Saturday, March 5, 2011

ஆணவம்..

இது என் நண்பரை பற்றிய கதை..

1972ல் நம் கோவை மாநகரில் ஒரு நாளைக்கு ரூபாய் 2.50 என்று வேலை செய்ய ஆரம்பித்து, வாழ்கையில் பல பகுதியை பார்த்து முன்னேறி வந்த ஒரு சாதாரண தமிழனின் கதை..

திறமை மட்டும் போதாது, வேலையிலிருந்த திறமையால் அந்த ஆணவம் வந்தது என்றாலும் ஆணவம் ஒரு மனிதனை எங்கு வரை கொண்டு செல்லும் என்பதற்கு இவர் வாழ்க்கையை தவிற வேறு உதாரணம் கண்டுபிடிப்பது கடினம்.

வெல்டிங் என்றால் இவர் அடிப்பதுதான் என்று அப்போதே இருந்தவர்.. இவர் வெல்டிங் என்றால் பெரிய பெரிய கம்பெனிகள் கூட ஒன்றும் சொல்லாமல் அந்த காலத்தில் ஏற்றுக்கொள்ளுமாம். வெறும் டிராயிங் மட்டும் கொடுத்து விட்டால்போதும், வேலை முடிந்திருக்கும்.

என்னைவிட 10 வயது அதிகம் அவருக்கு, என்றால் அவர் வயது அப்போது 16 இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் வேலைக்கு சேர்ந்து வாழ்க்கை முழுவதும் வெல்டிங், வெல்டிங் என்று வாழ்க்கையை அற்பணித்தவர்.. ஒரு தேர்ந்த பிரபல வெல்டர் இன்று.

வாழ்கையின் அடிமட்டத்திலிருந்து மேலேறி வந்தவர், 1982ல் அவர் சம்பளம், ஒரு நாளைக்கு ரூபாய் 12.86 பைசா என்றால் அவருடைய உழைப்பின் வலிமை புரிகிறதா?? இளமையின் உக்கிரத்தை... வாழ்வின் வக்கிரத்தை என்னென்று சொல்ல??

இளம் ரத்தம், நம் நண்பர் அந்த காலத்தில் அந்த வேலையை (எவரெஸ்ட் இஞ்சினியரிங், கோவை) ஆணவத்துடன் தொலைத்தவர், காரணம் கேளுங்கள், அவரின் பின்னே அதே கம்பெனியில் சேர்ந்தவருக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 12.87?? ஆனால் நிர்வாகம் இவருக்கு அதே சம்பளத்தை கொடுக்க மறுத்து விட்டது. நம் நண்பர், கேட்டிருக்கிறார், ஏன் என்னை விட அவனுக்கு ஒரு பைசா அதிகம்?? எனக்கும் அதையே கொடு, வேலை செய்கிறேன், இல்லை வேண்டாம்.. என்று தினமும் கம்பெனிக்கு செல்வார் ஆனால் வேலை செய்ய மாட்டார், இவருடைய பஞ்சை அடித்து இவரின் ஹெல்பர்கள் வேலை செய்வர்.. பொருப்பு இவருக்குத்தான்.

அதை பார்க்கும் சூப்பர்வைசர்கள், ஏன், நீ வேலை செய்யவில்லையென இவரை கேட்கவும் முடியாது.. ஒரு கட்டத்தில் அந்த வேலையே விட்டு விட்டு வெளிநாடுகளில் வேலை செய்ய வர ஆரம்பித்து கஷ்டப்பட்டு அவரின் ஐம்பதாவது வயது வரை பல கஷ்டப்பட்டு, 50 வயதில் இங்குள்ள அரசு துரையொன்றில் வேலைக்கு சேர்ந்தவர்.. இங்கு அரசு துரையில் ஐம்பது வயதுக்கு மேலுள்ள ஒரு முஸ்லீமுக்கு வேலை கிடைப்பது கொஞ்சம் இன்ப்ளூயன்ஸ் இருந்தால் சாத்தியம் தான், ஆனால் இவர் ஒரு ஹிந்து?? அவருக்கு வேலை கிடைத்தது அவரின் திறமையால்.. ம்ம்ம், திறமை??

திறமை மட்டுமல்ல, அவர் அவரது ஆணவத்தை விட்டொழித்து, என்னால் இனி முடியாது, உன் கருணையிருந்தால் மனது வை என்று பல வெளிநாட்டு கஷ்டங்களுக்குப்பின் கடவுளை சரணடைந்தபோது..

இன்று அவரின் 55 வது வயதில், நன்றாக இருக்கிறார்.. சொந்த வீடு, வசதி, வாழ்கை என்ற பல நிறைவேறியிருக்கின்றன.. ஆனால் இன்று அவர் நினைத்து பார்ப்பது அவர் திறமையை அல்ல.. கடவுளை.

இன்று அவர் சொல்லும் ஒரே வார்த்தை தன் திறமையை பற்றிய ஆணவம் மட்டும் ஒருவனுக்கு இருந்தால் போதாது, அதிலும் மேலானது கடவுள் கருணை.., அதற்கு வேண்டிக்கொள்ளுங்கள், அதற்கு முயற்சி செய்யுங்கள்.. என்பது தான்.

ஏதேனும் புரிந்ததா?? இல்லையேல் இன்னொரு நாள் இன்னும் விளக்குகிறேன், நண்பர் பற்றி..

அன்புடன், வசந்தா நடேசன்.

4 comments:

  1. நல்ல பதிவு.இதைப்போலவே எனக்குத் தெரிய
    வேலையில் மிகத் தெளிவான கொத்தனார் ஒருவர் இருந்தார்
    .தெளிவு என்றால் அத்தனை தெளிவு
    நீங்கள் சொல்வது போல அவர் வேலையை அனைவரும்
    புகழப் புகழ அவருக்குள்ளும் அந்த ஆணவ சைத்தான்
    குடிகொள்ள ஆரம்பித்தான்.தன்னை விட்டால் வேறு
    யாரும் இப்படிச் செய்ய முடியாது.நான் வரும்போதுதான் வருவேன்
    என எல்லாம் அலும்பு செய்ய ஆரம்பித்தார்
    இரத்தம் சூடாக இருக்கும்வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது
    வயதாக வயதாக வேலைசெய்ய இயலாமல் வறுமையில்
    ஒரு நாள் போய்ச் சேர்ந்தார்
    அவரிடம் சித்தாளாகச் சேர்ந்து அரைகுறை கொத்தனாராகி
    அனைவரையும் அனுசரித்துப்போய்
    காண்ட்ராக்டராகி சேர்மன் ஆகிப்போனவர்தான்
    அவருக்கான ஈமச்சடங்குச் செலவுகளைக் கூட செய்தார்
    ஆணவம் கொள்ளுகிற எத்தகைய
    புத்திகொண்ட மனிதர் ஆனாலும் வெற்றி கொள்ள முடிவதில்லை
    சிந்தனையை தூண்டுகிற பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இயல்பான கதை...விழிப்புணர்வு தூண்டுகிற பதிவு
    தொடர வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  3. தினமும் கம்பெனிக்கு செல்வார் ஆனால் வேலை செய்ய மாட்டார்//

    ஆணவமும் ஒரு நோய்தான்..போல.

    நல்லாருக்குங்க

    ReplyDelete
  4. நல்லாருக்குங்க. தொடர வாழ்த்துக்கள் ..

    ReplyDelete