பெண்... கணக்கு பண்ணிட்டேன்....
பெண்... ஃபார்முலா கண்டுபிடிச்சிட்டேன்.....
பெண்... கணக்கு போட்டுட்டேன்....
மேலுள்ள மூன்றையும் யோசித்து, பயபுள்ளைகள் கணக்கு பண்ணிட்டேன்னா தான் வருவார்கள் என்று இந்த பெயரை தேர்வு செய்தேன்.
சேச்சே, உங்களை சொல்லலை சார்.. நீங்க வேற, நம்மலாம் அப்படியா பழகிருக்கோம்?
என்ன சார் பண்றது, இனி மொக்கை போடக்கூடாது என்று விரதமிருந்து(!), வழக்கமான பேச்சு வகை எழுத்து நடையிலிருந்து மாறி, ஒரிஜினல் அக்மார்க்(!)எழுத்து நடையில் நேற்று ஒரு பதிவைப்போட்டேன். ரொம்ப கஷ்ட்டம் சார், முடியலை!
இன்னிக்கு விசாலக்கிழமை, எங்களுக்கு அரைநாள் தான் வேலை. வீக்எண்ட் மூட் வந்துவிட்டது. மதியம் ஒண்ணரை மணிக்கே வந்து பொட்டி தட்ட உக்காந்துட்டேன். இனி 2 நாள் லீவு. நண்பர்கள் எல்லாம் வந்துகிட்டே இருக்காங்க. இன்னும் 1 மணி நேரத்தில வந்து எறங்க்கிட்டாங்கன்னா, இன்னிக்கு பதிவு போட முடியாது. உலகம் தாங்குமா? சொல்லுங்க சார், உலகம் தாங்குமா? கண்டிப்பா தாங்காதுன்னு தெரியும் சார்.
நான் இன்று எழுத நினைத்திருந்த சப்ஜெக்ட் கொஞ்சம் சிந்தித்து(!) எழுத வேண்டியது. இந்த குறைந்த அளவு நேரத்தில் எழுதுவது ரொம்ப கஷ்டம்னு யோசித்ததில் இது நினைவுக்கு வந்தது. சரி இன்னைக்கு இந்த மொக்கையே போதும், இனி லீவு முடிஞ்சி பாத்துக்குவோம்னு விட்டுட்டேன் சார்.
பயபுள்ளைங்க, வடசேரி மலையாம்பள்ளோடத்துல பத்தாப்பு படிக்கும் போதே ஒரு பய சொன்னான், மக்கா, இஸ்க்கூலுக்கு லீவு மாத்ரம் போட்ராதல,, பரீச்சை எழுத உடமாட்டான் பாத்துக்க.. டெய்லி ஆஜர் போட்ரு, போட்டுட்டு எங்க வேணும்னாலும் போ, ஒரு பய நம்மள ஆட்ட முடியாது(!). லீவு நாள் இஸ்க்கூல் பக்கமே போயிராத.. மழைக்கி கூட ஒதுங்கிராத மக்கா ன்னான், லீவு நாள்ல டெஸ்க், பெஞ்ச் ஒடைச்சதெல்லாம் வேற குரூப்பு சார், அது நாம கெடையாது.
இத நம்பி நான் +2 படிக்கும்போது வரை இஸ்க்கூலுக்கு கட் அடிச்சதே இல்ல சார், இன்னைக்கி பதிவெழுதாம இருக்க முடியுமா? நான் எவ்ளோ நல்லவன்? நேர்மையா இருப்போம் சார், அதான் நம்ம ஸ்டைலு.
அது என்ன கஷ்ட காலமோ தெரியல, இந்தமாதி நேரத்தில இந்தமாதி, இந்தமாதி மேட்டர்தான் சார் ஞாபகத்துக்கு வருது. தொடர்ந்து கீழே கடேசீல வரப்போர ஈமெயில் வழியே நான் கற்ற(!) ஃபார்முலாவை படிச்சா பொம்பளைங்கல்லாம் கொஞ்சம் கோவப்படலாம், எனக்கு வேற வழி தெரியலை, சாரிங்கோவ், மத்தபடி நான் ரொம்ப நல்லவன்.
நாம ஆணாதிக்கவாதி எல்லாம் கெடையாது, ஊருக்கு வந்தா பொட்டிப்பாம்பா சொம்மா அடங்ங்ங்கி இருப்போம்ல, யாருக்க்க்கிட்ட?
ரைட்டு. வர்ட்டா... இனி தொடர்வதை படிச்சுட்டு அப்டிக்கா போயிருங்க....
நல்லவன், வசந்தா நடேசன்.
// நான் +2 படிக்கும்போது வரை இஸ்க்கூலுக்கு கட் அடிச்சதே இல்ல சார் //
ReplyDeleteநானும் தான் சார்.
மொக்கை என்றாலும் அதுவும் ஒரு தவம் தானுங்க. அது எல்லாருக்கும் வாய்க்காதுங்க
தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி.
ReplyDeletetoo too much
ReplyDelete:)-
Ravi kumar Karunanithi said...
ReplyDeletetoo too much
:)-
யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல. ஒரு நகைச்சுவைக்காகவே. வருகைக்கு நன்றி.