Sunday, May 8, 2011

சீனாவில் மலிவு ஏன்??

நண்பர்களே நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு சிறு பதிவு..

இன்று நண்பர் அனுப்பிய ஒரு ஈமெயிலில் பார்த்த கீழ்கண்ட படங்கள் இதை எழுதத்தூண்டியது..

பொதுவாக இந்திய பொருட்களை விட சீனத்துப்பொருட்களுக்கு விலை குறைவு, நம்மில் பலர் இதை கவனித்திருப்போம், அதே நேரம் சீனாவில் சில கம்பெனிகள் தரமான பொருட்களையும் தயாரிக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

பொதுவே நம் அரசின் கொள்கைகளும் சீனாவின் கொள்கைகளும் மாறுபட்டவை, கீழே ஒரு உதாரணம் பாருங்கள்.. ஒரு கடத்தலை அங்குள்ள அதிகாரிகள் எவ்வாறு நேரிட்டனர் என்பதனை இப்படங்கள் விளக்குகின்றன.

முதல் படம், ஒரு சிறுவனை அங்குள்ள ஒரு பெரிய கட்டிடத்தின் அறையில் கடத்தி வைத்துவிட்டு கடத்தல் காரன் தன்னிடம் மூன்று கோரிக்கைகள் உள்ளதாய் கூறுகிறான்.



அடுத்தபடத்தில், சிறிது நேரத்தில் வந்த போலீஸார் அல்லது அதிரடிப்படையினர், எவ்வாறு இதனை நேரிடுவது என்று சிறு ஆலோசனையிடுகிறார்கள்.



பேச்சுவார்த்தை தொடங்குவது போல் பாவ்லா காட்டிக்கொண்டே எவ்வாறு சிறுவனை காப்பாற்றுவது என்பதன் டிரையல் தொடங்குகிறது..

அதிரடி ஆரம்பம்..



ஆட்டம் குளோஸ்!


மொத்த செலவு £0.25

இதுவே நம் ஊர் என்றால் யோசித்துப்பாருங்கள்? குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்கு அந்த தெருவில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கும்.

அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்த இன்னொரு 24 மணி நேரம்!

பேசிமுடித்து ஒரு 10 லட்சமோ 1 கோடியோ சிறுவனின் வசதியை பொருத்து பேரம் படிந்திருக்கும். அதுவரை கடத்தல் காரனுக்கும் சிறுவனுக்கும் சாப்பாடு, தண்ணீர் மற்றும் எல்லா சவுகரியங்களும் கிடைத்திருக்கும், உறவினர்கள் கண்ணீரோடு கதறுவது சன் டிவியில் செய்தியாய் லைவ் ஓடிக்கொண்டிருக்கும்!

கடைசியில் ஒருவேளை பையனை காப்பாற்றியிருப்பார்கள், கடத்தல் காரன் சிறையில் பொதுமக்கள் செலவில் நன்கு சாப்பிட்டு ஐந்தாறு வருடம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வந்து மீண்டும் தொழிலை ஆரம்பிப்பான்!

சீனாவில் எவ்வளவு சிம்பிளாய் முடித்துவிட்டார்கள் பாருங்கள்! நம் ஊரில் அப்படியே நடந்தாலும் நம் மனித உரிமை பாதுகாவலர்கள் விடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

நம் பொருட்களின் விலை அதிகம் தான், நம் திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்களுக்கு பொதுமக்களின் வரிப்பணம் செலவாவது தொடர்வது வரை!

அன்புடன், வசந்தா நடேசன்.

8 comments:

  1. படங்களுடன் பதிவு அருமை
    (முதலில் நான் ஏதோ பொருளாதாரக் கட்டுரையாக
    இருக்கும் எனப் படிக்கத் துவங்கினேன்)
    நீங்கள் கட்டுரையில் நம் ஊர் குறித்து
    சொல்லி இருப்பது நூற்றுக்கு நூறு சரி
    நல்ல வித்தியாசமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஐயோ நம்ம ஊரிலா, வாயை மூடுங்க, அய்யா அறிக்கை விடுவார், அம்மா அறிக்கை விடுவார், காங்கிரஸ் கட்சி வேட்டியை உருவ, வைகோ அண்ணன் அலறுவார்.......ம்ஹும்....
    சீனா பெட்டர்....

    ReplyDelete
  3. என்னாச்சு மக்கா ஆளையே காணோமே....???

    ReplyDelete
  4. இன்னும் என்னை நினைவில் வைத்து வருகை தந்திருக்கும் நண்பர்களுக்கு நன்றி, ஒரு வழியாய் ஆடிட் முடித்து கொஞ்சம் ஃப்ரி ஆகிவிட்டேன், அடுத்த மாதம் முதல் கடை தினமும் திறக்கப்படும்.. தொடர்ந்து ஆதரவு தரும்படி அன்போடு.. அடக்கத்தோடு.. ஆர்வத்தோடு.. கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி.

    ReplyDelete
  5. சீனாவின் முன்னேற்றத்திற்குச் சான்றாய், அவர்களது நேரந் தவறாத கடமையும் உள்ளது என்பதற்கு மேலே உள்ள பதிவே சான்று.

    ReplyDelete
  6. இதே சீனா, மாணவர்கள் அரசை எதிர்த்து போராடிய பொது அவர்களை பீரங்கிகளின் காலில் நசுக்கினர். அதை பற்றியும் சொல்லுங்களேன். நீங்கள் சொல்லுவது கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் போல் உள்ளது. இது காந்தி பிறந்த நாடு.

    ReplyDelete
  7. இதே சீனா, மாணவர்கள் அரசை எதிர்த்து போராடிய பொது அவர்களை பீரங்கிகளின் காலில் நசுக்கினர். அதை பற்றியும் சொல்லுங்களேன். நீங்கள் சொல்லுவது கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் போல் உள்ளது. இது காந்தி பிறந்த நாடு.

    ReplyDelete
  8. நல்ல எழுத்து. அருமையான பதிவு!! தொடர்ந்து எழுதுங்க சகோ.

    ReplyDelete