Friday, December 24, 2010

பயபுள்ளைங்க©

நண்பன் ஒருவன் வீட்டிற்க்கு வந்திருந்தான் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின், இன்னைக்கி பேப்பர் படிச்சியான்னான்?

ஆமா, படிச்சிட்டனே. தினமலர், தினத்தந்தி எல்லாம் படிச்சேன் ஜெயலலிதாம்மா நம்ம ஊர்ல தான் கிறிஸ்மஸ் கேக் வெட்டிட்டு இருக்காங்க போல. படிச்சேன், என்றேன், அதைத்தான் சொல்ல வருகிறான் என்று.

அவுக என்ன வெட்டினா நமக்கென்ன? ‘பயபுள்ளைங்க‘ ன்னு இனி யாரும் எழுதக்கூடாதாம், அதுக்கு காப்பிரைட் வாங்கிட்டாங்களாம், 80% வடிவேலுவுக்கு சொந்தமாம், இந்த வார்தையை அவர்தான் பிரபலப்படுத்தினாராம், 20% சிங்கமுத்துவுக்காம் அவர் எழுதிக்கொடுத்ததால், நீ அதிகமா இந்த வார்த்தையை உன் பிளாக்குல யூஸ் பண்ணிட்ருக்க பாத்துக்கோ, இனி டாலர் கணக்குல அவங்களுக்கு பணம் கொடுக்கவேண்டியிருக்கும், கண்டுபிடிச்சிட்டாங்கன்னா என்றான்.

என்னடா இது அநியாயமா இருக்கு?

ஆப்பு வச்சிட்டாய்ங்கடி, நீங்க என்ன வேணா எழுதுவீங்களா? காப்பிரைட் சட்டம் கொஞ்சம் சங்கடமானது, பாத்து யூஸ் பண்ணு என்றான்.

என்ன எளவுடா இது? எத்தனை பேர் தினமும் பேசிக்கிறாங்க இதை, இனி யாரும் பேசக்கூடாதாம்மா?

பேசலாம், ஆனா எழுதக்கூடாது.

இது எதோ படத்துல சென்னைல பார்க்ல உக்காந்திருந்தவன்ட்ட பாஸ்போர்ட் கேட்டமாதிரில்லாடா இருக்கு என்றேன்.

பாஸ்போர்ட் தாண்டா, இனி அவுங்கட்ட பெர்மிஷன் வாங்கிட்டுதான் யாரும் எழுதமுடியும் என்றான்.

நான் துபாய்ல தான இருக்கேன், இங்க வந்து அவங்க கேக்கமுடியாதுல்ல, தமிழ்நாட்ல இருக்கறவனுக்குத்தான் இது பொருந்தும். நம்மள ஒன்னும் செய்யமுடியாது என்றேன் கொஞ்சம் யோசித்து.

லூசாடா நீயி, காப்பிரைட் சட்டம், சென்னைக்கு வேற, துபாய்க்கு வேற இல்லடா, உலகம் பூரா ஒண்ணுதான் என்று மேலும் மிரட்டினான்,

சரி இப்ப எழுதுனதை என்னடா பண்றது? கோடிக்கணக்கான (!) பேர் படிச்சிருப்பாய்ங்களே, அவுங்க மனசுக்குள்ள போய் அழிக்கவா முடியும் என்றேன் அப்பாவியாய்.

அது உன் பிரச்னை, எதோ நண்பேண்டான்னு சொன்னேன், பிரச்னைல மாட்டிக்காதன்னுட்டு போயே போயிட்டான்.

அவன் போய் சில மணிநேரங்களுக்குப்பின், சரி, எங்கடா இதை போட்ருக்கான்னு உக்காந்து நெட் பூரா தேடினேன், ஒண்ணும் கிடைக்காமல், ஒரு போனைப்போட்டேன். எந்த பேப்பர்லடா போட்ருக்கான், எதுல பாத்த சொல்லுன்னேன்.

சிரிக்கிறான் சார், அடப்பாவி அதையே யோசிச்சிட்டு இருக்கியாடா இன்னும்? நான் பொழுது போவலன்ட்டு சொம்மா சொன்னன்டான்றான் !

பாருங்க சார், ‘ஒரு சாதாரணன்‘ன்னு ஒரு சாதாரண தலைப்பு வச்சதுக்கு நம்ப எல்லாரையும் ரொம்ப சாதாரணமாய் பேசிட்டுப்போராங்க சார்.

இதுக்கு ஆப்பு வைக்க ஏதாவது வழி இருந்தா கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லாருக்கும்.

அப்பாவி, வசந்தா நடேசன்.

3 comments:

  1. :))))

    வடிவேலு வசனத்திற்கெல்லாம் காப்பிரைட் வாங்கிவிட்டால் இங்கே பாதிப்பேர் ப்ளாக் எழுத முடியாது...

    ReplyDelete
  2. உண்மைதான். இது சொம்மா, பயபுள்ளைங்கன்னு அதிகமாக எழுதுகிறேனோ என்று யோசித்ததின் விளைவே! வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமையான பதிவு நகைச்சுவையுடன் நச் என்ற கருத்து

    ReplyDelete