Friday, March 4, 2011

சேம்சங் போற்றுதும்..

2009 ஏப்ரலில் ஒரு 32" எல்சிடி வாங்கினேன், இங்கே ரூமில் பார்ப்பதற்காக. எல்சிடி விலைகள் அப்போது குறைந்திருந்தது இங்கே, 1699க்கு சேம்சங். 2 வருடம் வாரண்டி என்றார்கள், மண்டைய மண்டைய ஆட்டிட்டு வாங்கி வைத்தாகிவிட்டது. அது இத்தனை நாளும் ப்ரச்னை இல்லாமல் சென்று கொண்டிருந்தது.

பின்னர் வீட்டுக்கு வந்த பல நண்பர்கள், சேம்சங்?? வேற வாங்கிருக்கலாமே என்று சொல்லிச்சென்றிருக்கிறார்கள். மொபைல் பொருத்தவரை நான் எப்போதும் நோக்கியா வாங்குவதே வழக்கம், படு யூசர் ப்ரெண்லி என்பதால், ஆனால் சேம்சங் மொபைல் வாங்கி முன்பே நொந்த கதையும் கைவசம் உண்டு. சேம்சங் மாத்ரம் வாங்கிராதடா.. ன்னு அன்பாய் சொன்னவர்கள் கொஞ்சம் அதிகம் தான்.

ம்ம்ம்ம், என் போதாதவேளை, விலை மலிவாக இருக்கிறதே என்று வாங்கி தொலைத்து விட்டேன். சென்ற வருடம் வரை நல்லாத்தான் சென்றது, இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு கருப்பு லைன் மேலே வர ஆரம்பித்தது, கொஞ்சம் இறைச்சலும் வர ஆரம்பித்தது சில நாட்களிலேயே.. ' பெப்ருவரியில் அப்படியே டிவியின் மேல்பகுதி கால்பங்கு கருப்படித்து விட்டது.

அசராமல் அதிலும் பார்த்துக்கொண்டிருந்தேன், நம் வீட்டிற்கு வரும் ஒரு நண்பர் தாங்கமுடியாமல், தூக்குங்க சர்வீஸ் குடுத்துருவம் என்று ஒரு நாள் வலுக்கட்டாயமாய் காரில் வைத்து எடுத்து சென்று சேம்சங் சர்வீஸ் செய்யும் ஈராஸ் கொண்டு கொடுத்தாகிவிட்டது, அவர்கள் சீரியல் நம்பர் பார்த்து ஏப்ரல் வரை வாரண்டி உள்ளது, பில் கொண்டு வந்தால் சர்வீஸ் இலவசம் என்றார்கள், வாங்கிய கடையில் சென்று பில் காப்பி வாங்கினாலும் போதும் கொண்டு வாருங்கள் என்றார்கள்.

வீட்டில் பில் இல்லை.. அந்த நல்ல பழக்கம்லாம் நமக்கு ஏது?? ஷராப் டி ஜி யில் கேட்டால் நாங்கள் இப்போது தான் சிஸ்டம் எல்லாம் மாற்றியிருக்கிறோம், முயற்சி செய்கிறோம் என்று முயன்றுவிட்டு சாரி என்றார்கள். சரி, 600, 700 போயிற்று என்று பில் கிடைக்கவில்லை, சர்வீஸ் செய்யுங்கள் நான் பணம் கொடுத்துவிடுகிறேன் என்றேன், வேல்டுகப் கிரிக்கெட் ஆரம்பித்து பார்க்க முடியாமல் ஸ்கோர்கார்ட் மட்டும் கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நேரம்.

பின்னர் சேம்சங்கிற்கும், ஈரோஸிற்கும் தினமும் போன் பண்ணி கேட்டுக்கொண்டிருந்தேன் என்ன பிரச்னை, எப்ப டிவியை கொடுப்பீங்கன்னு. நம் நல்ல நேரத்துக்கு என் டீவியில் ஏதோ தீர்க்கமுடியாத ப்ரச்னை போல்இருக்கிறது?? நான் காசு குடுக்குறண்டா, சரி பண்ணி குடுடா ன்னு பிரஷர் போடப்போட சாம்சங் பின் வாங்கிக்கொண்டிருந்தது.

ஒரு நாள் சேம்சங் ஒரு முடிவெடுத்து, அந்த டிவியின் இப்போதைய விலை 1300, சரி நாங்கள் அதை கொடுத்து விடுகிறோம், எங்கள் ஷோரூம் சென்று ஏதேனும் புது சேம்சங் டிவி வாங்கிக்கொள்ளுங்கள், 1300 கழித்துவிட்டு மீதி பணம் கொடுத்து வாங்கிச்செல்லுங்கள் என்றதும் ஆஹா சேம்சங் வாழ்க, சேம்சங் வாழ்க என்று சொல்லிவிட்டு கடைக்கு சென்று மாடல் சூஸ் பண்ணினேன், எல் ஈ டி வாங்கிரலாமா?? இல்ல 42" ப்ளாஸ்மா வாங்கிரலாமா?? ன்னு தேடிக்கொண்டிருக்கும் போதே நண்பருக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன்..

சேம்சங்ல திரும்பவும் மாட்டவச்சுட்டானுங்களா?? ன்னு கேட்டுட்டே, எல்ஈடீ, கில்ஈடீ?? ல்லாம் வேண்டாம், ஒரு 50 அல்லது 100 குடுத்து ஏதாச்சும் வாங்குங்க?? எல்ஈடீல்லாம் அப்பறம் வேற நல்ல ப்ரான்ட்ல வாங்கலாம் எனவும் எனக்கும் சரி எனப்பட்டது.

நான் வைத்திருந்த அதே 32", ஆனால் 4 சீரிஸ் ஒன்று 1399 என்றார்கள், அதையே செலக்ட் பண்ணி ஈரோஸிடம் சொன்னால், சரிங்க சார் வந்து 99 கொடுத்துவிட்டு எடுத்து செல்லுங்கள் என்றார்கள்.

சென்ற சனிக்கிழமை சென்று எடுத்துவந்து ஆனந்தமாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன் இப்போது, டெலிவரி கொடுத்த பிலிப்பைனியிடம், கொஞ்சம் பேராசையாய், அப்பம் இன்னிலிருந்து இதுக்கு இன்னும் 2 வருஷம் வாரண்டி?? என்றேன். அவள், நோ.. நோ.. இதுக்கு ஒன் இயர் மட்டும்தான் என்றாள் கொஞ்சம் மிரண்டு.

சரி, சரி, தேங்யூ என்று எடுத்து வந்தேன். சேம்சங் வாழ்க.. கவனிக்க வேண்டியவை..

1) வாரண்டி காலம் முடிய மட்டும் பில்லை தொலைத்துவிடாதீர்கள், என் விஷயத்தில் வேறு வழியில்லாமல் கொடுத்து விட்டார்கள்.. அந்த ஸ்பேர் இப்போது அவர்களிடம் ஸ்டாக் இல்லை.. நான் காசு குடுக்குறேன், டீவி குடுன்னு ப்ரஷர் போட்டதால்.. சரி போய்தொலை என்று கொடுத்து விட்டார்கள், அந்த ஸ்பேர் இருந்திருந்தால், 800 குடுக்குறியா, சரி பண்றேன் என்றிருப்பார்கள்.. டிவி விலையே இப்போது 1300 தான்.

2) ஒரு பொருள் வாங்கியதும் அந்த பில்லை ஸ்கேன் பண்ணி உங்கள் ஈமெயிலில் ஒரு நியூ போல்டரில் வைத்துக்கொள்ளுங்கள், அது பிற்காலத்தில் உதவக்கூடும். எப்போதும், எல்லோரும் நல்லவனா இருக்கமாட்டாய்ங்கன்னா!!

வாழ்க்கை என்பதே படிப்பினை தானே!!

அன்புடன், வசந்தா நடேசன்.

7 comments:

 1. சாம்சங் போற்றுதும் என்பதற்குப் பதில்
  பில் போற்றுதும் என கூட தலைப்பு
  போட்டுருந்தால் இன்னும் சரியாக
  இருந்திருக்குமோ ?
  நல்ல பிரயோஜனமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஒரு பொருள் வாங்கியதும் அந்த பில்லை ஸ்கேன் பண்ணி உங்கள் ஈமெயிலில் ஒரு நியூ போல்டரில் வைத்துக்கொள்ளுங்கள், அது பிற்காலத்தில் உதவக்கூடும். ///பயனுள்ள ஐடியா...

  ReplyDelete
 3. சாமசங் அவ்வளவு மோசமான பிரண்ட் இல்லையே. நான் இதுவரை சாம்சங் மொபைல் தான் வைத்திருக்கிறேன் (ஸ்கிரீன் டச்) ஒரு பிரச்சானையும் இல்லை. டிவி பற்றி ஐடியா இல்லை. என்றாலும் 1300 விலை என்றால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவ்வளவு சீப்பா????

  ReplyDelete
 4. வருகைக்கு நன்றி நண்பர்களே...

  // கே. ஆர்.விஜயன் // சேம்சங் மொபைலால் துன்பப்பட்ட நிறையபேர் இருக்கிறார்கள் நான் பார்த்தவரை. 1300 திர்ஹம்.. கிட்டத்தட்ட 16500 ரூபாய்கள்.

  ReplyDelete
 5. நல்ல ஐடியா. இதை ஏற்கனவே நானும் சொன்னேன்

  you can watch the matches live http://www.espnstar.com/cwclive/

  ReplyDelete
 6. நல்ல ஐடியாவா இருக்கு மக்கா...

  ReplyDelete
 7. பரவால்லியே...பில் தொலைஞ்சதுகூட அதிர்ஷ்டம்தானோ :)

  ReplyDelete