Monday, March 7, 2011

மனசாட்சி!!

வழக்கமாய் வேலைக்கு போவதை தவிற வெளியே செல்லாத மனோ அன்று மாதம்தோரும் தவறாமல் செய்யவேண்டிய வங்கிபணிகளுக்காக அலுப்புடன் வெளியே கிளம்பினான்.. டிவியில் இந்தியா, அயர்லாந்து மேட்ச் நடந்து கொண்டிருந்தது.. அயர்லாந்தின் மிக குறைந்த ஸ்கோரை இந்தியா சேஸ் செய்து கொண்டிருந்தது..

வெளியே சென்று வங்கி பணிகளை இன்று முடிக்காவிட்டால் தாரளமாய் லேட்பேமன்ட் கட்டணம் போட்டுத்தாக்கிவிடுவார்கள் என்பதால் கடுப்புடன் வெளியே கிளம்ப வேண்டிய கட்டாயம்.

நேராக சென்று வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு மணி எக்ஸேஞ்ச் நோக்கி நடக்கையில் வழியில் இருந்த நைட்கிளப்பை கடக்கும் போது பழைய நினைவுகள் மனோவின் மனதில் வந்து சென்றது, ஒரு இரண்டு வருடங்களுக்குமுன் அந்த கிளப்பில் சர்வ் செய்த அந்த பெண்ணின் ஞாபகம் வந்தது!

ம்ம்ம், என்று மனதை நேராக்கி மீண்டும் யூஏயி எக்ஸ்சேஞ்ச் போய் கிரடிட் கார்டுகளுக்கான பணத்தை அடைத்துவிட்டு ஊருக்கு பணம் அனுப்புவதற்காக அடுத்த எக்ஸ்சேஞ்ச் நோக்கி நடந்து கொண்டிருந்தான், மீண்டும் அந்த நைட்கிளப் கடக்கவேண்டிய மற்றொரு சந்தர்ப்பம். மனதில் வந்த சலனத்தை அடக்கி கொண்டு நேராக போகவேண்டிய எக்ஸ்சேஞ்ச் போய் ஊருக்கான பணத்தை அனுப்பி விட்டு திரும்பி வீட்டிற்கு நடக்கையில் மீண்டும் சலனம் எட்டிப்பார்த்தது.

வீட்டிலும் நண்பர்கள் யாரும் இல்லாததால் மனம் இந்தமுறை வெற்றிபெற்றது. வீட்டிற்கு சென்று தனியே பார்ப்பதை விட இங்கே நாலுபேரோடு சேந்துபாக்கலாமே என்று மனசாட்சிக்கு பதில் சொல்லி சமாளித்தாயிற்று. மனசாட்சி மீண்டும் கொடூரமாய், அதுமட்டும் தான் காரணமா?? என்று கேட்டுமுடிக்கும் போது மனோவின் கால்கள் கிளப்புக்குள் நுழைந்து சீட் தேடிக்கொண்டிருந்தது.

ஏனோ கிளப்பில் எதிர்பார்த்த கூட்டமில்லை, நல்ல வசதியான சீட் கிடைத்தது.. டிவி முன்பே வசதியான சீட் பிடித்து அமர்ந்துகொண்டு, மனசாட்சி, அடேய் கிராதகா.. என்று அலரும்போதே சர்வர், அதேபெண்.. வந்து சிரித்துக்கொண்டு என்ன சாப்பிடுகிறீர்கள்?? என்பது போல் ஒரு பார்வை பார்த்தது. அவளுக்கு இவனை ஞாபகம் இல்லை.. அதுவும் நல்லதற்கே என்று நினைத்துகொண்டே ‘ஒன் பைன் ஹனிக்கேன்‘ என்றான். அங்கு எத்தனையோ வருவார்கள், செல்வார்கள்.. இவனை ஞாபகம் வைப்பதற்கு இவன் ஷேக் மகமூத் அல்லவே.

சிரித்துக்கொண்டே டிவியில் மேட்சை கவனிக்க ஆரம்பித்தான். ஹனிக்கேன் உடன் பாப்கார்ன் மற்றும் வறுகடலை அடக்கம் டேபிளுக்கு வந்தது. அந்த பெண் இன்னும் கொஞ்சம் செழிப்பாயிருந்தாள்.. சரி, நல்லாயிருக்கட்டும் என்று அங்கிருந்த அவளையும், மற்ற சர்வர்களையும் ரசித்துக்கொண்டே மேட்ச்சும் ஓடிக்கொண்டிருந்தது.

இது நடந்து கொண்டிருக்கும்போதே மண்டை காய்ந்து போயிருக்கும் உங்களுக்கு நான் இதுவரை உங்கள் மனதில் எழுந்திருக்கும் கேள்விகளுக்கெல்லாம் விடைசொல்வதுதான் முறை..

மனோ துபாயில் வசிக்கும் ஒரு சேல்ஸ்மேன்.. சேல்ஸ்மேன் என்றாலே சம்பளம், கமிஷன் இத்யாதி, இத்யாதி எல்லாம் இருக்கும் இங்கே, அவரவர் திறமையை பொருத்து. மனோ ஒரு திறமையான சேல்ஸ்மேன், அலுவலக உதவியாளனாய் சேர்ந்து வாழ்கையின் உயரங்களுக்கு சென்றவன். ரொம்ப கட்டுப்பாடான ஜென்டில்மேன்.. நைட்கிளப் போனால் ஜென்டில்மேன் அல்ல என்று யாராவது சொன்னால், எஸ், யுவர் ஆனர், இவன் முன்பு ஜென்டில்மேன் அல்ல.
ஆனால் இப்போது சென்று இரண்டு வருடங்களுக்கு பின் இப்போதுதான் செல்வதால் ஒரு அரைகுறை குஞ்சுமோன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள். மனோவிற்கு அதை பற்றி கவலையில்லை.

துபாயின் நைட்கிளப் சமாச்சாரங்கள் ரொம்ப பிரபலம், அந்த அந்த மாநில மக்களை கவர்வதற்காக அந்த அந்த மாநில மொழிகள் பேசும் பெண்களை வைத்து நைட்கிளப்புகள் மற்றும் டேன்ஸ்கிளப்புகள் இங்கே சர்வ சாதரணம். எல்லாவற்றையும் நடத்துவது 75 சதவீதம் மலையாளியாய் தானிருப்பான். இதில் ரெண்டு வகை, ஒன்று சும்மா அழகழகான பெண்கள் உங்களுக்கு வேண்டியதை அழகாய் கருத்துடன் உங்களுக்கு பரிபாருவார்கள், மது, சாப்பாடு எல்லாம்.. மனைவிகள் கூட அப்படி பரிமாரியிருக்க மாட்டார்கள், அவ்வளவு அன்பாய் கவனித்து கொள்வார்கள்.

இன்னொன்று டேன்ஸ்கிளப் என்று சொல்லப்படும், கிளப்பின் நடுவே ஒரு மேடையில் நடன அழகிகள் உங்களுக்கு பிடித்த பாட்டுகளுக்கு டேன்ஸ் ஆடுவார்கள். கிட்டே போகவோ, தொடவோ அனுமதி இல்லை.. அதுக்கெல்லாம் ரொம்ப செலவாகும்.. உங்களுக்கு பிடித்த பாட்டுக்கு, உங்களுக்கு பிடித்த ஆள் ஆடவைக்கலாம்.

மலையாளிக்கு தெரியும், உங்களுக்கு என்ன தேவையென்று கனகச்சிதமாய்.. அதை நேக்கா கொடுத்து காசு பார்த்துக்கொண்டிருப்பான்.. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளி பெண்கள், மற்றும் சில நார்த் இன்டியன் பெண்களும் இருப்பார்கள்.. உங்கள் விருப்பத்திற்கு தேர்வு செய்ய.

மனைவி, குழந்தைகளை ஊரில் விட்டு தனிமரமாய் இங்குவந்து தவிக்கும் ஆண்களுக்கு இது சொர்க்கமாய் இருக்கும்.. இது குறித்து தனிபதிவே எழுதலாம் என்பதால் இங்கே விடுகிறேன், இதுபற்றி இதற்குமுன் யாராவது எழுதியிருந்தாலோ, இல்லை நீங்கள் படித்திருந்தாலோ கமென்டில் சொல்லுங்கள், எனக்கு எழுதும் வேலை மிச்சமாகும்(??)

மனோ கதைக்கு வருவோம், பாவம் பையன், திருப்தியாய் சாப்பிட்டு நிறைய நாட்களாகிவிட்டது என்று ரெண்டு ஆப்பமும், ஒரு சில்லி சிக்கனும் சாப்பிடலாம் கொஞ்சம் பீருடன் என்று வந்தவன், இரண்டு பைனும், ஒரு கேனும் குடித்துவிட்டு, வயிரு பெருத்து, மனசாட்சிக்கு பதில் சொல்வதற்காக, ரெண்டு ஆப்பமும் சில்லிசிக்கனும் வாங்கிவைத்துக் கொண்டு கண்ணாமுழி திருக விழித்துக்கொண்டிருந்தான். இந்தியா ஜெயித்துவிட்டது உற்சாக கைதட்டல் அதிர.

இதற்கிடையில் அந்த பெண்ணுடன் தமிழில் பேச ஆரம்பித்து கொஞ்சம் நெருங்கியிருந்தான்.. கடைசியில் ஒருவழியாய் பெருத்த வயிருடன் போதும், விட்டுரலாம்னு பில் கேட்கும் போது அந்த பெண் அருகில் வந்து ரொம்ப சோகமாய், எங்களுக்கு இங்கே டிப்பு மட்டும்தான்.. சம்பளம் கிடையாது என்று சொன்னாள்..

மனோ, ஏன் வேலை பாக்குற, உட்டு தொலைச்சிட்டு வேற தேடவேண்டியது தானே??

ம்ம்ம், கேன்சல் அடிக்கப்போறேன்.. ஊருக்கு போறேன் என்றாள்..

எந்த ஊரு என்று மனோ கேட்கவும், இலங்கை.. கண்டி பக்கம் என்றாள்.

ஓ.. இப்பம் எப்படி நிலைமை..

இப்ப பரவாயில்லை.

பிரபாகரனுக்கு அப்புறம் பரவாயில்லையா??

இல்லை.. அவர் இருக்கும் போது பிரச்சனையாக இருந்தது.. இப்ப அதிகம் பிரச்சனை இல்ல, ஊருக்கு போகலாம் என்றாள்.

சரி என்று சொல்லிவிட்டு மனோ 20 திர்ஹம் டிப்ஸ் கொடுத்தான், ஏதோ தமிழ் என்று சொல்கிறாளே என்று, கொடுத்துவிட்டு நடையை கட்டவும், கௌம்புறிகளா?? இனி எப்பம்??

ம்ம்ம், பாக்கலாம்..

பய பெருத்த வயிருடன், வீங்கி, வீங்கி நடக்கும் போதே அவளுக்கு தெரிந்திருக்கவேண்டும் இனி இவன் எப்போது வருவான்னு அவனுக்கே தெரியாதென்று..

மனோவிற்கு இன்னொரு முறை நேரம் கிடைத்து அந்த வழியாக செல்லநேர்ந்தால், மீண்டும் ஒன்றிரண்டு வருடத்திற்குபின் போகலாம், கிடைக்குமா?? பார்ப்போம்..

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி:- இது சத்தியமாய் துபாயில் வசிக்கும் மனோதான், அவனைப்பற்றி எழுதவேண்டும் என்று ரொம்ப வேண்டி, விரும்பி கேட்டதால்தான் எழுதினேன், இப்டி எழுதுவேன்னு பய நினைச்சிருக்க மாட்டான்!!

5 comments:

  1. இது என்னோவோ மனோ மாதிரி தெரியலியே ரெண்டாவது எழுத்திலே எதோ எழுத்து பிழை இருப்பது மாதிரி தெரியுதே?

    மனோ வை பற்றி மணி மணியான எழுத்துக்கள்....வாழ்த்துக்கள். இந்த கமெண்டை approve செய்ய வேண்டுமா என்பதை பார்த்து கொள்ளவும்.

    ReplyDelete
  2. அலுவலகத்தில் மிகவும் டென்ஷன் ஆன காலகட்டம் இது. நான் program manager ஆக பணியாற்றும் ப்ரோக்ராம் நொண்டி அடிக்கிறது (for info : Multiple Projects together makes a program)... ஒரு அமெரிக்க ப்ராஜெக்ட் மேனேஜர் சில வேலைகளை (Task ) பிளான் பண்ணாம அப்படியே அம்போன்னு வுட்டுட்டான், ஆணா டாப் management கிட்ட ஆப்பு வாங்குறது நம்ம தான். தினமும் ஸ்டீரிங் போர்டு மீட்டிங், action items , ரிஸ்க் Management , Mitigation . (ரொம்போ கடிய இருக்கோ? வுட்டுருங்க இது புலம்பல்). இத தான் நம்ம வடிவேலு அண்ணன் அன்னிக்கே சொன்னாரு "எதையுமே பிளான் பண்ணாம பண்ண கூடாதுன்னு"

    ஒரு நாள் நிம்மதியா ஒரு பீர் அடிச்சுட்டு ஜாலி யா இருக்கலமுன்னா ஒரு நல்ல கூட்டாளி கூட இல்லை. வீட்டுல வச்சி அடிக்கலாம்ன என் மகளும் இதே ஜூஸ் தான் வேணும் என்கிறாள். சரி எங்கயாவது பக்கத்தில் outing போகலாம்னா மூத்த பொண்ணுக்கு எக்ஸாம் டைம் அப்படிங்குறாங்க.

    சரி நம்ம நண்பர் பிளாக் எழுதுறாரே அதாவது படிக்கலாம் என்றால் அவரு நம்ம வயித்து எரிச்சல கெளப்புறாரு. பெங்களூர் போர் அடிக்கிறது சார்.

    ReplyDelete
  3. இதைவிட, டேய்.. இது நீ தான ன்னே கேட்டிருக்கலாம், சத்தியமா நாங்க இல்ல சார்.. நாங்கலாம் ரெண்டாப்லயே மணி, மணியாய் எழுதுவோம் தெரியும்ல..

    ReplyDelete
  4. தனிமை உண்ர்வுகளையும்
    அவஸ்தைகளையும்
    உணரமுடிகிறது
    யதார்த்தமான பதிவு
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. சொந்தக் கதை சோகக் கதை மாதிரித்தான் தெரியுது

    ReplyDelete