Saturday, February 26, 2011

மழை

மழை

மழை,மழை

மழை,மழை,மழை

மழை,மழை,மழை,மழை

மழை,மழை,மழை,மழை, மழை

மழை,மழை,மழை,மழை,மழை,மழை

மழை,மழை,மழை,மழை,மழை,மழை,மழை

மழை,மழை,மழை,மழை,மழை,மழை,மழை, மழை

ம்ம்ம்ம்ம்ம், என்னத்தை சொல்ல, நாம கொடுத்துவைச்சது.......




வசந்தா நடேசன்...

டிஸ்கி :- நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள், உள்ள வைச்சு கும்மிராதீங்கய்யா??

Thursday, February 24, 2011

டீம் வொர்க் [1]

நான் என் அலுவலகத்தில் சேர்ந்த போது என்னுடைய கம்பெனி கோயிங் கன்சேர்ன் என்றநிலையில் தான் இருந்தது.. சேர்ந்தபோது தெரியாது, சேக்கமுன்னால பேலன்ஸ்ஷீட் லாம் காட்டமாட்டாங்கல்ல. இந்த கம்பெனி அந்த கம்பெனினின்லாம் அப்ப பாக்குற பக்குவமில்லை. ஏதோ ஃப்ரீ விசா கொடுக்றியா சரின்னு சேந்ததுதான்.

நான் விசிட் விசாவில் வந்து வேலை தேடியவன் ஒரு காலத்தில்.. வந்து ஒரு 21 நாளிலேயே எனக்கு 3 கம்பெனிகளில் ஓக்கே ஆனது.. அதில் நான் சம்பளம் குறைவாக இருந்தபோதும் இது போதும் என்று செலக்ட் பண்ணியது தான் நான் இன்றுவரை வேலை செய்யும் இந்த இடம்.

மற்ற இரண்டில் ஒன்றை மலையாளி கம்பெனி என்றதால் மனமில்லை சேர்வதற்க்கு, இன்னொன்று ரொம்ப சில்லரைத்தனமாய் இன்டர்வியூ நடத்தி தேர்ந்தெடுத்தார்கள்.. இந்த நாட்டில் வரி என்பதே கிடையாது, ஆனால் அங்கிருந்த மலையாளி மேனேஜர் (எல்லா எடத்துலயும் அவனுகதான் சார் இங்க) ப்ராபிட் அன்ட் லாஸ் அக்கௌவுன்டை கொடுத்து, நீ இதில் வருமானத்தை குறைத்து எப்படி கணக்கெழுதுவாய் என்றான்?? எனக்கு அது எல்லாம் அத்துபடி என்றாலும், டேய், அது தான் இங்கே தேவையே இல்லையேடா?? எதற்க்கு கேட்கிறாய் என்று கேட்க நினைத்தேன் மனதுக்குள், ஆனாலும் சொன்னேன், இப்படி, இப்டி செய்யலாம் என்று, கருமம் இந்தியால அந்த எழவை தானே செஞ்சிகிட்டு வந்துருக்கோம் இங்க.

அவன் இன்டர்வீயு முடிந்து அவன் அரபியிடம் அரபியில் பேசினான், பேசிமுடித்து இங்க இப்ளவ்தான் சம்பளம் தருவோம் சேருரேன்னா சேந்துக்க, இது இதெல்லாம் கண்டிஷன், (டைம் பாக்க கூடாது, கம்பெனி ரூம்ல தான் தங்கணும், கம்பெனி மெஸ்லதான் சாப்டணும் இப்படி சில.. எல்லாம் அவனுக்கு சைட் வருமானத்துக்கு தான்) என்றான், ஆனால் அதற்க்கு முன்பே நான் இது வேண்டாம் என்ற ஒரு முடிவுக்கு வந்திருந்தேன் என்றாலும் ரொம்ப நன்றிங்க ஐய்யா, நான் போன் பண்ணிட்டு வாரேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன், அன்றைய நிலைமை வேறு.

பின்னர் இந்த கம்பெனியில் சேர்ந்து, எனக்கு முன்ன, பின்ன தெரியாத ஒரு ஐரோப்பிய அக்கவுன்டிங் சாப்ட்வேர் அங்கு?? என்னை இப்போதைய கம்பெனியில் தேர்வு செய்தது, கே பீ எம் ஜி, உலகின் முன்னணி ஆடிட்டிங் நிறுவனம், சேர்ந்து இரண்டொருநாளில் கணக்கு வழக்குகளை படித்துமுடித்து பார்த்தால் அது ஒரு கோயிங் கன்சேர்ன்?? எனக்கு எப்படி இருந்திருக்கும்??

ஆனால் நான் தளரவில்லை, மனதில் ஒரு வெறி இருந்தது, நாமளும் வரணும்டான்னு. அதற்க்கான சூழ்நிலைகளும் இருந்தன, நான் சொல்லவந்ததே அதைத்தான். டீம் வொர்க். இந்த கம்பெனி அப்படி இருந்ததற்க்கு காரணமே அங்கு ஒரு சரியான அக்கவுன்டன்ட் அமையாதது தான், அக்கவுன்டன்ட் மாத்திரமே ஒரு கம்பெனியை சீர்தூக்கிவிட முடியுமா என்றால் அதுவும் முடியாது.

எனக்கு அமைந்தது ஒரு நல்ல டீம்.. நானும் உடன் சேர்ந்து உழைத்தோம்.. நான் சேரும்போது இருந்ததை விட இப்போது சேர்ந்து ஒரு எட்டு வருடங்களில் பல மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளோம். நான் சேர்ந்தபோது வாங்கியதை விட என் சம்பளம் இப்போது கிட்டதட்ட எட்டுமடங்குக்கு மேல் அதிகம்.

இது சாத்தியமானது டீம் வொர்க்கால் தான், எல்லோருக்கும் தெரிந்தது தான், டீம் வொர்க் என்றால் என்னவென்று. எளிதாக சொல்லவேண்டுமென்றால், ஒரு டைரக்டர் படம் எடுப்பது போல் வைத்துக்கொள்ளுங்கள்.. அந்த டைரக்டர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்த ஹீரோவும் முக்கியம், இசையமைப்பாளர் முக்கியம், ஏன் லைட்பாய் வரை முக்கியம் தான் சொல்லப்போனால், கிட்டத்தட்ட அதுபோல்.

இன்னும் விபரமாய் டீம் வொர்க் குறித்து இன்னொரு நாளில்..

அன்புடன், வசந்தா நடேசன்.

Wednesday, February 23, 2011

தனிமை..

என்னுடன் இருக்கும் இரண்டு நபர்களும்
இப்போது விடுமுறையில்..
நான் மட்டும் நாளை முதல் தனியே இங்கு தனிமையில்!
தனிமை எனக்கும் பிடிக்கும் தான்..இல்லையென்று சொல்வதற்க்கில்லை,
இருந்தாலும் வேளை நெருங்க, நெருங்க
கொஞ்சம் உதரல்தான், மறுப்பதற்க்கில்லை..

இப்படியாய் இதற்குமுன் ஆனதில்லை எப்போதும்,
வேண்டுமென்றே இருவரும் போகவில்லை இப்போதும்..
ஒருவர் நீண்டுபோன மகள் திருமணம், இனிதாய் நடத்திடவும்,
இன்னொருவன் புதிய மகன் வரவை,
கையில் அள்ளிவைத்து ரசிப்பதற்க்கும்.
வெளிநாட்டு விகிதங்கள் புறிகிறதா இப்போது?

பதினைந்தே நாட்கள் தான், இருந்தாலும்
பதருகிறாள் மனைவி - ஒரு விசா கொடு வருகிறேன் என்றாள்??
என்னடா இது, எழுத்துக்கடைக்கே சோதனையாவென்று..
எனக்கு தனிமை பிடிக்கும் என்று உதார்விட்ட உடனேயே..
அதுதான் 'தெரியுமே' என்றவளும், கொஞ்(சி)சம் அடங்கினாள்!

காலை, மதியம் என்று தினம் இருவேளையுடன்,
இனி ‘ராத்திரியும்“ பேச வேண்டுமாம்,
ஏதோ அவள் ரசனைக்கு ஒரு புது உத்தரவு.
உதரலுடன் நானும் ‘ம்ம்‘ என்றேன், அதைத்தானே செய்யமுடியும்?

கைக்கெட்டும் தூரத்தில் பதிவுலகம் உண்டெனெக்கு
திக்கெட்டும் புகழ் பரப்பும் தூங்காத புற உலகம்!
மாலை முழுவதுமே அதுதானே துணையிப்பம்,
காலை வரும் வரைக்கும் ‘பொட்டி தட்ட‘ நான் ரெடிதான்.

என்னென்ன செய்யவேண்டும் - மனதில்
திட்டமிட்டு வைத்துவிட்டேன், பழக்க தோஷம்!
இனி அறைக்குள் இருக்கும் நேரம் கொஞ்சம் குறைத்திடணும்,
வெளியே விட்டு விட்ட வேலைகளை
ஒண்ணொண்ணாய் தொடங்கிடணும்.

முடிந்தவரை மாலை வாக்கிங் தொடங்கிடணும் நாளைமுதல்,
ஹோட்டலில் தான் உணவு இனி, நண்பர்கள் வரும் வரைக்கும்!
இரண்டு மணி நேரம் இப்படி செலவழித்தால்
தனிமை கொஞ்சம் குறையும் தானே??

விட்டு விட்ட ‘தியான‘ தோஷம்
தொட்டுப்பார்க்கும் முடிவும் உண்டு..
நண்பர்கள் கலகலப்பில் தியானத்தை தொலைத்துவிட்டேன்
விட்டதை பிடிப்பதற்கு கடவுளாய் கொடுத்ததுவோ?

கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்ததில்லை இந்த பதிவு. 15 நாள் தனிமை கிடைக்கப்போகிறது இத்தனை நாட்களில் இப்போது தான். 12, 13 பேருடன் 2 பெட்ரூம் ஹாலில் ஒரு காலத்தில் முன்னர் தங்கிய போது, ஏங்கியதுண்டு தனிமைக்காக.

இப்போது 2 பேர் மட்டும் உடன் இருக்கிறார்கள், இதோ தனிமை அருகில் வரும்போதே மனதுக்குள் ஒரு புரியாத ஒரு உதரல் வந்தது உண்மை.

சரி என்னென்ன செய்யலாம் என்று யோசித்து வைத்திருந்தேன். எல்லாவற்றையும் நம்ம டைரியில் எழுதிப்புடலாம் என்று ஆரம்பித்த பதிவுதான். ஆனால் தலைப்பை எழுதியதும் கொஞ்சம் கவித்துவமாய் தெரிந்தது (நம்ம குத்தம் இல்ல சார்)

முயன்று பார்ப்போம் என்று சுரத்தே இல்லாமல் ஆரம்பித்தேன். இதை யாரேனும் ரசித்திருந்தால் அது நம் தமிழின் உள்ளடங்கிய அற்புதம் தான். இதில் எனக்கு பங்கேதும் இல்லை.

சத்தியமா, ஏதோ சின்ன வயதில், பன்னெண்டாப்பு படிக்கும் போதும், கல்லூரி நாட்களிலும் நான் கொஞ்சம் கவிதை மழை கொட்டியதுண்டு. அதை எல்லாம் ஆவணம் ஆக்கிப்புடணும்டான்னு கழிந்த முறை ஊருக்கு போனபோது தேடிப்பார்த்தேன், என் பழைய பொட்டியில், என் மனைவிக்கும் தெரியும் பழைய கிறுக்கல்கள் பற்றி. அது என்ன எழவுக்கு இப்ப? என்று என் ஆர்வத்தை பார்த்து பயந்து, அவளும் தேடுவது போல் நடித்தாளா அல்லது தேடினாளா? தெரியாது, பதிவுலகம் குடுத்து வைச்சது அவ்ளோவ் தான், வேற என்னத்த சொல்ல? எல்லாம் போய்விட்டது, ஒன்றும் கிடைக்க வில்லை.

சரி, அன்றைய காதல் கவிதைகைள், அதை இப்ப நாம எழுதியும் பிரயோஜனம் இல்ல என்று விட்டு விட்டேன், ஆனா பாருங்க, தலை எழுத்த மாத்த முடியுமா?? அன்றைய காதல் கவிதைகள் இப்ப அனுபவக்கவிதையா கொட்டணும்னு விதி(?) இருந்தா யாரால மாத்த முடியும்!

அன்புடன், வசந்தா நடேசன்.

Tuesday, February 22, 2011

கவுண்டர்கள் ஜாக்ரதை!!!

கவுண்ட மணி ஜாக்ரதை என்றுதான் முதலில் பெயர் வைத்தேன், சாரிங்கோவ், ஹிட் மேல் வந்த பிரியத்தினால் (நாளை ரேங் 353 குறைகிறதா பார்க்கலாம், ம்ம்ம் படிக்கும் போது கூட கவலைப்படல, காலத்தின் கோலம், என்னன்னு சொல்ல) பின்னர் மாற்றினேன் என்று அறிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன், ஆனாலும் நீங்கள் வந்தது வீணாகப்போவதில்லை, சின்ன பதிவு தான் சார், தைரியமா மேல போங்க.

நேற்று இன்னொரு முன்னணி பதிவர் பதிவுலகில் எனக்கு அறிமுகமானார், பதிவுலகில் ஒரு ஜாம்பவான் என்று தெரியும், நான் பதிவு எழுத ஆரம்பிக்குமுன் படித்திருக்கிறேன் அவர் பதிவுகளை. இப்ப நெரைய டிங்கரிங், பெயிண்டிங் பண்ணி (பன்னி இல்ல) வண்டிய கொஞ்சம் புதுசா உட்ருக்காரு போல தெரியுது.

ஓக்கே, இனி ஸ்டார்ட், மியூசிக், புரிந்திருப்பீர்கள் யாரென்று, இன்னும் புரீலியா?? நீங்க புது ஆளு.. மாட்னீங்க இன்னைக்கி. சுட்டுங்கள் கீழே, நீங்கள் அந்த பதிவை போய் சேர்ந்தது முதல் வெளியேரும் வரை சிரித்துக்கொண்டிருப்பீர்கள், நான் கேரண்டி, எங்க கையெழுத்து போடணும்,சொல்லுங்க, நான் ரெடி??

ஹெட்லைன் முதல், லெப்ட், ரைட்டு சைடு பார் வரை படித்துப்பாருங்கள், இன்னும் வயிறு வலிக்க வேண்டும் என்று விதியிருந்தால் பின்னர் நீங்கள் பதிவுகளை படிக்கலாம்.

இங்கே ஸ்டார்ட், மியூசிக்

அப்டில்லாம் பாக்கக்கூடாது சார், இன்னைக்கு மேட்டர் ஒண்ணும் கெடக்கல, சரி இதுவே போதும் என்று விட்டுவிட்டேன், கவுண்டமணி (நம்ம பதிவர்தான்) மன்னிப்பாராக..

டிஸ்கி :- இவருக்கு அறிமுகம் தேவையில்லைதான், இருந்தாலும் எல்லோரும் புதியவர்களை அறிமுகப்படுத்தும் போது நாமும் நம் பங்குக்கு பதிவுலகுக்கு ஏதும் செய்யவேண்டும் அல்லவா?? அதனால் தான். (எப்டீல்லாம் சமாளிக்கவேண்டிருக்கு!!!)

அன்புடன், வசந்தா நடேசன்.

சொந்தகதை, சோக கதை



வெளிநாட்டு மோகம் (எங்க, அதுக்குள்ள, நம்மள முளுசா படிச்சிட்டு போங்க, என்னைப்பத்தி தெரியும்ல! பிச்சுபிடுவேன், பிச்சு) என்று ஒரு நண்பர் நேற்று எழுதியதைப்படித்ததிலிருந்தே ஒரு சோகம் மனதில் இழையோடிக்கொண்டிருந்தது.. அவர் பதிவில் ஒரு பதிலும் போட்டுவிட்டேன், ஏதோ அவசரத்தில் சிறு நகைச்சுவை இழையோட(?) அலுவலகத்தில் வேலையில் இருக்கும் போதே ஆர்வம் தாளாமல்.

மாலை வீட்டிற்கு வந்து நிதானமாக அந்த பதிவிற்க்கு வந்த எல்லா பதில் கருத்துகளையும் படித்து பார்த்தேன், பலதரப்பட்ட கருத்துகளும் இருந்தன, உண்மையில் அது மனதை ஒரு சீராய்வு செய்ய வேண்டிய நேரம் போல் இருந்தது.

மாலை இன்னும் ஒரு கருத்து சொல்லலாமா என்று யோசித்தேன், அது கொஞ்சம் நீளும் போல் இருந்ததால், சரி இதை நம் ஒரு பதிவாகவே விட்டுவிடுவோம் என்று நம்ம கடைக்கு வந்து விட்டேன்.

ஏன், எதற்க்கு, எப்படி, எந்த நிலையில் வந்தோம் என்பதில் அவரவர்க்கு ஒரு ஆயிரம் காரணங்கள் இருக்கும் சொல்வதற்க்கு, நான் அந்த பதிவில் நண்பர் எழுதியிருப்பதில் அனேகத்தை ஒத்துக்கொள்கிறேன், அதை இங்கே விளக்க முற்பட்டால் அவரை காப்பி அடித்தது போல் ஆகும். ஏற்கனவே நீ எழுதியது தானா?? அல்லது ‘மண்டபத்ல யாராவது எழுதிக்குடுத்தாய்ங்களா‘ன்னு கேக்குறாங்க சார்.

பள்ளோடத்லயே சீராய்வு மற்றும் ரிவிஷன் கருமம்லாம் பண்ணதில்லை.. பண்ணிருந்தா நாமளும் ஊருலயே இருந்துருப்போம்ல?? ஆனால் இது எண்ணற்ற சுதந்திரங்கள் கொண்ட பதிவுலகம், கையில் பிரம்புடன் பின்னால் போடவும், தலையில் குட்டவும் அருகில் யாரும் இல்லை என்று வாழும் உலகம்.

நான் அப்போது முதன்முதலில் ஏர்போர்ட் வந்த நாட்கள் நினைவுக்கு வந்தன.. என் குடும்பமே அழுதது அருகில் நின்று ஏர்போர்ட் வரை வந்து. மனைவியின் கண்ணீர் மாளாது.. நான் அப்போது இந்தியாவில் வாங்கிய அதிகபட்ச சம்பளம், ரூபாய் 6250 மாதம் ஒன்றுக்கு. இரண்டு குழந்தைகள், ஊரில் அப்பா கட்டிய சொந்த வீடு இருந்தாலும், மாடி போர்ஷனை லீசுக்கு கொடுத்து விட்டு நான் வேலைபார்த்தது திருநெல்வேலியில். அந்த சம்பளம் வாங்கி குழந்தைகளை கவனித்து வீட்டை மீட்பது ஒரு கனவாகவே பட்டது எனக்கு.

நெஞ்சில் பாரம் அடைக்க ஏர்போர்ட்டுக்குள் சென்றேன். பொதுவாகவே முதல்முறை வருபவராக இருந்தாலும் சரி, முப்பதாவது முறை வருபவராக இருந்தாலும் சரி, தனியாய் என்னைப்போல் இந்திய ஏர்போர்ட்டுகளில் கிளம்பி வரும்போது வழக்கமாய் முகத்தில் ஈ ஆடாது. ‘உம்‘ மென்று இருப்பார்கள். அதே இங்கிருந்து ஊருக்கு செல்லும் போது பயபுள்ளைகளின் முகத்தில் சிரிப்பை பார்க்கவேண்டுமே, ஆஹா, ஓஹோ என்று டியூட்டி ப்ரீயில் பர்ச்சேஸ் கள கட்டும், முடிந்தவரை வாங்கித்தள்ளுவார்கள் உறவுகளுக்காக.

மாப்ளை நாலு பாட்டில்தான் உடுவானாம்ல?? என்ற கருத்துரைகள் அதிகமாக கேட்கும். சரி எங்கள் விடுமுறைக்காலம் எப்படி இருக்கும் என்ற சொந்தகதை, சோக கதை??

30 நாள் லீவில் முதல் வருடம் சென்றவுடன்..

வரவேற்ப்பு பலமாக இருக்கும், நல்லாயிட்டடா, நல்லவாடா என்று தெருவில் காணும் உறவுகள் நண்பர்கள் எல்லாம் சொல்வார்கள், எப்ப வந்த, எப்ப வந்த என்று நச்சரிப்பு தாளாது. மனைவி கடைசி வாரம் நெருங்க, நெருங்க மீண்டும் அழுகை ஆரம்பித்திருப்பாள்.
போகவேண்டும் என்று சொல்லும் போது, இப்பதான் வந்த, அதுக்குள்ளயா? என்பார்கள் உறவுகள்.. எல்லாம் நடக்கும்.

முதல் வாரம் பார்ப்பவர்கள், ம்ம், எப்ப வந்த, நல்லா இருக்கியா, என்பார்கள்.

இரண்டாம் வாரம், எல்லாம் நல்லா இருக்கா, வேலை எல்லாம் எப்படி என்று விசாரணைகள் இருக்கும்.

மூன்றாம் வாரம், மக்கா, நல்லா இருக்கியா? நம்ம வீட்டு பக்கம் ஒரு நடை வரப்பிடாது?? ஏதாச்சும் விசா இருந்தா சொல்லு நம்ம பய ஒருத்தன் இருக்கான், கொஞ்சம் தூக்கி விடு மக்கா என்பார்கள்.

அடுத்த வாரம், அந்த பயலுடன் வந்து நிற்ப்பார்கள், கையில் பாஸ்போர்ட் காப்பி மற்றும் பயோடேட்டா சகிதம். நாம நம்ம விசா எப்ப கிழியப்போகுதோன்னு இருப்போம், அந்த சமயத்துல இவுக?

ஐந்தாம் வாரம், மக்கா பாத்து சரி பண்ணிரு, போன்பண்ணு என்ன? என்பார்கள் கிளம்பும் போது மெனக்கெட்டு எதிரில் வந்து சந்தித்து.

உதவக்கூடாது என்ற எண்ணமில்லை, நான் வேலைசெய்யும் இடத்தில் இப்போது 80 சதவீதம் தமிழர்கள் தான், இதற்க்கு நானும் ஒரு சிறு காரணம். ஆனால் அதற்க்கான தேவைகள் வரும்போதுதான் இதை செய்ய முடியும். ஊரில் கேட்டவுடன் செய்யும் நிலையில் அனேகமாய் யாரும் இருக்கமாட்டார்கள். அல்லது நாம் தேடும் தகுதியுடைய நபர் நம் சொந்தத்தில் இல்லாமலிருப்பார், தகுதியில்லாத நபர்களை எடுத்தால் நமக்கு நேரமும், பண விரயமும், காலவிரயமும் தான் மிச்சமாகி இருக்கிறது அனுபவத்தில். சம்பந்தம் இல்லாமல் இது ஏன் இங்கே என்றால் கீழ்கண்ட கடுப்புதான் யுவர் ஆனர்??

5 வருடங்கள் கழித்தும் நாம் யாருக்காவது ஒருசிலருக்கு உதவும் நிலையில் இருந்திருக்கமாட்டோம் பல சமயங்களில். அப்போது எப்படி நம் விடுமுறை கழியும்?, படியுங்கள் கீழே.

முதல் வாரம் பார்ப்பவர்கள், ம்ம், எப்ப வந்த, நல்லா இருக்கியா, என்பார்கள்.

இரண்டாம் வாரம், நம் கண்ணிலேயே ஒருவேளை பட்டிருக்க மாட்டார்கள், ஒரு வேளை பார்த்தால், ம்ம், நல்ல ஜோருதான், புது வீடு எல்லாம் வாங்கிட்ட போல இருக்கு, பாத்துக்க, அது கொஞ்சம் வில்லங்கமான இடம், நாலு இடத்துல விசாரிச்சுதான் வாங்கினியா என்பது போல் பேச்சு இருக்கும்

மூன்றாம் வாரம், என்னா வந்து ரொம்ப நாளாச்சு போல இருக்கு? ம்ம், வேலை முக்கியம் பாத்துக்கோ என்பார்கள்.

நான்காம் வாரம் கேட்பார்கள் பாருங்கள் ஒரு கேள்வி?? நீ இன்னும் போகலையா?? விட்டால் அவர்களே நம்மை ஏர்போர்ட்டில் கொன்டு விட்டுவிடுவார்கள் போல் இருக்கும்.

ஒரு வேளை ஐந்தாம் வாரமும் நாம் கண்ணில் பட்டு தொலைத்தால், வேலைய உட்டு தூக்கிட்டானா?? அப்ப இனி இங்கதானா?? என்ன பண்றதா உத்தேசம்?? என்பார்கள்.



நம்ம நிலைமைய பாத்தீங்களா?? ம்ம்ம்ங்ங்ங்.

வேதனையுடனும், சோகத்துடனும், வசந்தா நடேசன்.

Monday, February 21, 2011

தமிழ் மணம் தர வரிசை

இன்றைய பிரபல பதிவரின் ஒரு பதிவை படித்தபோது எனக்கும் இந்த எண்ணம் வந்து தொலைத்தது.. போதாத காலமோ என்ன எழவோ என்று நினைத்துக்கொண்டே என்னை சத்தியசோதனைக்கு ஆட்படுத்தினேன்.

முதலில், நீங்கள் ப்ரீ கேட்டகரில இருக்கீங்கோ, தரவரிசை எல்லாம் இல்லை என்று வந்தது.. ஓஹோ, காசு கட்னாத்தான் குடுப்பாங்க போலன்னு நினைச்சுட்டு சரி, ஆராரு இருக்கான்னு பாப்போம் என்று மேய்ந்து கொண்டிருந்தேன். வரிசை போனது, போனது போய்க்கொண்டே இருந்தது நீளமாக பக்கம், பக்கமாய்.. இரண்டாயிரத்தை தாண்டி..

என்னடா இது, நம்ம அவ்ளவ் மோசமா என்று நினைத்துக்கொண்டு எழுதுரதை நிப்பாட்டிபுடலாம் என்ற ஒரு எண்ணத்திர்க்கே வரஇருந்தேன்.. நல்லவேளை பதிவுலகம் செய்த புண்ணியம்..(???###@@@$$$!!!) இன்னொருமுறை செக் பண்ணலாமே என்று ஒரு எண்ணம் வந்து மீண்டும் சரியாக ப்ளாக் நேமை காப்பி பேஸ்ட் பண்ணினேன்..
366



ஒரு நிமிடம் துள்ளிக்குதித்துவிட்டேன், இதெல்லாம் நமக்கு ரொம்ப பழகிய நம்பராச்சே! நாமல்லாம் படிக்கும் போது அனேகமாய் 36 வது ராங்குக்கு மேல்தான்!! 36 என்பது பாத்து, பாத்து பழகுன நம்பர், இப்பம் கூட ஒரு ஆறு.. 366. எதிர்பார்க்கவில்லை. நான் ஏதோ 3699 என்பது போல் ஒரு நம்பரை தான் உண்மையில் எதிர் பார்த்தேன.. சூப்பர் போங்கள்.

இந்த பதிவுலக போதையை சுட்டியிருக்கும் அதே நேரத்தில் இன்று படித்த ஒரு நியாயமான பதிவும் முன்பு படிக்காதவர்கள் படிக்கவேண்டும் என நினைப்பதால் கீழே சுட்டியை தருகிறேன்.. பதிவுலக போதையினால் என்னென்ன நடக்கலாம், எவ்வாறு உங்கள் பாதையை அது திசைமாற்றக்கூடும் என்று ஒரு ஆராய்ச்சி பண்ணியிருக்கும் பதிவு..


ஹிட்ஸ்............சீரழிவின் தொடக்கம்!

Sunday, February 20, 2011

ஹெல்த் ட்ரிங்!!!

வணக்கம்.

நம் நாட்டில் பரவலாக இப்பொழுது நடைமுறையிலிருக்கும் நம் பொதுவான ஹெல்த் ட்ரிங் பற்றிய ஒரு பதிவு இது. நம் குடிகளுக்கு எது ஹெல்த் ட்ரிங் என்பதைப்பற்றிய ஒரு பொதுஅறிவு அவசியம் என்று கருதியதால் வந்த ஒரு வெளிப்பாடாகவும் இதை கருதலாம். இதனை பற்றிய ஒரு பறந்து விரிந்த விவாதம் மிகவும்அவசியம் என்ற பேரவாவும் இதனை இப்போதே எழுத தூண்டியது என்பதையும் நான் தங்களுக்கு விளக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

மிகுந்த பொருட்செலவில் நம் ஆராய்ச்சியாளர்கள் பெரும்பணம் செலவு செய்து மற்றும் தங்கள் வாழ்க்கையையே அற்பணித்து கண்டுபிடித்த ஆராய்ச்சி முடிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நாட்டிற்கு பெரும் வருமானத்தை தரும் நம் குடிகள் இன்னும் எத்தனை காலம் தான் நம் சமூகத்தால் இப்படி அவலநிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள் என்று நினைத்தாலே நெஞ்சம் பதருகிறது. இன்று வீட்டிற்க்கு வீடு டிவி, கேஸ்ஸ்டவ் எல்லாம் இலவசமாகவே கிடைத்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்க்கு காரணமான குடிகள் கவனிப்பாரற்று நக்கலும் நையாண்டியுமாக இன்று புறக்கணிக்கப்படுவது சரியல்ல என்ற நினைப்பும் இதனூடே இளையோடியிருப்பதை சுட்டிக்காட்டும் கடமை இருக்கிறது எனக்கு.

அதுவும் ஒரு அரசியல் கட்சியினர் இந்த குடிகளை ஒழித்தே தீருவேன் என்று காலத்திற்க்கு ஏற்றார்போல் அதில் வீரியம் காட்டுவதும், பின்பு பதுங்கி போவதுமாக இருக்கும் இப்போதைய நிலையில் வெளிவரப்போகும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் எவ்வளவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்

இன்னும் எத்தனை காலம் தான் பொருப்பது, இதற்க்கு ஒரு முடிவு கட்டும் பொருட்டே மிகுந்த கைவலியுடன் இதை வெளியிட வேண்டிய ஒரு நிர்பந்தம் வாய்த்தது. வரும் செய்திகள் நியாயமானது அல்ல என்பதை உணர்ந்து நம் சமூகம் மேலும் எழுச்சியுற வேண்டும் என்ற என் நல்லெண்ணத்தையும் நான் இங்கே விளக்கவேண்டியிருப்பது காலத்தின் கட்டாயம்.

இனி கீழ்கண்ட பட்டியலை திறந்த மனதுடன் படித்து எது உங்கள் ஹெல்த் ட்ரிங் என்பதை நிறைந்த மனதுடன் முடிவெடுங்கள் என்று வலியுருத்துவதோடு என் கடமை செவ்வனே முடிவடைந்தது என கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.





நன்றாக தெளிந்து முடிவெடுத்தபின், மேலதிக விபரங்களுக்கு பிரபா ஒயின்ஷாப்பை உடனடி தொடர்பு கொள்ள நம் குடிகள் இப்போதே ஆணையிடப்படுகிறார்கள்.

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி:- சும்மா நகைச்சுவைக்காக எழுதப்பட்டதே.. ஆராய்ச்சி முடிவுகள் அற்புதம் என்று யாரும் ‘சீரியஸ்‘ ஆகி மோசம் போய்விட்டால் கம்பெனி பொருப்பல்ல.. எல்லாம் டுபாக்கூர் ஆராய்ச்சி முடிவுகளே என்பதுதான் என் அபிப்ராயம். எல்லா முடிவுகளும் அடிக்கடி ரிப்பீட் ஆவதால்.. ஆராய்ச்சி முடிவுகள் ஒரு நண்பரால் ஈமெயிலில் அனுப்பப்பட்டது, முகம் தெரியாது ஆனால் இந்திய நண்பரிடம் இருந்து தான், அதை எழுதியவருக்கும் ஒரு நன்றி இப்போதே சந்தடி சாக்கில்.

பிரபா, நகைச்சுவைக்காக தங்கள் பதிவிலிருந்து ஒரு படத்தையும், லிங்க்கையும் கொடுத்துள்ளேன், தவறென்றால் சுட்டிக்காட்டவும், உடன் நீக்கிவிடுகிறேன்.

Thursday, February 17, 2011

போட்டு தாக்குறாளுங்கண்ணா!

தலைப்பு எழுதும் போதே தவறிப்போய் இது பப்ளிஷ் ஆகிவிட்டது, சத்தியமாய் என் தவறல்ல..

சரி நேரா பாயிண்டுக்கு வருகிறேன்.

தினமும் காலை ஒரு ஐந்து நிமிடம் மதியம் ஒரு 10 பத்து நிமிடம் குடும்பத்திடம் பேசிவிடும் வழக்கம் எனக்கு. எடிஸலாட்லயா, டூ லயா ன்னு கேக்காதிங்க, இது வேற சமாச்சாரம்.

இன்னும் ஒரு வாரத்தில் உடனிருக்கும் ஒருவன் ஊருக்கு போகிறான். சரி அவன் வரும்போது இது வாங்கி கொடுத்துவிடு, அது வாங்கிக்கொடுத்து விடு என்பதெல்லாம் வழக்கமான தொல்லைகள் தான்.

ஆனால் அந்த தொல்லைகளை எப்படி நாங்கள் சமாளிக்கிறோம் அல்லது ஊரிலிருக்கும் சொந்தங்கள் எப்படி அனலைஸ் பண்ணி சரியாய் எங்களை பயன் படுத்துகிறார்கள் என்பது தான் இந்த பதிவின் கதை.

இதை சொல்லும் போது என் குடும்பத்தை பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும் உங்கள் புறிதலுக்காக. நானும் என் பெற்றோர்களும் சேர்ந்து ஒரே குடும்பமாய் வாழ்கிறோம் இன்று வரை, என் மனைவியின் சாமர்த்தியமும் இதில் உண்டு. அக்கா பக்கத்து தெருவில் வசிக்கிறாள்.. எனக்கு ஒரு பையன் இப்போது பிளஸ் டூ வில், ஒரு மகள் சிக்ஸ்த் ஸ்டேண்டர்டு. பதிவுலகில் என் பெயர் என் பெற்றோர்களின் கூப்பிடு பெயர்களே, அவர்களின் சர்டிபிகேட் பெயர் வேறு.. இந்த கட்டுரைக்கு இது போதும் என நினைக்கிறேன்.

இந்த முறை முதல் கோரிக்கை என் பையனுக்கு ஒரு வாட்ச் வேண்டுமென்று வந்தது. டைட்டனின் ஃபாஸ்ட் ட்ராக், மாடல் பெயர் எல்லாம் சொல்லி வாங்கிக்கொடுத்து விடுங்கள் என்று மனைவி (மகன் பேச/கேட்க வில்லை.. நோட் பண்ணிக்கொள்ளவும்) கொஞ்ச நாளாய் நச்சரிப்பு.

நானும் சொன்ன அந்த வாரத்திலேயே டைட்டனின் ஃபாஸ்ட் ட்ராக் வாங்கி வைத்து விட்டேன் ஊர் செல்பவனிடம் கொடுப்பதற்க்காக. அவன் பர்ச்சேஸ் செய்யும் போது அவனே தான் வாங்கி வந்தான், எனக்கு பொட்டி தட்டும் வேலை இருப்பதால். என் எண்ணம், அவனும் பர்ச்சேஸ் செய்யும் போது நம்மால் ஓவர் லக்கேஜ் ஆகிவிடக் கூடாது என்பதுதான்.

ஒவ்வொரு நாளும் கேட்கும்போது இன்னும் வாங்கவில்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தேன் இதன் அரசியல் கொஞ்சம் அத்துப்படி ஆகியிருந்த காரணத்தால். விட்டிருந்தால் உடனிருப்பவன் ஊர்போகும் வரை இதைத்தான் சொல்லியிருப்பேன்.

இன்று என் மகனுடன் பேசும் ஒரு சந்தர்ப்பத்தில் அவன் டாடி வாங்கினீங்களா எனும் போது பொய் சொல்ல மனம் வரவில்லை. ம்ம், வாங்கிருக்கென், டைட்டனின் ஃபாஸ்ட் ட்ராக் ஆனால் மாடல் எல்லாம் எனக்கு தெரியாது, ... அண்ணன் தான் வாங்கிட்டு வந்தான், அவனைக்கேட்டுக்க என்றேன்.

உடனே என் மனைவி போனை வாங்கி என்ன வாங்கிட்டீங்களா, எனட்ட வாங்கல ன்னு சொன்னீங்க?? சரி மகளுக்கும் வாட்ச் வேண்டுமாம், என் வாட்ச்சும் மாற்ற வேண்டியதுதான் இப்ப, எங்களுக்கும் வாங்கிக்கொடுத்து விடுங்க என்றாள்.

நான் இதை எதிர்பார்த்துதான் இத்தனை நாளும் சொல்லாமல் இருந்தேன். இன்னும் இரண்டு மாதத்தில் எல்லோருமே இரண்டு மாதம் பள்ளி விடுமுறைக்கு இங்கே வந்துவிடுவார்கள், ‘நான் துபாய்ல குடும்பஸ்தன்ங்க‘ என்று ஒரு பதிவு எழுதிவிட்டு நான் 2 மாதம் உங்களிடம் லீவு வாங்கிச்செல்லவேண்டும்.

நான் சொல்லவந்தது குடும்ப அரசியல் குறித்து, என் மகள் எனக்கு ரொம்ப செல்லம், அதற்க்காக மகன் செல்லமில்லை என அர்த்தமில்லை. அவன் இன்னும் நேரடியாய் எதுவும் கேட்கமாட்டான், எல்லாம் அம்மா வழியாய் தான். ஆனால் மகள், டாடி, நான் டூர் போறேன், போறதா, வேண்டாமான்னு சொல்லுங்க, போறதுன்னா எனக்கு இவ்வளவு வேணும் என்று நேரடியாய் என்னிடம் கேட்டு விடுவாள், என் மனைவி பின்னாலிருந்து அலர, அலர.. அவள் அது குறித்து அறிந்திருக்கவே மாட்டாள் அதுவரை?

இன்னும் ரெண்டு மாதத்தில் இங்கே வரப்போகும் இவர்கள், இங்கு வந்து வகை, தொகை தெரியாமல் கண்ணில் கண்டதையெல்லாம் வாங்கி நான் எக்ஸ்ட்ரா லக்கேஜ் கட்டித்தான் அவர்களை ஒருவழியாய் அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் பதிவுலகிற்க்கு வரவேண்டும். ஆனால் அவர்கள் தேவைகளை எப்படி நிறைவேற்றுகிறார்கள் பாருங்கள்.

எனக்கு வாட்ச் வேண்டும் வாங்கி கொடுத்து விடுங்க என்று சொல்வதில் கூச்சம் என் மனைவிக்கு, மகள் கண்டு கொள்ளவே மாட்டாள், அவள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள அவளுக்கு தெரியும்?? இருவரும் சேர்ந்து என் மகனை வைத்து கேம் ஆடிவிட்டு கடைசியில் எனக்கும் வேணும், எனக்கும் வேணும் என்று கத்தியதை புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

வேறு வழி, இனி நான் இன்னும் இரண்டு வாட்ச் வாங்கவேண்டும்.. ம்ம்ம்ங்ங்ங்.

அன்புடன், வசந்தா நடேசன்.

Wednesday, February 16, 2011

மன்னிக்கவும் இன்னொரு கதை..

வணக்கம், இன்றும் ஒரு அனுபவப்பதிவே..

வெகு சமீபம் என்றுதான் சொல்லவேண்டும்.. இன்று ஒன்றுக்கும் ஆகாமல் சோம்பேறி குப்புசாமி போல் ச்சும்மா எந்தக்குறிக்கோளும் இல்லாமல் இணையத்தை மேய்ந்தபோது திரும்பவும் ஒரு ஜெயமோகன் கதையை படிக்க நேர்ந்தது, இது விபத்தா அல்லது தேடிப்போய், காசுகொடுத்து (இன்டர்நெட்டுக்கு காசு கட்டணும் சார்..) வாங்கிய சனியனா?? என்று தெரியாது. ஆனால் அந்த கதையை என்னால் வரிக்கு வரி ரசிக்க முடிந்தது, ஏன் பல இடங்களில் வாய்விட்டு சிரித்தேன் என்பதுதான் நிஜம்.

பலவகை எண்ணங்கள் வந்தன.. கதையை படிக்கும் போது, ஆஹா இந்த ஆள் இந்துக்களை சாடுகிறார் என நினைத்தேன் முதலில். பின்னர் ஒரு நிலையில் இவர் கிறிஸ்தவர்ளையும் வறுக்கிறாறே என்று தோன்றியது, இது என்னடா இது என்று தொடர்ந்தால், ஹிந்துக்களையும் , கிறிஸ்தவர்களையும் சேர்த்துப்பிடித்து ஒரு அவியல் பண்ணுகிறார் முடிவில். அது அவியல் அல்ல, ஓரளவுக்கு உண்மையிருக்கலாமோ?? என்று தோன்றியது, என் ரசனையை கதையை கடைசிவரி வரை படித்துவிட்டு கூறினால் மகிழ்வேன். முஸ்லீம்களுக்கும் இந்த கதைக்கும் ஒரு தொடர்பும் இல்லை, நீங்கள் நம்பி வந்து படிக்கலாம், ரசிக்கலாம்.

நான் கடவுள் என்பதனை 100 சதவீதம் நம்பும் ஆத்திகனும் அல்ல.. (ஆத்திகர்களிலேயே பலர் நம்புவது இல்லை என்று தெரியும்) அல்லது நூறு சதவீதம் நம்பாத நாத்திகனும் அல்ல. (நாத்திகர்களிலேயே பலர் மஞ்சள் துண்டுடன் நம்புகிறார்கள் என்றும் தெரியும்) ஏதோ இருக்கிறது என்பதை நம்புகிறேன், அதை கேள்விகேட்காமல் ஒத்துக்கொள்கிறேன், என் பார்வைக்கு சரி யெனும் பட்சத்தில்.

நான் அல்லது நாம் இன்று ஒன்றை சரியென்போம், நாளை இன்னொன்றை சரியென்போம், அது மனித இயல்பு. அதற்க்கு மதத்தையோ அல்லது ஜாதியையோ மனதில் வைத்து தனிமனிதரை குறைசொல்வதிலோ அல்லது விவாதங்களில் இறங்குவதோ பயனில்லை. நம் முன்னோர்கள் நிறைய இதுகுறித்து செய்திருக்கக்கூடும், நாம் இது விஷயத்தில் புதிதாக ஒன்றும் செய்யமுடியாது என்பதுதான் என் நிலை.

இருந்தாலும் யார் யார் இதை ரசிக்கமுடியும் யாரால் முடியாது என்பதையும் சிறு உலக அனுபவத்தால் இப்போது சொல்லவேண்டியது என் கடமை என்று நினைப்பதால் ஒரு சிறு பட்டியல் கீழே.. உங்களுக்கு கீழ்வரும் தகுதியும், திறமையும்(?) இருக்கிறதென்றால் கடைசியில் வரும் சுட்டியை சுட்டி மகிழுங்கள், நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டுமல்லவா?

1) முஸ்லீம்கள் தாரளமாக இதை படிக்கலாம், இது ஹிந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் போட்டு கும்மியிருக்கும் கதை.
2) நீங்கள் தீவிர ஹிந்து/கிறிஸ்த்தவ விசுவாசி என்றால் இப்போதே அப்பீட் ஆகிக்கொள்ளுங்கள், இந்தக்கதை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடும்.
3) இதையும் மீறி படிக்கிறீர்களா?? அவசரப்பட்டு பாதியில் வந்துவிடவேண்டாம், கடைசி வரை படியுங்கள், என்னை நம்பி.
4) நான் இந்தக்கதையில் பார்த்தது, ஜாதி, மத வித்தியாசமில்லாத ஒரு ஜெயமோகனைத்தான், ஆனால் அவரை ஜாதியவாதி என்றும், இந்துத்வா என்றும் இதற்க்குமுன் இணையத்தில் படித்தது தவறு என்று உண்மையில் எனக்கு தோன்றியதால் தான் இதை எழுதுகிறேன்.
5) நான் இன்று ஜெயமோகன் ஆஹா ஓஹோ என்பேன், நாளை எனக்கு தவறெனப்பட்டால் அதையும் இதைப்போல் சுட்டிக்காட்டுவேன் (எப்பூடி..) , என்னை நம்பலாம் என்று தோன்றினால் கீழே சுட்டலாம்

மாடன் மோட்சம்

அன்புடன், வசந்தா நடேசன்.

Tuesday, February 15, 2011

‘நை‘ நை‘ நை‘நை‘ ‘ளை‘ ‘ளை‘‘ளை‘.....

நீங்கள் அறுபதுகளில் பிறந்தவர்களா?? ஆம் உங்களையும் பாதித்த ப்ரச்னை இது, அதற்க்கு முன் பிறந்தவர்களென்றால் ஒருவேளை இதை கண்டும் காணாது கடந்து சென்றிருக்கலாம், அதற்க்குப்பின் பிறந்தவர்கள் அறியாத ரகசியம் இது.

நான் பிறந்தது 1966, விளக்கப்போகும் குழப்பங்கள் ஒருவேளை அந்த வருடத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் வந்த சோதனையா அல்லலது 60துகளில் பிறந்த எல்லோருக்கும் சோதனையா என்று உறுதியாக தெரியவில்லை என்றாலும் எனக்கு இன்று ‘மேட்டர்‘ வேண்டுமே..

எங்களுக்கெல்லாம் 'னை' அல்லது 'ளை' என்பதை சின்னஞ்சிறுவயதில் அறிமுகப்படுத்திய விதமே ‘பிரமாதம்‘ என்பேன்.. 'னை' அல்லது 'ளை' என்பது ‘ன‘ அல்லது ‘ள‘ போட்டு ‘ன‘ வுக்குமுன் யானை தும்பிக்கையை சுருட்டி மேலே தூக்கியிருப்பது போல் ஒரு கொம்பு வைக்க வேண்டும், ‘ளை‘ என்பதற்க்கும் அப்படித்தான். இப்போது ‘னீ‘ என்பதற்க்கு ஒரு கொம்பு பின்பக்கம் பார்த்துக்கொண்டிருப்பது போல் அப்போது ‘னை‘ க்கு இதே கொம்பு முகத்தை திருப்பி அப்படியே முன்பக்கம் இருக்கும்.

நான் என் சிறுவயதில் யானைப்படம் அழகாய் வரைவேன், இந்த தும்பிக்கை ளை அல்லது னை போட்டுவந்த அனுபவத்தால் தான் என்று நினைவு.



நான் சிறு வயது அரைகிளாஸ் முதல் படித்தது அப்படித்தான். ஆனால் நாலாப்பு அல்லது அஞ்சாப்பு படிக்கும் போது கொண்டுவந்தார்கள் பாருங்கள் ஒரு சீர்திருத்தம்?? அருகே படத்தில் பட்டியலிட்டது போல் தான் இன்றுமுதல் எழுதவேண்டும் என்றார்கள்.

அதை அப்டி போட்டா என்ன? அல்லது இப்டி போட்டா என்ன?? னையும், ளையும் ஒங்களை எங்கய்யா குடைஞ்சது??? பச்சைமண்ணுகள (நாங்கதான்!) பரிகசிச்ச கொடுமை.. தமிழ் வளர்க்க (படிக்க??) பட்ட கஷ்ட்டம் கொஞ்சமா, நஞ்சமா? ம்ம்ம் எங்க சின்னவயசு நிலைமை? கேக்கறதுக்கு ஆள் இல்லை சார்.

எத்தனையோ ‘கொட்டு‘ வாங்கி ஏதோ தேறீருக்கோம்!

ஏதோ கஷ்ட்டப்பட்டு, வேதனைப்பட்டு ஒரு 'ளை' படித்து.. துக்கப்பட்டு, துயரப்பட்டு ஒரு 'னை' போடப்படிச்சிருந்தேன் சார்.. அதை வந்து மாத்திச்சு பாருங்க பயயுள்ளைங்க??

நாளைலருந்து இப்டி தான் நீ ளை போடணும் என்று?? அநியாயத்தை கேட்கணுமே. கையில பெரம்பை வச்சிகிட்டு மெரட்டுன கொடுமைய என்னன்னு சொல்ல. என்னா ஒரு வில்லத்தனம்?? நாங்களும் உப்பு சப்பு இல்லாம அதை கேட்டுக்கிட்டோம் அது வேறவிஷயம். வேறவழி!

ஆக நாங்கல்லாம் மிரண்டு கொஞ்சம் கொழம்பினது தான் மிச்சம்.. இன்னைக்கும் ‘உரைப்பதற்க்கு‘ன்னு சொல்லணுமா இல்ல ‘உறைப்பதற்க்கு‘ ன்னு சொல்லணுமா (இதுக்கும், அதுக்கும் என்னடா சம்பந்தம்னு நீங்க நினைக்கிறது கேட்கிறது, வேண்டாம்... அழுதுருவேன்.. ம்ம்ம்ங்ங்ங்) என்ற ஒரு குழப்ப நிலை அல்லது ம(க்கு)ந்த நிலைக்கு இதுதான் காரணம் யுவர் ஆனர்???

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி:- எழுத்துச்சீர்திருத்தம்... அச்செழுத்தை சிக்கனப்படுத்த அப்போது கொண்டுவரப்பட்டது என தெரிந்தேதான் எழுதியிருக்கிறேன். இதனால் டைப்ரைட்டரில் சில எழுத்துக்கள் குறைந்தது உண்மைதான், ஆனால் தமிழ் எழுத்தின் அழகு கொஞ்சம் குறைந்துவிட்டது போல் ஒரு குறை எனக்கு. ஏதோ கொஞ்சம் மை மிச்சமாக வேண்டும்/டைப்ரைட்டரில் மூன்று பட்டன் குறைந்தது என்பதற்க்காக நம் பாரம்பரிய தமிழ் எழுத்துக்களை வேரோடு அழித்தது சரியா? செருப்புக்காக காலை வெட்டியது போல் இல்லையா? ஏதோ ஒரு சின்ன ஆதங்கம், வேற ஒண்ணும் பிரச்னை இல்ல சார்.. யாரும் இதுக்காக கல்லை தூக்கவேண்டாம்.

Monday, February 14, 2011

பீர் கடை

முஸ்கி:- இது என் நண்பனால் எழுதப்பட்டது, பையன் ப்ளாக் எழுத நல்ல ஆர்வமாக இருக்கிறான், எல்லாம் நம்ம கடைய பாத்துதான். ஆனால் பிள்ளையார் சுழிபோட நேரம் கூடிவரவில்லை இன்னும். அவசர வேலைகள் காரணமாக, நான் இன்று பிஸி என்றதும் அவனே மெனக்கெட்டு எழுதி இதை நீ எழுதியதாக போடு என்று இப்போதுதான் வேறு தலைப்புடன் ஈமெயில் வந்தது.. (நன்பேண்டா..) கொஞ்சம் திருத்தங்களுடன் அப்படியே கீழே..

நாங்கள் அனைவரும் கல்லூரியை முடித்து பின்னர் / /course ஐ நான் முடித்திருந்த நேரம். துடிப்புள்ள நான்கு இளைஞர்களாகிய நாங்கள் சொந்தமாக தொழில் செய்யலாம் என்று முடிவு எடுத்தோம். எராளமான சிகரட்டுகளை துவம்சம் செய்த பிறகு ஒரு directorial board முடிவு செய்யப்பட்டது. அதன் படி முதல் board of director's மீட்டிங் ஒரு சுப யோக ஞாயிற்று கிழமையில் கன்னியாகுமரி கடற்கரையில் கூட்டுவது என்றும் மேலும் அந்த மீட்டிங்கில் நம் கம்பனியின் பெயரும் mode of operation உம் முடிவு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஒரு தொழில் நிறுவனம் என்றால் அதற்கு முதலீடு தேவை அல்லவா. அதனால் ஒவ்வருவரும் ருபாய் 100 முதலீடு செய்வது என்று / / படித்த மூத்த அறிவாளியான என்னால் முடிவு எடுக்க பட்டது. (நம்மள பத்தி சொல்லதுல பயபுள்ளைக்கு சந்தோசத்த பாருங்களேன்!) அந்த ஞாயிற்று கிழமையும் வந்தது. நாங்கள் பஸ்சில் ஏறி டிக்கெட் எடுக்கும் பொழுதே ஒருவன் சொன்னான் "பஸ் டிக்கெட் கூட நாமல்லாம் போர்டு மெம்பரானதால கம்பெனி கணக்கு தான், அதனால் நீ நம் முதலீட்டில் இருந்தே செலவு செய்" என்று. அங்கு தான் ஆரம்பித்தது சனி.

பஸ் நிறுத்தத்தை அடுத்தது தான் நம்ம ரெகுலர் பீர் கடை, வாரா வாரம் தவறாமல் ஆஜர் போடும் இடம். நம்மலாம் கடைக்கு ரெகுலர் customer வேறு. பஸ்ஸில் இருந்து இறங்கிய உடன் ஒரு கிராதகன் சொன்னான் நம்ம போர்டு மீடிங்க பீர் சாப்பிட்டுட்டே ஆரம்பிக்கலாமே என்று. பொதுவாக இந்த மாதிரி நலல ஐடியா ஒருவன் சொன்னால் அதை மறுக்கும் கெட்ட பழக்கம் எங்க நட்பு வட்டாரத்தில் என்றுமே இருந்தது இல்லை. எனெவே ஓசியிலே conference ரூம் கிடைத்தது என்ற சந்தோஷத்தில் நேராக நம்ம கடைக்கு சென்று நம்ம போர்டு மீட்டிங் ஆரம்பம் ஆனது.

பஸ்சுக்கே கம்பெனி கணக்கு என்று சொன்ன நம்ம கிராதகர்கள் பீருக்கு தனியா காசு கொடுககவா போறாங்க, அப்படி இப்படி போர்டு மீடிங்கில் இருந்த எல்லா agenda points discuss பண்ணி முடித்து நம்ம ரெகுலர் பாட்டி கடைக்கு போய் வடையும் டீயும் தின்று நாகர்கோயில் பஸ் ஏறும் பொது கம்பெனி கணக்கில் பாக்கி இருந்தது 50 ருபாய் என்று நினைவு. அந்த பணத்தில் ஒரு பொது visiting கார்டும் லெட்டர் padum எங்களால் அடிக்க முடிந்தது. (நல்ல வேளை நம்ம பய புள்ளைக ஒரு பீரோடு நிருத்திக்கிட்டானுங்க). அப்படி ஆரம்பிச்சது தானுங்கோ M.S.Pharma Chem (மூணு பேரோட பெயர் M ல அரம்பிக்குமுங்கோ ஒருத்தர் மட்டும் S ங்கோ).

ஒரு வாரத்திலேயே அந்த கம்பெனி போர்டுல இருந்து மூணு பேர் விலகுனதும், அந்த லெட்டர் பேட வைச்சு நம்ம நண்பர் ஒருவர் பெருங்காய கம்பெனி ஆரம்பிச்சு, மாட்டு மருந்து டீலர் ஷிப் எடுத்து அப்புறம் சாக்லேட் டீலர் எடுத்து ஓஹோன்னு வியாபாரம் பண்ணினார் என்பது வேறு கதை.

நாங்கள் இப்பொழுதும் ஒன்றாக சேரும் பொழுது கன்னியாகுமரி செல்கிறோம் (ஆனால் ஒவ்வருவரும் இப்போது ஒவ்வொரு ஊரில், நாட்டில் இருக்கிறோம்), பாட்டிக்கு இப்பொழுதும் எங்களை நினைவு இருக்கிறது. அதே கவனிப்புடன் சூடாக வடை தருகிறார்.

பஸ்ஸில் சென்ற நாங்கள் இப்போதெல்லாம் காரில் செல்கிறோம். வெகு சமீபத்தில் பீர்கடைக்குப்பதில் ஹோட்டல் தமிழ்நாடு பார் கடைக்கு போனோம், Gold Flake Cigarette இப்பொழுது ரோத்மன்ஸ் ஆகவும் Benson & Hedges அகவும் மாறி உள்ளது. ஆனால் அந்த குதூகலம் இல்லை... கவலையே இல்லாத அந்த வாழ்கை இல்லை...

இதுவெல்லாம் போக சென்ற ஒரு மணி நேரத்தில் வீட்டில் இருந்து போன் வருகிறது (நான்கு பயல்களும் சேர்ந்து ஒரு இடத்திற்கு போனால் என்ன செய்வார்களோ என்ற பயம் தான் காரணம்). பழைய பீர் கடை இப்பொழுது அங்கு இருக்கிறதா என்று தெரிய வில்லை. அடுத்தமுறை அதை ஆராய்ந்து கண்டிப்பாய் சொல்கிறேன். மனைவியை விட்டு (இவனுகளோட போக விட்டால்?) நம் மக்களுடன் தனியே செல்லும்போது.

பய ரசனையாய்தான் எழுதியிருக்கான், நான் ரசித்தேன்.. நீங்கள்??

அன்புடன், வசந்தா நடேசன்.

Sunday, February 13, 2011

காளீஸ்வரன் கதை..[2]

//துபாய் வந்ததும் தான் ‘ரிலீஸ்‘ கிடைச்சுது சார்..//

ஒரு வழியாய் துபாய் வந்து தனியாய் ஒரு அறையில் சேர்ந்ததும், ஊரிலிருந்து வரும்போது முடிவெடுத்து வந்த இனி ட்ரிங்ஸ் வாழ்க்கையில் ‘வேண்டவே வேண்டாம்‘ என்ற முதல் முடிவை, முக்கிய முடிவை சந்தர்ப்பவசத்தால் தனியாய் வந்த அன்றே கைவிடவேண்டியதாகிப்போனது.

என் மனைவி இப்போதும் யார் சென்று சொன்னாலும் நம்பமாட்டாள், நான் ட்ரிங்ஸ் பண்ணுகிறேன் என்பதை என்றால் நான் எவ்வளவு நல்லவன் என்று பார்த்துக்கொள்ளுங்கள். அதுவுமில்லாமல் சொல்பவர்கள் நிலைமை சற்று சங்கடமாகலாம், எஸ் எம் எஸ் பண்ணிவிடுவேன் என்று மிரட்டும் நண்பர்கள் கவனிக்கவும்.. (ஹி.. ஹி..)

இங்குள்ள வாழ்க்கை முறையில் ஏனோ அதுவும் ஒன்றாய்ப்போனது?? வெள்ளையர்களுடன் கம்பெனி பார்ட்டிகளுக்கு போகும் போது நான் குடிக்கமாட்டேன் என்றால் அப்படியே மேலும், கீழும் பார்ப்பார்கள்?? எந்த ஊரிலிருந்து வந்த ஜந்து இதுவென்று..(தமிழனுக்கு இதுவிஷயத்தில் ஒரு மரியாதைக்குறைவு வரலாமா?? நீங்களே சொல்லுங்க சார்??)

குடி என்பது அதன் எல்லையில் இருந்தால் குடிப்பழக்கம் தவறில்லைதான் என்னைப்பொருத்தவரை. குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும் அளவுக்கு இதுவரை குடித்ததில்லை, இத்தனை சுதந்திரங்கள் இருந்தும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சரி, இதை ஒரு குடிபுராணமாக்காமல், கதைக்கு வருவோம்..

காளீஸ்வரன், ஒரு அற்புத திறமை வாய்ந்த தமிழ் இளைஞன் என்று சொல்லலாம், ஊரில் ஐ.டி படித்துவிட்டு இங்கே ஏதோ அப்போது பிரபலமாய் இருந்த கொரியன் கம்பெனியில் எலக்ட்ரிகல் துரையில் வேலைபார்த்தான். அவனுடைய அப்பா ஊரில் பெரிய சென்டரிங் கான்ட்ராக்டர் என்று சொல்லியிருக்கிறான்.

பொதுவாகவே நம்ஊரில் எலக்ட்ரிகல் வேலை பார்ப்பதற்க்கும் இங்கே உள்ளவைகளுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு, என் வேலையைப்போல் உலகெங்கும் பொதுவாய் உள்வருவனவற்றை பற்றெழுதி, வெளிசெல்வதுதை வரவெழுதும் சொத்துக்கணக்கு வேலையல்ல அது. நான் ஏதோபதிவில் சொன்னது போல் எந்தவேலைக்கும் அதற்க்கான தனித்திறமை வேண்டும் என்பது காளீஸ்வரன் வேலைசெய்வதை பார்த்தால் தெரியும்.

இங்கே எல்லாமே லேட்டஸ்ட், உலகில் எந்த நாட்டில் எப்போது புதிய ஒரு டெக்னாலஜி வந்திருந்தாலும் முதலில் அறிமுகம் ஆவது துபாயில்தான். இங்கே வாழும் பல நாடுகளைச் சேர்ந்த மனிதர்கள் அதனை பயன்படுத்தி, யார்யாருக்கு இந்தவகை பிடிக்கிறது என்ற சர்வேக்களெல்லாம் எடுத்து, இந்த புராடக்ட் சக்ஸஸ் ஆகுமா ஆகாதா, எந்தெந்த நாடுகளில் சக்ஸஸ் ஆகும் என்பதை பல முன்னணி எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ராணிக்ஸ் நிறுவனங்கள் கணிப்பது துபாய் மார்க்கெட்டிங் முடிவுகளைப் பொருத்தே அமையும்.

காளீஸ்வரன் இது அத்தனையும் வந்த சிலமாதங்களிலேயே கற்று சிறந்த எலக்ட்ரீஸியன் என்று பெயர் வாங்கி அவனோடு வந்த அத்தனை நபர்களிலும் முன்னணியில் இருந்தான்.
இந்த ஊரில் மனித திறமைகளுக்கு கிடைக்கும் வரவேற்பு அபரிமிதமானது, திறமையிருப்பவர்களை அந்ததந்த கம்பெனிகள் அதற்க்கு தருந்தபடி கவனித்து, ஊதிய உயர்வு வந்து ஆறுமாதத்திலேயே வாங்கியிருக்கும் பல தமிழர்கள் இருக்கிறார்கள்.. (என்னையும் சேர்த்து.. ஹி.. ஹி..)

மேனேஜ்மென்ட்டில் இருப்பவர்கள் அதனை கவனித்துக் கொண்டே இருப்பார்கள், அவர்களுக்கு வேலை நடக்கவேண்டும், வேறு எந்த பாலிடிக்ஸ்ம் அதிகம் இல்லாத நாடு. ஏனென்றால் திறமையானவர்கள் இந்த நாட்டில் இல்லை.. இந்த நாட்டின் உள்ளுர் ஜனத்தொகை வெரும் 2 லட்சம் தான் என்று எதிலோ படித்த ஞாபகம். அவர்களுக்கும் வேலைசெய்யவேண்டிய அவசியம் இல்லை.. இந்தியா மற்றும் பல நாடுகளிலிருந்து முட்டிமோதி வருபவர்களில் திறமையானவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். ஏனென்றால் இங்கே திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் அதிகம்.. அங்கே 110 கோடியுடன் போட்டியிடவேண்டும் என்றால் இங்கோ ஒரு இருபது லட்சம் பேருக்குள் தான் போட்டி என்றால் நீங்கள் ஒருவாறு யூகிக்கமுடியும்.

நம் கதாநாயகன் நல்ல கருகரு தமிழன், அப்போது வயது 24 அல்லது 25 இருக்கும், நல்ல களையான முகம், நாங்கள் அவனுக்கு வைத்த பட்டப்பெயரே அழகன் என்பதுதான்.

சரியாக முடிவெடுத்து வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பது போல்தான் வார்த்தைகள் விழும். ஒரு எலக்ட்ரிகல் பேனலில் ப்ராப்ளம் என்று தெரிந்து பார்த்தவுடன் அந்த பிரச்னையை கிரகிக்க தெரிந்த திறமைசாலி.. நான் எலக்ட்ரீசியன் அல்ல அதனால் அதனை இன்னும் சிறப்பாக விளக்கமுடியவில்லை..

வேறு லேபர்களையெல்லாம் ஒரு கூண்டில் அடைத்தது போல் ஏ.ஸி இல்லாத பஸ்ஸில் அழைத்துப்போகும் அவன் கம்பெனி நிர்வாகம் இவனை அழைத்துச்செல்ல பக்கத்தில் தங்கியிருந்த எஞ்சினியரை பணித்திருந்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

எஞ்சினியர் வந்து காத்துக்கொண்டிருப்பார் இவன் அவன் சவுகரியம் போல் எழுந்து குளித்துமுடித்து கிளம்பிப்போவான், திறமைக்கு கிடைத்த மரியாதை அது. நான் அவன் அறையில் சேர்ந்தபோது அவன் துபாய் வந்து இரண்டு வருடம் ஆகியிருந்தது.

நான் வந்த புதிது, காலை ஆறுமணிக்கு எழுந்து, குளித்து இரண்டு பஸ் மாறி 8 மணிக்குள் நான் வேலைசெய்யும் இடம் செல்லவேண்டும். வந்த புதிதாகையால் நண்பர்ளும் அப்போது யாரும் இல்லை காளீஸ்வரனையும், துரையண்ணனையும் தவிர்த்து. இங்கே பொதுவாகவே அவரவர் வேலையை அவரவர் கவனித்துக்கொள்ளவேண்டும், காய்ச்சல் வந்து விட்டது,வேறு ஏதோ பிரச்னை என்றால் அவரவரே கவனித்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் அவரவருக்கு அன்றன்றைக்கு அவரவர் வேலைகளே தலைக்கு மேலே இருக்கும்.

நண்பனுக்கு காய்ச்சல், சரி ஒரு நாள் லீவு போட்டு ஹாஸ்பிட்டல் போவோம் என்றால் அங்கே வேலை போய்விடும்?? அதனை இங்கே வேலை செய்பவர்கள் எல்லோருமே உணர்ந்திருப்பார்கள், வெகு அத்தியாவசிய தேவை, உயிர் போகும் அவசரம் என்றால் மட்டுமே இங்கே லீவு சமாச்சாரமெல்லாம். அவரவர்களை கவனித்துக்கொள்ள நன்கு பழகிக்கொண்டோம்.

காலையில் இங்குள்ள அறைகளில் ஆளுக்கு அரைமணிநேரம் அளந்து பாத்ரூம் டைம் வைத்திருப்பார்கள், அரைமணிக்குள் எல்லாம் முடித்து வந்துவிடவேண்டும், லேட்டானால் கதவை டொக்குவார்கள், அவரவர் வேலை அவரவருக்கு.. துரையண்ணன் ஜெபல் அலி என்று ஒரு ப்ரீசோன் இருக்கிறது துபாய் நகரிலிருந்து ஒரு 70 கிலோமீட்டர் தொலைவில், ட்ராபிக் குறைவென்றால் அரைமணி நேரத்தில் காரில் அல்லது பஸ்ஸில் பறந்து விடலாம் இங்கே.

ஆனால் துபாய் அப்போது கன்ஸ்ட்ரக்ஷனில் அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்து விரிந்து கொண்டிருந்தது,, அமெரிக்காவின் மன்ஹாட்டனை மனதில் வைத்து ஒரு ரியல் எஸ்டேட் சொர்க்கபுரியாக துடித்து முன்னேறிக் கொண்டிருந்த வேளை அது. பீக் அவரில் சாலையில் போக்குவரத்து நெருக்கடி அப்படி பிரபலம் அப்போது. துரையண்ணண் ஆறு மணிக்கு கிளம்பினால் தான் 8 மணிக்கு அலுவலகத்தில் இருக்கலாம், அதனால் அவர் டைம் அப்போது 5.30 முதல் 6.00 வரை.

இப்போது ட்ராபிக் குறைவென்றால் 15 நிமிடத்திலும் கொஞ்சம் ஓவர் என்றால் 25 நிமடத்திலும் நான் என் அலுவலகம் போய்விடுவேன் அத்தனை சிக்னல்களையும் கடந்து, ஆனால் அப்போது குறைந்த பட்சம் 50 நிமிடங்கள் ஆகும் இதே 13 கிலோமீட்டரை கடக்க என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நான் வந்தபுதிது அப்போது, என்னிடம் கார் இல்லை, மெட்ரோ வந்திருக்கவில்லை, பஸ்தான் ஒரே வழி..

ஏதோ அந்த திறமையானவன் பாக்யம், அடுத்த அரைமணி நேரத்தை காளீஸ்வரன் என் அவசரம் கருதி விட்டுக்கொடுத்திருந்தான்.

இது இன்னொரு லேட் பிக்அப் இன்றைய சில சொந்த வேலைகள் காரணமாய், நாளை கொஞ்சம் அலுவல்கள் அதிகம், சில ரிப்போர்ட்களை நாளை மறுநாள் தந்துவிடுவேன் என்று அல்ரெடி ப்ராமிஸ் பண்ணியிருப்பதால், நாளை எப்ப வீட்டுக்கு வருவேன்னே தெரியலை சார்??. கண்டிப்பாய் நாளை மறுநாளுக்குள் வர முயற்ச்சிப்பேன்.. நீங்க எழுதுவதற்க்கெல்லாம் இடைஇடையே வந்து சந்துல சிந்து பாடுவது போல் கமென்ட் போட்டுவிடுவேன் அது வேறு விஷயம்!!

அன்புடன், வசந்தா நடேசன்.

காளீஸ்வரன் கதை..[1] [3]

Saturday, February 12, 2011

உரைப்பதற்க்கு வெட்கமில்லை!

பச்சை புல்வெளிகள்..
பஃக்ருளியாறு வயல்கரைகள்
மனதை மயங்கவைக்கும்
மறக்காத நினைவவைகள்!

தென்னங்குலைகளுடன்
ஓங்கி வளர் மரங்களுன்டு
தெளிந்த நீரோடும்
மீனோடும் ஓடையுண்டு

சின்ன வயதினிலே
சிலு சிலுக்க நடைநடந்து
கக்கூஸ் போவதற்க்கு
கால்வலிக்க நடந்ததுண்டு!

மனிதன் பேலாத இடம் இல்லை
எங்கள் ஊர் வயல்கரையில்!
காலைக்கடன் கழிக்க
கால் கடுக்க சென்ற காலம்!

ஆண்கள் நிலை இதுவென்றால்,
பெண்கள் நிலை யோசியுங்கள்?
அய்யய்யோ அவலங்கள்
அத்தனையும் கடந்து வந்தோம்.

மலத்தை தோளில் வைத்து
மனிதனே சுமந்துசென்ற
காலம் ஒன்று இருந்ததென்று
மாநகர் வாழ் நண்பர் சொன்னார்!

இன்று நிலை அதுவல்ல - மனிதன்
கொன்றொழித்த நேரத்தால்
அந்தநிலை மாறியது
ஆளுக்கொரு கக்கூஸ் - இப்ப
அஞ்சு உண்டு சிலர் வீட்டில்.

உண்மை நிலை அதனால்
உரைப்பதற்க்கு வெட்கமில்லை
வந்த வழி மறந்து விட்டால்
போகுமிடம் தூரமாகும்.

மனதுக்குள் பூட்டிவைத்து
இதை பூக்காமல் விட்டுவைத்தால்
யாறறிவர் என் நஷ்ட்டம்
நான் பட்ட கஷ்ட்டமெல்லாம்?

என் மகனும் அறிந்திடணும்
எப்படி இது வந்ததென்று
உழைப்பு, உழைப்பென்ற
உதிரத்தால் வந்ததென்று

இன்றைய இளைஞனுக்கு
இதுவெல்லாம் தேவையில்லை - நானறிவேன்,
ஏதோ வேதனையால் உங்கள்
சோதனைக்கு புலம்பறேனோ?

அன்புடன், வசந்தா நடேசன்.

பதிவர்களுக்கு ஓர் அழைப்பு

நண்பர்களே,

சுவிஸ் வங்கி என்ற என் பதிவை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

பதிவு இன்னும் எழுத தொடங்காத ஆனால் பதிவுகளை படிக்கும் என் நண்பர்களிடம் இதை விவாதித்ததில் அவர்கள் நாட்டு நலன் கருதி இந்த செய்தியை நன்கு பப்ளிசிட்டி பண்ணினால் என்ன என்று கேட்டார்கள்.

ஏதோ நாட்டில் சென்று நம் செல்வமெல்லாம் முடங்குவதை விட நம்நாட்டில் வரியில்லா நகரங்கள் என்று ஏற்படுத்தி நம் மக்களுக்கும் நாட்டுக்கும் பயன் வருமானால் நாம் ஏன் இதை கொஞ்சம் அழுத்திச்சொல்லக்கூடாது??

நடப்பது நடக்கும் என்று விதிப்படி இருந்தால் யார்தான் இந்த பூனைக்கு மணி கட்டுவது? என் கடைக்கு வரும் கூட்டம் குறைவு. இதை N.R.PRABHAKARAN போன்ற முன்னணி பதிவர்கள் கொஞ்சம் முன்னெடுத்து, சேவ் பிஷ்ஷர்மேன் இயக்கம் போல சேவ் இந்தியா என்று ஒரு லோகோ ரெடிபண்ணி இதனையும் நாம் கொஞ்சம் அழுத்திச்சொல்லிப்பார்க்கலாமா நாட்டு நலன் உத்தேசித்து.

நேரம் இருப்பவர்கள் இதை ஒரு வழக்காகவும் தொடரலாம் அல்லது இப்போதைய சுப்ரீம் கோர்ட் வழக்கில் இந்த வரியில்லாநகரங்கள் குறித்தும் ஆணைவழங்க ஏதேனும் செய்யலாம்.

இது குறித்து விவாதங்களும், கருத்துக்களும் பரவவேண்டியது அவசியம் என்று சிவகுமாரன் சார் போன்றே நானும் நினைக்கிறேன். நேற்றைய வார இறுதி வெட்டிப்பேச்சுக்களில் இப்படி ஒரு பதிவை எழுதச்சொல்லி (சத்தியமா, உண்மை.. உண்மை) வற்புறுத்தியதால், நண்பர்களின் ஆசைக்காக இதை எழுதியிருக்கிறேன்.

நான் அந்த பதிவை சீரியஸாக ஆரம்பித்து பின்பு 'நடக்கிற கதையா' என்று கொஞ்சம் யோசித்து காமடி பீஸ் போல் தான் முடித்திருந்தேன. ஆனால் இப்போது அதை கொஞ்சம் சீர்தூக்கி பார்க்க வேண்டியது அவசியம் என நினைக்கிறேன்.


எந்த ஒரு செயலுக்கும் ஒரு முயற்ச்சி வேண்டும், முயற்சியே செய்யாமல் விதியை நொந்து பயனில்லை என்பதால் என்னால் ஆன இந்த முயச்சியை எடுத்துள்ளேன், என்னுடைய பதிவை காப்பி/பேஸ்ட் செய்யவோ, மறுபதிப்பாக உங்கள் கருத்துகளையும் சேர்த்து வெளியிடவோ தடையேதும் இல்லை, யார்வேண்டுமானாலும் (வேலன்டைன்ஸ்டே முடிந்து கூட செய்தால் போதும்) நாட்டு நலுனுக்காக செய்து கொள்ள இப்போதே இது வழியாய் நான் சம்மதம் தெரிவிக்கிறேன்.

கேள்வி கேட்காமல் எடுத்துக்கொள்ளலாம்..

அன்புடன், வசந்தா நடேசன்.

Wednesday, February 9, 2011

சுவிஸ் வங்கி..

ஒரு முக்கியமான விஷயம் கேள்விப்பட்டேன் இன்று, அதனால் என் நேற்றைய புதிய தொடருக்கு ஒரு நாள் விடுமுறை.

இப்படி தொடரை விட்டதை மீண்டும் பிடிப்பது மிகவும் கஷ்டம் என்று நினைக்கிறேன், இதற்க்குமுன் இப்படி இரண்டு இதுபோல் நிற்பதாய் ஒரு நினைவு. ஆனால் அவைகளில் யோசிக்கும் வேலை பாக்கி இருக்கிறது, காளீஸ்வரன் கதை உண்மைதான் என்பதால் தொய்வு விழாது என்று நம்புகிறேன். யோசிக்கிற வேலை இல்ல பாருங்க, நோகாம நொங்கு திங்குற மாதிரி(??)

சரி சொல்லப்போகும் விஷயம் அதைவிட முக்கியம் என்று நினைப்பதால் இதோ..

ஒரு நீண்ட நாள் நண்பரிடம் இன்று பேசிக்கொண்டிருந்தேன், அலுவல் விஷயமாய். பேசிக்கொண்டிருந்து விட்டு கடைசியில் பொதுவாய், உங்கள் வியாபாரம் எப்படி என்று நானும் எங்களது எப்படி என்று அவரும் கேட்டுக்கொண்டோம். இதுதான் இப்போது எல்லோரும் இங்கே பேசிக்கொள்வது, நான் தப்பிச்சிட்டேன், நீ தப்பீட்டியா என்ற அக்கரை தான் காரணம். தப்பமுடியாதவர்கள் எல்லாம் அல்ரெடி போயிட்டாங்கன்னு நினைக்கிறேன். இதை பற்றியும் ஒரு பதிவு எழுதும் உத்தேசம் உள்ளது, அதனால் அதிக விபரம் வேண்டாம் இங்கு.

கடைசியில் அவர் சந்தோஷமாக ஒரு விஷயம் சொன்னார் அதைக்கேட்டு நான் அதிர்ச்சியானது தான் மிச்சம்.

இப்போது இந்தியாவில் உள்ள அரசியல்வியாதிகளின் சுவிஸ் முதலீடுகளை எல்லாம் நாட்டுக்குள் கொண்டுவர, சமீபத்திய உச்சநீதிமன்ற கேள்விகளுக்குப்பின், கொஞ்சம் தீவிர முயற்ச்சிகள் நடப்பதுபோல் இருப்பதால், பயபுள்ளைங்கல்லாம் அதை வரிகேட்காத, முதலீடுகளுக்கு எந்த கேள்வியும் கேட்காத நாடுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்து பெரிய முதலீடுகள் வர ஆரம்பித்துவிட்டன என்று மிக முக்கியமான பெரிய இடத்து நபர் ஒருவரிடம் நேற்று பேசும்போது தெரிந்தது என்று சொன்னார்.

பாவம், வேலை தப்பித்துவிடும் என்ற உற்ச்சாகம் அவருக்கு, ஆனால் இந்தியாவுக்கு அது எவ்வளவு பெரிய இழப்பாக இருக்கும்?? இது போன்ற நாடுகளில் வரி கிடையாது, செய்யும் முதலீடுகளுக்கு யாருக்கும் கணக்கு சொல்லவேண்டாம் என்பதெல்லாம் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். அதனால் இப்படி நடப்பதற்க்கு வாய்ப்புக்கள் இருப்பதை மறுக்கமுடியாது என நினைக்கிறேன்.

இதுவிஷயத்தில் உறங்கிக் கிடந்த உச்சநீதிமன்றம் ஒருவழியாய் முழித்துக்கொண்டது மகிழ்ச்சிதான் என்றாலும், அந்த கேஸ் முடிந்து எல்லாம் இந்தியா வந்து சேருமுன் எல்லா பணமும் இதுபோல் நாடுகளில் முதலீடாகி விடுமோ என்று ஒரு பயம் வந்தது நிஜம்.

சமீபத்திய ராச நஷ்டம் மட்டும் 186 லட்சம் கோடிகள் என்றால், சுதந்திரம் கிடைத்ததுமுதல் இது வரை இந்தியா இழந்தது என்ன என்று என்னால் யோசிக்கவே முடியவில்லை, ஒரு அக்கவுன்டன்டாய் எத்ததையோ பெரிய பெரிய நம்பரெல்லாம் வாழ்க்கைல பாத்துட்டேன், இந்த நம்பர் யாராலும் எழுதமுடியாது, பல டிரில்லியன் இலட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கும் என்று உத்தேசமாக வைத்துக்கொள்வோம், ஏதேனும் கணிணி வல்லுனர்கள் ஆராய்ச்சி பண்ணி சொல்லலாம். நான் எக்ஸெல்லில் என் உத்தேச கணக்கை அடித்து கேட்டால் எறர் தான் வருகிறது??

இதில் பாதியையாவது இந்திய தேசத்திற்க்கு உபயோகப்படுத்த வேண்டும் என்றால், ஏதோ என் சிற்றறிவுக்கு தோன்றிய யோசனை இதோ..

சரி, மொத்தமும் ‘கோவிந்தா‘ ஆவதற்க்கு முன்னால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு இந்தியாவிற்க்கு வெளிநாட்டிலிருந்து செய்யப்படும் முதலீடுகளுக்கு கேள்வி ஏதும் கிடையாது என்று நம் அரசாங்கமும் அறிவித்தால் எப்படி இருக்கும்?? எப்பூடி வந்திச்சி, யாரு கொடுத்தாய்ங்க என்று ஒருகேள்வியும் கிடையாதுன்னு ஒரு சட்டம் கொண்டு வந்துவிட்டால்!

அதற்க்காக தனி டேக்ஸ்ப்ரீ நகரங்கள் என்று பல நகரங்களை தேர்ந்தெடுத்து அறிவித்து அதை எல்லாம் பெரும் தொழில் நகரங்களாக மாற்றிவிடலாம், கண்டிப்பாய் இந்தியாவிற்க்கு லாபம் இருக்கும் என்று நம்புகிறேன்.

நம் திருடர்கள் எங்கோ சொத்து வாங்குவதை விட கண்முன்னால் சொத்து இருந்தால் அதையேவிரும்புவார்கள் என நம்பலாம், பின்னொரு காலத்தில் நல்லவய்ங்க யாராவது பிரதமராக வந்தால் எல்லா டேக்ஸ்ப்ரீ பகுதிகளையும் சத்தம்காட்டாமல் அரசுடமையாக்கிவிட வேண்டும், எப்படி ஜடியா?? இதை இப்பவே வெளிய சொல்லிராதீங்க சார்.. அப்புறம் வச்சிக்கலாம், நல்லவய்ங்க வராமலேயா போயிருவாய்ங்க?

மன்மோகன் சிங் காதில் யாராவது போட்டுவைங்களேன், நாங்களும் இந்தியா பக்கம் வேலைக்கு வந்து உங்களோடு ஜக்கியமாகி விட்டதுபோல் எனக்கு கனவு வர ஆரம்பித்துவிட்டது இப்போதே.

கனவுகளுடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி : நடக்காத கதை என்று தெரிந்துதான் எழுதியிருக்கிறேன்! ஒரு ஆசைதான், கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டுதானே, இப்படி நடந்துமுடிந்து நாட்டில் எல்லோரும் ஆனந்தமாய் இருப்பதாய் ஒரு கனவாவது கண்டு வைப்போம், ஏதோ நம்மால் முடிந்தது.

Tuesday, February 8, 2011

காளீஸ்வரன் கதை..[1]

வணக்கம், இது ஒரு புதிய முயற்ச்சி.. ஒரு முறை முன்பே சொல்லியிருக்கிறேன், துபாயில் எப்படி வாழலாம், எப்படி வாழக்கூடாது என்பதைப்பற்றி பின்னர் எழுதுவேன் என்று. எப்படி வாழலாம் என்பதை நிறைய படித்திருப்போம் நாம் அதைப்பற்றி பின்னர் பார்க்கலாம், எப்படி வாழக்கூடாது என்பதை இனி சொல்லவருபவை ஓரளவுக்கு விளங்க வைக்கும் என நம்கிறேன். கொஞ்சம் சுயசொறிதலும் வரக்கூடும் இது பெரும்பாலும் என் வாழ்வில் கடந்து போன சம்பவங்கள் குறித்து எழுதப்போவதால். இனி காளீஸ்வரன் கதைக்குள் நுழைவோம்.

துபாயில் நான் வந்து இறங்கியதும் என் சொந்த பந்தங்களின் வீட்டில்தான் ஒரு இருபது நாட்கள் வரை தங்கி இருந்தேன். வந்து இருபது நாளிலேயே எனக்கு நான் இன்று வரை வேலை செய்யும் இடத்தில் வேலை கிடைத்துவிட்டது. பின்னர் வந்த ஒரு சுப நாளிகையில் நல்லதற்க்கோ கெட்டதற்க்கோ என்னை தனியே இருக்கச்சொல்லி கழற்றிவிட்டன என் சொந்தபந்தங்கள். அவர்களும் பாசக்காரப்பய புள்ளைகளாகத்தான் இருந்தார்கள் என்னைப்போல் ஏழையாக இருந்த என் சிறுவயது காலங்களில், பின்னர் துபாய் வந்து சம்பாதித்து வசதி, வாய்ப்புகள் வந்தபின்பு பாசம் குறைந்துவிட்டது போலும், சரி சொல்லவந்த கதையை பார்ப்போம்.

அன்று பெட்ஸ்பேஸ் வாழ்க்கை ஆரப்பித்த துவக்க காலம். நான் இருக்க இடம் தேடிக்கொண்டிருந்தேன், அப்போது துபாய் காலவட்டத்தின் அரைபகுதியை தாண்டி மேல் நோக்கி ஏறிக்கொண்டிருந்த காலம். ஆண்டுக்கு, ஆண்டு வளர்ச்சி என்று வட்டத்தின் உயரத்தை நோக்கியே போய்க்கொண்டிருந்த காலம், நம் ஊர் வேலையற்ற இளைஞர்களின் கனவுதேசம். 2009ம் ஆண்டின் கடைசி காலாண்டில் நடந்ததை யாரிடம் அப்போது சொல்லியிருந்தாலும், ‘போடாங்கொய்யாலே‘ ன்னு நம்ப ஆளில்லாத நேரங்கள்.

நான் வந்து இறங்கிய பர்துபாயிலேயே நான் இருக்க/படுக்க இடம் தேடிக்கொண்டிருந்த போது அறிமுகமானவர்கள் தான் காளீஸ்வரனும் (உண்மைப்பெயரே), துரையண்ணனும் (கற்பனை பெயர்). இங்கே பெட்ஸ்பேஸ் இருக்கிறது என்று பிட்நோட்டீஸ் அடித்து முக்கியமான சாலை ஓரங்களில் ஒட்டியிருப்பார்கள் அவரவர் மொபைல் நம்பருடன். சில பல கண்டீஷன்களும் இருக்கும். ‘தமிழ் முஸ்லீம்கள் மட்டும்‘ ‘தென்னிந்தியர்களுக்கு மட்டும்‘ ‘வட இந்தியர்கள் மட்டும்‘ இப்படி பல இருக்கும்.

நான் புதிதாக வந்து இறங்கியிருந்ததால் இந்த அரசியல் எல்லாம் அப்போது தெரியவில்லை, பின்னர் அதற்க்கான காரணங்களை தெரிந்து கொண்டேன், முஸ்லீம்கள் அவர்களுக்கான கடுமையான ஒருமாத நோண்பு காலங்களில் இந்துக்களும் அவர்களுடன் சேர்ந்து இருந்தால் அவர்கள் முன் சாப்பிடுவது அநாகரீகமாக இருக்கும், நம்ம ஆளுங்க சாப்பிட மட்டுமா செய்வார்கள், பாட்டில், சிகரட் என்று இஷ்ட்டப்படி வாழ்க்கைதானே இங்கே.

அந்த சிக்கல்களில் இருந்து தப்புவதற்க்கே பிட்நோட்டீஸ்கள் அவரவர் தேவைகளுக்கு தகுந்தது போல் இருக்கும். இந்துக்கள் அவரவர் பெயரைப்போட்டிருப்பார்கள். நானும் ஒரு பிட்நோட்டீஸில் பார்த்த காளீஸ்வரன், துரை என்ற பெயர்களைப்பார்த்து சரிடா, நம்மள இவுகளாவது சேத்துக்கிறாங்களா பாப்போம்னு போன் செய்தேன்.

நம் கதாநாயகன், காளீஸ்வரன் தான் போனை எடுத்து வாங்க சார், 375 மாத வாடகை, ஒருமாச அட்வான்ஸ். இங்கதான் பர்துபாய் மீயூசியம் பக்கத்துல வந்து பாத்துக்குங்க என்றான்.

போய்பார்த்ததில் அது ஒரு பழைய கட்டிடத்தில் ஒரு 10க்கு 10 ரூம், அட்டாச்டு பாத்ரூம். அதில் அவர்கள் ஏற்கெனவே இருகட்டில்கள் போட்டிருந்தார்கள், அது அவர்கள் இருவருக்கும், ‘நானு‘ என்றபோது ‘நீங்க தான் கட்டில் வாக்கிக்கிரணும் என்றார்கள். அவர்கள் சொன்ன ரூம் மொத்த வாடகைக்கு மூன்று பேருக்கு அது கட்டுபடியாகாது, நாலுபேர் இருந்தாக வேண்டும். கேட்டபோது நீங்கள் பாதிகாசு போட்டு ஒரு பங்கர் கட்டில்(கீழும்/மேலும் இருவர் படுக்கவேண்டும், எனக்கு கீழ்பகுதிதான் வேண்டும் என்று அவசரமாய் ரிசர்வ் செய்தேன். இடம் கிடைப்பது அப்போது குதிரைக்கொம்பு) வாங்கிக்கொள்ளுங்கள் மேலே ஆள் வந்ததும் நாங்கள் அவரிடம் பாதி காசு வாங்கிக்கொள்வோம் என்றார்கள்.

காளீஸ்வரன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவன், துரையண்ணன் கோவை. காளீஸ்வரனுக்கு என்னைவிட பத்து வயது கம்மி, துரையண்ணன் என்னைவிட பத்து வயது அதிகம். அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த ரூமை எடுத்திருந்தார்கள்.

சரி என்று அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணி வியாழக்கிழமை பெட்டியுடன் வருவதாய் சொல்லிவிட்டு வந்தேன.

வியாழக்கிழமை பெட்டியுடன் சென்றபோது அங்கே அவர்கள் வீக்எண்ட் துவங்கி இருந்தார்கள், என்னைக்கண்டதும் அவசரமாய் சரக்குகளை கட்டிலுக்கு அடியில் தள்ளிக்கொண்டு ‘வாங்க, வாங்க‘ என்றனர்.

நானும் ரொம்ப நல்லவன் இல்ல, கல்லூரியிலேயே மற்றவர்கள் குடிக்கும் போது மூடியில் ஊற்றிக்கொடுப்பார்கள், அதை குடித்துவிட்டு அழும்பு பண்ணியவன் தான். பின்னர் கல்யாணம் ஆவது வரை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து அது தொடர்ந்தது, அதனால் தான் எனக்கு 27லியே கல்யாணம் நடந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள்.. (நம்மள திருத்தருதுக்காமா..) கல்யாணத்துக்கு பின், ‘பிச்சுபுடுவேன் பிச்சி‘ன்னதும் விட்டுவிட்டு, பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு (சாதாரணமா போவான்னா நினைக்கறீங்க, எனக்கு சாப்பாடு கஷ்டம் ஆகிவிடுமாம்) ஆனிக்கொரு முறை, ஆவணிக்கொரு முறை வாய்ப்பு கிடைத்தால் குடிப்பேன், இல்லையென்றால் ‘விதியேன்னு‘ 9 ஆண்டுகளாக போய்க்கொண்டிருந்தேன்.

துபாய் வந்ததும் தான் ‘ரிலீஸ்‘ கிடைச்சுது சார்..

இது இன்றைக்கு முடியப்போகும் கதை அல்ல கண்டிப்பாய், இன்று ஆபிஸ்விட்டு வரும்போதே ஏழு தாண்டிவிட்டது, இதுவே லேட் பிக்அப். நாளை வருகிறேனே..

அன்புடன், வசந்தா நடேசன்.

காளீஸ்வரன் கதை..[2]

Monday, February 7, 2011

கலகலத்துப்போயிட்டேன் சார்!

என் எழுத்துக்கடைக்கு ஆரம்பகாலத்திலிருந்து வாடிக்கையாளராக இருந்து இன்றுவரை ஒவ்வொருமுறை சரக்குகளை எடுத்து(?) வைக்கும் போதும் அதை ஒருமுறையாவது விரும்பி வந்து வாங்கிவிடும் முகம் தெரியாத பதிவுலக நண்பர் N.R.PRABHAKARAN கீழ்கண்டவாறு எனது முந்தைய பதிவை பற்றி அவரது இன்றைய பதிவில் எழுதியிருந்தார்.


==================================================================
பதிவுலகில் புதியவர்: எழுத்துக்கடை
நாகர்கோவிலில் பிறந்து ஊரெல்லாம் அலைந்து திரிந்து இப்போது துபாயில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பதிவுலகத்திற்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நேற்றுவரை முப்பத்தியாறு பதிவுகளை எழுதியிருக்கிறார். ஆனால் திரட்டி, ஓட்டுப்பட்டை போன்ற அரசியலில் சிக்காததால் நிறைய பேருக்கு அறிமுகமில்லாமல் இருக்கிறார். பயபுள்ளைங்க அப்படின்னுற வார்த்தைக்கு காப்பிரைட்டே வாங்கி வைத்திருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது, எழுத்துநடை பிரமாதமா இருக்கு. அப்புறம் என்ன சீக்கிரமா போய் ஜோதியில ஐக்கியமாகுங்க...

==================================================================
வந்தது பாருங்கள் ஜனம் நம்ம கடையாண்ட, கலகலத்துப் போயிட்டேன் சார். அமோக வியாபாரம் போங்கள். இன்று பார்வையிடப்படாத சரக்கே இல்லை.. ஒரு நாள்நிலவரம் கீழே..

All time
2011 Feb 6 20:00 – 2011 Feb 7 19:00
‘சோற்றுக்கணக்கு‘ குறித்து... Feb 6, 2011, 5 comments 74 Pageviews
பயபுள்ளைங்க© Dec 24, 2010, 3 comments 49 Pageviews
நித்திக்கு ஏன் பெண்பக்தர்கள் அதிகம்? Dec 30, 2010, 2 comments 10 Pageviews
ஒரு நடிகையின் முரண்! Dec 25, 2010, 4 comments 7 Pageviews
மிரட்டுராய்ங்கண்ணா! Jan 31, 2011, 4 comments 6 Pageviews
நான் துபாய்ல பேச்சிலர்ங்க! Jan 25, 2011, 5 comments 5 Pageviews
மோகத்தீ! Jan 29, 2011, 1 comment 4 Pageviews
அயல்நாட்டு முரண்கள் Jan 6, 2011, 4 comments 4 Pageviews
பாஸ்போர்ட்டை பாத்துக்குங்க எசமான்! Jan 30, 2011, 6 comments 4 Pageviews
இந்தியர்கள் ஏழைகள் தான் ஆனால் இந்தியா ஏழை நாடல்ல!!... Dec 15, 2010 3 Pageviews

மேலும முதல்முறையாக இன்ட்லியில் என் நேற்றைய பதிவு பிரபலமாகியுள்ளது. இன்று மட்டும் 6 பதிவர்கள் புதிதாக என்னை தொடருகிறார்கள்.

இப்போதுவரை இன்றுமட்டும் 107 பேர் வந்திருக்கிறார்கள், மேலும் நம் ப்ளாக் கவுண்டர் இன்று மட்டுமே அதிசய வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும் இன்று மட்டும் 302 பேஜ்வியூ இதுவரை ஆகி இருக்கிறது, அவருடைய தளத்திலிருந்து என் தளத்திற்க்கு வந்தவர்களும் மற்ற தள்ங்கள் விபரமும் கீழே..

All time
2011 Feb 6 20:00 – 2011 Feb 7 19:00

Referring Sites
philosophyprabhakaran.blogspot.com 62
ta.indli.com 15
www.tamilmanam.net 13
www.google.com 6
www.google.co.in 3
tamilmanam.net 2
prabhawineshop.blogspot.com 1
www.vasanthanatesan.blogspot.com 1

தலை யாருன்னு இப்ப புர்தா??

முகம் தெரியாத நண்பருக்கு வணக்கமும், நன்றிகளும் கோடிமுறை.

இத்தனைக்கும் நான் என் நேற்றைய பதிவில் எனக்கு கமென்ட்களே வேண்டாம் என்றிருந்தேன் திரு ஜெயமோகனுக்கு என் தளத்தின் வழியாக எத்தனைபேர் சென்றார்களோ?

நான் அந்த பதிவை எழுதுவதற்க்கு தூண்டுகோலாக இருந்த சோற்றுக்கடைக்கும் இதனால் பயன் இருந்ததென்றால் மட்டிலா மகிழ்ச்சியடைவேன்.

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி //ஆனால் திரட்டி, ஓட்டுப்பட்டை போன்ற அரசியலில் சிக்காததால்// எப்படி சிக்கணும்னு தெரியலீங்கோ, ஏதோ ஒரு பதிவில் முயன்று உண்மையில் தோற்றிருக்கிறேன். தெரிந்து கொள்ள வேண்டும்.

Sunday, February 6, 2011

‘சோற்றுக்கணக்கு‘ குறித்து...

இணையத்தில் எழுத ஆரம்பித்ததிலிருந்து நான் படித்துவரும் ஒரு பதிவரின் பதிவு வழியாக ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு என்ற சிறுகதையைப்பற்றி தெரியவந்தது. நேற்றே நம் பதிவரின் பதிவைப்பபடித்ததும் இந்தக்கதையை படித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆவல் மனதிற்க்குள் வந்தது.

நேற்று ஜெயமோகனின் தளத்துக்குச்செல்லும் நேரம் கிடைத்தது, அப்படியே நுனிப்புல் மேய்ந்து விட்டு அவரைப்பற்றிய சொந்தப்பக்கத்தை மட்டும் படித்துவிட்டு வெளியே வந்துவிட்டேன். எங்கள் ஊர்ப்பக்கம் உள்ளவர் என்று தெரிந்தது, அதுவும் வெளிவந்ததற்க்கு ஒருகாரணமாக இருக்கலாம்.

நம்ம உள்ளூர்காரர்தானே என்ற ஒரு மலிந்த பார்வையும் தமிழர்களுக்கு உண்டுதானே? வெளிநாட்டுப்பொருளுக்கு இருக்கும் மரியாதை, மதிப்பை எந்த உள்ளூர் பொருளுக்கு கொடுக்கிறோம் நாம்? மேலும் நானும் எழுத்தாளர்தான், எனக்கும் வேலை இருக்கிறது(?) என்ற நினைப்பாகவும் இருக்கலாம். நான் பொழுதுபோக்கு எழுத்தாளர் என்று என்னை சொல்லிக்கொள்வதில்லை, என்றாலும் என் பொழுதை போக்க எழுதுபவன் தானே.

எனக்கு சிறுகதைகள் பற்றிய ஆர்வம் அற்றுப்போய்விட்டதென்று தான் நினைக்கிறேன். இணையத்தில் இப்போது தமிழ் படிப்பதற்க்கு முன்பு இணையத்தில் வெறும் பத்திரிகைகள் படித்த அனுபவம் தான் எனக்கு அதிகம். வெகு சின்னவயதில் குமுதம் மற்றும் ஆனந்தவிகடன் படித்த அனுபவம் தான். கொஞ்சம் வளர்ந்தபின் பள்ளி விடுமுறைகளில் பக்கத்து அக்கா வீட்டில் ஓசியில் கிடைத்த கடல்புறா படித்த அனுபவமும் உண்டுதான். கல்லூரி சென்றதுமுதல் சினிமாவிற்கும் சைட்அடிப்பதற்குமே நேரம் சரியாக இருந்தது, இப்படி சிறுகதைகள் நாவல்கள் பக்கமே போனதில்லை.

பணம் தேடவேண்டிய வயது வந்தபோது பணத்தின் பின்னால் ஓடவும், அதுகுறித்த தேடலிலுமே காலம் கழிந்துவிட்டது, என் குற்றம் தானா தெரியவில்லை.

சரி, சோற்றுக்கணக்கு பற்றி சொல்லவருகிறேன், இன்றும் அலுவல் விட்டு வந்ததும் ஒரு ஆர்வமும் இல்லாமல் பொட்டிதட்ட உட்கார்ந்தேன், வரும் வழியிலேயே கம்ப்யூட்டருக்கு செலவழிக்கும் நேரத்தை இனி குறைத்துக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனையிலேயே வீட்டுக்கு வந்தேன். கழிந்த இரண்டு மூன்று நாட்களாய் ரொம்ப உழைத்துவிட்டேனோ என்று நினைப்பில் வந்த ஒரு உளைச்சல் என்று சொல்லலாம்.

சரி இந்த கதையை படிக்கலாம் என்று ஒரு ஆர்வமே இல்லாமல் அதை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். கதை ஒரு கட்டுரை வடிவில் ஆரம்பித்தது, அந்தக்கதையின் ஆழக்கருத்தை மெள்ள விளக்கிவிட்டு கட்டுரை வடிவிலிருந்து ஒரு கட்டத்தில் கதைக்குள் ஜெட் வேகத்தில் நுழைந்து உணர்வுப்பூர்வமாய் உள்ளே இழுத்து வைத்துக்கொண்டது என்று தான் சொல்லவேண்டும்.

சிறுகதை என்று சொல்லலாமா அல்லது குறுங்கதையா? எனக்கு கதை என்பதே உணர்வற்றுப் போய்விட்ட நிலையில் இது சிறுகதைக்கும் கொஞ்சம் அதிகம் அல்லது குறுங்கதைக்கும் கொஞ்சம் சின்னதாக என்அளவில் நினைக்கிறேன்.

கதையை இங்கே விளக்கப்போவதில்லை, அது என் நோக்கமும் அல்ல, ஆனால் இதன் முடிவில் அதன் சுட்டியை வைப்பேன் கண்டிப்பாய் நீங்கள் சென்று அதை படிக்க வேண்டும் என்பதற்க்காக.

ஒரு சின்ன முன்னுரை மட்டும் இங்கே. இது ஒருகாலத்தில் ஜாதி, மத வித்தியாசம் இல்லாமல் நம்மிடையே கலந்து கட்டி இருந்த நம் மக்களின் வறுமையையும், அவர்களின் வாழ்க்கை முறையும் பற்றியது.

இன்று நம்மில் பெரும்பாலானவர்கள் அதை தாண்டிவிட்டதாகவே நினைக்கிறேன், கதையில் வரும் கொடும் வறுமை கடவுள் புண்ணியத்தால் இன்று நம்மிடையே இல்லை.

அதுவும் பொழுது போக பொட்டி வாங்கி வைத்து தட்டும் நம்மில் பலர் இதைப்பற்றி அறிந்திருக்கவே வழியில்லை. நல்லது தான், ஆனாலும் நாம் கடந்துவந்த பாதையை மறக்கலாகாது என்ற ஒரு கொள்கை விரும்பியோ, விரும்பாமலோ என்னிடம் ஒட்டிக்கொண்டுள்ளது.

நான் என் பதிவிற்கு வருகைகளைக்கூட்டவோ அல்லது திருவாளர் ஜெயமோகனுக்கு ஜால்ரா தட்டும் எண்ணத்திலோ இதை எழுதியிருக்கிறேன் என்று யாரும் நினைக்கவேண்டாம், மன்னிக்கவும். அவரின் தமிழை ரசித்து, இந்த வகை எழுத்துக்கள் இன்னும் சந்தையில் இருக்கின்றன என்பதை தமிழ் வளர மக்களிடம் பரப்பலாமே என்ற ஒரு நல்லெண்ணமே.

அவர் கதையில் ஒரு பின்னூட்டம் அல்லது ஒரு பதில் எழுதிப்போட்டிருக்கமுடியும், ஆனால் இதை அப்படியே அங்கே விடுவதை விட இப்படி ஒரு பதிவாக விட்டால் அது இன்னும் கொஞ்சம் அதிகம் புதிய வாசகர்களை அவருக்கு கொடுக்ககூடும் என்ற எண்ணமே காரணம். மேலும் இந்த வகை சிறுகதைகள் இன்னும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் இன்னும் ஒருசிலர் பெறட்டுமே என்ற எண்ணமே.

உண்மையில் அந்த கதையில் வரும் பாத்திரம் விளக்கிய உணர்வுகள் இன்னும் என் கண்முன்னே நிழலாடுகிறது, நான் அந்த அளவு வறுமையை சந்தித்தவனில்லை எனினும் என் அந்த கால வறுமைக்கும் இதற்க்கும் ரொம்ப தூரம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

உங்கள் உணர்வுகளை பிழியப்போகும் அதன் சுட்டி இங்கே சோற்றுக்கணக்கு!

எனக்கு இங்கே கருத்துக்களை ஏதும் சொல்லாமல் நீங்களும் கதையை படித்துவிட்டு உங்கள் பதிவில் எழுதினால் மகிழ்ச்சி அடைவேன்.

அன்புடன், வசந்தா நடேசன்.

Saturday, February 5, 2011

மீண்டும் இந்தியா..

என் முந்தைய பதிவுக்கு வந்த கமென்ட்டுகள் மேலும் இந்தியாவும், மக்கள்தொகையும் என்பதை குறித்து எழுத ஆர்வத்தை தூண்டினாலும், எனக்கு ஏனோ அரைத்த மாவையே மீண்டும் அரைத்துவிடுவேனோ என்ற பயம் வந்துவிட்டது.

இன்றும் இந்தியாவைப்பற்றிய ஒரு மேட்டர் கீழே வருகிறது. அதற்க்குமுன் சில குட்டி செய்திகள்.

மக்களிடம் பொருளாதாரம் மற்றும் மார்க்கெட்டிங் குறித்து அதிகம் ஆர்வம் இருப்பது அது என்னுடைய சப்ஜெக்ட் என்பதால் ஆனந்தத்தை தருகிறது, ஆனாலும் அது உண்மையில் இந்தியா என்கிற மந்திரத்தையும் உடன் கலந்து கட்டியிருந்ததால் வந்ததாகவே இருக்க வேண்டும். இந்தியா என்றால் ஊனுரக்கம் பார்க்காமல் நாம் இணைந்து விடுவது புதியகதை அல்ல.

நேற்று எங்களுக்கு விடுமுறை, முதல் நாளே சொல்லியிருந்தேன், என் நண்பனிடம் இருந்து பதில் வரவில்லை, அதனால் இதை எழுதுகிறேன் என்று, பதில் வந்தது பின்னர்

கரப்பான் பூச்சியையும் மூட்டை பூச்சியையும், புரோட்டா போடுறதையும், பாம்பு புடிக்குரத்தையும் கொஞ்சம் கொறச்சுட்டு வேலைய பாருடா


நக்கலை பாத்தீங்களா?? சரி என்று இரவு எட்டு மணிக்கு மேல், நண்பர்கள் யாரும் வீட்டுக்கு அன்று வந்திருக்கவில்லை, வீக் எண்ட் என்பதால் கொஞ்சம் விஸக்கியை சிப்பிக்கொண்டு (என் மனைவியின் கண்ணில் இது படாமல் இருக்க தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்.) கருமமே கண்ணாக வெள்ளிக்கிழமை காலை நாலரை மணி வரை, உண்மைதான் வேலை உற்ச்சாகத்திலோ அல்லது விஸ்கி தந்த உற்சாகத்திலோ டைமை பார்க்காமல் அப்படியே பொட்டிதட்டிக்கொண்டு இருந்துவிட்டேன்,

நாலரைக்கு உரைத்ததும் இது என்னடா நாதாரித்தனம் என்று அடித்து பிடித்து படுக்கையில் விழுந்தேன. வழக்கமாய் வெள்ளிக்கிழமை 11 அல்லது 12 மணிக்குத்தான் எழுந்திருப்பது வழக்கம். என் முந்தைய ஒரு பதிவில் சொல்லியிருப்பேன் ரவி என்று ஒருவரைப்பற்றி.. இப்போது என்னுடைய கடையின் முன்னணி யூஏயி கஸ்டமர்(?).

அவர் காலை 10 மணிக்கு கையில் சிவ்ஸ்டார் பவனிலிருந்து ஒரு பொங்கல் வடையும் வாங்கிக்கொண்டு வந்து எழுப்பினார்.. என்னடா வம்பு என்று அப்படியே கொஞ்சம் கண்திறந்து பார்த்தால், எழுந்திரிங்க, பல்லை விளக்கிட்டு வந்து சாப்டுங்க, ஒங்கட்ட கொஞ்சம் பேசவேண்டி இருக்குன்னார்.

என்ன ரவி அநியாயம், மணி பத்து தான் ஆகிறது, இன்று வெள்ளிக்கிழமை தெரியாதா? என்றேன். வெள்ளின்னா என்னங்க? வெள்ளிக்கிழமையும் அதுவுமா காலைல எழுந்திரிச்சி கோயிலுக்கு போறதை விட்டுப்போட்டு தூக்கமாமா? எழுந்திருங்க, எழுந்திருங்க பேசவேண்ருக்கு என்றார்.

அரைமனதோடு, கஸ்டமரரயிற்றே என்று எழுந்தேன். குளித்துவிட்டு வந்து சாப்டுட்டே என்ன விஷயம் என்றால், நீங்க எப்படி ‘நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்லன்னு எழுதலாம், அது என்ன கம்யூனிஸ்ட் என்றால் கேவலமா? என்றார். வடையை சாம்பாரில் முக்கி வாயில் வைப்பதற்க்கு முன்பே!

இது என்னடா வம்பாருக்குன்னு ‘இல்லை ரவி ஏதோ வந்தது எழுதிவிட்டேன்‘ என்றேன். சரி, கம்யூனிஸ்ட் பத்தி உங்கள் கருத்தென்ன? என்று கேட்கவுமே புரிந்து விட்டது, எனக்கு அடுத்த பதிவிற்க்கு மேட்டர் ரெடி என்று.

எனக்கு கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களின் மேல் கோபம் ஏதும் இல்லை, அது எனக்கு பிடித்ததா இல்லையா என்பது இங்கு கேள்வியில்லை, அதை விளக்கி ஒரு பெரிய விவாதத்திற்க்கும் நான் ரெடி இல்லை. நாட்டில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கும்போது.

சீனா பற்றி நான் எழுதியதிலேயே தெரிந்திருக்க வேண்டும், முன்னொரு காலத்தில் எனக்கு சோவியத் ரஷ்யாவின் மேலும் ஒரு காதல் உண்டு. பொதுவாகவே நம் ஊர் அரசியல் வாதிகளின் மேல் எனக்கு ஒரு கடுப்பு உண்டு, அந்தவகையில் கம்யூனிஸ்ட் அரசியல் வாதிகளின் மேலும் ஒரு கடுப்பு, அவர்கள் கம்ப்யூட்டர் வேண்டாம் என்றது போன்ற சில அவர்களின் பிற்போக்கு கொள்கைகளால். சரி அவர்களுக்கு அது முற்போக்கு கொள்கைகளாக இருக்கக்கூடும், இருந்துவிட்டு போகட்டும், நம் கடையில் அரசியல் வேண்டாம்.

இதனை விளக்கியதும், ஆங், சரி, சரிங்க என்று ரவி என்னை விட்டுவிட்டார்.. (கஸ்டமரை தக்க வைக்கதுக்கு என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கிறது பாருங்கள்??)

பின்னர் பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டு மதியம் சாப்பாட்டுக்கு அவரே மீண்டும் ஒரு நெய்ச்சோறும், மட்டனும் செய்து கொடுத்தார். செய்து விட்டு தஞ்சாவூர்க்காரர் சமையலைப்பற்றி எழுதிவிட்டீர்கள், இதையும் கோவை சமையல் என்று எழுதுகிறீர்களா பார்க்கிறேன் என்று சொன்னார். இன்றே எழுதிவிட்டேன். தஞ்சாவூர்க்காரரும் நேற்று லேட்டாய் வந்து சேர்ந்தார், வந்து சாப்பிட்டுவிட்டு அவரே ‘ஆஹா சூப்பர்‘ என்றார். இருந்தாலும் கொஞ்சம் தக்காளி அதிகம் தான் என்று சொன்னார், ரவி அவரை பொறாமையில் சொல்வதாக கிண்டல் அடித்து, விசுவாமித்தரர் வாயால் வசிஷ்ட்டர் பட்டம் வாங்குவது சாதாரணவிஷயமா என்றார், ஆக மொத்தம், எனக்கு நேற்றும் ஒரு பிரமாதமான சாப்பாடு. சூப்பர்.

விடுமுறை, அது இது என்று நேற்று நம் கடைக்கு வந்தவர்களுக்கு ஒரு நன்றிகூட சொல்லமுடியவில்லை.. அனைவரின் வருகைக்கும், கருத்துகளுக்கும் மனம்நிறைந்த நன்றிகளை இங்கேயாவது தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன், நன்றி.

சரி இன்றைக்குள்ள ஒரு செய்தி..

பொதுவாகவே நன்றி தெரிவிப்பது நம் ஊரில் குறைவு என்பது தெரியுமா? குறிப்பாக சம்பளம் வாங்கினால் அதிகம் பேர் முதலாளிக்கு நன்றி தெரிவிப்பதில்லை. நான் வேலை செய்தேன், நீ சம்பளம் கொடுத்தாய் என்பது போல் இருப்பார்கள். அதேபோல் என் மேல் அதிகாரி ஏதோ ரிப்போர்ட் கேட்டு அதை எடுத்துக்கொடுத்தாலும் நம்மவர்கள் நன்றி தெரிவிப்பதில்லை.. மேலும் மனைவிக்கு சாப்பாடு எடுத்துவைத்ததற்க்காக நம்மவர்கள் நன்றிசொல்லி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஹோட்டலில் சர்வர் சாப்பாடு எடுத்து வைத்தற்க்கு என்றாவது நன்றி சொல்லியிருக்கிறோமா??? இப்படி இந்த லிஸ்ட்டில் இன்னும் பல இருக்கிறது.

ஆனால் வெள்ளையர்கள், மேற்ச்சொன்ன விஷயத்திர்க்கெல்லாம் உடனுக்குடன் நன்றி தெரிவிப்பார்கள், அதேபோல் நம்மிடமும் எதிர்பார்ப்பார்கள். நன்றி சொல்லவில்லையென்றால் என்ன இவன் இப்படி இருக்கிறான் என்று குறையும் சொல்வார்கள்.

நான் இப்போது நன்றி தெரிவிக்க கற்றுக்கொண்டுள்ளேன், விடுமுறையில் மனைவி பறிமாறியதர்க்கு நன்றி சொன்னபோது அவள் வித்தியாசமாய் பார்த்தாள்! இப்போதெல்லாம் ரசிக்கிறாள் அதனை, நீங்களும் உங்கள் மனைவிக்கு/கணவனுக்கு சொல்லிப் பாருங்களேன்.

இந்தியாவைப்பற்றி சொல்லவந்த விஷயம் இதுதான். ஒரிஜினாலிட்டிக்காக அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன்..
=============================================================
Now An Indian owns Britain's East India Company - Another circle got completed.



The East India Company which ruled India for more than 200 years is now ruled by an Indian Sanjiv Mehta who took over the company for $150 lac.
He said ” at an emotional level as an Indian, when you think with your heart as I do, I had this huge feeling of redemption - this indescribable feeling of owning a company that once owned us ”

But media is not interested in such great news. Lets us be the media…&..Fwd this mail to all Indians...
Sanjiv Mehta, CEO of The East India Company
===========================================================

நாமும் பெருமைப்பட்டுக்கொள்வோமா???

நன்றி, வணக்கம்.

அப்புடன், வசந்தா நடேசன்.

Thursday, February 3, 2011

இந்தியாவும், மக்கள் தொகையும்

ஆஹா.. என்று பார்க்கவேண்டாம், கொஞ்சம் சீரியஸாக நம் நாட்டை பற்றிய சிந்தனைகள்..

என் புரோகிராமரிடம் நான் வீக் எண்ட் பிளான் செய்யவேண்டும், என்னிடம் இன்று என்ன எதிர்பார்க்கிறாய்? என்றேன், இதுவரை பதிலில்லை, சரி மொக்கை போடுவதை விட கொஞ்சம் சிந்தனை வயப்படுவோம் என்று இந்த பதிவு.

இந்தியாவில் நாம் அனைவரும் நம் அளவுக்கதிகமான (என்று நம்மிடம் சொல்லிக்கொடுக்கப்பட்ட) மக்கள் தொகையை பற்றி எப்போதும் நெகட்டிவ்வாக சிந்தித்தே பழகிப்போனவர்கள். சரி, சைனாவுக்கு அடுத்தது தான் நாம் என்று கொஞ்சம் ஆறுதலாய் அப்படியே இருந்து விட்டோம். சைனா இன்று போட்டு தாக்குகிறது.. அதற்க்கு காரணம் அவர்களின் சரியான சிந்தனை மற்றும் செயல்திட்டம். ஊழல் செய்தால் தூக்கு என்றது போன்ற தெளிவுகள்.

நான் கம்யூனிஸ்ட் அல்ல, தயவு செய்து யாரும் அப்படி தவறாய் நினைத்துக்கொள்ள வேண்டாம், எனக்குத்தெரிந்தது கையளவு, தெரியாதது கடலளவு என்று நம்புகிறவன் நான். கம்யூனிஸ்ட்டுகளைப் பொருத்தவரை உங்களுக்கு என்ன கருத்தோ (யாராக இருந்தாலும், ஹி..ஹி..) அதுபோல் பொதுவான கருத்தே என்னதுவும்.

எந்த விஷயத்திற்க்கும் இரு பக்கங்கள் இருப்பது போல் மக்கள் தொகைக்கும் இரு பக்கங்கள் உள்ளது, இதை நாம் யாரும் உணர்ந்தோமில்லை. நல்லது/கெட்டது, உண்மை/பொய், விருப்பம்/வெருப்பு, காதல்/மோதல் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

மக்கள் தொகையினை நாம் எல்லாம் கேவலம் என்று அளவிட்டுக்கொண்டு இருந்த நேரத்தில் சத்தம் காட்டாமல் மல்டி நேஷனல் கம்பெனிகள் வந்து நம் சந்தையை பங்கிட்டுக்கொண்டன. இதிலும் லாபம்/நட்டம் என்று இரு பக்கங்கள்.

மல்டி நேஷனல் கம்பெனிகளால் நமக்கு உலக அளவில் கிடைக்கும் சில/பல சௌகர்யங்கள் கிடைத்தன. உலகமே கிரைஸிஸ் என்று ஆடிப்போய் இருந்த நேரத்தில் ஒபாமா இந்தியாவுக்கு வந்து அல்மோஸ்ட் பிச்சை எடுப்பது போல் சில திட்டங்களை அறிவித்து விட்டு போனார், இந்தியர்களின் வாழ்க்கைத்தரம் பொதுவில் முன்னேறியிருக்கிறது (செல்போன், டிவி இல்லாத ஒரு வீட்டை சொல்லுங்கள்) மொத்தத்தில் இப்போது உலக நாடுகளை நம்மை உற்றுப் பார்க்க வைத்திருக்கிறது. 1984/1985 வரை சைக்கிளில் போய்க்கொண்டிருந்த நம் வெகுஜனம் இப்போது பைக்குகளில்/கார்களில் பறக்கிறோம், இப்படி பல.

ஏன் உலகையே ஆட்டிபடைத்த கிரைஸிஸ் இந்தியாவை அசைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. சாப்ட்வேர் துறை மட்டும் கொஞ்சம் விழி பிதுங்கியது போல் இருந்தது மற்றபடி ஒன்றும் இல்லை. உலக அளவில் பல வங்கிகள் காணாமல் போய்விட்டன (துபாய் உட்பட). ஆனால் இந்தியாவில் வங்கித்துறையில் குறிப்பிடும்படியான பாதிப்புகள் ஏதும் இல்லை.

ஆனால் மல்டி நேஷனல் கம்பெனிகளால் உண்டான நஷ்ட்டங்கள்.. உள்ளூர் முதலாளிகள் உளுத்துப்போனார்கள். பெப்ஸியால் எங்கள் ஊர் கண்ணன் சோடாவும், காளி மார்க்கும் சந்தையை விட்டு விரட்டியடிக்கப்பட்டன. மிக நீண்ட காலமாக அச்சை மாற்றாமலேயே வைத்திருந்த அம்பாஸிடர்கள் காணாமல் போய்விட்டன.

சொல்லப்போனால் கம்யூனிஸ்ட்கள் உள்ளூர் முதலாளிகள் காணாமல் போனதால் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவர்கள் தான் மல்டி நேஷனல் கம்பெனிகளுக்கெதிராய், உள்ளூர் முதலாளிகளுக்கு ஆதரவாய் முதலில் கொடி பிடித்தவர்கள்.
தொழிலாளர்களுக்காக என்று என்னால் அளவிட முடியவில்லை ஏனெனில் கண்ணன் சோடா, காளி மார்க் மற்றும் அம்பாஸிடரில் வேலை செய்தவர்களை விட அதிகம் பேருக்கு இன்று உள்நாட்டில் வேலை மற்றும் வேலைவாய்ப்பு இருக்கிறது. கம்யூனிஸ்ட்கள் கம்ப்யூட்டரையே வேண்டாம் என்றவர்களாயிற்றே, அந்த கதையை விட்டு நடக்கிற கதையை பார்ப்போம்.

சரி, உள்ளூர் கம்பெனிகள் ஏன் மல்டி நேஷனல்களுடன் போட்டியிட முடிவதில்லை? வியாபாரம் என்றால் லாபம் தான் குறிக்கோள், நான் மக்களுக்கு சேவை செய்ய வியாபராம் செய்கிறேன் என்று யாரவது சொன்னால் அது ‘ஜல்லியடி‘ என்று நமக்குத்தெரியும். நம் உள்ளூர் முதலாளிகளுக்கு நெட்ஒர்க் குறைவு, அவர்கள் அந்த குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே அவர்களுக்கான லாபத்தை சம்பாதிக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு பாட்டிலுக்கு 2 ரூபாய் நிகர லாபம் இருந்தால் தான் முடியும் என்று உத்தேசமாய் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் மல்டி நேஷனல் குறிவைப்பது இந்தியா முழுவதுமான மார்க்கெட்டை, அவர்களின் எல்லைகள் அதிகம், ஒரு பாட்டிலுக்கு 20 பைசா லாபம் வைத்தாலே இந்தியா முழுவதும் விற்பனை எனும் போது லாபத்தை பாருங்கள். உதாரணமாய் காளி மார்க் தினமும் 1000 பாட்டில்கள் விற்றால் 2000 நிகரலாபம், ஆனால் பெப்ஸி இந்தியா முழுவதும் அட்லீஸ்ட் குத்துமதிப்பாய் ஒரு நாளைக்கு ஒரு 35 கோடி பாட்டில்கள் விற்க்கிறது என்று வைத்துக்கொள்வோம், அவர்களின் ஒரு நாளைய நிகர லாபம் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய், இந்திய மக்கள் தொகையின் மகத்துவம் இப்போது புறிகிறதா??

நான் இருபது பைசா லாபத்தில்தான் அவர்கள் விற்க்கிறார்கள் என்று சொல்லவரவில்லை, அது கூடுதலாகவும் இருக்கலாம், அல்லது குறைவாகவும் இருக்கலாம் (வாய்ப்பு குறைவு).

ஆனால் இதை சாதிக்க செயல்திட்டம் வேண்டும், முதலீடு வேண்டும், இன்னும் நிறைய, நிறைய வேண்டும்,(இதுவே உங்களுக்கு போரடிக்கக்கூடும், அதெல்லாம் வேண்டாம் இங்கு) (தெரியாததை பயபுள்ளை எப்படி சமாளிக்குதுன்னு சொல்லாதீங்க.. சொல்லிருவேன்..)

இந்தியாவில் இது எல்லாம் இருந்து இந்தியனாய் சாதித்தவர்களில் நிர்மா போன்ற கம்பெனிகளை சொல்லவேண்டும், ஹிண்டுஸ்ட்டான் லீவரே நிர்மா, பவர் சோப் போன்ற கம்பெனிகளைக கண்டு கொஞ்சம் பயப்படுகிறது என்று சொல்லலாம். இன்று லீவர் ப்ராடக்ட் இல்லாமல் ஒருவன் மளிகைக்கடை நடத்தவே முடியாது. உப்பு முதல் கக்கூஸ் கழுவும் கிளீனர் வரை அவர்கள் தான் இன்று மார்க்கெட் லீடர்.

மல்டி நேஷனல் கம்பெனிகளால் என்ன நடந்தது என்றால் காளி மார்க், கண்ணன் சோடா விற்றவர்களில் திறமை உள்ளவர்கள் இந்த மல்டி நேஷனல்களின் ஏஜென்ஸி எடுத்து சம்பாதிக்கிறார்கள். இதன் ஏஜன்சியை சாதாரணமானவர்களால் எடுக்கவும் முடியாது, பழைய முதலாளிகளால் தான் முடியும், ஆனால் நாட்டில் வேலை வாய்ப்பு பெருகியதும் இந்தியர்கள் கொஞ்சம் மாடர்னாய் ஆனதும் மறுக்கமுடியாத உண்மை.

காலம் செல்லச்செல்ல பழைய முதலாளிகள் அல்லாமல் கீழ்மட்டத்திலிருந்து பல திறமையானவர்களும் இந்த ஏஜன்சிகளை எடுத்திருக்கிறார்கள், என்னால் உதாரணம் சொல்லமுடியும். நாகர்கோவிலில் டீ கடை வைத்திருந்த ஒருவர் முன்னாள் பெப்ஸி ஏஜன்ட். நிர்வாகத்திறமையின்மையால் ஏஜன்ஸி போயிற்றென்று நினைக்கிறேன்.

மொத்தத்தில் நமக்குத்தெரியாததை அல்லது நம்மால் முடியாததை நம்மில் தெரிந்தவர்கள் அல்லது முடிந்தவர்கள் (இந்திரா நூயி) முந்திக்கொண்டார்கள். இந்திய கம்பெனிகளும் இப்போது வளர்ச்சி பெற்று வருகின்றன.. அவர்களிடம் போட்டி போட்டு. அது தான் நம் சாமர்த்தியம்.

நோக்கியா, நிஸ்ஸான், ஹோண்டா எல்லாம் வந்திருந்து லாபம் சம்பாதித்தாலும் நம் ஆட்களும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம். அவர்களிடம் நமக்குத் தெரியாததை தெரிந்து கொள்வோம், நம் திறமைகளை வளர்த்துக்கொள்வோம்.

மக்கள் தொகையால் நஷ்ட்டங்கள் இருப்பது போல் இதுபோல் லாபங்களும் இருக்கின்றன என்பதையும், நடிகர் விவேக் போல் மக்கள் தொகையை எப்போதும் கிண்டல் பண்ணாமல் அதன் மறுபக்கத்தையும் உணரவைப்பதே இதன் நோக்கம்.

கொஞ்சம் நீண்டு விட்டது, வருந்துகிறேன், என்ன செய்ய, பாதிநாள் வேலையென்று லீவு விட்டுட்டாய்ங்க..

அன்புடன், வசந்தா நடேசன்.

Wednesday, February 2, 2011

அலோ யாரு பேசரது!

ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்...

வெடிவேலு : அலோ யாரு பேசரது?

நான் : நாங்க எழுத்துக்கடைய்லர்ந்து பேசரங்க.

வெடிவேலு : அலோ யாருங்க பேசரது?

நான் : நாங்க எழுத்துக்கடைய்லர்ந்து பேசரம் சார்.

வெடிவேலு : என்னா கடை?

நான் : எழுத்துக்கடை சார்

வெடிவேலு : எழுத்துக்கடையா?? புதுசால்லாய்யா இருக்கு.

நான் : புதுசு தான் சார், போனமாசம் தான் தொடங்கிருக்கோம் புதுசா..

வெடிவேலு : அது என்னாய்யா அது எழுத்துக்கடை??

நான் : எழுத்து விக்கறோம் சார்

வெடிவேலு : எழுத்து விக்கறீங்களா,(மனதுக்குள், இந்த பயபுள்ளை நாம எழுதப்படிக்க தெரியாத பயபுள்ளைன்னு தெரியாம நம்மட்ட எழுத்து விக்க வந்துருக்கு, கொஞ்சநேரம் ஓட்டுவோம், சிங்கமுத்துட்ட சண்டை போட்டாச்சு, இவன் எதாவது வச்சிருக்கானான்னு பாப்போம் என்று நினைத்துக்கொண்டே..) எப்படி, ஒரு பத்து எழுத்து இருவது எழுத்துன்னு விப்பீய்ங்களா, இல்ல மொத்த யாவாரமா?

நான் : அன்னன்னிக்கு மூடுக்கு தகுந்தாப்ல விப்பம் சார்

வெடிவேலு : யன்னாது, மூடுக்கு தகுந்தாப்ல விப்பீங்களா? என்ன இழவுடா இது. அது என்னாடா விக்கறீங்க?

நான் ; உயிரெழுத்து 12 இருக்கு சார், மெய்யெழுத்து 18 வச்சிருக்கொம், உயிரிமெய் எழுத்துன்னு ஒரு 216 ஸ்ட்டாக்ல இருக்கு, அது தவிர ஆய்த எழுத்து 1 ஸ்ப்பெஷலா வச்சிருக்கோம் சார், மொத்தமா 247.. நீங்க எது வாங்கரீக்கிறீங்க சார்

வெடிவேலு : ஆய்த எழுத்தா??? அது என்னடா கண்றாவி??

நான் : சாரி சார், ஆயுத எழுத்துங்க சார்.

வெடிவேலு : அதெல்லாம் எனக்கு ஒண்ணாப்ல சும்மாவே சொல்லிக்கொடுத்துட்டாய்ங்கடா.. ஆளை விடுரா.......

நான் : கண்டிப்பா நீங்க வாங்கிக்கணும் சார், எனக்கு அது ஒரு பெருமைங்க சார்.

வெடிவேலு : அட இதெல்லாம் எவன்யா வாங்கறான்? எனக்கு வேண்டாண்டா, என்னை உட்ரு

நான் : சார், பிளீஸ் சார், ப்ளீஸ்.....

வெடிவேலு : யாண்டா என்னை படுத்தறீங்க, இதுக்குன்னே வர்ராய்ங்க சார், யாராரு வாங்கராய்ங்க ஓங்கிட்ட இப்ப? அந்த சிங்கமுத்து பயலுக்கும் நீ தான் வித்தியோ?

நான் : அய்யய்யோ, சத்தியமா நான் இல்ல சார்.

வெடிவேலு : ம்ம்ம்கூங்ங்,,,, சரி, யன்னா வெல?

நான் : இது ப்ரீ சார். யாரு வேண்ணாலும் வாங்கிக்கரலாம்.

வெடிவேலு : ப்ப்ப்ரீயா?? லூசாடா நீயி..........

நான் : ஃப்ரீ தான் சார், நெட்ல விக்கறோம்

வெடிவேலு : நெட்ல விக்கறயா?? அது எங்கடா இருக்கு??

நான் : ஆமா சார் நெட்ல http://vasanthanatesan.blogspot.com ன்னு அடிச்சா வந்துரும் சார், நீங்களும் வாங்கிக்கங்க.

வெடிவேலு : என்னடா இங்கிலிபிஸ்லல்லாம் பேசறீங்க, நம்ம உயிரை எடுக்கதுக்குன்னே புதுசு புதுசா வாரானுங்கய்யா?

டொக்.

(போனை வைத்த சப்தம்)

சிரித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி, வணக்கம்.

அன்புடன், வசந்தா நடேசன்.

Tuesday, February 1, 2011

நாகதேவதை??

விஜய் டிவி யில் இப்பத்தான் பாத்தேன் சார்... என்ன கருமமோ விஜய் டிவில தான் எனக்கு எப்பவும் மேட்டர் கிடைக்குது.

சுமலதா என்று ஒரு பெண் தன்னை நாகதேவதை என்று சொல்லிக்கொண்டு நாகதேவதையாகவே வாழ்கிறாராம்.

மக்கள் அவர் காலில் விழுகிறார்கள், அவரும் தலையை பிடித்து தன் காலோடு அழுத்துகிறார்???

நாகப்புற்றோடு முட்டிபோட்டு குனிந்து பாலை புற்றின் மேல் வைத்து அருந்துகிறார். பாம்புபோல் படுத்து கொண்டு செய்திருந்தாலும் ஏதோ பாம்பு போலவாவது இருந்திருக்கும்.

காலில் விழுந்தவர்களை மூன்றுமுறை சாட்டையால் அடிப்பாராம், நோய் மற்றும் கஷ்டங்கள் விலகிவிடுமாம்..

ஜெயலலிதா பரவாயில்லை போல் இருக்கிறதே! அம்மாவிடம் சாட்டையெல்லாம் இல்லை.

என்ன கஷ்டம்டா இது?

மக்களே கடவுள் நம்பிக்கை வேண்டியது தான், நம்பிக்கை சார்ந்த விஷயங்களை கேள்வி கேட்க கூடாது தான்.. ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் இல்லையா சார்.

விஜய் டிவி இதுபோல் நிகழ்ச்சிகளை தவிர்க்கவேண்டும் என நினைக்கிறேன், இது இன்னும் சிலரை இதுபோல் மாறத்தூண்டிவிடாதோ?

நானும் நாகர்கோவில் நகரில் பிறந்தவன் தான். மனிதர்கள் ஒருநாளும் கடவுளாக முடியாது என்பதை நம்புகிறவன்.

இது என்ன எழவுடா இது, நம் மக்கள் திருந்தவே மாட்டார்களா சார்??

ஆற்றாமையுடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி:- கடவுள் இருக்கிறாறா இல்லையா என்பதை விவாதிக்க போகும் பதிவல்ல இது, தயவுசெய்து அதுபோன்ற கருத்துக்களை பகிரவேண்டாம். அவை பிரசுரமாகாது. ‘சுயமரியாதைகள்‘ மற்றும் ‘பகுத்தறிவுகள்‘ குறித்த பதிவும் அல்ல, மக்களின் ‘கண்மூடித்தனமான‘ நம்பிக்கைகள் குறித்ததே.

செயல்திறன் அல்லது தனித்திறன்

எந்த வேலையாக இருந்தாலும் அதற்க்கான தனித்திறமை வேண்டும்!



இந்தியனை பற்றி நான் சொன்னதில்லை இது, சொன்னால் அது செய்தியும் அல்ல. இந்த வீடியொவில் வரும் நபர் தமிழர் அல்லது மலையாளியாக இருக்கவேண்டும், ஆனால் இந்த வீடியோ எப்படி வெளிநாடு போய் கீழ்வரும் ஈமெயிலில் இருக்கும் வெள்ளையர்களை ஆச்சரியப்பட வைத்ததோ தெரியவில்லை! இதை அனுப்பிவிட்டு என்னிடம் வந்து
அந்த வீடியோவை பார்த்தாயா? He is working like a automated machine!
என்று ஆச்சரியப்பட்டது தான் செய்தி.



வழக்கம் போல் சொந்த அடையாளங்களை அழித்தேன், இதை அனுப்பிய என் முதலாளியின் பெயர் உட்பட, டாஸ்க் பாரை கவனிக்க மறந்துவிட்டேன்!! வீட்டுக்கு வந்து வெளியிடும் போது தான் கவனித்தேன், சரி பரவாயில்லை என்று விட்டுவிட்டேன், ஒன்று நான் கணக்கெழுதும் புஸ்தகங்கண்ணா, இன்னொன்று என்னுடைய அலுவலக ஈமெயில் தரவிறக்கி, பரவாயில்லை தானே.

அன்புடன், வசந்தா நடேசன்.