Sunday, February 20, 2011

ஹெல்த் ட்ரிங்!!!

வணக்கம்.

நம் நாட்டில் பரவலாக இப்பொழுது நடைமுறையிலிருக்கும் நம் பொதுவான ஹெல்த் ட்ரிங் பற்றிய ஒரு பதிவு இது. நம் குடிகளுக்கு எது ஹெல்த் ட்ரிங் என்பதைப்பற்றிய ஒரு பொதுஅறிவு அவசியம் என்று கருதியதால் வந்த ஒரு வெளிப்பாடாகவும் இதை கருதலாம். இதனை பற்றிய ஒரு பறந்து விரிந்த விவாதம் மிகவும்அவசியம் என்ற பேரவாவும் இதனை இப்போதே எழுத தூண்டியது என்பதையும் நான் தங்களுக்கு விளக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

மிகுந்த பொருட்செலவில் நம் ஆராய்ச்சியாளர்கள் பெரும்பணம் செலவு செய்து மற்றும் தங்கள் வாழ்க்கையையே அற்பணித்து கண்டுபிடித்த ஆராய்ச்சி முடிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நாட்டிற்கு பெரும் வருமானத்தை தரும் நம் குடிகள் இன்னும் எத்தனை காலம் தான் நம் சமூகத்தால் இப்படி அவலநிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள் என்று நினைத்தாலே நெஞ்சம் பதருகிறது. இன்று வீட்டிற்க்கு வீடு டிவி, கேஸ்ஸ்டவ் எல்லாம் இலவசமாகவே கிடைத்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்க்கு காரணமான குடிகள் கவனிப்பாரற்று நக்கலும் நையாண்டியுமாக இன்று புறக்கணிக்கப்படுவது சரியல்ல என்ற நினைப்பும் இதனூடே இளையோடியிருப்பதை சுட்டிக்காட்டும் கடமை இருக்கிறது எனக்கு.

அதுவும் ஒரு அரசியல் கட்சியினர் இந்த குடிகளை ஒழித்தே தீருவேன் என்று காலத்திற்க்கு ஏற்றார்போல் அதில் வீரியம் காட்டுவதும், பின்பு பதுங்கி போவதுமாக இருக்கும் இப்போதைய நிலையில் வெளிவரப்போகும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் எவ்வளவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்

இன்னும் எத்தனை காலம் தான் பொருப்பது, இதற்க்கு ஒரு முடிவு கட்டும் பொருட்டே மிகுந்த கைவலியுடன் இதை வெளியிட வேண்டிய ஒரு நிர்பந்தம் வாய்த்தது. வரும் செய்திகள் நியாயமானது அல்ல என்பதை உணர்ந்து நம் சமூகம் மேலும் எழுச்சியுற வேண்டும் என்ற என் நல்லெண்ணத்தையும் நான் இங்கே விளக்கவேண்டியிருப்பது காலத்தின் கட்டாயம்.

இனி கீழ்கண்ட பட்டியலை திறந்த மனதுடன் படித்து எது உங்கள் ஹெல்த் ட்ரிங் என்பதை நிறைந்த மனதுடன் முடிவெடுங்கள் என்று வலியுருத்துவதோடு என் கடமை செவ்வனே முடிவடைந்தது என கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.





நன்றாக தெளிந்து முடிவெடுத்தபின், மேலதிக விபரங்களுக்கு பிரபா ஒயின்ஷாப்பை உடனடி தொடர்பு கொள்ள நம் குடிகள் இப்போதே ஆணையிடப்படுகிறார்கள்.

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி:- சும்மா நகைச்சுவைக்காக எழுதப்பட்டதே.. ஆராய்ச்சி முடிவுகள் அற்புதம் என்று யாரும் ‘சீரியஸ்‘ ஆகி மோசம் போய்விட்டால் கம்பெனி பொருப்பல்ல.. எல்லாம் டுபாக்கூர் ஆராய்ச்சி முடிவுகளே என்பதுதான் என் அபிப்ராயம். எல்லா முடிவுகளும் அடிக்கடி ரிப்பீட் ஆவதால்.. ஆராய்ச்சி முடிவுகள் ஒரு நண்பரால் ஈமெயிலில் அனுப்பப்பட்டது, முகம் தெரியாது ஆனால் இந்திய நண்பரிடம் இருந்து தான், அதை எழுதியவருக்கும் ஒரு நன்றி இப்போதே சந்தடி சாக்கில்.

பிரபா, நகைச்சுவைக்காக தங்கள் பதிவிலிருந்து ஒரு படத்தையும், லிங்க்கையும் கொடுத்துள்ளேன், தவறென்றால் சுட்டிக்காட்டவும், உடன் நீக்கிவிடுகிறேன்.

5 comments:

  1. இந்த செய்தி அதர பழசு (2008 இல் இது புதுசு) - நீங்க மொக்கை போட இது தான் கிடைத்ததா? புதுசா எதாவது சொல்லுங்க

    ReplyDelete
  2. நெசமாலுமா மனசாட்சி, நமக்கு இப்பதான் சொன்னாங்கண்ணா??

    ReplyDelete
  3. // பிரபா, நகைச்சுவைக்காக தங்கள் பதிவிலிருந்து ஒரு படத்தையும், லிங்க்கையும் கொடுத்துள்ளேன், தவறென்றால் சுட்டிக்காட்டவும், உடன் நீக்கிவிடுகிறேன். //

    சப்பை மேட்டர்... இதுக்கெல்லாம் போய் சீரியஸா பேசிக்கிட்டு...

    ReplyDelete
  4. பார்த்தே தீரவேண்டிய உலகப்படங்களின் தொகுப்பு...
    http://blogintamil.blogspot.com/2011/02/50.html

    ReplyDelete
  5. இது என் பக்கம் அல்ல

    ReplyDelete