Friday, December 24, 2010

பொஸ்தகம் எழுதிக்கிட்டிருக்கேன்

இன்று ஒரு நண்பர் போன் செய்தார். ரொம்பநாளா துபாயில் இருந்தவர், நன்கு அறிமுகமானவர். கோவையைச்சேர்ந்தவர். இதற்க்கு மேல் விபரம் வேண்டாம், என்னை ட்ரேஸ் செய்துவிடக்கூடும், உஷாரா இருப்போம்ல, எப்ப்ப்புடி.?

தொடர்பு விட்டுப்போயிருந்தது ஒரு ஆறு மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

எங்கே ஆளையே காணோம்? என்றேன்.

ஒரு வாரம் ஆச்சுங்க வந்து. பழைய கம்பெனில விசாவ டக்குனு கேன்சல் பண்ணி அனுப்பிட்டான். கிரைஸிஸ், மண்ணாங்கட்டின்னு. அப்பவே வேற கம்பெனில ரெடி பண்ணிட்டு தான் போயிருந்தேன். அந்த பன்னாடை இப்பதான் விசா அனுப்பினான், என்ன பண்றது? அப்புறம், எப்படி இருக்கீங்க?

நல்லா இருக்கேன். ஒரு குறையும் இல்ல, வழக்கம் போல போயிக்கிட்டு இருக்கு. நீங்க எப்படி இருக்கீங்க?

சூப்பர், ஊர்ல எல்லாம் எப்டி இருக்காங்க?

நல்லாருக்காங்க. தீபாவளிக்கு ஊர்லதான் இருந்தேன், நீங்க அங்க இருப்பது தெரியாது, இல்லன்னா கோவை வந்திருப்பேன்னு சும்மா ஒரு மொக்கையை போட்டு வச்சேன்.

பல விஷயங்கள் பேசிவிட்டு கடைசில ரூமுக்கு வாங்க என்றேன்.

வர்ரங்க, ஒரு வாரமா பாத்துக்கிட்டுருக்கேன், எங்க வாக்கிங் வர்ரதில்லையா இப்ப?

வர்ரதில்லைங்க, இந்த குளிர்ல எங்க போயிட்டு வாக்கிங்? இப்பல்லாம் சாயங்காலத்துல கதை எழுதிகிட்டிருக்கேன். இப்ப ரொம்ப பிஸி என்று ஒரு பிட்டை போட்டேன்.

கதையா? என்று ஆச்சரியமாகக்கேட்டார்.

ஆமாங்க, அஞ்சாரன்னம் வெளிவந்திருச்சி, இன்னும் எழுதிகிட்டிருக்கேன் என்றேன் அஞ்சாமல்.

வெளிவந்திருச்சான்னு நம்பமுடியாமல் கேட்டுவிட்டு, நான் ஊருல இருக்கும் போது எல்லா பொஸ்தகமும் படிச்சேனே? உங்க பேர எதுலயும் பாக்கலையே. புனைபேருல எழுதுரீங்களோ? என்றார்.

ஆமாங்க, வசந்தா நடேசன்னு ஒரு பேர் வச்சிருக்கேன். கதை எழுத மாத்ரம் இந்த பேருன்னு மேலும் போட்டேன்.

அந்த பேரைப்பாத்த ஞாபகமும் இல்லையே, சரி, எந்த பொஸ்தகம்னு சொல்லுங்க, வக்காளி, இப்ப அல் மதினால போயி வாங்கி படிச்சிட்டுதான் மறுவேலை என்றார்.

சும்மாச்சுக்கும் நண்பருக்கு ஒரு பேரை வச்சுக்குவோம், அபப்த்தான் நல்லாருக்கும். இது புக்லல்லாம் வராது ரவி, கம்ப்யூட்டர்ல தான் வரும் என்றேன்.

நாந்தான் கம்ப்யூட்டர் வச்சிருக்கனே, அதுல எப்படி படிக்கணும்னு சொல்லுங்க என்றார்.

கம்ப்யூட்டர் வாங்கிட்டீங்களா? எப்ப வாங்குனீங்க, எனக்கு தெரியாதே .

ஆமாங்க, நாயும் பேயும் வெச்சிருக்கு இப்ப. ஊருக்கு போகும் போது பையன் கேட்டான்னு ஒண்ணு வாங்கிட்டு போனேங்க, அவனுக்கு சோனி தான் வேணுமாம், இதை தொடமாட்டேன்னுட்டான், சரி, போடா.. நான் போன் பண்றதுக்கு வச்சுக்கறேன்னு கொண்டு வத்துட்டேன். ரூம்ல இப்ப எல்லா நாயும் இத வச்சிக்கிட்டு தான ‘வேரென்ன சேதி‘ ‘வேரென்ன சேதி‘ ன்னு கேட்டுட்டு இருக்கானுங்க, அலப்பரை தாங்க முடியலை கண்ராவி, சரி நாமும் ‘வேரென்ன சேதி‘ கேட்டுத்தொலைக்கலாம், அப்பப்ப சினிமாவும் பார்த்துக்கலாம்னு கொண்டுவந்துட்டேன் என்றார்.

தினமும் இன்னொரு ஹிட் எக்ஸ்ட்ரா கிடைக்கப்போர சந்தோஷத்தில் மனசுக்குள் துள்ளிக்குதித்துவிட்டு நம்ம பொஸ்தகத்து பேரை http://vasanthanatesan.blogspot.com/ எழுதிக்கச்சொன்னேன்.

அது சரி, இப்படி ஒரு மேட்டர் இருககறது எனக்கு தெரியாம போச்சே, இன்னைக்கே படிச்சிர்ரேன், படிச்சிட்டு அப்புறம் கால் பண்றேன்னு கட் பண்ணிட்டார்.

நம்ம ‘படைப்புகளை‘ படிச்சிட்டு என்ன சொல்லப்போரரோன்னு இப்ப வெயிட் பண்ணிட்ருக்கேன் சார். நீங்களாவது பரவாயில்லை, புதுஸா இத படிக்கிரீங்க, ரவி பாவம், இன்று அவர் பேசியதை நாளை அவரே படிக்கவேண்டியதிருக்கும். படிக்சிட்டு ஆடிப்போகாம இருந்தா சரி. என்ன கொடுமை சார் இது!

ஒரு ஹிட்டுக்காக என்னல்லாம் நாதாரித்தனம் பண்ணவேண்டியிருக்கு பாருங்க சார்?

அன்புடன்

பொஸ்தக எழுத்தாளர், வசந்தா நடேசன்.

இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்

2 comments:

  1. கிரேட் வசந்தா நடேசன்

    ReplyDelete
  2. sakthi said...
    கிரேட் வசந்தா நடேசன்

    நாமல்லாம் சாதாரணங்க, கிரேட் எல்லாம் கொஞ்சம் ஜாஸ்த்தி. (சொம்மாங்க)

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete