Wednesday, March 9, 2011

இவைகள் பேசிக்கொண்டால்..!!

சூரியன் :- தலை தப்பிச்சுதுடா சாமி.. கருத்தமேகக்கூட்டம் என்னமா சுத்துனதுக?? மழையா கொட்டி நம்ம தன்மானத்தை உடைச்சுருவானுகளோன்னு பாத்தேன், நல்லவேளை கவுந்து அடிச்சு உழுந்தாலும் மீண்டும் உச்சிக்கி வந்துட்டம்ல, ஏதோ 63 நாயன்மாருக புண்ணியத்தால இனி நல்லா வறுத்தெடுக்கலாம் பயபுள்ளைகளா..

கை1 :- மானம்போச்சி, மானம் போச்சி.. சூரியனை நம்பாதே.. சூரியனை நம்பாதே.. வேற வழி இல்ல, இப்ப நம்பலாம்... ஆனா நம்பக்கூடாது.

கை2 :- போடாங்ங்ங்ங்க.. நானே நடுநடுங்கி ஒன்னுக்கு ஊத்திட்ருந்தேன், ஏதோ கனவுமாதி இருக்கு, இனி சூரியன் வாழ்க.. சூரியன் வாழ்கன்னு கத்தணும் போல இருக்கு..

கை3 :- இலை போட்டு சாப்டலாம்னு நெனைச்சேன், இப்படி பிச்சையெடுக்க உட்டானுவளே??

கை4 :- இனி எளைஞர்கள் ஆச்சி, எளைங்ஙர்கள் ஆச்சினு சொல்லித்தான் பாக்கலாம், கிழட்டுபயக கேட்டா தானே??

மாம்பழம் :- வடை எனக்குத்தான், வடை எனக்குத்தான். தக்காளி இனி கிடைக்கிய எல்லாத்தையும் சாப்ட்டு ஏப்பம் விட்டாதான் நிம்மதி, மது நாட்டுக்கு, வீட்டுக்கு, ஒடம்புக்கு நல்லது, நல்லது, நல்ல்ல்ல்லது.

இலை :- ம்ம்ம், இதுக்கு இத்தனை நாள் என்னை காய உடணுமா?? சரி, இனி புது அடிமைய வைச்சு பொழப்பை பாக்கவேண்டியதுதான்.

பம்பரம் :- நானும் சுத்திகிட்டுதான் இருக்கேன், என்ன செய்ய?? இலை போடமாட்டேங்றாளே?? இன்னிக்கு போடறேன்னாய்ங்க, வவுறு வேற பசிக்குது.. இனி இலங்கைல போய் சுத்தலாமான்னு பாக்கணும். ராசபக்சே விடுவானா?? தக்காளி, ஒரு காலம் வரும், நான் சூரியனுக்கு நடு மண்டையிலயே சுத்துறேன் பாரு.

அருவா, சுத்தி :- டேய் சுத்தி தூக்ன கையால இப்ப கத்தி தூக்க வைச்சுடாதீங்க, இப்ப இலை போடணும் எனக்கு..

இலை :- ம்ம், சத்தம், மூச். யாரு அங்க, இதுகள ஒரு ஹோட்டல்ல ரூம்ல போட்டு இன்னும் ரெண்டு நாளைக்கு அடைச்சி வையி.. நானே வயிரெறிஞ்சிட்டு இருக்கேன், இதுல இதுக வேற..

பம்பரம், அருவா/சுத்தி :- ச்சொம்மா, ச்சொம்மா.. நீங்க எப்ப வேணா இலை போடுங்க, நாங்க இங்கதான் இருப்போம். ஏன் டென்சன் ஆவுறிங்க??

தாமரை :- எல்லா இடமும் எல்லா நாளும் பூசை எங்களுக்குத்தான், நான் வந்து இலை போடவா??

வாக்காளர்கள் :- ஒரு முடிவுக்கு வந்து தொலைங்கய்யா?? வாங்க சீக்கிரம், எத்தனை நாளைக்கு டிவி, கேஸ்சுன்னு படம் போடுவீங்க?? புது பட ரிலீஸ் எப்ப??


அப்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி :- நகைச்சுவைக்காகவே, ஆட்டோலாம் வேண்டாம். சத்தியமா யாரையும்/எதையும் மனதில் வைத்து எழுதவில்லை.. நம்புங்க.

4 comments:

 1. ஆகா... அருமையான கற்பனை...

  Ha..ha..ha..ha..ha..

  ReplyDelete
 2. நீங்க யாரை நினச்சும் எழுதலை
  வேற எதை நெனைச்சும் எழுதலை
  அது எங்களுக்கு படிச்சவுடனே புரிஞ்சு போச்சு
  நல்ல படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. 63நாயன்மார் ,நானும் வாசித்து சிரித்துக் கொண்டேன்..நீங்க அருமையாக வலையில் பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள்

  ReplyDelete
 4. ஃஃஃஃஃஃவடை எனக்குத்தான், வடை எனக்குத்தான்.ஃஃஃஃ

  அட அவங்களுக்குள்ளயும் இதுக்குத் தானா போட்டி...

  ReplyDelete