Thursday, February 24, 2011

டீம் வொர்க் [1]

நான் என் அலுவலகத்தில் சேர்ந்த போது என்னுடைய கம்பெனி கோயிங் கன்சேர்ன் என்றநிலையில் தான் இருந்தது.. சேர்ந்தபோது தெரியாது, சேக்கமுன்னால பேலன்ஸ்ஷீட் லாம் காட்டமாட்டாங்கல்ல. இந்த கம்பெனி அந்த கம்பெனினின்லாம் அப்ப பாக்குற பக்குவமில்லை. ஏதோ ஃப்ரீ விசா கொடுக்றியா சரின்னு சேந்ததுதான்.

நான் விசிட் விசாவில் வந்து வேலை தேடியவன் ஒரு காலத்தில்.. வந்து ஒரு 21 நாளிலேயே எனக்கு 3 கம்பெனிகளில் ஓக்கே ஆனது.. அதில் நான் சம்பளம் குறைவாக இருந்தபோதும் இது போதும் என்று செலக்ட் பண்ணியது தான் நான் இன்றுவரை வேலை செய்யும் இந்த இடம்.

மற்ற இரண்டில் ஒன்றை மலையாளி கம்பெனி என்றதால் மனமில்லை சேர்வதற்க்கு, இன்னொன்று ரொம்ப சில்லரைத்தனமாய் இன்டர்வியூ நடத்தி தேர்ந்தெடுத்தார்கள்.. இந்த நாட்டில் வரி என்பதே கிடையாது, ஆனால் அங்கிருந்த மலையாளி மேனேஜர் (எல்லா எடத்துலயும் அவனுகதான் சார் இங்க) ப்ராபிட் அன்ட் லாஸ் அக்கௌவுன்டை கொடுத்து, நீ இதில் வருமானத்தை குறைத்து எப்படி கணக்கெழுதுவாய் என்றான்?? எனக்கு அது எல்லாம் அத்துபடி என்றாலும், டேய், அது தான் இங்கே தேவையே இல்லையேடா?? எதற்க்கு கேட்கிறாய் என்று கேட்க நினைத்தேன் மனதுக்குள், ஆனாலும் சொன்னேன், இப்படி, இப்டி செய்யலாம் என்று, கருமம் இந்தியால அந்த எழவை தானே செஞ்சிகிட்டு வந்துருக்கோம் இங்க.

அவன் இன்டர்வீயு முடிந்து அவன் அரபியிடம் அரபியில் பேசினான், பேசிமுடித்து இங்க இப்ளவ்தான் சம்பளம் தருவோம் சேருரேன்னா சேந்துக்க, இது இதெல்லாம் கண்டிஷன், (டைம் பாக்க கூடாது, கம்பெனி ரூம்ல தான் தங்கணும், கம்பெனி மெஸ்லதான் சாப்டணும் இப்படி சில.. எல்லாம் அவனுக்கு சைட் வருமானத்துக்கு தான்) என்றான், ஆனால் அதற்க்கு முன்பே நான் இது வேண்டாம் என்ற ஒரு முடிவுக்கு வந்திருந்தேன் என்றாலும் ரொம்ப நன்றிங்க ஐய்யா, நான் போன் பண்ணிட்டு வாரேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன், அன்றைய நிலைமை வேறு.

பின்னர் இந்த கம்பெனியில் சேர்ந்து, எனக்கு முன்ன, பின்ன தெரியாத ஒரு ஐரோப்பிய அக்கவுன்டிங் சாப்ட்வேர் அங்கு?? என்னை இப்போதைய கம்பெனியில் தேர்வு செய்தது, கே பீ எம் ஜி, உலகின் முன்னணி ஆடிட்டிங் நிறுவனம், சேர்ந்து இரண்டொருநாளில் கணக்கு வழக்குகளை படித்துமுடித்து பார்த்தால் அது ஒரு கோயிங் கன்சேர்ன்?? எனக்கு எப்படி இருந்திருக்கும்??

ஆனால் நான் தளரவில்லை, மனதில் ஒரு வெறி இருந்தது, நாமளும் வரணும்டான்னு. அதற்க்கான சூழ்நிலைகளும் இருந்தன, நான் சொல்லவந்ததே அதைத்தான். டீம் வொர்க். இந்த கம்பெனி அப்படி இருந்ததற்க்கு காரணமே அங்கு ஒரு சரியான அக்கவுன்டன்ட் அமையாதது தான், அக்கவுன்டன்ட் மாத்திரமே ஒரு கம்பெனியை சீர்தூக்கிவிட முடியுமா என்றால் அதுவும் முடியாது.

எனக்கு அமைந்தது ஒரு நல்ல டீம்.. நானும் உடன் சேர்ந்து உழைத்தோம்.. நான் சேரும்போது இருந்ததை விட இப்போது சேர்ந்து ஒரு எட்டு வருடங்களில் பல மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளோம். நான் சேர்ந்தபோது வாங்கியதை விட என் சம்பளம் இப்போது கிட்டதட்ட எட்டுமடங்குக்கு மேல் அதிகம்.

இது சாத்தியமானது டீம் வொர்க்கால் தான், எல்லோருக்கும் தெரிந்தது தான், டீம் வொர்க் என்றால் என்னவென்று. எளிதாக சொல்லவேண்டுமென்றால், ஒரு டைரக்டர் படம் எடுப்பது போல் வைத்துக்கொள்ளுங்கள்.. அந்த டைரக்டர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்த ஹீரோவும் முக்கியம், இசையமைப்பாளர் முக்கியம், ஏன் லைட்பாய் வரை முக்கியம் தான் சொல்லப்போனால், கிட்டத்தட்ட அதுபோல்.

இன்னும் விபரமாய் டீம் வொர்க் குறித்து இன்னொரு நாளில்..

அன்புடன், வசந்தா நடேசன்.

7 comments:

  1. //கோயிங் கன்சேர்ன்// என்பதை விளக்க இருந்தேன், மறந்துவிட்டேன்.. மன்னிக்கவும். அடுத்த பதிவில் கண்டிப்பாய்.

    ReplyDelete
  2. உண்மையான வார்த்தைகள், உண்மையான பதிவு ...

    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html

    ReplyDelete
  3. பக்காவாக டீம் ஒருங்கினைந்தால் வெற்றிதான் இல்லையா...

    ReplyDelete
  4. மலையாளி இருக்கிற இடம் உருப்படவே உருப்படாது நமக்கு....

    ReplyDelete
  5. உங்க டீம் ஒர்க் பற்றி என் பதிவில் போட்ருக்கேன் மக்கா...

    ReplyDelete
  6. ஒரு கோஷ்டியா தான் வந்திருக்காய்ங்க....எல்லா ஊர்லயும் எல்லா எடத்துலயும் எதாவது ஒரு கோஸ்டி செத்துருவானுங்கோளோ?

    ReplyDelete
  7. நல்லா எழுதி இருக்கீங்க.. team work ah தமிழ்ல கூட்டு முயற்சின்னு எழுதி இருக்கலாம்.. நல்ல பதிவு

    ReplyDelete