Thursday, February 17, 2011

போட்டு தாக்குறாளுங்கண்ணா!

தலைப்பு எழுதும் போதே தவறிப்போய் இது பப்ளிஷ் ஆகிவிட்டது, சத்தியமாய் என் தவறல்ல..

சரி நேரா பாயிண்டுக்கு வருகிறேன்.

தினமும் காலை ஒரு ஐந்து நிமிடம் மதியம் ஒரு 10 பத்து நிமிடம் குடும்பத்திடம் பேசிவிடும் வழக்கம் எனக்கு. எடிஸலாட்லயா, டூ லயா ன்னு கேக்காதிங்க, இது வேற சமாச்சாரம்.

இன்னும் ஒரு வாரத்தில் உடனிருக்கும் ஒருவன் ஊருக்கு போகிறான். சரி அவன் வரும்போது இது வாங்கி கொடுத்துவிடு, அது வாங்கிக்கொடுத்து விடு என்பதெல்லாம் வழக்கமான தொல்லைகள் தான்.

ஆனால் அந்த தொல்லைகளை எப்படி நாங்கள் சமாளிக்கிறோம் அல்லது ஊரிலிருக்கும் சொந்தங்கள் எப்படி அனலைஸ் பண்ணி சரியாய் எங்களை பயன் படுத்துகிறார்கள் என்பது தான் இந்த பதிவின் கதை.

இதை சொல்லும் போது என் குடும்பத்தை பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும் உங்கள் புறிதலுக்காக. நானும் என் பெற்றோர்களும் சேர்ந்து ஒரே குடும்பமாய் வாழ்கிறோம் இன்று வரை, என் மனைவியின் சாமர்த்தியமும் இதில் உண்டு. அக்கா பக்கத்து தெருவில் வசிக்கிறாள்.. எனக்கு ஒரு பையன் இப்போது பிளஸ் டூ வில், ஒரு மகள் சிக்ஸ்த் ஸ்டேண்டர்டு. பதிவுலகில் என் பெயர் என் பெற்றோர்களின் கூப்பிடு பெயர்களே, அவர்களின் சர்டிபிகேட் பெயர் வேறு.. இந்த கட்டுரைக்கு இது போதும் என நினைக்கிறேன்.

இந்த முறை முதல் கோரிக்கை என் பையனுக்கு ஒரு வாட்ச் வேண்டுமென்று வந்தது. டைட்டனின் ஃபாஸ்ட் ட்ராக், மாடல் பெயர் எல்லாம் சொல்லி வாங்கிக்கொடுத்து விடுங்கள் என்று மனைவி (மகன் பேச/கேட்க வில்லை.. நோட் பண்ணிக்கொள்ளவும்) கொஞ்ச நாளாய் நச்சரிப்பு.

நானும் சொன்ன அந்த வாரத்திலேயே டைட்டனின் ஃபாஸ்ட் ட்ராக் வாங்கி வைத்து விட்டேன் ஊர் செல்பவனிடம் கொடுப்பதற்க்காக. அவன் பர்ச்சேஸ் செய்யும் போது அவனே தான் வாங்கி வந்தான், எனக்கு பொட்டி தட்டும் வேலை இருப்பதால். என் எண்ணம், அவனும் பர்ச்சேஸ் செய்யும் போது நம்மால் ஓவர் லக்கேஜ் ஆகிவிடக் கூடாது என்பதுதான்.

ஒவ்வொரு நாளும் கேட்கும்போது இன்னும் வாங்கவில்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தேன் இதன் அரசியல் கொஞ்சம் அத்துப்படி ஆகியிருந்த காரணத்தால். விட்டிருந்தால் உடனிருப்பவன் ஊர்போகும் வரை இதைத்தான் சொல்லியிருப்பேன்.

இன்று என் மகனுடன் பேசும் ஒரு சந்தர்ப்பத்தில் அவன் டாடி வாங்கினீங்களா எனும் போது பொய் சொல்ல மனம் வரவில்லை. ம்ம், வாங்கிருக்கென், டைட்டனின் ஃபாஸ்ட் ட்ராக் ஆனால் மாடல் எல்லாம் எனக்கு தெரியாது, ... அண்ணன் தான் வாங்கிட்டு வந்தான், அவனைக்கேட்டுக்க என்றேன்.

உடனே என் மனைவி போனை வாங்கி என்ன வாங்கிட்டீங்களா, எனட்ட வாங்கல ன்னு சொன்னீங்க?? சரி மகளுக்கும் வாட்ச் வேண்டுமாம், என் வாட்ச்சும் மாற்ற வேண்டியதுதான் இப்ப, எங்களுக்கும் வாங்கிக்கொடுத்து விடுங்க என்றாள்.

நான் இதை எதிர்பார்த்துதான் இத்தனை நாளும் சொல்லாமல் இருந்தேன். இன்னும் இரண்டு மாதத்தில் எல்லோருமே இரண்டு மாதம் பள்ளி விடுமுறைக்கு இங்கே வந்துவிடுவார்கள், ‘நான் துபாய்ல குடும்பஸ்தன்ங்க‘ என்று ஒரு பதிவு எழுதிவிட்டு நான் 2 மாதம் உங்களிடம் லீவு வாங்கிச்செல்லவேண்டும்.

நான் சொல்லவந்தது குடும்ப அரசியல் குறித்து, என் மகள் எனக்கு ரொம்ப செல்லம், அதற்க்காக மகன் செல்லமில்லை என அர்த்தமில்லை. அவன் இன்னும் நேரடியாய் எதுவும் கேட்கமாட்டான், எல்லாம் அம்மா வழியாய் தான். ஆனால் மகள், டாடி, நான் டூர் போறேன், போறதா, வேண்டாமான்னு சொல்லுங்க, போறதுன்னா எனக்கு இவ்வளவு வேணும் என்று நேரடியாய் என்னிடம் கேட்டு விடுவாள், என் மனைவி பின்னாலிருந்து அலர, அலர.. அவள் அது குறித்து அறிந்திருக்கவே மாட்டாள் அதுவரை?

இன்னும் ரெண்டு மாதத்தில் இங்கே வரப்போகும் இவர்கள், இங்கு வந்து வகை, தொகை தெரியாமல் கண்ணில் கண்டதையெல்லாம் வாங்கி நான் எக்ஸ்ட்ரா லக்கேஜ் கட்டித்தான் அவர்களை ஒருவழியாய் அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் பதிவுலகிற்க்கு வரவேண்டும். ஆனால் அவர்கள் தேவைகளை எப்படி நிறைவேற்றுகிறார்கள் பாருங்கள்.

எனக்கு வாட்ச் வேண்டும் வாங்கி கொடுத்து விடுங்க என்று சொல்வதில் கூச்சம் என் மனைவிக்கு, மகள் கண்டு கொள்ளவே மாட்டாள், அவள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள அவளுக்கு தெரியும்?? இருவரும் சேர்ந்து என் மகனை வைத்து கேம் ஆடிவிட்டு கடைசியில் எனக்கும் வேணும், எனக்கும் வேணும் என்று கத்தியதை புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

வேறு வழி, இனி நான் இன்னும் இரண்டு வாட்ச் வாங்கவேண்டும்.. ம்ம்ம்ங்ங்ங்.

அன்புடன், வசந்தா நடேசன்.

3 comments:

  1. அட போங்கய்யா.
    இதுதான் வீட்டுக்கு வீடு நடக்கிற சமாசாரம் தானே! துபாயில் உள்ள எல்ல பயல்வளுக்கும் இதுதான் கதி. அதுசரி, என்னமோ தலைப்பை பாத்து ஏதோ காலேஜ் பசங்க உடான்சு ன்னு வந்தா நீங்க வேற !

    ஆமா ? அது என்ன "வசந்தா நடேசன்??

    ReplyDelete
  2. சரி இதெல்லாம் சகஜந்தானே

    ReplyDelete