ஒரு போன் போட்டால் வீட்டிற்கே டெலிவரி வசதி // இல்லீகல் இங்கே!!

  ReplyDelete
 7. I am going to send an sms to 9486***254..recommending this story...revealing the original name of the author....

  ReplyDelete
 8. ய்யாண்டா?? ப்ப்ப்பொறாமை????? விசா வேணுமா, சொல்லு, பாத்துக்கலாம் (வூட்ல இதை காமிச்சிராத மக்கா) அனாமியா வந்தா தெரியாதுன்னு நினைச்சியோ?

  ReplyDelete