Saturday, February 12, 2011

உரைப்பதற்க்கு வெட்கமில்லை!

பச்சை புல்வெளிகள்..
பஃக்ருளியாறு வயல்கரைகள்
மனதை மயங்கவைக்கும்
மறக்காத நினைவவைகள்!

தென்னங்குலைகளுடன்
ஓங்கி வளர் மரங்களுன்டு
தெளிந்த நீரோடும்
மீனோடும் ஓடையுண்டு

சின்ன வயதினிலே
சிலு சிலுக்க நடைநடந்து
கக்கூஸ் போவதற்க்கு
கால்வலிக்க நடந்ததுண்டு!

மனிதன் பேலாத இடம் இல்லை
எங்கள் ஊர் வயல்கரையில்!
காலைக்கடன் கழிக்க
கால் கடுக்க சென்ற காலம்!

ஆண்கள் நிலை இதுவென்றால்,
பெண்கள் நிலை யோசியுங்கள்?
அய்யய்யோ அவலங்கள்
அத்தனையும் கடந்து வந்தோம்.

மலத்தை தோளில் வைத்து
மனிதனே சுமந்துசென்ற
காலம் ஒன்று இருந்ததென்று
மாநகர் வாழ் நண்பர் சொன்னார்!

இன்று நிலை அதுவல்ல - மனிதன்
கொன்றொழித்த நேரத்தால்
அந்தநிலை மாறியது
ஆளுக்கொரு கக்கூஸ் - இப்ப
அஞ்சு உண்டு சிலர் வீட்டில்.

உண்மை நிலை அதனால்
உரைப்பதற்க்கு வெட்கமில்லை
வந்த வழி மறந்து விட்டால்
போகுமிடம் தூரமாகும்.

மனதுக்குள் பூட்டிவைத்து
இதை பூக்காமல் விட்டுவைத்தால்
யாறறிவர் என் நஷ்ட்டம்
நான் பட்ட கஷ்ட்டமெல்லாம்?

என் மகனும் அறிந்திடணும்
எப்படி இது வந்ததென்று
உழைப்பு, உழைப்பென்ற
உதிரத்தால் வந்ததென்று

இன்றைய இளைஞனுக்கு
இதுவெல்லாம் தேவையில்லை - நானறிவேன்,
ஏதோ வேதனையால் உங்கள்
சோதனைக்கு புலம்பறேனோ?

அன்புடன், வசந்தா நடேசன்.

8 comments:

  1. உங்க வாழ்வை அடுத்த தலைமுறைக்கு நகர்த்திட்டிங்க...

    நல்லாயிருக்கு.

    ReplyDelete
  2. சமுக அவலங்களை அழகாக கவிதையில் தந்ததற்க்கு நன்றி..

    கவிதை நடை மிகவும் அழகாக இருக்கிறது..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. கவிதை வீதி உங்களை அன்போடு வரவேற்கிறது..

    ReplyDelete
  4. யதார்தத்தை மிகச் சரியாகச் சொல்லும் கவிதை
    நாகரீகமாகச் சொல்வதாக நினைத்து
    சில வார்த்தைகளைத் தவிர்த்திருந்தால்
    கவிதையின் வீரியம் பறிபோயிருக்கும்
    சிறந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. //சி.கருணாகரசு //# கவிதை வீதி # சௌந்தர்//
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
    //Ramani// சார், உங்கள் பதிலை பார்த்ததும் தான் நிம்மதி வந்தது, உண்மையில் இது ஒரு 10/15 நாட்களுக்கு முன்பே எழுதி நாகரீகம் கருதி வெளியிடாமல் இருந்தது தான், துபாயில் உள்ள நண்பர்களிடம் காண்பித்து ஒப்பினியன் கேட்டேன், சூப்பர்தான் என்றார்கள், இருந்தும் தைரியம் வரவில்லை. இன்று என் சிறுவயது முதல் பழகும் பெங்களூர் நன்பனுக்கு அனுப்பி கேட்டேன், நல்லதுக்கோ, கெட்டதுக்கோ.. பயபுள்ளை ஓ.கே. என்றதற்க்குப்பின் தான் வெளியிட்டேன், பயந்து கொண்டிருந்தான், உண்மையில் உங்கள் வரிகளை பார்த்துத்தான் கொஞ்சம் உற்ச்சாகம் வந்தது, நன்றி..

    ReplyDelete
  6. 'பயந்து கொண்ருந்தேன்' என்று மேலே வாசித்திருப்பீர்கள் என்று தெரியும்.. ஹி.. ஹி..

    ReplyDelete
  7. //'பயந்து கொண்ருந்தேன்'// 'பயந்து கொண்டிருந்தேன்' இறைவா, இது என்ன சோதனை, என் தமிழுக்கு???

    ReplyDelete
  8. //'பயந்து கொண்ருந்தேன்'// 'பயந்து கொண்டிருந்தேன்' இறைவா, இது என்ன சோதனை, என் தமிழுக்கு???//

    ஆனைக்கும் அடி சருக்கும். ஒன்றும் பிரச்சனையில்லை. கலக்கிட்டீங்க. இனியும் கலக்குங்க.

    ReplyDelete