Saturday, February 12, 2011

பதிவர்களுக்கு ஓர் அழைப்பு

நண்பர்களே,

சுவிஸ் வங்கி என்ற என் பதிவை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

பதிவு இன்னும் எழுத தொடங்காத ஆனால் பதிவுகளை படிக்கும் என் நண்பர்களிடம் இதை விவாதித்ததில் அவர்கள் நாட்டு நலன் கருதி இந்த செய்தியை நன்கு பப்ளிசிட்டி பண்ணினால் என்ன என்று கேட்டார்கள்.

ஏதோ நாட்டில் சென்று நம் செல்வமெல்லாம் முடங்குவதை விட நம்நாட்டில் வரியில்லா நகரங்கள் என்று ஏற்படுத்தி நம் மக்களுக்கும் நாட்டுக்கும் பயன் வருமானால் நாம் ஏன் இதை கொஞ்சம் அழுத்திச்சொல்லக்கூடாது??

நடப்பது நடக்கும் என்று விதிப்படி இருந்தால் யார்தான் இந்த பூனைக்கு மணி கட்டுவது? என் கடைக்கு வரும் கூட்டம் குறைவு. இதை N.R.PRABHAKARAN போன்ற முன்னணி பதிவர்கள் கொஞ்சம் முன்னெடுத்து, சேவ் பிஷ்ஷர்மேன் இயக்கம் போல சேவ் இந்தியா என்று ஒரு லோகோ ரெடிபண்ணி இதனையும் நாம் கொஞ்சம் அழுத்திச்சொல்லிப்பார்க்கலாமா நாட்டு நலன் உத்தேசித்து.

நேரம் இருப்பவர்கள் இதை ஒரு வழக்காகவும் தொடரலாம் அல்லது இப்போதைய சுப்ரீம் கோர்ட் வழக்கில் இந்த வரியில்லாநகரங்கள் குறித்தும் ஆணைவழங்க ஏதேனும் செய்யலாம்.

இது குறித்து விவாதங்களும், கருத்துக்களும் பரவவேண்டியது அவசியம் என்று சிவகுமாரன் சார் போன்றே நானும் நினைக்கிறேன். நேற்றைய வார இறுதி வெட்டிப்பேச்சுக்களில் இப்படி ஒரு பதிவை எழுதச்சொல்லி (சத்தியமா, உண்மை.. உண்மை) வற்புறுத்தியதால், நண்பர்களின் ஆசைக்காக இதை எழுதியிருக்கிறேன்.

நான் அந்த பதிவை சீரியஸாக ஆரம்பித்து பின்பு 'நடக்கிற கதையா' என்று கொஞ்சம் யோசித்து காமடி பீஸ் போல் தான் முடித்திருந்தேன. ஆனால் இப்போது அதை கொஞ்சம் சீர்தூக்கி பார்க்க வேண்டியது அவசியம் என நினைக்கிறேன்.


எந்த ஒரு செயலுக்கும் ஒரு முயற்ச்சி வேண்டும், முயற்சியே செய்யாமல் விதியை நொந்து பயனில்லை என்பதால் என்னால் ஆன இந்த முயச்சியை எடுத்துள்ளேன், என்னுடைய பதிவை காப்பி/பேஸ்ட் செய்யவோ, மறுபதிப்பாக உங்கள் கருத்துகளையும் சேர்த்து வெளியிடவோ தடையேதும் இல்லை, யார்வேண்டுமானாலும் (வேலன்டைன்ஸ்டே முடிந்து கூட செய்தால் போதும்) நாட்டு நலுனுக்காக செய்து கொள்ள இப்போதே இது வழியாய் நான் சம்மதம் தெரிவிக்கிறேன்.

கேள்வி கேட்காமல் எடுத்துக்கொள்ளலாம்..

அன்புடன், வசந்தா நடேசன்.

5 comments:

  1. இது மிகவும் நாட்டுக்கு பயனுள்ள பதிவு ஆகையால்,
    இந்த பதிவை உங்கள் பெயரிலேயே என் பேஸ்புக்கில் இதோ போட்டு விடுகிறேன்....

    ReplyDelete
  2. //எந்த ஒரு செயலுக்கும் ஒரு முயற்ச்சி வேண்டும், முயற்சியே செய்யாமல் விதியை நொந்து பயனில்லை//

    உங்கள் முயற்ச்சி வீண் போகாது மக்கா......

    ReplyDelete
  3. "வசந்தா நடேசனின் "கருப்பு பணத்தை" எப்படி உபயோக படுத்தலாம் என விளக்கும் அருமையான ஒரு பதிவு. நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் படித்து பாருங்கள்...."


    பேஸ்புக்ல இப்பிடித்தான் தலைப்பு வச்சிருக்கேன்....
    facebook.com/nmano1

    ReplyDelete
  4. நல்ல ஐடியாதான். நன்றே செய்வோம். இன்றே செய்வோம்.

    ReplyDelete