Wednesday, February 23, 2011

தனிமை..

என்னுடன் இருக்கும் இரண்டு நபர்களும்
இப்போது விடுமுறையில்..
நான் மட்டும் நாளை முதல் தனியே இங்கு தனிமையில்!
தனிமை எனக்கும் பிடிக்கும் தான்..இல்லையென்று சொல்வதற்க்கில்லை,
இருந்தாலும் வேளை நெருங்க, நெருங்க
கொஞ்சம் உதரல்தான், மறுப்பதற்க்கில்லை..

இப்படியாய் இதற்குமுன் ஆனதில்லை எப்போதும்,
வேண்டுமென்றே இருவரும் போகவில்லை இப்போதும்..
ஒருவர் நீண்டுபோன மகள் திருமணம், இனிதாய் நடத்திடவும்,
இன்னொருவன் புதிய மகன் வரவை,
கையில் அள்ளிவைத்து ரசிப்பதற்க்கும்.
வெளிநாட்டு விகிதங்கள் புறிகிறதா இப்போது?

பதினைந்தே நாட்கள் தான், இருந்தாலும்
பதருகிறாள் மனைவி - ஒரு விசா கொடு வருகிறேன் என்றாள்??
என்னடா இது, எழுத்துக்கடைக்கே சோதனையாவென்று..
எனக்கு தனிமை பிடிக்கும் என்று உதார்விட்ட உடனேயே..
அதுதான் 'தெரியுமே' என்றவளும், கொஞ்(சி)சம் அடங்கினாள்!

காலை, மதியம் என்று தினம் இருவேளையுடன்,
இனி ‘ராத்திரியும்“ பேச வேண்டுமாம்,
ஏதோ அவள் ரசனைக்கு ஒரு புது உத்தரவு.
உதரலுடன் நானும் ‘ம்ம்‘ என்றேன், அதைத்தானே செய்யமுடியும்?

கைக்கெட்டும் தூரத்தில் பதிவுலகம் உண்டெனெக்கு
திக்கெட்டும் புகழ் பரப்பும் தூங்காத புற உலகம்!
மாலை முழுவதுமே அதுதானே துணையிப்பம்,
காலை வரும் வரைக்கும் ‘பொட்டி தட்ட‘ நான் ரெடிதான்.

என்னென்ன செய்யவேண்டும் - மனதில்
திட்டமிட்டு வைத்துவிட்டேன், பழக்க தோஷம்!
இனி அறைக்குள் இருக்கும் நேரம் கொஞ்சம் குறைத்திடணும்,
வெளியே விட்டு விட்ட வேலைகளை
ஒண்ணொண்ணாய் தொடங்கிடணும்.

முடிந்தவரை மாலை வாக்கிங் தொடங்கிடணும் நாளைமுதல்,
ஹோட்டலில் தான் உணவு இனி, நண்பர்கள் வரும் வரைக்கும்!
இரண்டு மணி நேரம் இப்படி செலவழித்தால்
தனிமை கொஞ்சம் குறையும் தானே??

விட்டு விட்ட ‘தியான‘ தோஷம்
தொட்டுப்பார்க்கும் முடிவும் உண்டு..
நண்பர்கள் கலகலப்பில் தியானத்தை தொலைத்துவிட்டேன்
விட்டதை பிடிப்பதற்கு கடவுளாய் கொடுத்ததுவோ?

கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்ததில்லை இந்த பதிவு. 15 நாள் தனிமை கிடைக்கப்போகிறது இத்தனை நாட்களில் இப்போது தான். 12, 13 பேருடன் 2 பெட்ரூம் ஹாலில் ஒரு காலத்தில் முன்னர் தங்கிய போது, ஏங்கியதுண்டு தனிமைக்காக.

இப்போது 2 பேர் மட்டும் உடன் இருக்கிறார்கள், இதோ தனிமை அருகில் வரும்போதே மனதுக்குள் ஒரு புரியாத ஒரு உதரல் வந்தது உண்மை.

சரி என்னென்ன செய்யலாம் என்று யோசித்து வைத்திருந்தேன். எல்லாவற்றையும் நம்ம டைரியில் எழுதிப்புடலாம் என்று ஆரம்பித்த பதிவுதான். ஆனால் தலைப்பை எழுதியதும் கொஞ்சம் கவித்துவமாய் தெரிந்தது (நம்ம குத்தம் இல்ல சார்)

முயன்று பார்ப்போம் என்று சுரத்தே இல்லாமல் ஆரம்பித்தேன். இதை யாரேனும் ரசித்திருந்தால் அது நம் தமிழின் உள்ளடங்கிய அற்புதம் தான். இதில் எனக்கு பங்கேதும் இல்லை.

சத்தியமா, ஏதோ சின்ன வயதில், பன்னெண்டாப்பு படிக்கும் போதும், கல்லூரி நாட்களிலும் நான் கொஞ்சம் கவிதை மழை கொட்டியதுண்டு. அதை எல்லாம் ஆவணம் ஆக்கிப்புடணும்டான்னு கழிந்த முறை ஊருக்கு போனபோது தேடிப்பார்த்தேன், என் பழைய பொட்டியில், என் மனைவிக்கும் தெரியும் பழைய கிறுக்கல்கள் பற்றி. அது என்ன எழவுக்கு இப்ப? என்று என் ஆர்வத்தை பார்த்து பயந்து, அவளும் தேடுவது போல் நடித்தாளா அல்லது தேடினாளா? தெரியாது, பதிவுலகம் குடுத்து வைச்சது அவ்ளோவ் தான், வேற என்னத்த சொல்ல? எல்லாம் போய்விட்டது, ஒன்றும் கிடைக்க வில்லை.

சரி, அன்றைய காதல் கவிதைகைள், அதை இப்ப நாம எழுதியும் பிரயோஜனம் இல்ல என்று விட்டு விட்டேன், ஆனா பாருங்க, தலை எழுத்த மாத்த முடியுமா?? அன்றைய காதல் கவிதைகள் இப்ப அனுபவக்கவிதையா கொட்டணும்னு விதி(?) இருந்தா யாரால மாத்த முடியும்!

அன்புடன், வசந்தா நடேசன்.

5 comments:

  1. // கொஞ்(சி)சம் அடங்கினாள் //

    சூப்பர்...

    ReplyDelete
  2. அப்படின்னா இனி பதினைஞ்சு நாளைக்கு இடுகை மழைதான்...

    ReplyDelete
  3. விடுங்க இதெல்லாம் சகஜம்.......ஹி ஹி!

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. ஆவலுடன் கவிதைகளை எதிர்பார்த்து உள்ளேன்
    பயனுள்ள பொழுதுகளாக தனிமை வாழ்வு அமையட்டும்
    பதிவுலகத்திற்கும் பல நல்ல கவிதைகள் கிடைக்கட்டும்
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  5. //கைக்கெட்டும் தூரத்தில் பதிவுலகம் உண்டெனெக்கு
    திக்கெட்டும் புகழ் பரப்பும் தூங்காத புற உலகம்!
    மாலை முழுவதுமே அதுதானே துணையிப்பம்,
    காலை வரும் வரைக்கும் ‘பொட்டி தட்ட‘ நான் ரெடிதான்//

    நாமெல்லாம் ஒரே குடும்பம் மக்கா..

    ReplyDelete