Wednesday, March 23, 2011

மதிமுக முத்து

கடலுக்குள் முக்குழித்து
முத்துக்கள் எடுத்து வந்தேன்.
எடுத்து வந்த அத்தனையும்
என்ன சொல்ல? சொத்தை முத்து!

கெட்டதென் விதியென்று
சுற்று முற்றும் தேடிப்பார்த்தால்..
ஒற்றை முத்து நல்முத்து,
கண்களுக்கு நல்விருந்தாய்.

ஆசையுடன் அள்ளி அதை
ஆதரித்து வைத்திருந்தேன்.
கழுத்தினிலே கோர்த்திடலாம்,
கைவளையில் பதித்திடலாம்,

மோதிரத்தில் பதித்து வைத்து,
விரல்களுக்கு அளித்திடலாம்!
காலம் அது கனிந்து வர
காத்திருந்தேன் தேர்ந்தெடுக்க.

பம்பரமாய் அது சுழன்று
ட்சுனாமியாய் சுற்றியது.
முடிந்து போன முன் ஜென்மத்தில்
ஜெயித்து வந்த கூட்டத்தில்
போர்வாளாய் இருந்ததுவாம்!

பெருமைக்கு மாவிடித்து,
புலி, எலியென்று...
சிங்கத்திடம் கதைசொல்லி
சீரழிந்து போனதுவோ!

என் செய்வேன், ஐயய்யோ!
ஆதரித்து அரவணைத்து
தோள் கொடுக்க முனைகையிலே
ஆர்பரித்த கடலுக்குள்
தவறியது விழுந்ததுவோ?

இருக்கும் இடம் நினைத்து
அவர் இஷ்டப்படி வாழ்ந்திராமல்
தன்னிலை பெரிதென்று
தண்ணீரில் மூழ்கியதோ?

தன்மானம் பெரிதென்று
தனித்து போட்டியிட்டு
வெற்றியென்ன, தோல்வியென்ன..
வீரம் தேவை தானே?

தமிழகம் பெருமை கொள்ள
தமிழர்கள் பெருமை போற்ற
அடுத்தவர் நலமாய் வாழ
ஆவலாய் விளைந்த முத்தே!

வந்திடல் வேண்டும் இங்கு,
தந்திடல் வேண்டும் வாக்கு.
புறக்கணிப்பு வேண்டாம் முத்தே,
கனிந்தழைக்கின்றோம் வாராய்!

மனம் கனத்து அழைக்கின்றோம் வா!


அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி :- நான் மதிமுக அனுதாபி இல்லை.. மக்கள் கூட்டணி நாமல்லாம்.. மக்களுடனும், கடவுளுடனும் தான் கூட்டணி. (மக்களுடனும், ஜெயலலிதா அம்மாவுடனும் அல்ல..) ஹே, இவன் தே.மு.தி.க/அ.தி.மு.க ன்னு நினைச்சுராதீங்க?? அப்புறம் நான் மஞ்ச துண்டை தலையில் போட்டபடி போகவேண்டியது தான். ம்ம்ம், இவன் திமுக வா?? அந்த அழுகின மாம்பழத்தை எடுத்து தலைல போடுறா.. அப்டீன்னு வராதீங்க, நான் அப்புறம் அறுவா, சுத்தின்னு எடுத்துருவேன். நீங்க அப்புறம் தாமரைக்குழத்தில் போய் விழ வேண்டியது தான்!

மண்டை காஞ்சி நான் எந்த கட்சி என்று நினைத்து எதையும் மனதில் வைத்து யாரும் கும்மிடாதீங்கோ, நான் ஒரு நடுநிலை வாக்காளன்.. அப்டீன்னு சொல்ல வந்தேன். வைகோ தனித்து நின்றிருந்தால் நிச்சயம் அவருக்குத்தான் இந்த முறை என் வாக்கு, (புலிகளை பற்றியும், ஸ்டெர்லைட் பற்றியும் அரைத்த மாவையே அரைக்காமல் புதிதாய் பிறந்து வந்தது போல் அதிமுக மற்றும் திமுக வை எதிர்த்தும் தமிழக மக்கள் பிரச்னைகளை வைத்தும் மாத்திரம் பிரச்சாரம் செய்தால்!) ம்ம்ம்ம்... பாவம், வைகோவின் இப்போதைய நிலையை நினைக்கும் போது இப்படி ஒரு கவிதை(?) சிக்கியது.. என்ன செய்ய? அப்படியே நம்ம தஞ்சாவூர் கல்வெட்டுல குறித்து வைத்திருக்கிறேன். எதிர்கால சந்ததிக்கு தெரியவேண்டும் அல்லவா??

7 comments:

  1. நேரமிருந்தால்...
    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_23.html
    வாங்க..

    ReplyDelete
  2. ஐயோ கார்ல்மார்க் சொன்னானே அரிஸ்டாட்டில் சொன்னானே அண்ணா சொன்னாரே பெரியார் சொன்னாறேன்னு அழத்தான் லாயக்கு....!!! "வைகோ" எப்போதும் தப்பாகவே முடிவெடுக்கும் நல்லவர்'னு வேணா சொல்லலாமோ....?

    ReplyDelete
  3. எலேய் எங்க ஆளையே காணோமே மக்கா எங்கே போனீர்..???

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி நண்பர்களே..

    @//MANO நாஞ்சில் மனோ said...
    எலேய் எங்க ஆளையே காணோமே மக்கா எங்கே போனீர்..???//

    கொஞ்சம் பிஸிங்கோவ்.. ஆபிஸ்ல பிச்சு எடுக்குறானுங்க, இயர் என்ட்.. ஆடிட்.. இப்டி புண்ணாக்குகள் வரிசையா காத்திருக்கு, ம்ம்ம்.. இனி கொஞ்ச நாள் ஸ்லோ ரேஸ் தான்!

    ReplyDelete