Thursday, February 3, 2011

இந்தியாவும், மக்கள் தொகையும்

ஆஹா.. என்று பார்க்கவேண்டாம், கொஞ்சம் சீரியஸாக நம் நாட்டை பற்றிய சிந்தனைகள்..

என் புரோகிராமரிடம் நான் வீக் எண்ட் பிளான் செய்யவேண்டும், என்னிடம் இன்று என்ன எதிர்பார்க்கிறாய்? என்றேன், இதுவரை பதிலில்லை, சரி மொக்கை போடுவதை விட கொஞ்சம் சிந்தனை வயப்படுவோம் என்று இந்த பதிவு.

இந்தியாவில் நாம் அனைவரும் நம் அளவுக்கதிகமான (என்று நம்மிடம் சொல்லிக்கொடுக்கப்பட்ட) மக்கள் தொகையை பற்றி எப்போதும் நெகட்டிவ்வாக சிந்தித்தே பழகிப்போனவர்கள். சரி, சைனாவுக்கு அடுத்தது தான் நாம் என்று கொஞ்சம் ஆறுதலாய் அப்படியே இருந்து விட்டோம். சைனா இன்று போட்டு தாக்குகிறது.. அதற்க்கு காரணம் அவர்களின் சரியான சிந்தனை மற்றும் செயல்திட்டம். ஊழல் செய்தால் தூக்கு என்றது போன்ற தெளிவுகள்.

நான் கம்யூனிஸ்ட் அல்ல, தயவு செய்து யாரும் அப்படி தவறாய் நினைத்துக்கொள்ள வேண்டாம், எனக்குத்தெரிந்தது கையளவு, தெரியாதது கடலளவு என்று நம்புகிறவன் நான். கம்யூனிஸ்ட்டுகளைப் பொருத்தவரை உங்களுக்கு என்ன கருத்தோ (யாராக இருந்தாலும், ஹி..ஹி..) அதுபோல் பொதுவான கருத்தே என்னதுவும்.

எந்த விஷயத்திற்க்கும் இரு பக்கங்கள் இருப்பது போல் மக்கள் தொகைக்கும் இரு பக்கங்கள் உள்ளது, இதை நாம் யாரும் உணர்ந்தோமில்லை. நல்லது/கெட்டது, உண்மை/பொய், விருப்பம்/வெருப்பு, காதல்/மோதல் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

மக்கள் தொகையினை நாம் எல்லாம் கேவலம் என்று அளவிட்டுக்கொண்டு இருந்த நேரத்தில் சத்தம் காட்டாமல் மல்டி நேஷனல் கம்பெனிகள் வந்து நம் சந்தையை பங்கிட்டுக்கொண்டன. இதிலும் லாபம்/நட்டம் என்று இரு பக்கங்கள்.

மல்டி நேஷனல் கம்பெனிகளால் நமக்கு உலக அளவில் கிடைக்கும் சில/பல சௌகர்யங்கள் கிடைத்தன. உலகமே கிரைஸிஸ் என்று ஆடிப்போய் இருந்த நேரத்தில் ஒபாமா இந்தியாவுக்கு வந்து அல்மோஸ்ட் பிச்சை எடுப்பது போல் சில திட்டங்களை அறிவித்து விட்டு போனார், இந்தியர்களின் வாழ்க்கைத்தரம் பொதுவில் முன்னேறியிருக்கிறது (செல்போன், டிவி இல்லாத ஒரு வீட்டை சொல்லுங்கள்) மொத்தத்தில் இப்போது உலக நாடுகளை நம்மை உற்றுப் பார்க்க வைத்திருக்கிறது. 1984/1985 வரை சைக்கிளில் போய்க்கொண்டிருந்த நம் வெகுஜனம் இப்போது பைக்குகளில்/கார்களில் பறக்கிறோம், இப்படி பல.

ஏன் உலகையே ஆட்டிபடைத்த கிரைஸிஸ் இந்தியாவை அசைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. சாப்ட்வேர் துறை மட்டும் கொஞ்சம் விழி பிதுங்கியது போல் இருந்தது மற்றபடி ஒன்றும் இல்லை. உலக அளவில் பல வங்கிகள் காணாமல் போய்விட்டன (துபாய் உட்பட). ஆனால் இந்தியாவில் வங்கித்துறையில் குறிப்பிடும்படியான பாதிப்புகள் ஏதும் இல்லை.

ஆனால் மல்டி நேஷனல் கம்பெனிகளால் உண்டான நஷ்ட்டங்கள்.. உள்ளூர் முதலாளிகள் உளுத்துப்போனார்கள். பெப்ஸியால் எங்கள் ஊர் கண்ணன் சோடாவும், காளி மார்க்கும் சந்தையை விட்டு விரட்டியடிக்கப்பட்டன. மிக நீண்ட காலமாக அச்சை மாற்றாமலேயே வைத்திருந்த அம்பாஸிடர்கள் காணாமல் போய்விட்டன.

சொல்லப்போனால் கம்யூனிஸ்ட்கள் உள்ளூர் முதலாளிகள் காணாமல் போனதால் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவர்கள் தான் மல்டி நேஷனல் கம்பெனிகளுக்கெதிராய், உள்ளூர் முதலாளிகளுக்கு ஆதரவாய் முதலில் கொடி பிடித்தவர்கள்.
தொழிலாளர்களுக்காக என்று என்னால் அளவிட முடியவில்லை ஏனெனில் கண்ணன் சோடா, காளி மார்க் மற்றும் அம்பாஸிடரில் வேலை செய்தவர்களை விட அதிகம் பேருக்கு இன்று உள்நாட்டில் வேலை மற்றும் வேலைவாய்ப்பு இருக்கிறது. கம்யூனிஸ்ட்கள் கம்ப்யூட்டரையே வேண்டாம் என்றவர்களாயிற்றே, அந்த கதையை விட்டு நடக்கிற கதையை பார்ப்போம்.

சரி, உள்ளூர் கம்பெனிகள் ஏன் மல்டி நேஷனல்களுடன் போட்டியிட முடிவதில்லை? வியாபாரம் என்றால் லாபம் தான் குறிக்கோள், நான் மக்களுக்கு சேவை செய்ய வியாபராம் செய்கிறேன் என்று யாரவது சொன்னால் அது ‘ஜல்லியடி‘ என்று நமக்குத்தெரியும். நம் உள்ளூர் முதலாளிகளுக்கு நெட்ஒர்க் குறைவு, அவர்கள் அந்த குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே அவர்களுக்கான லாபத்தை சம்பாதிக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு பாட்டிலுக்கு 2 ரூபாய் நிகர லாபம் இருந்தால் தான் முடியும் என்று உத்தேசமாய் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் மல்டி நேஷனல் குறிவைப்பது இந்தியா முழுவதுமான மார்க்கெட்டை, அவர்களின் எல்லைகள் அதிகம், ஒரு பாட்டிலுக்கு 20 பைசா லாபம் வைத்தாலே இந்தியா முழுவதும் விற்பனை எனும் போது லாபத்தை பாருங்கள். உதாரணமாய் காளி மார்க் தினமும் 1000 பாட்டில்கள் விற்றால் 2000 நிகரலாபம், ஆனால் பெப்ஸி இந்தியா முழுவதும் அட்லீஸ்ட் குத்துமதிப்பாய் ஒரு நாளைக்கு ஒரு 35 கோடி பாட்டில்கள் விற்க்கிறது என்று வைத்துக்கொள்வோம், அவர்களின் ஒரு நாளைய நிகர லாபம் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய், இந்திய மக்கள் தொகையின் மகத்துவம் இப்போது புறிகிறதா??

நான் இருபது பைசா லாபத்தில்தான் அவர்கள் விற்க்கிறார்கள் என்று சொல்லவரவில்லை, அது கூடுதலாகவும் இருக்கலாம், அல்லது குறைவாகவும் இருக்கலாம் (வாய்ப்பு குறைவு).

ஆனால் இதை சாதிக்க செயல்திட்டம் வேண்டும், முதலீடு வேண்டும், இன்னும் நிறைய, நிறைய வேண்டும்,(இதுவே உங்களுக்கு போரடிக்கக்கூடும், அதெல்லாம் வேண்டாம் இங்கு) (தெரியாததை பயபுள்ளை எப்படி சமாளிக்குதுன்னு சொல்லாதீங்க.. சொல்லிருவேன்..)

இந்தியாவில் இது எல்லாம் இருந்து இந்தியனாய் சாதித்தவர்களில் நிர்மா போன்ற கம்பெனிகளை சொல்லவேண்டும், ஹிண்டுஸ்ட்டான் லீவரே நிர்மா, பவர் சோப் போன்ற கம்பெனிகளைக கண்டு கொஞ்சம் பயப்படுகிறது என்று சொல்லலாம். இன்று லீவர் ப்ராடக்ட் இல்லாமல் ஒருவன் மளிகைக்கடை நடத்தவே முடியாது. உப்பு முதல் கக்கூஸ் கழுவும் கிளீனர் வரை அவர்கள் தான் இன்று மார்க்கெட் லீடர்.

மல்டி நேஷனல் கம்பெனிகளால் என்ன நடந்தது என்றால் காளி மார்க், கண்ணன் சோடா விற்றவர்களில் திறமை உள்ளவர்கள் இந்த மல்டி நேஷனல்களின் ஏஜென்ஸி எடுத்து சம்பாதிக்கிறார்கள். இதன் ஏஜன்சியை சாதாரணமானவர்களால் எடுக்கவும் முடியாது, பழைய முதலாளிகளால் தான் முடியும், ஆனால் நாட்டில் வேலை வாய்ப்பு பெருகியதும் இந்தியர்கள் கொஞ்சம் மாடர்னாய் ஆனதும் மறுக்கமுடியாத உண்மை.

காலம் செல்லச்செல்ல பழைய முதலாளிகள் அல்லாமல் கீழ்மட்டத்திலிருந்து பல திறமையானவர்களும் இந்த ஏஜன்சிகளை எடுத்திருக்கிறார்கள், என்னால் உதாரணம் சொல்லமுடியும். நாகர்கோவிலில் டீ கடை வைத்திருந்த ஒருவர் முன்னாள் பெப்ஸி ஏஜன்ட். நிர்வாகத்திறமையின்மையால் ஏஜன்ஸி போயிற்றென்று நினைக்கிறேன்.

மொத்தத்தில் நமக்குத்தெரியாததை அல்லது நம்மால் முடியாததை நம்மில் தெரிந்தவர்கள் அல்லது முடிந்தவர்கள் (இந்திரா நூயி) முந்திக்கொண்டார்கள். இந்திய கம்பெனிகளும் இப்போது வளர்ச்சி பெற்று வருகின்றன.. அவர்களிடம் போட்டி போட்டு. அது தான் நம் சாமர்த்தியம்.

நோக்கியா, நிஸ்ஸான், ஹோண்டா எல்லாம் வந்திருந்து லாபம் சம்பாதித்தாலும் நம் ஆட்களும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம். அவர்களிடம் நமக்குத் தெரியாததை தெரிந்து கொள்வோம், நம் திறமைகளை வளர்த்துக்கொள்வோம்.

மக்கள் தொகையால் நஷ்ட்டங்கள் இருப்பது போல் இதுபோல் லாபங்களும் இருக்கின்றன என்பதையும், நடிகர் விவேக் போல் மக்கள் தொகையை எப்போதும் கிண்டல் பண்ணாமல் அதன் மறுபக்கத்தையும் உணரவைப்பதே இதன் நோக்கம்.

கொஞ்சம் நீண்டு விட்டது, வருந்துகிறேன், என்ன செய்ய, பாதிநாள் வேலையென்று லீவு விட்டுட்டாய்ங்க..

அன்புடன், வசந்தா நடேசன்.

7 comments:

  1. அது ஒன்னும் இல்லைங்க அண்ணா- நம்ம நண்பர் கொஞ்ச நாள் சூப்பர் மார்க்கெட் நடத்துனாரு, அப்ப multi national கம்பெனி காரங்க கொஞ்சம் கம்மியா தான் மார்சின் கொடுத்தாங்க. ஆனா லோக்கல் கம்பனி காரங்க நல்லா margin குடுத்தாங்க. அவ்வளவு தான். ரொம்ப சீரியசா நேனிக்கதிங்கோ

    ReplyDelete
  2. டேய், யாண்டா என்னை போட்டு உட்ற, அவ்ளவ் சந்தோஷமாடா ஒனக்கு, ம்ம்ம்கூங், ஜமாய் ராசா...

    ReplyDelete
  3. நீங்கள் ஏன் திரட்டிகளில் பதிவை இணைப்பதில்லை... ஏதேனும் உள்குத்து இருக்கிறதா...? இணைக்கலாமே...

    ReplyDelete
  4. நினைத்ததில்லை இதுவரை, நீங்கள் யோசிக்க வைத்திருக்கிறீர்கள், யோசிக்கிறேன், ரொம்ப யோசித்தால் ரொம்ப கஷ்டம்னு தெரிஞ்சே...

    ReplyDelete
  5. நானும் நாகர்கோயில்தான். அப்படி சொல்றதுல ஒரு சந்தோஷம். நீங்க அலசின விஷயம் ரொம்ப நல்ல விஷயம். இன்று சிறிய வியாபாரம் செய்பவர்களின் பாடு கஷ்டம். கோடி கணக்கில் இன்வெஸ்ட் பண்ணி பெரிய ஷோரூம்,நல்ல விளம்பரம் போட்டா நல்ல லாபம் பார்க்கலாம். நிர்மா ஒரு exception கான்பூர்காரர் ஆரம்பத்தில் சைக்கிளில் கடை கடையாக போட்டவர். எல்லாருக்கும் காலம் ஒத்துழைப்பதில்லை. உங்கள் பார்வையில் நல்ல தெளிவு இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. itz informative.y don't u write more about this as part 2

    ReplyDelete
  7. நல்ல தெளிவான அலசல். நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    ReplyDelete