Friday, January 14, 2011

கப்ஸா!

அன்று காதல் இருந்தது,
கவிதையும் வந்தது!
இன்று காதலும் இல்லை,
கவிதையும் இல்லை!

எங்கோ ஓரிடத்தில் அவள்,
ஏழுகடல் தாண்டி நான்.
எப்படி வரும்?
ஏட்டுக்கவிதை!

இங்கு சோலையும் இருக்கிறது,
பாலையும் இருக்கிறது.
குளிரும் இருக்கிறது,
கடும் சூடும் இருக்கிறது,

கால்வயிற்றுக் கூழுக்காக
கடுமையாய் உழைக்கையில்
கவிதை எங்கே கவனம் வருகிறது?

ஏதேதோ கப்ஸாக்கள்...
இடையிடையே சோர்வை போக்க!

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி :- 'கப்ஸா' - இந்த வார்த்தை இன்றும் வழக்கில் இருக்கிறதா?

6 comments:

  1. ஹா ஹா ஹா ஹா துபாய் பீலிங்க்சு......
    சூப்பர் சூப்பர்...

    ReplyDelete
  2. >கால்வயிற்றுக் கூழுக்காக
    >கடுமையாய் உழைக்கையில்
    >கவிதை எங்கே கவனம் வருகிறது

    உண்மை தான் நண்பரே! அன்றைக்கு வயக்காட்டில் உழைக்கும் பொழுதே கவிதை பிறந்தது!!! ஆனால் ஏட்டில்ஏற்றப்படும் கவிதைகளுக்கு இலக்கணம் தேவைப்பட்டது. இன்றைக்கு இலக்கணம் தேவையில்லை.. ஆனால் உழைப்பு எங்கே கவிதையைக் கொடுக்கிறது?

    ReplyDelete
  3. கப்சா.
    உங்களுக்கு வயது ஒரு 35 க்கு மேல் இருக்குமா ?
    என்னோட சின்ன வயசு வார்த்தை அது நண்பா .

    ReplyDelete
  4. i thouht u r telling about about chicken kapsa but----------------

    ReplyDelete
  5. கப்ஸா’ன ஒடன நா அரபி சாப்பாடோன்னு,ஆர்வமா,வந்தேன்...ஆனா இது நம்ம ஊர் கப்ஸா’னு இப்போதான தெரியுது...நானும் துபாய் பேச்சுலர் தான்....

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  6. MANO நாஞ்சில் மனோ,,, வருகைக்கு நன்றி, தங்கள் பதிவுகளை பார்த்தேன், அருமை.

    ஞாஞளஙலாழன்,,, வருகைக்கு நன்றி.

    சிவகுமாரன் said... வருகைக்கு நன்றி, ஆம் 35 கடந்து விட்டது போங்கள். என் சிறுவயதில் இது நான்(நாங்கள்) அதிகம் உபயோகித்த வார்த்தை.

    senthil velayuthan said... வருகைக்கு நன்றி, அஜ்மான்?? Interesting.

    RAZIN ABDUL RAHMAN ... வருகைக்கு நன்றி,, குப்பூஸ் கேள்விப்பட்டிருக்கிறேன், கப்ஸான்னு ஒண்ணு அரபி உணவில் இருக்கா? ட்ரை பண்றேன் சார்.

    ReplyDelete