Tuesday, March 8, 2011

வெற்றிக்கூட்டணி..!


திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மீண்டும் கூட்டணி துளிர்த்து விட்ட இத்தருணத்தில் கீழ் வரும் சுட்டியை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்..

கனிமொழி + ராஜா + மீரா ராடியாஇந்த மூவரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது இனி தன் பொன்னான ஓட்டுகளை வழங்கி மகிழ இருக்கும் நம் வாக்காளப் பெருமக்களுக்கு மிக அவசியம் என கருதுவதால் ஒரு முகமறியா நண்பர் எழுதியதை அவரிடம் பெர்மிஷன் வாங்காமலேயே இங்கே சுட்ட வேண்டியதாகிவிட்டது..

மிகத்தெளிவாக இருக்கிறது... ஆங்கில உரையாடல்.. அப்படியே டைப் அடித்திருக்கிறார்கள்.. (இது மாறனின் உள்குத்தோ என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு) ஆடியோ லிங்கும் உள்ளது, அப்படியே கொஞ்சிக்கொஞ்சி பேசும் அழகை கேட்டும் ரசிக்கலாம், நேரம் இருப்போர்.

நான் முன்பு இந்த லிங்கை தேடியபோது கிடைக்கவில்லை.. நிறையபேர் என்னைப்போல் கஷ்டப்பட்டிருக்கக்கூடும், கஷ்டப்பட்டு மிஸ் பண்ணியிருக்கவும் கூடும்.. அப்படி இருந்தால் இதை படித்து நம் தலைவர்களின் லட்சணங்களை தெரிந்து கொள்ளலாம்.

இதை படித்துவிட்டு நேரா போயி இரட்டைஇலை, பம்பரம், கம்யூனிஸ்ட் மற்றும் விஜயகாந்த் வெற்றிக்கூட்டணி(??) க்கு உங்க பொன்னான வாக்குகளை தாரை வார்த்து விடவேண்டாம், சுயேச்சையாக இருந்தாலும் ஒரு நல்ல நபருக்கு சிந்தித்து வாக்களியுங்கள்.. அப்படி ஒரு அரசியல் மாற்றம் நம் ஊரில் நடந்தால் தான் உண்டு இப்போது இருக்கும் அரசியல்வியாதிகள் திருந்த வேண்டும் என்றால்..

சிலருக்கு சுயேச்சைகளுக்கு வாக்களித்தால் வாக்கு ஏதோ வீணாகிவிடும் என்ற ஒரு உணர்வு உண்டு(?), ஏதோ இவுங்க வாக்கெல்லாம் இது வரை சரியா பயன்படுத்தப்பட்டது போல்!

எங்கெங்கு காணினும் சுயேச்சையடா என்று இருந்தால், பயபுள்ளைகள் தலைல கைவைத்து மலங்க, மலங்க விழிப்பதையும், நடக்கப்போகும் குதிரைபேரத்தை ஒரு நிமிஷம் நினைத்துப்பார்த்து சிரித்துக்கொண்டே கீழே சென்று சுட்டுங்கள்!

ஒரு நாள் ஏதேச்சையாக தேடிய போது கூகில் அளித்த தகவல்கள் இங்கே..

கனிமொழியும், வைஷ்ணவி கார்ப் சீஃப் நீரா ராடியாவும்

ராஜாவும், நீரா ராடியாவும்

விர் சங்வியும் நீரா ராடியாவும்

இந்த லிங்குகளை வழங்கிய நண்பரின் பதிவு..

கனிமொழி + ராஜா தேடினேன், கிடைக்கலீங்கண்ணா!!

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி :- துபாய்க்கெல்லாம் ஆட்டோ அனுப்புவாங்கன்னு நினைக்கிறீங்க??

படம் உதவி தினமலர்.. நன்றி தினமலர்.

3 comments:

 1. //துபாய்க்கெல்லாம் ஆட்டோ அனுப்புவாங்கன்னு நினைக்கிறீங்க??//

  சுமோ வரும்

  ReplyDelete
 2. வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

  மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

  ReplyDelete
 3. யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக என
  உடனடியாக அனைவரும் தெரிந்து கொள்ளும்படியாகச்
  செய்தமைக்கு என் மனங்கனிந்த
  பாராட்டுக்கள்
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete