Sunday, April 10, 2011

அன்னா ஹஸாரே/ரஜினி/கமல்/விஜய்/அஜித்..சமீபத்தில் படித்ததில் மனதை கவர்ந்தது.. உங்களுக்காக அப்படியே இங்கே....


கடந்த 5 நாட்களாக இந்தியாவே ஒரு புதிய புரட்சிக்காக ஆயத்தமானது, அன்னா ஹஸாரே என்ற 73 வயது காந்தியவாதியின் தலைமையில். ஆனால் இது ஆட்சி மாற்றத்துக்கான புரட்சி அல்ல. ஊழலுக்கு எதிரான புரட்சி.

'India against corruption' என்ற முழக்கம் மாநிலம், மொழிகள், இனங்கள் போன்ற அனைத்து தடைகளையும் தாண்டி இந்தியா முழுக்க எதிரொலித்தது. அனைத்துத் துறை சார்ந்தவர்களும் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கத் தவறவில்லை.

குறிப்பாக இளைஞர்கள் அத்தனை துடிப்புடனும் ஆர்வத்துடனும் அந்த முதியவருடன் தோளொடு தோள் நிற்க ஓடி வந்தனர்.

பாலிவுட் எனப்படும் மும்பை திரையுலகமே ஹஸாரேவுக்கு ஆதரவாக ஓடிவந்தது. அமிதாப், ஆமீர்கான், ஷாரூக்கான், அனுபம்கெர், விவேக் ஓபராய், ப்ரியங்கா சோப்ரா, தீபிகா, தெலுங்கு நடிகர் மோகன்பாபு.... இப்படி ஏராளமானோர் அவருக்கு ஆதரவு கொடுத்து ஊழலை ஒழிக்க வேண்டும் என்று முழக்கமிட்டார்கள்.

ஆனால் தென்னிந்தியாவின் முக்கிய கவன ஈர்ப்பாகத் திகழும் தமிழ்த் திரையுலகம் மட்டும் கப் சிப்பென்று இருந்தது இந்த 5 நாட்களும். சூப்பர் ஸ்டார் தொடங்கி சுள்ளான் ஸ்டார்கள் வரை யாரும் இதுகுறித்துப் பேசவே இல்லை.

குறிப்பாக சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள், தங்கள் தலைவர் தேர்தலுக்கு வாய்ஸ் தராவிட்டாலும், ஹஸாரேவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

எனக்கு அரசியல் வேண்டாம், சாதி வேண்டாம், சாமியும் வேண்டாம், குடிமகனாக நின்று அரசியலை சுத்தப்படுத்த முடியும் என்று மேடை தோறும் பேசி வரும் கமல்ஹாஸனும் கூட அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சரி, அப்படிக் குரல் கொடுத்தால் அரசியலாகிவிடுமோ என இவர்கள்தான் யோசித்துக் கொண்டிருந்தார்கள்... ஊழலுக்கு எதிரான கட்சி என்று பெரிதாக விளம்பரப் படுத்திக் கொள்ளும் விஜயகாந்த் என்ன செய்து கொண்டிருந்தார்? நாளொரு வேண்டாத பரபரப்புகளை பிரச்சாரத்தில் கிளப்பிக் கொண்டிருந்தாரே தவிர, ஹஸாரேவுக்கு மறந்தும் கூட குரல் கொடுக்க முன்வரவில்லை.

சரி... புதிதாக கட்சி தொடங்குவேன், ஆட்சியைப் பிடிப்பேன் எனக் கூறிவரும் இளம் நடிகரான விஜய், அரசியலில் குதிக்க நாள் பார்த்துக் கொண்டிருக்கும் அஜீத், காற்றில் பஞ்ச் டயலாக் அடிக்கும் அசகாய சூரர்கள் தனுஷ், சிம்பு, ஓங்கிடிச்சா ஒன்றரை டன் எடை என்று சினிமாவில் வீரம் பேசும் சூர்யா, நான்கு படங்களில் நடித்து முடிப்பதற்குள் 100 பேரை அடிக்கும் ஆக்ஷன் ஹீரோவாகிவிட்ட கார்த்தி... சீஸனுக்கு சீஸன் நிறம் மாறும் சத்யராஜ்.... ம்ஹூம்.. ஒருவரும் ஊழலுக்கு எதிராக ஒரு சின்ன அசைவைக் கூட காட்டவில்லை.

'இதானா இந்த அட்டைக் கத்திகளின் நேர்மையும் வீரமும்' என நக்கலாய்ச் சிரிக்கிறது, ஊழலை வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக் கொண்ட தமிழகம்!

நன்றி...தமிழ்.ஒன்இந்தியா

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி :- எப்டியாது நாடு திருந்துனா சரிதாம்ப்பூ... இனி என் வேலை நெருக்கடிகள் தீரும்வரை காப்பி/பேஸ்ட்தாம்பூ..

8 comments:

 1. வணக்கமுங்கோ என்ன ரொம்ப நாளா கடையை திறக்காம விட்டுட்டீங்க....

  ReplyDelete
 2. நல்ல நல்ல கேள்விகள் ம்ஹும் பதில் சொல்லுவாங்களா இந்த ....... ????

  ReplyDelete
 3. அது தான் தமிழ் சினிமா இன்னுமா உங்களுக்கு புரியல

  ReplyDelete
 4. ஆனால் தென்னிந்தியாவின் முக்கிய கவன ஈர்ப்பாகத் திகழும் தமிழ்த் திரையுலகம் மட்டும் கப் சிப்பென்று இருந்தது இந்த 5 நாட்களும். சூப்பர் ஸ்டார் தொடங்கி சுள்ளான் ஸ்டார்கள் வரை யாரும் இதுகுறித்துப் பேசவே இல்லை.//

  சகோ, இவ் இடத்தில் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம், தமிழ் சினிமாவினைச் சேர்ந்தவர்கள் முதல்வருக்குப் பாராட்டு விழா எடுத்த முற்போக்குச் சிந்தனை நிறைந்தவர்கள் என்பதால் தானே என எண்ணவும் தோன்றுகிறது.

  ReplyDelete
 5. கேள்விகளை விடச் சாட்டையால் அடி கொடுத்திருக்கிறீர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

  ReplyDelete
 6. \\ஆனால் தென்னிந்தியாவின் முக்கிய கவன ஈர்ப்பாகத் திகழும் தமிழ்த் திரையுலகம் மட்டும் கப் சிப்பென்று இருந்தது இந்த 5 நாட்களும்.\\இதே மாதிரி காவிரிப் பிரச்சினையின் போதும் இவனுங்க மூடிகிட்டு இருந்திருந்தா, அது ஒரு பிரச்சினையாகவே ஆகியிருக்காது, வேண்டுமென்றே காக்கா மாதிரி கூட்டம் போட்டு கா.....க்கா....... என்று கத்தி, அதை கர்நாடகமும் ஒரு சவாலாக எடுக்க வைத்து எல்லோரையும் இம்சைக்குல்லாகினார்கள் இந்தப் பாவிகள். இவனுன்களால் கூடம் போட்டு காவிரிப் பிரச்சினைக்கும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கும் என்னத்தை பிடுங்க முடிந்தது? வெட்டிப் பயல்கள். ஹிந்தி திரையுலகினர், அங்குள்ள முதலமைச்சரை ஆடிப் பாடி கொண்டாடி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில்லை. அதனால் அவர்கள் துணிந்து ஆதரவு தெரிவிக்கின்றனர், இங்கு இவர்கள் எதற்க்கெடுத்தாலும் முதலமைச்சரை நம்பியே இருப்பதால் வெளிப்படியாக ஆதரவு தெரிவிக்க முடியாது, ஏனெனில் நம்பர் ஒன் ஊழல் கட்சிக்கு எதிராகப் பேசிவிட்டு எங்கே போவது!!

  ReplyDelete
 7. இந்த விஷயத்தை கேப்டன் டிவியில் தலைப்புச் செய்தியாக காட்டினார்கள். பிரபலமான மற்ற எந்த சேனலிலும் நான் பார்த்தவரை இதைப்பற்றி ஒரு வரி கூட சொல்லவில்லை.

  ReplyDelete