Monday, January 10, 2011

அயல்நாட்டு முரண்கள் (முடிவு பகுதி)

ஒரு வழியாய் இன்று முடித்திருக்கிறேன்

ஃபைன்கட்ட சென்றவன், இன்னா வாரேன்னு சொல்லிட்டு வெளியே வந்து திரும்பவும் போன் செய்தான், நான் இதை எதிர்பார்த்தேன். சரி, முக்காலிஃபா யாரு கையில இருக்கு? என்று கேட்டேன், நான் தான் வைச்சிருக்கேன்னான், அப்டியே திரும்பிப்பாக்காம வண்டிய கொண்டு வந்துரு, 2 நாள் கழித்து பார்த்துக்கொள்ளலாம் என்றேன்.

2 நாள் கழித்து முதலாளியிடம் சொன்னதும் அவனால் இதை நம்ப முடியவில்லை, its not fair, disgracing அப்டி, இப்டினு புலம்பிட்டு சரி நான் நாளை போகிறேன், வேனை எனக்கு முன்னால அங்க அனுப்பிச்சிருன்னான்.

எதிர்பார்த்தது போலவே அடுத்தநாள் வண்டி உள்ளே விடாமல் வெரும் ஃபைன் கட்டி வந்துவிட்டது.

நான் இதை எழுத வந்தது, இந்தியர்கள் வெளிநாடுகளில் எப்படி வாழ்கிறார்கள் என்பதை கொஞ்சம் ஆவணப்படுத்தும் பொருட்டே. அவமரியாதைகள் இங்கே சர்வ சாதாரணம். சில நல்ல ஹபிபிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறுப்பதர்க்கில்லை.

ஒருமுறை நான் சிக்னல் கிராஸ் செய்யும் போதே லைன் சேஞ்ச் பண்ணினேன், சில வருடங்களுக்கு முன் நான் இங்கே கஷ்டப்பட்டு டிரைவிங் லைசன்ஸ் எடுத்த சமயத்தில், அடுத்த லைனில் வந்த ஹபிபி நிதானமாக என்னை கடந்து போகையில் இனி இப்படி செய்யாதே என்று அழகாக ரிக்வெஸ்ட் செய்வது போல் கை மற்றும் தலையை ஆட்டி சைகை செய்துகொன்டு சென்றார் ஆனால் பலர் டிரைவிங்கின் போது மிரட்டல் சைகையும் செய்திருக்கிறார்கள்.

என்னைப்பொருத்தவரை வெளியே செல்லும் வேலை அதிகம் இல்லை, ஆனால் உடன்வேலை செய்யும் மற்றவர்கள் சொல்லும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும். இதையும் சகித்து கொண்டு இங்கே ஏன் வாழ்கிறோம் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்வதை விட சென்றமாதம் அறிமுகமில்லா ஒரு நண்பர் எழுதிய அயல்நாட்டு அகதிகள் என்கிற கவிதையை நம்ம பொஸ்தகத்தில் தேடிப் படித்துக்கொள்ளுங்கள்.

உள்ளூரிலேயே உழைத்து கந்தலாயிருந்தாலும் கசக்கி கட்டிக்கொண்டு கஞ்சி குடிப்பது உன்னதமானது, நான் பாவம் உள்ளூரில் விலைபோகாமல் வெளியூரில் இருக்கிறேன் என்பது தான் உண்மை, பணம் இன்று இருக்கிறது நாளை வேறொருவரிடம் இருக்கலாம் ஆனால் நல்லது, கெட்டது இரண்டும் இல்லாமல் வாழ்கிறோம். உள்ளூரில் இருப்பவர்களுக்கு இருக்கும் பல சௌகர்யங்கள் எங்களுக்கு இல்லை என்பதே நிதர்சனம். பொறாமை என்று சில நண்பர்கள் புலம்பியதால் கொஞ்சம் திசைமாறிவிட்டேனோ தெரியவில்லை. நேரமும் காலமும் கூடிவந்தால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு விரும்பும் போது கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை.

இதை எழுத தூண்டியது சமீபத்தில் நான் இன்டர்நெட் கனெக்ஷ்னுக்காக எடிசலாட் அலைந்தபோது பார்த்தது. அங்கே ஒரு காலத்தில் மெஜாரிட்டியாய் வேலை செய்தவர்கள் இந்தியர்கள், இப்போது சென்றபோது ஒரு அலுவலகத்தில் வேலைபார்த்த அனைவருமே ஹபிபிகள் இரு பிலிப்பைனிகளைத்தவிர. பிலிப்பைனிகள் அவர்கள் நாட்டவர்களுக்கு கொஞ்சம் உதவிசெய்து கொண்டே பரபரப்பாக மற்றவர்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்கள். நானும் ஒரு இந்தியன் கூட இல்லையா என்று சுற்று முற்றும் பார்த்தேன், கடைசியில் ஒரு மலையாளி காஃபிபாயாக டீ கொடுத்துக்கொன்று வந்தார், எத்தனை நாளைக்கோ என்று நினைத்துக்கொண்டு அவர் ஃப்ரீ ஆவாரா என்ற கவனித்துக்கொண்டு இருந்தேன்.

அதுவோ வாடிக்கையாளர் அதிகமாக வரும் முக்கியமான ஒரு செண்டர், டோக்கன் நம்பர் எடுத்து நானும் வரிசையில் காத்திருந்தேன். சேவைக்காக காத்திருந்தவர்களில் என்னைப்போல் ஆசியாவை சேர்ந்தவர்கள் 95 சதவீதம், மற்றவர்கள் 5 சதவீதம். இந்தகிளை இருக்கும் ஏரியா இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் இடம் வேறு.

டோக்கன், வரிசை எல்லாம் அங்கு வரும் மற்றவர்களுக்கு மட்டுமே, வரும் ஹபிபிகளுக்கு எல்லாம் இது கிடையாது, அவர்கள் நேரிடையாக கவுண்டருக்கே சென்று தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். சரி அவர்கள் நாடு, அவர்கள் பாடு.

இந்தியர் மற்றும் மற்றவர்களை அட்டெண்ட் செய்யும் மற்றவர்கள் பெரும்பாலும் போனிலும், பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுவதிலுமே நேரம் கடத்திக்கொண்டுருந்தார்கள். என்னுடைய நம்பர் 334லோ ஏதோ, நானும் ஒரு மணிநேரம் பார்க்கிங் போட்டுக்கொண்டு வழக்கம் போல் காத்திருந்தேன். 281 ஓடிக்கொண்டிருந்தது நான் சென்று அங்குள்ள ஒரு வேலை முடிந்து அதன்பின் செய்யவேண்டிய அதன் தொடர்ச்சிக்காக காத்திருந்தேன்.

45 நிமிடம் கழித்து பொருமையிழந்து ஒருவழியாய் மலையாளி ஃப்ரீ ஆனதும், இதை வேறு கிளையில் சென்று முடிக்கலாமா என்று கேட்டேன், என்னிடம் இருந்த பேப்பர்களை பார்த்துக்கொண்டு, ‘இனி அவிட போய்க்கோண்ணா, இது இனி எவிட வேணங்கிலும் சப்மிட் செய்யாம்‘ என்றார்.

அடுத்த செண்டரில் இருந்தது மும்பையை சேர்ந்த ஒரு முஸ்லீம் பெண் மற்றும் ஒரு ஹபிபி, அலுவலகமே காலியாய் இருந்தது, மும்பை பெண்ணிடம் கொண்டு கொடுத்ததுமே வந்தவேலை 5 நிமிடத்தில் முடிந்தது.

இந்தியர்கள் பெரும்பான்மையாய் இருந்தும், இந்த நாட்டின் முன்னேற்றத்திர்க்கு முக்கியமானவர்களாக இருந்தும் புறக்கணிக்கப்படுகிறார்களே என்பதுவே இதை எழுத தூண்டியது, நான் எப்போதும் நினைப்பது போல் இது அவர்கள் நாடு, அவர்கள் பாடு.

பாவம் நாங்க, எங்களையும் கொஞ்சம் கண்டுக்குங்க சார்.

அன்புடன்

வசந்தா நடேசன்.

1 comment: