Thursday, January 6, 2011

அயல்நாட்டு முரண்கள்

என்ன தலைப்பு இதற்க்கு வைப்பது என்று மண்டை காய்ந்துவிட்டது. சமீபத்தில் கவனித்த சில முரணைப்பற்றி எழுத உட்க்கார்ந்திருக்கிறேன். நான் வசிக்கும் துபாயில் பார்த்தது, இங்கோ பத்திரிகை சுதந்திரம் மருந்துக்கு கூட கிடையாது, உள்ள வைச்சி காய்ச்சிருவாங்களோன்னு கொஞ்சம் பயம் தான், இருந்தாலும் சொல்ல வந்ததை நாசூக்காய் சொல்லிவிடலாம் என்று துணிந்துவிட்டேன். (நாமல்லாம் பத்திரிகை தான் எழுதுரோமா சார்?)

உங்களில் அனேகம் பேருக்கு தெரிந்திருக்கும், இந்த நாட்டில் வசிப்பவர்கள் 80 சதவீதம் வெளிநாட்டினர்களே! அந்த வெளிநாட்டு 80 சதவீதத்தில் 70 சதவீதம் ஆசியாவை சேர்ந்தவர்கள், மீதி 30 சதவீதம் தான் மற்றவர்கள். எதிலோ படித்த ஒரு கமென்ட் ஞாபகம் வருகிறது. 'if they continue this then the locals will become foreigners in their own country' என்று எழுதியிருந்தார்கள், வேறு வழி இல்லை, அதுதான் உண்மை.

அது உண்மை என்பது இங்குள்ள லார்ஜெஸ்ட், பிக்கஸ்ட் மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பஸ், மெட்ரோ இதையெல்லாம் பயன்படுத்துபவர்களைப் பார்த்தால் தெரியும். அதுவும் இங்குள்ள பர் துபாய் மீனா பஜார், க்ரீக் ரோடு, ஓல்டு பாகிஸ்தானி கவுன்ஸலேட் ஏரியாவிலெல்லாம் பார்த்தால் அது ஏதோ இந்தியாவில் ஒரு பெருநகரத்தின் தெருக்களில் நடப்பது போலவே இருக்கும். தப்பித்தவறி கண்ணில் படும் ஒரு சில ஹபிபிகள் வெளிநாட்டினர் போல் கண்ணுக்கு தெரிவார்கள்.

என்ன செய்வது, நாம் பிழைக்க வந்திருக்கிறோம் என்பதை அடிக்கடி ஞாபகம் வைத்துக்கொண்டு நாம் தான் இங்கே foreigner என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இங்குள்ள ஆசியர்களை எல்லாம் ஒரு நாள் ‘போங்கடா, உங்க விசா காலம் எல்லாம் முடிந்தது, எல்லோரும் ஊருக்கு போகலாம்‘ என்று சொல்லிவிட்டால் இங்கு பல பகுதிகள் வெகு சீக்கிரம் பாழடைந்து விடும். ஆசியர்களின் கடும் உழைப்பிலேயே இந்த நாடு வளர்ந்திருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை. அவர்களிடம் பெட்ரோல் இருந்தாலும் அதை எடுத்து மார்க்கெட் செய்து பணமாக்கிக்கொடுப்பது பெரும்பான்மையாய் ஆசியர்கள் தான்.

ஆனால் அந்த ஆசியர்களுக்கு இங்கே மரியாதை என்பது துளி கூட கிடையாது. நான் ஒரு ஹிந்து என்பதால் இதை சொல்வதாய் நினைக்கவேண்டாம், நம் நாட்டு முஸ்லீம்களுக்கும் இங்கே இதே நிலைதான்.

எப்போது ஆசியர்களின் மரியாதை குறைவு தெரியும் என்றால், இங்குள்ள அரசு அலுவலகங்களுக்கு சென்றால் தெரியும் ஆசியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது. ஒரு காலத்தில் இந்தியர்களால் டாமினேட் செய்யப்பட்ட போஸ்ட் ஆபிஸ், வங்கிகள் எல்லாவற்றிலும் இப்போது Front Deskல் ஹபிபிகள் தான். சரியப்பா உங்கள் நாடு, உங்கள் பாடு என்று விட்டுவிடலாம். நீண்டு செல்லும் போல் தெரிவதால் இரண்டு உதாரணம் மட்டும் சொல்கிறேன்.

இப்போதெல்லாம் இங்குள்ள வங்கிகளில் எல்லாம் 30 வரைவோலைகளுக்கு (தமிழ்ங்க) மேலே இருந்தால் தான் கவுண்டரில் வாங்கிக்கொள்வார்கள், 29 என்றால் போ, போய் மெஷினில் போடு என்று சொல்லிவிடுவார்கள். எங்கள் அலுவலகத்தில் சராசரியாக மாதம் 300 செக் களுக்கு மேல் ரெமிட் செய்ய வேண்டியிருக்கும், வாரம் ஒருமுறை அல்லது இருமுறை வங்கிக்கு நம் ஆட்கள் செல்வார்கள். 29 செக் என்றால் அதை கொண்டு செல்வது இந்தியன் அல்லது பிலிப்பைனி அல்லது பாகிஸ்தானி போன்ற ஆசியர்கள் என்றால் அவனை ஓட ஓட மெஷினுக்கு துரத்துவார்கள், ஸ்டேட்மென்ட்டில் அது ஒரே நாளில் 29 லைன்கள் வரும், ஸ்டேஷனரி செலவு அதிகம் இப்படி பல இருந்தாலும் இதை ஒரு ஐரோப்பியன், வெள்ளை தோல் அல்லது ஒரு ஹபிபி என்றால் கேட்பதற்க்கு ஒரு நாதியும் இருக்காது, அவர்கள் 2 செக் என்றாலும் கவுண்டரில் கொடுத்துவிட்டு போய் கொண்டே இருப்பார்கள்.

நம்ம ஆளுக என்றால் 29 செக்கையும் மெஷினில் வைத்து அழுத்துவதை தவிர நமக்கு வேறு வழி இல்லை. இவன் வங்கி வேலை முடித்து அடுத்து பல வேலைகளை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருப்பான், அதெல்லாம் அவர்கள் பிரச்னை இல்லை என்பது போல் பார்த்துக்கொண்டேயிருப்பார்கள், ஆசியர்கள் அவர்களை பொருத்தவரை பிழைக்க வந்த நாதாரிகள் என்பது போல் இருக்கும், வெள்ளையர்கள் அப்படி அல்ல. ஆனால் உண்மையில் கொள்ளையடிப்பது யார் என்று தெரியாது. இன்னொரு அநியாயத்தை கேளுங்கள்.

இதே மரியாதை தான் கார்களுக்கு ஃபைன் கட்ட சென்றாலும். 2004அல்லது 2002ல் இங்கு ஒரு சட்டம் வந்ததாம். சொந்தமாய் தனிநபர் பெயரில் டெலிவரி வேன் வைத்திருந்தால் அதற்க்கு சன் பிலிம் ஒட்டிக்கொள்ளலாம், ஆனால் கம்பெனி பெயரில் உள்ள வண்டி என்றால் ஒட்டக்கூடாது. இது பலருக்கு தெரியாது, எங்களுக்கும் தெரியாது.

அடிக்கும் 50 டிகிரி வெயிலில் சன்பிலிம் ஒட்டாமல் டெலிவரி வேனில் உள்ளே இருப்பது ரொம்ப கஷ்டம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இது தெரியாமல் நம்ம பய புள்ள ஒண்ணு சமீபத்தில் அஜ்மான் சென்றுவிட்டது, சன்பிலிம் ஒட்டிக்கொண்டு. அதைப்பிடித்து முக்காலிஃபா கொடுத்து விட்டார்கள். 500 திர்கம் ஃபைன்.

எங்கள் அலுவலகத்தில் சன்பிலிம் ஒட்டுவது கம்பெனி செலவு வராது. எங்கள் முதலாளி அதை ஒட்ட ஏனோ விரும்புவதில்லை, அவன் வைத்திருக்கும் காரிலும் ஒட்டமாட்டான். அவன் டிரைவ் செய்வது குறைவு, ஆனால் டெலிவரி வேன் நாள் முழுவதும் வெளியில் அலைய வேண்டியது இருக்கும், கொஞ்சம் கஷ்டம். யார் வேண்டுமானாலும் அவரவர் வைத்திருக்கும் கம்பெனி வண்டியில் ஒட்டிக்கொள்ளலாம் சொந்த செலவில். நம்ம பய சமீபத்தில் வாங்கிய புது வேனில் எல்லாம் சொந்த சிலவிலேயே ஒட்டி வைத்திருந்தான். ஆக ஃபைன் பையன் தலையில் விழுந்தது.

சரி, இந்தமாச சம்பளத்துல கொஞ்சம் போயிற்று என்று அவனும் தண்டம் கட்ட சென்றான், அங்க போனால் இது சிவியர் குற்றம், இதற்க்கு ஒரு மாசம் வண்டிய உள்ள வைக்கணும், தோ, அங்க கொண்டு உட்டுட்டு போ, 1 மாசம் கழிந்து வந்து தண்டம் கட்டிட்டு வண்டிய எடுத்துக்க என்று சொல்லவும் பய அலரி அடித்து போன் செய்தான், பிலிம் ஒட்டினேன், இது குற்றமா என்றான். சரி 2 நாள் கழித்து வந்து விடுறேன்னு சொல்லிட்டு வந்து சேரு என்றேன்.

எனக்கு தெரியும் ஹபிபிகள் வெள்ளையர்களுக்கு பயப்படுவார்கள் என்பது, நம்ம முதலாளி தான் வெள்ளையனாயிற்றே. சொன்னேன் அவனிடம், என்ன செய்வது வண்டிய உள்ள உட்ரலாமா? அல்லது நீ போய் பேசிப்பார்க்கிறாயா என்றேன்.

உள்ள வுட்ரதா? நம்ம டெலிவரி எல்லாம் என்ன ஆறது? சரி நான் போகிறேன் என்று போனான். அவனுக்கு ராஜ மரியாதை கொடுத்து, வண்டி ஒன்னுதா, சரி சரி, பரவால்லை, சன்பிலிம் எடுத்திட்டு வண்டியைக்காட்டு, ஃபைன் மாத்திரம் கட்டிட்டு வண்டிய கொன்டு போ என்று விட்டார்கள். அவன் அவனது ரேஞ்ச்ரோவரில் சென்றிருந்தான், வண்டியை எங்க காட்ரது, சரி நாளை வண்டிய அனுப்பறேன்னு வந்துவிட்டான்.

என்னிடம் வந்து சொன்னதும், சரி முக்காலிஃபால எதும் எழுதி, கையெழுத்து வாங்கினாயா? என்றேன். (நம்ம ஆளுங்க இதிலெல்லாம் கரெக்ட்டா இருப்பாங்க, சரி மக்கா, மை ஃப்ரெண்ட், இதுல ஒரு கையெழுத்து போட்ருன்னு நாம வாங்கிட்டு தான் வருவோம்) இல்ல, அங்க நல்லா பேசினாங்க, ரொம்ப நல்லவங்க, ஹி ஈஸ் நவ் மை ஃப்ரண்ட், நீ நாளைக்கு அனுப்பு, எல்லாம் சரியாயிரும் என்று சொல்லி விட்டு நான் 2 நாள் பஹ்ரைன் விசிட் போரேன்னு சொல்லிட்டு போயிட்டான். எனக்கு நன்றாகத் தெரிந்தது, இது நடக்கப் போவதில்லையென்று, சரி போ என்று விட்டுவிட்டேன்.

அடுத்த நாள் நம்ம பய போனான் அங்கே, போனஉடனேயே முக்காலிஃபாவை வாங்கி டேட் ஸ்டாம்ப் வைத்து, சரி அங்கே கொண்டு வுட்டுட்டு போ எனவும், பய ஆடிப்போய், இல்ல, எங்க பாஸ் நேத்து வந்தாரு, அவுரு ஃப்ரண்ட்ன்னு ஏதேதோ சொல்லியும் ஒன்றும் நடக்கவில்லை, இவனை அந்த அலுவலகத்தின் உள்ளே இருந்த அதிகாரியைப்பார்க்கவே அனுமதிக்கவில்லை.

சாரிங்கோவ், இனி நாளை வருகிறேன், 2 பக்கம் ஆகிவிட்டது. சத்தியமாய் நாளை வருவேன், கிட்டத்தட்ட முடித்துவிட்டேன், ஆனால் பாருங்கள் முடியலை, நாளை சந்திப்போமா?

அன்புடன், வசந்தா நடேசன்.

4 comments:

  1. இக்கரைக்கு அக்கரை பச்சை .(நெசம்மாவே உங்க ப்ளாக் பச்சை தான் ). இங்க மட்டும் கவருமெண்டு ஆபீஸ் போனா தட்டுல வச்சு தாங்குறாங்களாக்கும். எனக்கும் துபாய்க்கு வந்து சம்பாதிக்கணும்னு ஆசைதான் . என்ன பண்ணுறது. ஆசை இருக்கு தாசில் பண்ண. அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க.

    ReplyDelete
  2. நான் சொல்லவந்தது இந்தியர்கள் இந்த நாட்டில் படும் அவமரியாதைகள் குறித்து, நம் ஊரில் எளிதில் காணமுடியாத அல்லது நகரப்பகுதிகளில் வழக்கொழிந்து விட்ட இன வேற்றுமை என்பதைக்குறித்து.. இதன் அடுத்த பதிவில் இதை விளக்க இருந்தேன். கொஞ்சம் வேலைகள் அதிகம் ஆகிவிட்டது!

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி முல்லை அமுதன்..

    ReplyDelete