வணக்கம், இன்றும் ஒரு அனுபவப்பதிவே..
வெகு சமீபம் என்றுதான் சொல்லவேண்டும்.. இன்று ஒன்றுக்கும் ஆகாமல் சோம்பேறி குப்புசாமி போல் ச்சும்மா எந்தக்குறிக்கோளும் இல்லாமல் இணையத்தை மேய்ந்தபோது திரும்பவும் ஒரு ஜெயமோகன் கதையை படிக்க நேர்ந்தது, இது விபத்தா அல்லது தேடிப்போய், காசுகொடுத்து (இன்டர்நெட்டுக்கு காசு கட்டணும் சார்..) வாங்கிய சனியனா?? என்று தெரியாது. ஆனால் அந்த கதையை என்னால் வரிக்கு வரி ரசிக்க முடிந்தது, ஏன் பல இடங்களில் வாய்விட்டு சிரித்தேன் என்பதுதான் நிஜம்.
பலவகை எண்ணங்கள் வந்தன.. கதையை படிக்கும் போது, ஆஹா இந்த ஆள் இந்துக்களை சாடுகிறார் என நினைத்தேன் முதலில். பின்னர் ஒரு நிலையில் இவர் கிறிஸ்தவர்ளையும் வறுக்கிறாறே என்று தோன்றியது, இது என்னடா இது என்று தொடர்ந்தால், ஹிந்துக்களையும் , கிறிஸ்தவர்களையும் சேர்த்துப்பிடித்து ஒரு அவியல் பண்ணுகிறார் முடிவில். அது அவியல் அல்ல, ஓரளவுக்கு உண்மையிருக்கலாமோ?? என்று தோன்றியது, என் ரசனையை கதையை கடைசிவரி வரை படித்துவிட்டு கூறினால் மகிழ்வேன். முஸ்லீம்களுக்கும் இந்த கதைக்கும் ஒரு தொடர்பும் இல்லை, நீங்கள் நம்பி வந்து படிக்கலாம், ரசிக்கலாம்.
நான் கடவுள் என்பதனை 100 சதவீதம் நம்பும் ஆத்திகனும் அல்ல.. (ஆத்திகர்களிலேயே பலர் நம்புவது இல்லை என்று தெரியும்) அல்லது நூறு சதவீதம் நம்பாத நாத்திகனும் அல்ல. (நாத்திகர்களிலேயே பலர் மஞ்சள் துண்டுடன் நம்புகிறார்கள் என்றும் தெரியும்) ஏதோ இருக்கிறது என்பதை நம்புகிறேன், அதை கேள்விகேட்காமல் ஒத்துக்கொள்கிறேன், என் பார்வைக்கு சரி யெனும் பட்சத்தில்.
நான் அல்லது நாம் இன்று ஒன்றை சரியென்போம், நாளை இன்னொன்றை சரியென்போம், அது மனித இயல்பு. அதற்க்கு மதத்தையோ அல்லது ஜாதியையோ மனதில் வைத்து தனிமனிதரை குறைசொல்வதிலோ அல்லது விவாதங்களில் இறங்குவதோ பயனில்லை. நம் முன்னோர்கள் நிறைய இதுகுறித்து செய்திருக்கக்கூடும், நாம் இது விஷயத்தில் புதிதாக ஒன்றும் செய்யமுடியாது என்பதுதான் என் நிலை.
இருந்தாலும் யார் யார் இதை ரசிக்கமுடியும் யாரால் முடியாது என்பதையும் சிறு உலக அனுபவத்தால் இப்போது சொல்லவேண்டியது என் கடமை என்று நினைப்பதால் ஒரு சிறு பட்டியல் கீழே.. உங்களுக்கு கீழ்வரும் தகுதியும், திறமையும்(?) இருக்கிறதென்றால் கடைசியில் வரும் சுட்டியை சுட்டி மகிழுங்கள், நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டுமல்லவா?
1) முஸ்லீம்கள் தாரளமாக இதை படிக்கலாம், இது ஹிந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் போட்டு கும்மியிருக்கும் கதை.
2) நீங்கள் தீவிர ஹிந்து/கிறிஸ்த்தவ விசுவாசி என்றால் இப்போதே அப்பீட் ஆகிக்கொள்ளுங்கள், இந்தக்கதை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடும்.
3) இதையும் மீறி படிக்கிறீர்களா?? அவசரப்பட்டு பாதியில் வந்துவிடவேண்டாம், கடைசி வரை படியுங்கள், என்னை நம்பி.
4) நான் இந்தக்கதையில் பார்த்தது, ஜாதி, மத வித்தியாசமில்லாத ஒரு ஜெயமோகனைத்தான், ஆனால் அவரை ஜாதியவாதி என்றும், இந்துத்வா என்றும் இதற்க்குமுன் இணையத்தில் படித்தது தவறு என்று உண்மையில் எனக்கு தோன்றியதால் தான் இதை எழுதுகிறேன்.
5) நான் இன்று ஜெயமோகன் ஆஹா ஓஹோ என்பேன், நாளை எனக்கு தவறெனப்பட்டால் அதையும் இதைப்போல் சுட்டிக்காட்டுவேன் (எப்பூடி..) , என்னை நம்பலாம் என்று தோன்றினால் கீழே சுட்டலாம்
மாடன் மோட்சம்
அன்புடன், வசந்தா நடேசன்.
ஜெயமோகன் மேல் அவதூறு ஏன்?
ReplyDeletehttp://www.jeyamohan.in/?p=12421
மேலும் சில ஜெமோ கதைகள்.. வாசித்து ஜெமோ பற்றி நீங்கள் முன்பு கொண்ட அபிப்பிராயத்தை பரிசீலிக்க..
அறம் [சிறுகதை]
http://www.jeyamohan.in/?p=11976
சோற்றுக்கணக்கு [சிறுகதை]
http://www.jeyamohan.in/?p=11992
வணங்கான் [சிறுகதை]
http://www.jeyamohan.in/?p=12218
http://www.jeyamohan.in/?p=12220
யானை டாக்டர்
http://www.jeyamohan.in/?p=12433
தாயார் பாதம் [சிறுகதை]
http://www.jeyamohan.in/?p=12269
மத்துறு தயிர் [சிறுகதை]
http://www.jeyamohan.in/?p=12035
http://www.jeyamohan.in/?p=12085
ஒரு ஜெமோ வாசகர்
கதை மிகவும் பெரிதாக இருக்கிறது... புக்மார்க் எடுத்து வைத்துக்கொண்டு பிறிதொரு நாளில் படிக்கிறேன்...
ReplyDeleteஇரண்டு நாளா பதிவு பக்கம் வர முடியல... எப்படி போயிட்டு இருக்கு பதிவுலக வாழ்க்கை...
ReplyDeleteநல்லாயிருக்கு மக்கா.....
ReplyDeleteநன்றி அனானிமஸ், ஜெமோ குறித்த தகவல்களுக்கு நன்றி. என் தளத்திற்க்கு புதியவர் என நினைக்கிறேன், இதற்க்கு முன்னே நீங்கள் குறித்த கதையில் ஒன்று குறித்து நான் எழுதியிருக்கிறேன்..
ReplyDeleteபிராபா, நன்றி. பதிவுலகம் நல்ல ஜாலியா போகுது, எனக்கு ஊக்கம் கொடுத்து இந்த வெறியை(?) ஏற்றிவிட்டது நீங்கள் தான், நன்றி.